உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 30, 2011

பெண்கள் மிக அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய வலைத்தளம் (காணத்தவறாதீர்கள்)


பெண்கள் மிக அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய வலைத்தளம் (காணத்தவறாதீர்கள்)பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) மிக உதவக்கூடிய பயனுள்ள வலைதளத்தை பற்றிய அறிமுகம்தான் (This site is fantastic !!! Save this one) இந்த பதிவு. உங்களுக்கு உணவு பொருட்கள் பற்றிய எழக்கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும். எவ்வளவு நாள் நம் உணவுகள், குளிர்பானங்கள் ஃப்ரிஜ்ஜுக்குள் கெடாமலும், ருசியாகவும் இருக்கும்?  எவ்வளவு நாள் நாம் கெட்சப் பாட்டிலை ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்து இருக்கலாம்?

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதிலுண்டு. இந்த வலைத்தளத்தை உங்கள் கம்பியூட்டரில் புக்மார்க் செய்து வைத்து கொள்ளுங்கள் .மிக உதவிகரமாக இருக்கும் அதிலும் அம்மாவைவிட்டு தொலை தூரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு பயனுள்ள தளம் இது ( என் வளைத்தளமும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்)


StillTasty’s tag line is “Your Ultimate Shelf Life Guide – Save Money, Eat Better, Help The Environment.” You can search for a specific food item, or you can browse through the categories to determine how long it is safe to keep a product. The site is easy to navigate and will keep you from wondering if the unopened bottle of ketchup is safe to consumeஇது போன்று நான் தரும் இந்த வலைத்தள அறிமுகம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா என்பதை நேரம் கிடைத்தால் பதிலளிக்கவும்.

உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு.(பெண்ணின் சாதனை)


உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு. (பெண்ணின் சாதனை)

பாலில் இருந்து என்னவெல்லாம் தயாரிக்கலாம் என்று என் மனைவியிடம் கேட்டேன். என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு தயிர்,மோர்,வெண்ணை,நெய், பலவித ஸ்வீட்கள் தயாரிக்கலாம் சொன்னார்.

உடனே நான் இதை கேளு ஒரு ஜெர்மன் பெண் பாலில் இருந்து ஆடைகள் தயாரிக்கிறார் என்றேன். என் மனைவியோ என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நானும் பாலில் இருந்து ஆடை தயாரிப்பேன் இது என்ன அதிசயமா என்ன? எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாலாடையில் இருந்து நல்ல ஸ்வீட்டு செய்வோம் உங்களுக்கு எப்பவுமே வெளிநாட்டுகாரிகள் ஏதும் செய்தால் அதிசயமாக தெரியும் நாங்க செய்தா அது உங்கள் கண்களுக்கு தெரியாது என்று சண்டை போடத் தொடங்கினாள்.

இப்போ நான் அவளை பார்த்து இப்போ சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தேன். அடி கழுதை நான் சொன்னது அந்த ஜெர்மன் பெண் தயாரித்த உடை(ஆடை)யைப் பற்றி சொன்னேன். நீ எப்பவுமே சாப்பிடுறத பற்றியே நினைத்து கொண்டிரு என்று கிண்டல் செய்தாவாரு அந்த ஜெர்மன் பெண் செய்த சாதனையை எடுத்து சொன்னேன்.

'ஆங்க் டோமஸ்கா' என்ற இளம் பேஷன் டிசைனர் 28 வயதே ஆனவர். ஜெர்மனியில் ஹானோவர் நகரில் வசிக்கும் இவர் பாலில் இருந்து நூல் தயாரித்து விதவிதமான ஆடைகளை தயாரித்துள்ளார். செயற்கை முறையில் தயாரித்த இந்த இழைகளுக்கு (Qmilch)  என்று பெயரிட்டுள்ளார். ராசாயனங்கள் ஏதும் கலக்காமல் முதன் முதலாக மனிதனால் தாயாரிக்கபட்ட செயற்கை இழை இது ஆகும். இதிலிருந்து எந்த வித ஸ்மல் ஏதும் வருவதில்லை. உடலுக்கும் எந்த வித தீங்கும் விளைவிப்பதில்லை. இதை மற்ற துணிகள் போல துவைக்கலாம்.

நுண்ணுயிரியல் முறையில் தயாரிக்கப்படும் இந்த செயற்கை இழையில் உள்ள அமினோ அமிலங்கள் நோய்கிருமி எதிர்ப்பு தன்மையுடையது. மேலும் ரத்த ஒட்டம் மற்றும் உடல் வெப்பத்தை சீராக வைக்கும் தன்மை உடையது. வயது முதிர்வை ஒரளவுக்கும் கட்டுபடுத்துகிறது.

ஆறு லிட்டர் பாலில் இருந்து ஒரு டிரெஸ் தயாரிக்க முடியும் என்றும் அதற்கு $200 லிருந்து $ 270 வரை செலவு ஆவதாக ஆங்க் டோமஸ்கா கூறுகிறார்.

டிஸ்கி 1: உண்ண உணவு இல்லாமல் மக்கள் மடியும் இந்த காலத்தில் இந்த மாதிரி பாலை பயன்படுத்தி உடைகள் தாயாரிப்பது தேவையா என்றால் அது தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஆனால் இந்த பெண் செய்த சாதனையை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் & வாழ்த்துகிறேன்.

டிஸ்கி 2 : இந்த முறையில் உடை தாயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு நான் ஓன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் எத்தனை விதமான முறையில் பாலை பயன்படுத்தி ஸ்விட்கள். சீஸ் போன்ற ஆடம்பர உணவைகளை தயாரிக்கிறிர்கள் அதை முதலில் நிறுத்தி விட்டு அதன் பிறகு உங்கல் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்.

Saturday, October 29, 2011

ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம் ஏமாற்றிய ஜெயலலிதா ஏமாந்த தமிழ் மக்கள்


ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம் ஏமாற்றிய ஜெயலலிதா ஏமாந்த தமிழ் மக்கள்

  


உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் அவரிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனத் தடைகளும் நீங்கியதால் அவரின் "துக்ளக் தர்பார்" ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் ஆரம்பம்தான்  இந்த செய்தி

உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த மூன்றுபேரின் மரண தண்டனை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஜெயலலிதாவின் உண்மையான மனபூர்வமான நிலைப்பாடு மிகத் தெளிவாக எடுத்து வைக்கபட்டுள்ளது. மூவரின் கருணை மனுக்களையும் பரிசீலிப்பதில் குடியரசுத் தலைவர் நீண்டகாலம் தாமதம் செய்வதாக கூறப்படுவது பற்றி தமிழக அரசு கருத்து ஏதும் கூறவிரும்பவில்லை என்றும் அதேபோல அவர்களது தூக்குத் தண்டனையை குறைக்க தமிழகம் முழுவதும் ஆதரவு எழுந்ததாக கூறப்படுவது குறித்தும் தமிழக அரசு எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அவருடைய அமைச்சரவைத் தீர்மானம். தேர்தலில் பெற்ற ஆமோக  வெற்றிக்குப் பிறகு மனுக்களை ரத்து செய்து தூக்கில் போடவேண்டும் என்று மாறியது. வெகு சீக்கிரம் கூடங்குளம் விவகாரத்திலும் ஜெயலலிதாவின் உண்மையான நிலை என்னவென்று  தெரிந்துவிடும்.

எந்த கொம்பனாலும் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவரை ஓன்றும் செய்ய முடியாது. இந்த தமிழக மக்களை நினைத்தால் தான் மிகவும் பாவமாக இருக்கிறது. பாம்புக்கு பயந்து பாம்பு புற்றில் கைவிட்டது போல ஆகிவிட்டது.

தீபாவளி அன்று எல்லோரும் தலை முழுகுவார்கள். ஆனால் அன்று இந்த அம்மா தமிழக மக்களையே தலை முழுகிவிட்டார். கலைஞரோ ஈழத்தமிழரை மட்டும் கைவிட்டார் என்று சொல்வார்கள்  ஆனால் இந்த அம்மாவோ ஈழத்தமிழர் மட்டுமல்லாமல் இந்திய தமிழரையும் கைவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.

வரும் ஐந்து ஆண்டும் "சுதந்திர இந்தியாவில்" தமிழகம் மட்டும் "சுதந்திரம் இல்லாத மாநிலமாக " இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.

