உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 30, 2013

ஹார்ட் அட்டாக் பைபாஸ் சர்ஜரி (by bass surgery ) - இளகிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம்ஹார்ட் அட்டாக் பைபாஸ் சர்ஜரி (by bass surgery ) - இளகிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம்இந்தியாவில் பலர் இளம் வயதிலேயே  ஹார்ட் அட்டாக்  தாக்கி உயிரை இழந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நல்ல உணவு பழக்க வழக்கம் இல்லாமல் இருப்பதும், சிகரெட் புகைப்பதும் , வேலையில் அதிக மன அழுத்தம் மற்றும் சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் ( அழகான சேலை கட்டிய பெண்களை அடிக்கடி பார்ப்பதும் )ஆகும்.

முன்பு எல்லாம் வெளியில் சாப்பிடும் பழக்கம் மிக குறைவாகவே இருக்கும் ஆனால் இப்போது வீட்டில் சாப்பிட்டால் கூட அந்த உணவு ஹோட்டலில் இருந்து வாங்கி வந்ததாகவே இருக்கிறது. அதுவும் பிரியாணி அல்லது எண்ணெய் அல்லது டால்டா. நெய்யில்  பொரித்த உணவு வகைகளாகவே இருக்கிறது அதுவும் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் எண்ணெயை சுட வைத்து உபயோகப்படுத்துவது மிகவும் டேஞ்சர் அது புரியாமல் வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடுபவர்கள் அதிகம் அதனால் இளம் வயதில் மரணத்தை தொடுபவர்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றனர்.

அப்படிபட்டவர்கள் நிச்சயம் கிழ்கண்ட வீடியோவை பார்க்க வேண்டும் ( இளகிய மனதுடையவர்கள் பார்க்க வேண்டாம்)

அட்டாக் பற்றி கவலை இல்லை என்பவர்கள் இதை பார்த்த பின் உடல் நிலையில் கொஞ்சமாவது அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயம்

Bypass Surgery on a Beating Heart. Arie Blitz, MD, FACC

நமது சகபதிவாளர்  உயர்திரு. தருமி சார்  மரணத்துடன் விளையாடி வென்றவர் அவரது அனுபவத்தை இங்கு சென்று  படியுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

அட்டாக் அட்டாக் ஹார்ட் அட்டாக் - ( ஆஞ்சியோ - ஸ்டென்ட் ) சிகிச்சைஅட்டாக் அட்டாக் ஹார்ட் அட்டாக் -  ( ஆஞ்சியோ - ஸ்டென்ட் ) சிகிச்சை

மாரடைப்புக்கு 'ஸ்டென்ட்' சிகிச்சையாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் "ஆஞ்சியோ பண்ணிடலாம்; 'ஸ்டென்ட்' வைத்து விட்டால் போதும்" என்று சொல்வதை பல முறை கேள்விபட்டிருப்பீர்கள்.

'ஸ்டென்ட்' மருத்துவம் உண்மையில் ஹார்ட் அட்டாக் நோயாளிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க 'ஸ்டென்ட்' சிகிச்சை உதவுகிறது என்று அமெரிக்க மற்றும் மேலை நாட்டு டாக்டர்கள் உறுதி கூறுகின்றனர்.

இந்தியாவிலும் இப்போது இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க 'ஸ்டென்ட்' பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். இந்த சிகிச்சையில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.  பெரும்பாலானோருக்கு 'ஸ்டென்ட்' பொருந்திய பின் மருந்து மாத்திரை, உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சீராக்கி விட முடிகிறது. அதன்பின் தேவைப்பட்டால்  மட்டும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

'ஸ்டென்ட்' என்பது மிகச்சிறிய நெட் வலைக்குழாய்; உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த ஸ்டென்ட், ரத்த குழாயின் உள் பொருத்தபடுகிறது. இதை பொருத்துவதற்கான சிகிச்சையைத்தான் 'ஆஞ்சியோபிளாஸ்டி' என்று அழைக்படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் 'ஸ்டென்ட்' வைப்பது. ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து, அதனால் அது வெடிப்பதை தடுக்கவும் 'ஸ்டென்ட்' பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகை இழைகள், மூலம் 'ஸ்டென்ட்' தயாரிக்கபடுகிறது.


இந்த 'ஸ்டெண்டின் சராசரி அளவு (average size of a single sten) இந்திய நோயாளிகளுக்கு Diameter 2.5 to 2.75 mm அளவும்,அமெரிக்க நோயாளிகளுக்கு   3 to 3.25 mm அளவும் ஆகும்
விடியோ விளக்கம்How cholesterol clogs your arteries (atherosclerosis)

What happens during a Heart Attack?


இதயத்தின் உள்ள இரத்தக்குழாய்கள்  சீராக இருப்பது முக்கியம். அதன் வழியாக முதலில் ரத்தம் செலுத்தப்பட்டு  பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்கள் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஆஞ்சினோ' என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத்தடுக்க ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்படுகிறது. 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவுடன், ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைட்யூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. 'ஸ்டென்ட்' பொருத்தாவிட்டால், மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பக்கவாதத்தை தடுக்கும் வலது, இடது கழுத்தில் 'கரோடிட்' என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த பாதிப்பை தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி மருத்துவ சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. 'ஸ்டென்ட்' வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இந்த சிகிச்சை பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறதுஅன்புடன்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog