உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 31, 2017

ரஜினியின் அறிவிப்பும் தமிழக நெட்டிசன்களின் கருத்துக்களும்

@avargalUnmaigal
ரஜினியின் அறிவிப்பும் தமிழக நெட்டிசன்களின் கருத்துக்களும்

ரஜினிகாந்தின் அறிவிப்பிற்கு பின்   நான் சமுக வலைத்தளங்களில் இட்ட  நையாண்டி கருத்துகளும்  தமிழக  நெட்டிசன்களின் கருத்துக்களும்

முதலில் என் கருத்துக்கள் :ரஜினிகாந்த அவர்களே யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்பது என்பது ஜனநாயகம் ஆனால் அப்படி வருபவர்களின் டவுசரை அவிழ்த்துவிடுவதுதான் நெட்டிசன்களின் ஜனநாயகம் !

பன்னிதான் கூட்டமா வரும் ஆனால் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் இது சினிமா வசனம், ஆனால் சிங்கங்கள்(கலைஞர்,ஜெயலலிதா ) இல்லாத நேரத்தில் அசிங்கம்  களம் இறங்கி இருக்கிறது

Saturday, December 30, 2017

கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன?

@avargalUnmaigal
கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன?

நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்தேன் நண்பரின் தகப்பனாரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருக்கிறார் என்று  சொன்னார். நானும்  அந்த பெரியவர் சொன்னதற்கு ஆமாம் சாமி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தேன்.... ஆனால் என் மைண்ட் வாய்ஸோ அடேய் கடவுள் எல்லாவாற்றையும் பார்ப்பார் என்று வைத்து கொண்டால் நாம் உறவு கொள்வதையும் பார்த்து கொன்டிருப்பாரோ என்று கேட்டது... அதற்கு பதில் ஆமாம் என்றிருந்தால் கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன? அவரையா நாம் வழிபட்டு கொண்டிருக்கிறோம் என்று மைண்ட் நினைத்தது

Friday, December 29, 2017

ஆண்டவனே நினைத்தாலும் இனிமே தமிழகத்தை காப்பாற்ற முடியாது


@avargalUnmaigal
ஆண்டவனே நினைத்தாலும் இனிமே தமிழகத்தை காப்பாற்ற முடியாது

'சாட்'டிங்கா 'சீட்'டிங்கா

'சாட்'டிங்கா  'சீட்'டிங்கா
#avargalunmaigal

Wednesday, December 27, 2017

குருமுர்த்தி கருத்தால் தமிழக குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள்

@avargalunmaigal
குருமுர்த்தி கருத்தால் தமிழக குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள்

என்ன டாக்டர் எங்களுக்கு குழந்தை இல்லைன்னு  உங்களிடம் சோதனைக்கு வந்தால் துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தியை போய் பார்க்க என் கணவருக்கு சீட்டு எழுதி தரீங்க?

அதுவாம்மா அவர்தான் இப்ப தமிழகத்தில் யார் ஆண்மை உள்ளவர் இல்லாதவருன்னு துல்லியமாக கணிச்சு சொல்லுகிறார் அதனாலதான் நான் அவரை போய் பார்த்துட்டு வர சொல்லுறேன்


என்னம்மா கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது இன்னும் உன் வயித்தில புழு பூச்சி ஒன்றும் உருவாகல? வேண்டுமென்றால் மாப்பிள்ளையை குருமுர்த்தியிடம் அனுப்பி ஒரு செக்கப் பண்ணிடலாமா?

குருமுர்த்தி அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்?

@avargalunmaigal
குருமுர்த்தி அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்?

Tuesday, December 26, 2017

"மாமா' குருமுர்த்தியின் அகராதியில் impotent என்றால்?

"மாமா' குருமுர்த்தியின் அகராதியில் impotent என்றால்?
@avargalUnmaigal

BJPயின்  அகராதியில் மோடியை  impotent என்று சொன்னால் 'ஆண்மையற்றவர்' என பொருள் ஆனால்  அதே வார்த்தையை அங்கு பாடம் கற்றுவந்த மாமா குருமூர்த்தி பயன்படுத்தினால் திறனற்றவர் என்று பொருளாம்.

அடேய் மாமா உங்க அர்த்ததின்படி இப்ப சொல்லுங்க மோடி திறனற்றவரா அல்லது ஆண்மையற்றவரா?

Saturday, December 23, 2017

சனிபகவான் என்ன இவ்வளவு மோசமானவரா என்ன?

@avargalunmaigal
சனிபகவான் என்ன இவ்வளவு மோசமானவரா என்ன?  

சனி பெயர்ச்சி பலன் யாருக்கு எப்படியோ ஆனால் என்னுடைய வாழ்வில் இப்படி மோசமாக வந்து இருக்கிறார். நிச்சயம் சனிபகவான் வேறு யாருடைய வாழ்க்கையிலும் இவ்வளவு மோசமா வந்து இருக்கமாட்டார்.

Friday, December 22, 2017

அப்பாவி மனைவியும் அதிர்ஷ்டசாலி கணவனும்

avargalUnmaigal
அப்பாவி மனைவியும் அதிர்ஷ்டசாலி கணவனும் .


நேற்று வேலையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் என் மனைவி எனக்கு காபி போட்டு கையில் வந்து கொடுத்தாள்( ஆஹா பதிவு எழுதும் போதுதான் இப்படி எல்லாம் கனவு வருவது போல நினைத்து பார்த்து எழுத முடிகிறது,, இப்படிப்பட்ட கனவுகள் கண்டால் அது நிறைவேறுமா என்று நான் அப்துல் கலாமை நேரில் வந்து கேட்பதற்கு முன் அவர் போய் சேர்ந்துவிட்டார்... நல்ல மனுஷன் அதனாலதான் என்னை சந்திக்கும் முன்னே போய் சேர்ந்துவிட்டார்)

ஆ எங்க விட்டேன் என் மனைவி கையில் காபி கொண்டு வந்து கொடுத்த இடத்தில்தானே...

Thursday, December 21, 2017

மனைவியை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் இந்த ஆண்கள்

மனைவியை எப்படி எல்லாம் ஏமாத்துகிறார்கள் இந்த ஆண்கள்

என்னங்க இந்த புடவை அழகாக இருக்கா? சூப்பரா இருக்கும்மா...ஆமாம் என்ன விலை? 20 ஆயிரம்தானுங்க... அப்ப நன்னாவே இல்லை

ஏய் இந்தா உனக்கு புடவை வாங்கி வந்திருக்கிறேன்.... வாவ் ரொம்ப அழகாக இருக்குங்க ஆமாம் என்ன விலை 2000 ருபாய்  அப்ப இது
நன்னாவே இல்லீங்க

Wednesday, December 20, 2017

அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?

@avargalUnmaigal
அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? did i say something wrong


எனக்கு தெரிஞ்ச குடும்பத்தை சார்ந்தவர்கள் வீட்டிற்கு வந்தனர். எப்ப பார்த்தாலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை சண்டை சண்டைதான்.. அது மட்டுமல்ல சண்டை போட்டுகிட்டு என் கிட்ட வந்த நியாயம் கேட்பாங்க... இவர்களின் சண்டை தினத்தந்தியில் வரும் கன்னிதீவு மாதிரி  முடிவே இல்லாமல் தொடர்ந்துகிட்டே இருந்தது...

Monday, December 18, 2017

மதுரையானந்தாவின் வாழ்க்கை அறிவுரை

மதுரையானந்தாவின் வாழ்க்கை அறிவுரை

கடந்த December 15, 2014 ல் மதுரையானந்த பேஸ்புக் அன்பர்களுக்கு வழங்கிய வாழ்க்கை அறிவுறை

மற்றவர்களிடம் இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது வெளியில் இல்லை! நமக்குள்தான்! இருக்கிறது. நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு போவது எதுவுமில்லைதானே # என்ன நான் சொல்லுறது

Sunday, December 17, 2017

பெரியார் இல்லையென்றால் தமிழர்கள் இப்படிதான் இன்று காட்சியளிப்பார்களோ என்னவோ!


@avargalUnmaigal
பெரியார் இல்லையென்றால் தமிழகம் இப்படிதான் இன்று காட்சியளிக்குமோ?

பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்து விட்டார்கள்! #ஹெச்.ராஜா


ஆமாங்க அப்படி அறிவை மழுங்கடிக்கவில்லை என்றால் தமிழர்கள் இன்று இப்படிதான் காட்சி அழிப்பார்கள்

Saturday, December 16, 2017

கழிவறை ஆய்வாளார் என்பது இழி சொல்லா ?

கழிவறை ஆய்வாளார் என்பது இழி சொல்லா ?


நேற்று ஒரு போட்டோடூன் பதிவு போட்டு இருந்தேன். அதில் கவர்னரா கழிவறை ஆய்வாளாரா? என்று கேட்டு ஒரு போஸ்டர் படம் க்ரீயேட் பண்ணி பதிவு இட்டு இருந்தேன்.. அதன் இங்கே மட்டுமல்லாமல் பல குருப்புகளிலும் பதிவு இட்டு இருந்தேன். அதில் ஒரு குருப்புதான் துக்ளக் குருப் அதில் மாடரேட்டர்களாகவும் அட்மின்களாகவும் இருப்பவர்கள் டவுசர் பாய்ஸ் ஆட்களும் தங்களை உயர்சாதிகளாக கருதி கொள்பவர்களும்தான். அவர்கள் சோவின் படத்தையும் துக்களக்கின் பெயரையும் பயன்படுத்தி தங்களை நடுநிலையாட்களாக காண்பித்து வேஷம் போட்டு கொண்டிருக்கிறார்கள்.