"அறிவில்லாத" லிபியா மக்கள் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு  கொண்டு ஏதோ புரட்சி ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த கூத்தாடுகின்றனர். அது போல "அறிவுள்ள" தமிழ் மக்கள் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த மடைகின்றனர். அந்த ஆனந்தம் எவ்வளவு நாள் செல்லும் என்று பார்ப்போம்.


ரஜினி சொன்ன பொன்னான வார்த்தைகளை நான் இங்கே மீண்டும் நினைவு கூறி விடை பெறுகிறேன். "இனிமேல் அந்த ஆண்டவணே வந்தாலும் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

Friday, October 28, 2011

டில்லி விஜயத்தின் போது சோனியா கலைஞரிடம் சொன்னது என்ன?


டில்லி விஜயத்தின் போது சோனியா கலைஞரிடம் சொன்னது என்ன?கலைஞர் :அம்மா சோனியாம்மா கொஞ்சம் கருணைகாட்டம்மா? எப்படியாவது கனியை வெளியே அனுப்ப உதவும்மா? ப்ளீஸ்.

சோனியா : ஐயா கலைஞரே. நீங்க பெரிய சாணக்கியவாதின்னு எல்லோரும் சொல்லுறாங்களே அது உண்மையா? எனக்கு என்னவோ நீங்க கிணத்து தவளை போலத்தான் தோணுது. உங்க ஆட்டம் எல்லாம் தமிழ் நாட்டுலதான் செல்லுபடியாகும். அதுவும் உங்க முதுமைகாலத்தில் நீங்க போடுற ஆட்டம் விலை போகாத ஆட்டம். நாங்க வட நாட்டுகாரங்க  இந்தியகடல்ல உள்ள சுறா மாதிரி அதை புரிஞ்சுகுங்க ஐயா.

அப்புறம் என்னமோ கேட்டிங்களே கனியை வெளியே அனுப்பனும்மா? உங்க வேண்டுகோள்படி 20 யை வெளியே விட்டா 60 தை உள்ள போடவேண்டியிருக்கும் எது சவுரியம் என்று யோசித்து சொல்லுங்க.கலைஞர் : என்னம்மா என்னை இந்த வயசான காலத்துல என்னை இப்படி பாட படுத்துற. நான் ஏதாவது தவறு செய்தால் என்னை மன்னிசுக்கம்ம? ப்ளிஸ் ஏதாவது உதவி செய்து 20 யும் 60தையும் வெளியே இருக்கும்படி செய்யும்மா? நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்.சோனியா : சிறிது யோசனைக்கு அப்புறம் யாருக்கோ ஒரு போன் போடுகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு கடைசியில் நான் ஒரு நல்ல ஐடியா வைச்சுருக்கேன். அதுக்கு ஒகேன்னா நான் இருவரையும் வெளியே இருக்க ஏற்பாடு பண்ணுறேன் என்றார்.

கலைஞர் : உடனே நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். சொல்லுங்கம்மா என்றார்.

சோனியா :  அதெல்லாம பெரிய காரியம் இல்லை. இந்த உள்ளாட்சி தேர்தல்ல எங்க கட்சி நாலாவது இடத்திற்கு வந்திருச்சு. இனிமே என்ன பண்ணாலும் அதை கரையேத்த முடியாது. அதனால நீங்க உங்க கட்சியை எங்க கட்சியோடு இணைத்துவிடுங்கள். நாங்கள் உடனே இரண்டாம் இடத்துக்கு வந்துவிடுவோம். எதிர்காலத்தில் முடிந்தால தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நானே முதல்வராக வந்து விடுவேன். ஏன்னா வரும் தேர்தலில் எங்க கட்சி சென்ரலில் கண்டிப்பாக வர மூடியாது என எனக்கு நல்லா தெரியும். அதனால நான் உங்களுக்கு இந்த ஆபர் தருகிறேன். சம்மதம்னா சொல்லுங்க. நான் இப்பவே போன் போட்டு உங்க கனியை வெளியே அனுப்புறேன் என்றார்

கலைஞர் : ஙே......என்று முழித்து திராவிட முன்னேற்ற கழகத்தை இப்போ திராவிட முக்காடு கழகமா ஆக்கிட்ங்கேளே சோனியாஜீ என்று கண் கலங்கி நிற்கிறார்இது ஒரு கற்பனை யாரையும் காயபடுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog