Monday, April 8, 2013




@avargal unmaigal



சென்னைக்காரன் எல்லாம் தெரிந்தவன்  ஆனாலும் ?

ஒரு மதுரை இளைஞனும், ஒரு சென்னை இளைஞனும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குன்றிற்கு கேம்ப்  சென்றார்கள். பொழுது சாயவே ஓரிடத்தில்  கூடாரத்தினை அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.

இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே மதுரை இளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக் கேட்டான், மேலே பார். என்னதெரிகிறது என்று.

சென்னை  இளைஞன் சொன்னான்,  நண்பா கோடி கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன என்று. சொன்னான்

மதுரைக்காரன் கேட்டான், அப்புறம் வேற என்னதெரிகிறது?

வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”

 அப்புறம் வேற என்னதெரிகிறது??”

ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு நகர்ந்துள்ளது.”

உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?”

வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”

டேய் நம்ம கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள் என்பது கூடவா  தெரியவில்லை உனக்கு..!?”?????????????நீ ஒரு நல்ல சென்னைக்காரன் என்பதை நிருபித்துவிட்டாய்யடா


அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments:

  1. மதுரைக்காரன் எப்போதும்
    காரியத்தில் கெட்டி
    அருமையான ஜாலிப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்காரன் காரியத்தில் கெட்டி ஆமாம் குரு நீங்கதானே

      Delete
  2. இதனை நான் வன்மையாக அமோதிக்கிறேன் ஹா ஹா ஹா ... மேற்குத் தொடர்ச்சி மலை நெல்லைல தான் இருக்கு,.... அப்போ லவட்டிக்கிட்டு போனது எங்கூருக் காரனா தான் இருப்பான்... நாங்கல்லாம் ராச தந்திரியாக்கும்

    ReplyDelete
    Replies

    1. நாங்க எல்லாம் ராசதந்திரி என்று சென்னையில் இருந்து சத்தாமாக பேசாதீர்கள் அப்புறம் அவ்வளவுதான்

      Delete
  3. ஹா... ஹா.... ரொம்ப வெவரமான ஆளுங்க...!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை திண்டுக்கல்காரர் என்று சொல்லவில்லை இல்லை உங்ககிட்ட மாட்டி ஒரு வழியாக ஆகி இருப்பேன்

      Delete
  4. நல்ல ரசனைக்காரன் என்றும் சொல்ல....?

    ReplyDelete
  5. Replies
    1. உஷா மேடம் சிரிச்சுட்டாங்க அதாவது அவங்களும் சென்னை மக்களை கிண்டல் பண்ணுறாங்க...சென்னை மக்களே உஷா மேடம் வந்தா சென்னை வந்தா அட்டாக் ஏதும் பண்ணிடாதீங்க....பாவம் அவங்க

      Delete
  6. ஊர் ஊரா வம்பை வாங்குறீக ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஊர் பக்கம் தலை வைச்சு படுக்கமாட்டோம் என்ற தைரியத்தில்தானுங்க

      Delete
  7. 10 வருடங்களுக்கு முன்பு குற்றாலம் போயிருந்தோம்.நைட் 10 மணிக்கு அருவியில் குளிக்க கூட்டமாய் கிளம்பி கொண்டு இருந்த போது பக்கத்து ரூமில் இருந்த சென்னைவாசி கேட்ட கேள்வி எப்பவும் மறக்காது. இந்த டைமில் கூடவா அருவியில் தண்ணீர் வரும்???

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலை படித்ததும் அடக்க முடியாமல் சிரித்தேன் சிரித்தேன் சிரித்துகொண்டே இருந்தேன்

      Delete
  8. நல்ல நக்கலான நகைச்சுவை....“உண்மைகள்“!!

    (மதுரையைத் தோற்கடிக்க இன்னுமா
    சென்னையில் ஆள் இல்லை?)

    ReplyDelete
    Replies

    1. மதுரைக்காரரை ( அழகிரி ) சென்னைக்காரர்( ஸ்டாலின் ) தோற்கடித்து தலைவர் பதவியை பெற்றுக் கொண்டாரே

      Delete
  9. ஆரம்பிச்சாச்சா..... மதுரைகாறாங்க கொள்ளு அதிகம் சாப்பிடுவாங்க போல இருக்கு அதான் லொள்ளும் தூக்கலவே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்காரங்க லொள்ளுகாரங்கன்னு ஒத்துக் கொள்கிறேன். ஆனா நாங்க சென்னைகார்கள் மாதிரி ஜொள்ளு காரர்கள் இல்லை

      Delete
  10. அருமையான நகைச்சுவை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி

      Delete
  11. வந்துட்டேன்....தூங்கும் போது...கூடாரத்தை சுத்தி ஆட்டையப் போட்டதே நம்ம ஆளு சென்னைக்காரன் தான் -

    ReplyDelete
    Replies
    1. ஓ....அதுதான் அப்படி அப்பாவி மாதிரி ஆக்டிங்க் பண்ணினானா? பாவிப்பசங்க மதுரைக்காரனுக்கு அல்வா கொடுத்துட்டாங்களா?

      Delete
  12. நல்ல நகைச்சுவை ................

    வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், வானிலை சாஸ்திரமுன்னு இவ்ளோ சாஸ்திரம் சொன்னாரே வாஸ்து சாஸ்திரம் பற்றி சொல்லலயா?? மேற்குபக்கம் கூடாரத்த போடாம வடக்கு பக்கம் போட்டிருந்தா திருட்டு நடந்திருக்காதோ..... ஹி ஹி ஹி !!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலும் மிகவும் சிரிக்க வைத்தது. நன்றி

      Delete
  13. இதெல்லாம் பழைய கதை பாஸ் அப்படியே பட்டி பார்த்து டிங்கிரி பண்ணியிருக்கீங்க
    நாடி கவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. டிங்கரி வொர்க்கல மதுரைக்காரய்ங்க கில்லாடிங்க

      Delete
  14. ithu iru english kathaila padichurikken

    ReplyDelete
    Replies
    1. ஒல்டு ஒயின் இன் நீயூ பாட்டில் அப்படின்னு கேள்வி பட்டிருபிங்களே அதுதானுங்க இது

      Delete

  15. நான் கேட்டவரையில் இந்த நகைச்சுவை துணுக்கை மதுரைக்காரன் சென்னைக்காரன் என்று யாருமே பிரித்துச் சொன்னதில்லை. !

    ReplyDelete
  16. இன்ணா நைனா சென்னைகாரங்களை கலாய்க்கிரீன்களா ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.