Friday, December 15, 2017

கவர்னரா கழிவறை ஆய்வாளாரா?

@avargalUnmaigal
கவர்னரா கழிவறை ஆய்வாளாரா?


200 அறைகள் கொண்ட எங்கள் ஹோட்டலில் கழிவறைகளை ஆய்வு செய்ய அனுபவம் வாயந்த ஆளுநர்கள் தேவை

ஆய்வின் போது குளிப்பதை பார்த்து விட்டதாக தமிழக ஆளுநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
நல்லா அழுக்கு தேய்ச்சு குளிக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பது தவறா என்ன?  அடேய் இதற்கு எல்லாம் ஆளுனரை குறை  சொன்னா நாம் எப்படிடா வல்லரசு ஆவது.

Wednesday, December 13, 2017

காளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :

@avargalUnmaigal
காளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :


இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும்.விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

1)காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

2)சில வகை காளான்களை  உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

@avargalUnmaigal
3)விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம் பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்

செய்திகளும் நக்கல்களும்

@avargalUnmaigal
செய்திகளும் நக்கல்களும்


செய்தி :பணமதிப்பு நீக்கம் காரணமாக கடனாளியானேன்: தாய், மனைவி பிள்ளைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் உருக்கமான கடிதம்

அடப்பாவி அமித்ஷா மகனிடம் கேட்டால் லாபம் ஈட்ட் வழி செய்து இருப்பாரே... அப்படி செய்யாமல் மோடி கொண்டு வந்த
பணமதிப்பு நீக்கம் காரணமாகத்தான் இப்படி செய்தேன் என்று சொல்லுவது சரியா?

Monday, December 11, 2017

குஜராத்தில் மோடி உணர்ச்சி வசப்பட்டு அழுததற்கு காரணம் என்ன தெரியுமா?(நகைச்சுவை

why did modi cry at gujarat election meeting? (satire)
@avargalunmaigal
குஜராத்தில் மோடி  உணர்ச்சி வசப்பட்டு அழுததற்கு காரணம் என்ன தெரியுமா?(நகைச்சுவை)


குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல இடங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் போது அவருக்கு பசிக்க ஆரம்பித்ததாம் அப்போது அவர் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு தனது காரை விட சொன்னார். அதுவும் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நடுத்தர ஹோட்டலுக்கு அழைத்து சென்ரால் போது என்று சொல்லி அப்படி ஹோட்டலுக்கு செல்லும் போது அவர் அதிகாரிகளிடம்  ஹோட்டலில் நான் சாப்பிடுவதற்கு ஆகும் செலவை நான்தான் என் சொந்தப் பணத்தில் இருந்து கொடுப்பேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.


Sunday, December 10, 2017

மோடி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறா அல்லது காங்கிரஸுக்கு சேவை செய்ய இருக்கிறாரா?

You want mandir or mosque, Modi asks Cong
#avargalUnmaigal
மோடி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறா அல்லது காங்கிரஸுக்கு சேவை செய்ய இருக்கிறாரா?

வளர்ச்சி வேண்டுமா இல்லையா என்று மக்களை பாத்து கேட்க வேண்டிய மோடி கீழ்தர பேச்சாளர் போல ராகுலை பார்த்து கோயிலா மசூதியா என்று கேட்கிறார்..


Friday, December 8, 2017

மோடி செய்வது சேவையா திருட்டா? (படித்ததில் பிடித்தது )

மோடி செய்வது சேவையா  திருட்டா?

சேவையா..? திருட்டா...??
குசராத் நாயகன் அண்ணாத்தே
ஒரு கூட்டத்திலே பேசினாரு
125 கோடி இந்தியர்கள்
எனக்கு கடவுள்  அந்த
கடவுகளுக்கு நான் சேவை
செய்து வருகிறேன் என்று...


இப்ப நான் உங்களை  கேட்கிறேன்..


அண்ணாத்தே .....என்னையும் சேர்த்து
கடவுளுன்னு சொல்லிட்டாரு.... நான்
கடவுள்ன்னா அண்ணாத்தே...15
லட்சத்த காணிக்கையாவுல எனக்கு
செலுத்தி இருக்கனும் அப்படி
செலுத்தாமல்.. அண்ணாத்தே... அவரே
எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது
சேவையா? திருட்டா...?????

சொல்லுங்க..அப்பு சொல்லுங்க.............!!!!!!!!!!!

பதிவை எழுதி அவரின் வலைதளத்தில்  பகிர்ந்தவர் வலிப்போக்கன். நன்றி வலிப்போக்கன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Thursday, December 7, 2017

அதிரா மற்றும் ஏஞ்சலிடம் வம்பு செய்பவனை தட்டி கேட்க இந்த பதிவுலகில் யாரும் இல்லையா?

அதிரா மற்றும் ஏஞ்சலிடம் வம்பு செய்பவனை தட்டி கேட்க இந்த பதிவுலகில் யாரும் இல்லையா??

தட்டி கேட்க யாரும் இல்லையா என்றுதான் படிக்கணும் வடை தட்டி கேட்க யாரும் இல்லையா என்றுபடிக்க கூடாது ஹீஹீ

அதிரா: மதுரைத்தமிழா நீங்க எப்ப பார்த்தாலும் என்னை தேம்ஸ் நதியில் குதிங்கோ குதிங்கோன்னு சொல்லுறீங்க. எனக்கு அதில் குதிக்க பயமில்லை ஆனால் குதிச்ச பின்  குளிரில் உடல் நடுங்குமோ என்று பயமாக இருக்கிறது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கோ அதன் பின் யான் குதிச்சிடுறேன்மதுரைத்தமிழன்... அதிரா ரொம்ப ஈஸியான ஒரு ஐடியா  சொல்லுறேன்....இட்லி மாவு பொங்குறதுக்கு சுடு தண்ணி சுட வைச்ச மாதிரி ஒரு பெரிய அண்டாவில் தண்ணியை சுட வைச்சி அதை தேம்ஸ் நதியில் கொட்டிவிட்டு உடனே அதில் குதிச்சுடுங்க அப்படி செஞ்சால் உங்கள் உடல் குளிரில் நடுங்கவே நடுங்காது

வெட்கம் கெட்டதமிழர்களே இன்னுமா இவர்களை நாட்டில் வலம் வர விட்டு வைத்திருக்கிறீர்கள்?

தமிழர்களே இன்னுமா இவர்களை நாட்டில் வலம் வர விட்டு வைத்திருக்கிறீர்கள்?

கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலால் அந்த மாவட்டத்தில் இருக்கும் ஆயிரகணக்கான மீனவ குடும்பங்கள்  தங்கல் வீட்டில் இருந்து கடலுக்குள் சென்ற உறவுகளுக்கு என்ன ஆகியோதோ என்று கலங்கி தவிக்கின்றன.

Wednesday, December 6, 2017

ஒரு பெண்ணின் மனதை பெண் அறிவாள் ஆனால் ஜெயலலிதா அதை அறியவில்லையே?

ஒரு பெண்ணின் மனதை பெண் அறிவாள் ஆனால் ஜெயலலிதா அதை அறியவில்லையே

ஜெயலலிதா பற்றி  சமுக வலைதளங்களில் எழுதிய பல பதிவுகள் என் கண்ணில்பட்டன. பல பதிவுகள் புகழ்ந்து இகழ்ந்தும் வந்தன. அப்படி புகழ்ந்து வந்த பதிவுகளில் ஜெயலலிதா ஏதோ பெரிய சாதனையாளர் என்றும் தைரியமிக்கவர் என்றும் யாருக்கும் அஞ்சாதவர் என்றும் பெண்கள் மீது இரக்கம் கொண்டவர் என்று எழுதி இருந்ததை படிக்கும் போது ஆத்திரமே வந்தது..

அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழர்களின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்

#avargal#unmaigal
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழர்களின் சார்பில் ஒரு சிறு  வேண்டுகோள்

குஜராத்தில் கரை ஒதுங்கிய தென் தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்ப உதவி செய்ய  டிவி சேனல்கள் மூலம் கோரிக்கை வைக்கிறார்கள்.அவர்களிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்று அவர்களை

Tuesday, December 5, 2017

இப்படியும் சில பெண்கள்...ஹும்ம்ம்

இப்படியும் சில பெண்கள்...ஹும்ம்ம்

Sunday, December 3, 2017

காணாமல் போன மீனவர்களை தேடி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றது எங்கே?


#avargalUnmaigal
காணாமல் போன மீனவர்களை தேடி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றது எங்கே?


கன்னியாகுமரியில் கன மழை, புயல் ! களத்தில் இருக்க வேண்டாமா? @PonnaarrBJP #CycloneOckhi


தமிழகத்தில் தாமரை மலராது இருப்பதற்கு காரணம் அதன் தமிழக தலைவர்கள் களி மண்ணாக இருப்பதால்தான் களிமண்ணில் தாமரை எப்படி மலரும்?

Friday, December 1, 2017

ஆத்தா நான் பாஸாகிட்டேன்! (எடப்பாடியும் அவரின் பொது அறிவும்)

#avargalunmaigal

ஆத்தா  நான் பாஸாகிட்டேன்! (எடப்பாடியும் அவரின் பொது அறிவும்)

கம்ப ராமாயணதை எழுதியது சேக்கிழார் என்று  எடப்பாடி வாய் தவறியோ அல்லது அது பற்றி தெளிவாக தெரியாமல் பதில் சொன்னாதால் என்னவோ இப்ப சமுக இணையதளங்களில் அவரின்  கிண்டல் கேலி செய்து பேசி வருவது வைரலாக பரவி வருகிறது..

இப்படி நாடே கிண்டல் செய்யும் போது நாம் சும்மா இருந்தால் இந்த நாடு நம்மை மன்னிக்காது என்பதால் நாமும் எடப்பாடி பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று எண்ணி என்ன எழுதலாம் என்று யோசித்த போது பேசாமல் அவரிடமே ஒரு பேட்டி கண்டு அதை பதிவாக போடலாம் என்று முடிவு அவரை அணுகிய போது அவர் அதற்கு சம்மதித்தார்

Thursday, November 30, 2017

குஜராத்தில் பாஜக மீண்டும் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டும் ஏன் தெரியுமா?

குஜராத்தில் பாஜக மீண்டும் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டும்  ஏன் தெரியுமா?

இந்தியா முழுவதும் மோடி அலை வந்து பாஜக  மெஜாரிட்டியில் வந்து ஜெயிச்ச போதும் இந்த தமிழ் மக்கள் இன்னும் மோடியை வைச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க.... அப்படி இருக்கையில் குஜராத்தில் மட்டும் தோற்றுவிட்டாலோ அல்லது குறைந்த இடத்தை மட்டும் பெற்றுவிட்டாலோ இந்த தமிழ் மக்கள் பண்ணப் போகும் அழிச்சாட்டியத்தை நினைத்தால் பக் பக் என்று மனசு அடிச்சுகுது...

Wednesday, November 22, 2017

கருத்து சுதந்திரம் இப்போது காவிகள் சுதந்திரமாக போய்விட்டதா?

#avargalUnmaigal
கருத்து சுதந்திரம் இப்போது காவிகள் சுதந்திரமாக போய்விட்டதா?

இந்திய மக்களிடம் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு அதற்கு பதில் காவி சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பாஜக ஆட்சியில் எழுதிய சட்டத்தைவிட எழுதாத சட்டத்திற்கே மதிப்பு அதிகம்.


ஒருவர் ஒரு நிகழ்வை பற்றி விமர்சித்து கருத்து சொன்னால் அதில்  உடன்பாடி இருந்தால் அதை ஆதரிக்கவோ அல்லது அது தவ்று என்று ஆதாரப் பூர்வமாக மறுத்து பதில் கருத்து சொல்லலாம் அல்லது அந்த கருத்து ஒரு சமுகத்தில் குழப்பம் விளைவித்து  அதற்கு சேதம் ஏற்படுமானால் அவரை விசாரித்து அவர் சொன்னது சட்டப்படி தவறாக இருந்தால் அவருக்கு தண்டனை தரலாம். அதுதான் நியாயம்..


Sunday, November 19, 2017

மக்களிடம் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா?

மக்களிடம் மோடிக்கு  செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா?

அன்புமணி ராம்தாஸும் அவர் கொடுத்த செல்லாத சர்டிபிகேட்டும் ஒரு படம் ஒரு நையாண்டி

அன்புமணி ராம்தாஸும் அவர் கொடுத்த செல்லாத சர்டிபிகேட்டும் ஒரு படம் ஒரு நையாண்டி

Saturday, November 18, 2017

வருமான வரித் துறை சோதனை போட வேண்டிய இடம் சோ.ராமசாமியின் வீட்டைத்தான் ஜெயலலிதா வீட்டை அல்ல

#avargalunmaigal
வருமான வரித் துறை சோதனை போட வேண்டிய இடம் சோ.ராமசாமியின் வீட்டைத்தான் ஜெயலலிதா வீட்டை அல்ல.


சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருங்கிய தோழியாக இருக்கலாம் ஆனால் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கை பாத்திரமானவர். துக்ளக் ஆசிரியர் நடிகர் சோ.ராமசாமிதான்... ஜெயலலிதா பல ரகசியங்களை இவரிடம் பகிர்ந்ததுமல்ல இவரிடம் இருந்து ஆலோசனை பெற்றுதான்  தனது அரசியல் மூவ்களை நகர்த்தி வந்துள்ளார்.சசிகலாவை ஒதுக்கி வைத்த போது மிக நெருக்கமாக இருந்தவரும் இவர்தான்.

Friday, November 17, 2017

வெற்றியின் மிதப்பில் உளறுவது சரியா? கோபி நையினார்

வெற்றியின் மிதப்பில் உளறுவது சரியா? கோபி நையினார்


சமுக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் பார்க்கும் போது அறம் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தெரியவருகிறது. இதற்க்காக அதன் டைரக்டர் கோபி நையினாரை பாராட்டலாம். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றதும் அந்த வெற்றியின் மிதப்பில் தாம் என்ன வேண்டுமானலும் உளறலாம் என்பது  சரியா?


கோபி நையினார் அறம் படத்தை பற்றிய பொது மக்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது தடுப்பூசி பாம்பை விட  மிகவும் மோசமானது  அது குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது என்று... அவரின் இந்த தவறான கருத்துதான் பாம்பின் விஷத்தை விட மிக மோசமாக இருக்கப்போகிறது .அவரின் இந்த தகவலை வாட்சப் மூலம் அறியும் தமிழக முட்டாள்களில் அறம் படத்தில் மூலம சமுக கருத்துகளை பேசிய இவர் சொன்னால் மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணி தங்கள் குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியை நிறுத்தலாம். அதனால் அந்த குழந்தைக்கு உடல் நல குறைவுற்று இறக்கலாம். அப்படி நடந்தால் கோயி நையினார் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வாரா என்ன?

Tuesday, November 14, 2017

மோடியை நயன்தாரா சந்தித்தது ஏதற்காக? தமிழக கட்சி தலைவர் பொறுப்பேற்க்கவா?


avargal unmaigal
 செய்திகளை முந்தித்தருவது அவர்கள்....உண்மைகள் வலைத்தளமே ஹீஹீ

மோடியை நயன்தாரா சந்தித்தது ஏதற்காக? தமிழக கட்சி தலைவர் பொறுப்பேற்க்கவா?

டில்லி: அறம் பட வெற்றியை அறிந்த மோடி நயன்தாரவை சந்திக்க விரும்பியதால் நயன்தாரா மோடியை டில்லியில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அறம் படம் பற்றி மட்டும் பேசியதாக  அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அவரிடம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க மோடி அழைப்பு விட்டதாக அதிகார வட்டத்தில் பேசப்படுகிறாதாம்

Sunday, November 12, 2017

மோடியை பக்தாள்ஸ் கைவிட்டது ஏன்?

#avargalUnmaigal
மோடியை பக்தாள்ஸ் கைவிட்டது ஏன்?
மோடி கூட தவறை ஏற்றுக்கொள்ள கூடும். ஆனால் அவருக்கு முட்டு கொடுப்பவர்கள்(பக்தாள்ஸ்) ஒருநாளும் ஒத்துக்கொள்வதில்லை.

Saturday, November 11, 2017

வருமான வரித்துறையின் சோதனையும் நெட்டிசன் மதுரைத்தமிழனின் நக்கல் கருத்துகளும்

வருமான வரித்துறையின் சோதனையும் நெட்டிசன் மதுரைத்தமிழனின் நக்கல் கருத்துகளும்

நாடு முழுதும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது உறவினர் இல்லங்களிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை சோதனை முன்றாவது  நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்த  மதுரைத்தமிழனின் கருத்துக்கள் இங்கே

#avargal#unmaigal
வெற்றிகரமாக நூறாவது நாளாக சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் , நண்பர்களின் இடங்களில் வருமானவரி சோதனை தொடர்கிறது: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல். இப்படி ஒரு தகவல் மோடி ஆட்சியில் வராமலா போய்விடும்  #Sasikala #ITRaid

Friday, November 10, 2017

லட்சுமி குறும்படம் பார்த்த பின் ஆண்களின் மனதில் மிகப் பெரிய மாற்றம். அது என்ன?

#avargal#unmaigalலட்சுமி குறும்படம் பார்த்த பின் ஆண்களின் மனதில் மிகப் பெரிய மாற்றம். அது என்ன?


அந்த படத்தை பார்த்த பின் பல ஆண்கள் சமையலை கற்று தேர்ச்சி பெற போயிருக்கிறார்களாம். அப்படி அவர் கற்று சமையல் செய்து மனைவியை அசத்த போகிறார்கள் என்று நீங்க நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம். அவர்கள் கற்று தேர்ந்து லட்சுமி மாதிரி பெண்களுக்கு சமைத்து போட்டு ஒரு நைட்டாவது அசத்தனும் என்றுதான் இப்படி கற்றுக் கொள்ளப் போகிறார்களாம். நம்ம ஊரில்தான் அடிக்கடி  இந்த போராட்டம் அந்த போராட்டம் மழை வெள்ளம் என்று பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதால் பஸ் ரயில் போக்குவரத்துபாதிப்புக்கள் ஏற்படும் . அதனால்சமையல் கற்றுக் கொண்டால் லட்சுமி மாதிரி கஷ்டப்படுகிற பெண்களுக்கு  உதவ முடியுமே என்றுதான் சமையல் கலை கற்க போகிறார்கள்!

Thursday, November 9, 2017

தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றால்?

தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றால்?


தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றால் அதற்கு சூரியன் உதவி தேவை என்பதை புரிந்து கொண்ட ஒரே தலைவர் மோடிதான். மற்றது எல்லாம் சும்மா புள்ளிவிபர கணக்கு கொடுக்கதான் லாய்க்கு

Wednesday, November 8, 2017

தினத்தந்தி விழாவில் எச்சில் எலும்பிற்க்காக மோடி பேச்சிற்கு கைதட்டிய கூட்டம்

தினத்தந்தி விழாவில் எச்சில் எலும்பிற்க்காக மோடி பேச்சிற்கு கைதட்டிய கூட்டம்


தினத்தந்தி விழாவில் மோடி பேசிய போது தமிழர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மோடி


மோடி சொல்கிறார் தந்தி மீன்ஸ் டெலிகிராம்

Tuesday, November 7, 2017

ரெஸ்டராண்ட் ஸ்டைல் ஹோம் மேட் ஆனியன் ராவா தோசை செய்வது எப்படி?

@avargalUnmaigal
ரெஸ்டராண்ட் ஸ்டைல் ஹோம் மேட் ஆனியன் ராவா தோசை செய்வது எப்படி?


ரவா தோசை பிடிக்காதவர்கள் அதிலும் ஆனியன் ரவா தோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். நாம் எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் என்ன ஆர்டர் பண்ணுவது, எதை சாப்பிடுவது என்று தெரியவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஆர்டர் செய்வது ஆனியன் ரவா தோசைதான்.
ஆனியன் ரவா தோசை சுடுவது என்பது கம்ப சூத்திரம் அல்ல .அதை சுடுவது மிக மிக எளிது . அதிலும் வீட்டிற்கு தீடிரென்று விருந்தாளிகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மிகவும் கை கொடுப்பது இந்த தோசைதான். தோசை சுட்டு போடுவதற்குதான் டைம் எடுக்குமே தவிர அதை தயாரிக்க எடுக்கும் நேரம் 3 நிமிடங்கள் கூட ஆகாது.

Sunday, November 5, 2017

மோடி கலைஞரை சந்திக்கிறாராம் உஷார இருங்க தமிழ் மக்களே

@avargalUnmaigal
மோடி கலைஞரை சந்திக்கிறாராம் உஷார இருங்க தமிழ் மக்களே

உடல் நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்காத பிரதமர்  #மோடி உடல்நிலை தேறிவருகிற கலைஞரை சந்திக்க வருவது  எதற்கு? தன்னை நல்லவன் பண்பாடு உள்ளவன் என்று காட்டி கொள்வதற்காகவா.. ?உஷார இருங்க தமிழ் மக்களே

நெல்லை கலெக்டருக்கு எடப்பாடி அரசு மீது அப்படி என்ன கோபம்

நெல்லை கலெக்டருக்கு  எடப்பாடி அரசு மீது அப்படி என்ன கோபம்கந்துவட்டியால இறந்த சம்பவத்தை ஒட்டி பாலா ஒரு கார்ட்டூன் போட்டு இருக்கிறார். அது முகநூலில் அவரை பாலோ செய்பவர்கள் மட்டும் பார்த்து ரசித்து வந்தனர். ஆனால் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு எடப்பாடி அர்சு மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.பாலாவை  அரெஸ்ட் பண்ணிருக்காங்க. நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்ச அந்த கார்ட்டூன் இப்ப உலகம் முழுவது தெரிஞ்ச்ருக்கு.... எப்படி மெர்சல்  படத்தை ஹெச்.ராஜா பிரபலபடித்தினாரோ அது போல நெல்லை கலெக்டர் பாலாவின் கார்டுனை பிரபலபடுத்தி இருக்கிறார். இதனால் கந்து வெட்டியை பற்றி மறந்து போன மக்களிடம் அந்த செய்தியை மீண்டும் சூடுபிடிக்க செய்து இருக்கிறார், நெல்லை மாவட்ட கலெக்டர் தான் அசிங்கப்பட்டது போல தமிழக முதல்வரும் அசிங்கப்பட வேண்டும் என்றுதான் இப்படி ஆணையிட்டு இருக்கிறார்

வெள்ளக்காடன சென்னையும் முகநூல் கருத்துகளும்

avargal unmaigal

Friday, November 3, 2017

கலைஞரை கண்டு இன்றும் காவிகள் பயம் கொள்வதேன்?

கலைஞரை கண்டு இன்றும் காவிகள் பயம் கொள்வதேன்?


