Thursday, November 30, 2017

குஜராத்தில் பாஜக மீண்டும் கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டும்  ஏன் தெரியுமா?

இந்தியா முழுவதும் மோடி அலை வந்து பாஜக  மெஜாரிட்டியில் வந்து ஜெயிச்ச போதும் இந்த தமிழ் மக்கள் இன்னும் மோடியை வைச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க.... அப்படி இருக்கையில் குஜராத்தில் மட்டும் தோற்றுவிட்டாலோ அல்லது குறைந்த இடத்தை மட்டும் பெற்றுவிட்டாலோ இந்த தமிழ் மக்கள் பண்ணப் போகும் அழிச்சாட்டியத்தை நினைத்தால் பக் பக் என்று மனசு அடிச்சுகுது...


ப்ளிஸ் நாட்டுக்கு சேவை செய்வதற்காக மோடியை கண்டிப்பாக தேர்ந்தெடுங்க.... இல்லைன்னா ஒரு தேசிய தலைவர் தமிழ் மக்கள் பண்ணப் போகும் அழிச்சாட்டியத்தால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் அழையப் போகிறார்

கொசுறு :கம்பர் எழுதிய கம்பராமாயணத்தை அப்பவே இனையத்தில் மற்றவர்கள் பதிவை காப்பி செய்து போடுவது போல சேக்கிழாரும் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறார் போல அதனால்தான் அதை படித்த கூமுட்டைகள் கம்பராமாயணதை எழுதியது சேக்கிழார் என்று கூறித்திரிகின்றனர்



டிஸ்கி...வாழ்க்கை பிஸியாக போவதால் கடந்த வாரம் பதிவுகள் ஏதும் போடவில்லை அதுமட்டுமல்ல ஏதாவது கிறுக்கணும் என்றால் மோடிதான் மனதில் வந்து நிற்கிறார். பாவம் அவரை எவ்வளவுதான் நாம் கலாய்ச்சாலும் மனசுன் அசாராமல் நாட்டுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார். அதுனாலேயும் மேலும் அவர் குஜராத்த பக்கம் போய் கடுமையாக உழைப்பதால் அவருக்கு ஆதரவாக அவரை கலாய்க்கமல் இருந்தேன்... ஆனால் இந்த பதிவுலகம் என்னை விட மாட்டேங்கிறது..... என்னய்யா உனக்கு என்னாச்சு மோடியை கலாய்ச்சு ஏதாவது போடுய்யா அப்பதான்  எங்களுக்கு அதை படிச்சுட்டு தூக்கம் வரும் என்று இன்பாக்ஸிலும் வாட்சப்பிலும் அன்பு தொல்லைகள் தருகிறார்கள் அதனால்தான் இந்த பதிவு..


டிஸ்கி : எனக்கு மற்றவர்களை போல அழகாக கதை கவிதை நகைச்சுவை என்ரு எழுதி பதிவிடதான் ஆசை .அப்படி ஒரு திறமை இருந்தால் நான் வச்சிகிட்டு வஞ்சகமா பண்ணப் போறேன். அந்த திறமை இருந்தால் கதை கவிதை எழுதி எல்லோரையும் சாக அல்லவா செஞ்சிருப்பேன். அப்படி ஒரு திறமை இல்லாததால்தான் இந்த மோடியை மட்டும் நான் இப்போ கலாய்ச்சுகிட்டு இருக்கேன்...மோடி மட்டும்  ஆட்சியை விட்டு போகிட கூடாது அப்படி போனால் எனக்கு என்ன பதிவு போடுறதுன்னே தெரியாது... மோடி நீ மகராஜனப்பா

அன்புடன்
மதுரைத்தமிழன்

30 Nov 2017

6 comments:

  1. அப்படினா உங்களுடைய வாழ்க்கை மோ(ச)டியுடன் பிணைந்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மோடியும் நானும் நல்ல நண்பர்கள் அதனால்தான் அவர் செய்யும் தவறுகளை தைரியமாக சுட்டி காட்டி வழி தவறிவிடக்கூடாது என்று சொல்லுகிறேன் . ஆனால் பக்தாஸ்க்கள் அப்படி இல்லை இப்ப ஜால்ரா தட்டுபவர்கள் நாளை யோகி வந்த பின் அத்வானியை கழட்டிவிட்டது போல இவரையும் கழட்டிவிட்டுவார்கள்

      Delete
  2. வேண்ணா குஜராத்தை இந்தியாவிலிருந்து பிரிச்சுட்டு அதுக்கு மோடியை மன்னராக்கிட்டு , எங்களை ஆளை விடுங்கடா சாமிகளா .

    ReplyDelete
    Replies

    1. குஜராத்திற்கு மன்னர் ஆக்கினால் அதன் பின் மீதி உள்ள இடங்கள் மீது போர் தொடுத்து முகலாயர்கள் இந்தியாவை கைப்பற்றியது போல இவரும் கைப்பற்றிவிடுவாரே

      Delete
  3. மோடிக்கு தமிழ் தெரிந்து இதைப் படித்தால்நிச்சயம் நன்றி சொல்வார்

    ReplyDelete
    Replies
    1. டிவிட்டரில் மோடி தமிழர்கலுக்கு தமிழில் செய்தி சொல்லும்போது இதை படிக்க அவருக்கு முடியாத என்ன?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.