தனது  உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் எல்லாவித  பொறுப்பில் இருந்தும் விலகி ஒரு சாதாரண குடும்பத்தலைவனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கலைஞர். அவரின் உடல் நிலை சிறிது தேறியதும் முரசொலி கண்காட்சியை பார்க்க அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அதன் பின் அவரது பேரனுக்கு திருமணம் அவரது ஆசிர்வாதத்துடன் நடந்தது. அது பற்றி ஊடகங்களில் செய்தி வந்ததும். இந்த காவிகள் பொறுக்க முடியாமல் சமுக வலைத்தளங்களில் ஊளையிடத் துவங்கி இருக்கின்றனர்.

Thursday, November 2, 2017

பேஸ்புக்கிற்கும் வெளி உலகத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு

#avargal #unmaigal
பேஸ்புக் உறவிற்கும் உண்மையான உறவிற்கும் உள்ள வேறுபாடு இதுதானுங்க வெளி உலகத்தில் நம்மை பிடித்தவர்கள் மட்டும்தான் நம்மை பாலோ செய்வார்கள் .ஆனால் பேஸ்புக்கில் நம்மை பிடிக்காதவர்களும் நம்மை பாலோ செய்வார்கள் காரணம் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிய அதனால்தான் மோடி  போன்றவர்களுக்கு பேஸ்புக்கில் அதிக பாலோவர்கள்.

Tuesday, October 31, 2017

அமலாபாலின் அழகை ஆராதிக்க தெரியாதவர்கள் அவர் மீது வீண்பழி சுமத்தலாம்மா?

அமலாபாலின் அழகை ஆராதிக்க தெரியாதவர்கள் அவர் மீது வீண்பழி சுமத்தலாம்மா?


#அமலா பால் கார் வாங்க செய்திருக்கிற தப்பை ஆயிரக் கணக்கானவங்க செய்திருக்காங்க. செய்துகிட்டு இருக்காங்க.ஆனால் அமலா பால் மீது மட்டும் வழக்கு

இதில் இருந்து தப்பிக்க லாயரை நம்புவதைவிட மத்திய அரசை பாராட்டிவிட்டு ஹெச்.ராஜாவை சந்தித்தால் எல்லாம் சுமுகமாக முடிந்திடும்.... இந்த அறிவு அந்த புள்ளைக்கு இருக்குமா என்று தெரியவில்லையே.. இதை என் சார்பாக அவரிடம் யாரவது தெரிவித்துவிடுங்களேன்.

Monday, October 30, 2017

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைதானோ? சென்னையில் உயர்நீதிமன்ற துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் :

@avargal unmaigal
சென்னையில் உயர்நீதிமன்ற துப்புரவு பணிக்கு  விண்ணப்பித்த பட்டதாரிகள் : படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைதானோ?நான் படித்த செய்தியை கிழே கருப்பு கலரிலும் அதற்கான என் கருத்தை சிவப்பு கலரிலும் தந்து இருக்கிறேன்.. உங்களுக்கும் கருத்து ஏதும் இருக்குமானல் கிழே பதிந்து செல்லுங்கள்'

சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணி : அதிகளவில் விண்ணப்பித்த பட்டதாரிகளால் அதிர்ச்சி


சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,500 பேரில் பெரும்பாலானவர்கள், பிஇ, எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பில் பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள நேர்முகத் தோவில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து பேசிய வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்துள்ளது வேதனை தர கூடிய விஷயமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் படித்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்பு இல்லை என்பதையே இச்சம்பவம் படம் பிடித்து காட்டுவதாக குறிப்பிட்டனர். மொத்தமுள்ள 140 பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இந்த பணிகளுக்கு மொத்தம் 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு சிலரே 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Sunday, October 29, 2017

மோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்

@avargal unmaigal
மோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்

சேகர் ரெட்டியிடம் மூன்று கட்டமாக விசாரணையை இப்படிதான் நடத்தி இருப்பாங்களோ?

செய்தி :சேகர் ரெட்டியிடம் 34 கோடிக்கு புது 2000 ரூபாய் எப்படி வந்தது என்று RBI யால் கண்டுபிடிக்க இயலவில்லை.


சேகர் ரெட்டியிடம் மூன்று கட்டமாக விசாரணையை இப்படிதான் நடத்தி இருப்பாங்களோ?

Friday, October 27, 2017

வலிகள் ஆண்களுக்கு வருமா?

@avargal Unmaigal
வலிகள் ஆண்களுக்கு வருமா?


நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைபற்றி சற்று யோசித்த போது ...


நல்ல இதயமுள்ளவர்களுக்கு வலிகள் வரும் அது ஆண் பெண் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் வலியை வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை. சினிமாவில் வந்த இந்த பாடல் வரிகள் ஆண்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். வெளியில் சிரிக்கிறேன் உள்ளே அழுகுறேன் நல்ல வேஷம்தான் இருந்து வெளுத்து வாங்குறேன்.

ஆண்களுக்கு எப்போது எல்லாம் வலி வரும் என்பதை யாராவது கவனித்து இருக்கிறீர்களா?

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog