Sunday, April 28, 2013






கன்னியாஸ்திரிகளும்(nuns) கன்னியாகுமரிக்காரனும்

கன்னியாக்குமரியில் சிஸ்டர் மேத்தமெட்டிகல் என்பவரும் சிஸ்டர் லாஜிகல் என்பவரும் இருந்தனர். அவர்கள் ஒரு நாள் பக்கத்து கிராமத்திற்கு சென்று பொழுது சாய்ந்த நேரத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.


(சிஸ்டர் மேத்தமெட்டிகல்  = சிமே ,சிஸ்டர் லாஜிகல்= சிலா )


சி.மே :  சிஸ்டர் நம்மை ஒருத்தன்  46 நிமிஷமா தொடர்ந்து வரான். அவனுக்கு நம்மிடம் இருந்து என்ன வேணுமோ தெரியவில்லையே

சி.லா : சிஸ்டர் லாஜிக்குபடி பார்த்தால் அவனுக்கு நம்ம உடம்புதான் வேண்டுமாயிருக்கும் வேற என்ன நம்மிடம் இருக்கிறது என்றார்.

சி.மே :  ....நோ......அவன் நடந்து வர வேகத்தை பார்த்தால் 15 நிமிஷத்திற்குள் அவன் நம்மை பிடித்து விடுவானே நாம் என்ன செய்யலாம் என்றார்

சி.லா : சிஸ்டர் லாஜிக்குபடி நாம் மிக வேகமாக நடந்தால் அவனிடம் இருந்து தப்பிவிடலாம் என்றார்

சிறிது நேரம் கழித்து

சி.மே :  சிஸ்டர் உங்க லாஜிக்  வொர்க் ஆகலை போல...

சி.லா :  அந்த மனிதனும் நம்ம லாஜிக்கை கைபிடித்து இருக்கிறான் அதனாலதான் அவனும் வேகமாக நடக்க ஆரம்பித்து இருக்கிறான்.

சி.மே : அவன் வருகிற வேகத்தைப் பார்த்தால்  இன்னும் ஒரு நிமிஷத்தில் நம்மை பிடித்து விடுவானே அப்ப நம்ம என்ன பண்ணலாம்

சி.லா :  லாஜிக்படி நாம் இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து வேறுபாதையில் சென்றால் அவனால் நம் இருவரையும் ஃப்லோ பண்ண முடியாது என்று சொல்லி இருவரும் வேறு வேறு பாதையில் சென்றனர்.

அந்த மனிதனோ சிஸ்டர் லாஜிக்கை தொடர ஆரம்பித்தார்

சிஸ்டர் மேத்தமெட்டிகல் சீக்கிரம் கான்வெண்ட்டுக்கு வந்து சேர்ந்தார் அவருக்கு சிஸ்டர் லாஜிக் என்ன ஆனாரோ என்ற கவலை வந்துவிட்டது


சிறிது நேரம் கழித்து சிஸ்டர் லாஜிக்கும் வந்துவிட்டார்

சி.மே :   சிஸ்டர் லாஜிக் நான் ரொம்ப கவலைப்பட்டேன் நல்லபடியாக வந்தததற்கு.. நான் வந்த பிறகு என்ன நடந்துச்சு சொல்லுங்க சிஸ்டர்

சி.லா :  லாஜிக்படி அவனால் நம்ம இரண்டு பேரையும்  ஃப்லோபண்ண முடியாததால் அவன் என்னை தொடர ஆரம்பித்தான்

சி.மே :  அப்புறம் என்ன நடந்துச்சு?

சி.லா :  லாஜிக்படி நான் வேகமாக ஒட ஆரம்பித்தேன் அவனும் வேகமாக துரத்த ஆரம்பித்தான்

சி.மே : அப்புறம்...

சி.லா : லாஜிக்படி  அவன் என்னை நெருங்கினான்

சி.மே : ..மைகாட் அப்புறம் ......

சி.லா : எனக்கு தெரிஞ்ச கடைசி லாஜிக்படி  நான் எனது ஆடையை சிறிது தூக்கினேன்.

சி.மே : ...சிஸ்டர்  அந்த மனிதன் என்ன செஞ்சான்

சி.லா :  லாஜிக்படி அதைபார்த்த அவனும் அவனது பேண்டை கிழே இறக்கினான்.

சி.மே :  ..மைகாட் அப்புறம் .....

சி.லா :  சிஸ்டர் நான் செஞ்ச லாஜிக் அவனுக்கு புரியலை.... சிஸ்டர் கவுனை தூக்கினால் வேகமாக ஒட முடியும் ஆனால் ஆண் பேண்டை கிழே இறக்கினால்   மெதுவாகத்தான் ஒடமுடியும் என்பது அவனுக்கு புரியலை என்று சொல்லி சிரித்தார்.

இதை படித்த யாரவது தவறாக கற்பனை பண்ணி இருந்தால் நினைத்து இருந்தால் இறைவா என்னை மன்னித்து கொள் என்று மூன்று முறை சொல்லிவிட்டு மறக்காமல் பின்னுட்டம் இட்டுச் செல்லவும்

And the Moral of the Story is:  LOGIC BEATS MATH ANYTIME.   And Math cannot survive without Logic. -

அன்புடன்
மதுரைத்தமிழன்
நான் ஆங்கிலத்தில் படித்த நகைச்சுவையை எனது வழியில் இங்கு நான் தந்துள்ளேன்

டிஸ்கி : 'கன்னி'யாஸ்திரிகளும்(nuns) 'கன்னி'யாகுமரிக்காரனும் என்ற தலைப்பை கன்னி' என்ற வார்த்தை இரண்டிலும் வந்திருப்பதால்தான் அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன் அதை தவிர வேறு ஏதும் இல்லை. மக்கா..
 

24 comments:

  1. Replies
    1. நகைச்சுவையில் மேத் கால்குலேட் பண்ணிக் கொண்டேதான் இருந்தது ஆனால் லாஜிக்தான் சாமர்த்தியமாக யோசித்து தப்பித்தது. அதனால்தான் logic beat math here என்று எழுதியவர் சொல்லி இருப்பார்போல இருக்கிறது

      Delete
  2. கன்னியாஸ்திரிகள் என்பவர்கள் துறவிகள் அவர்களை நகைச்சுவை என்ற பெயரில் இவ்வளவு வக்கிரத்துடன் எழுதியிருப்பதை கண்டிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதில் வக்கிரம் என்பதற்கு ஏதும் இல்லை எல்லாம் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் மனதில்தான் இருக்கிறது. கன்னியாஸ்திரிளை வைத்து காமெடிபடம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள் அதை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அதை பார்த்த பின் நீங்கள் என்ன சொல்லுவீர்களோ தெரியவில்லை நண்பரே

      Delete
    2. உங்கள் மனதின் வக்கிரத்தை வெளிப்படுத்திவிட்டு படிப்பவர்கள்மீது பழி போடாதீர்கள். ஏன், அந்த கன்னியாஸ்த்ரிகளுக்குப் பதில் உங்கள் தாயாரையோ சகோதரியையோ வைத்து எழுதுங்களேன் பார்ப்போம்.

      Delete
    3. நீங்கள் எல்லாம் வக்கிரம் இல்லாதவர் அதனால்தான் உங்கள் ஊரில் 5 வயது குழந்தையை பலத்காரம் செய்யும் செயல் நடக்கிறது.அது உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறது ஆனால் அது எனக்கு வக்கிரமாக இருக்கிறது

      இது நான் ஆங்க்லிலத்தில் படித்த நகைச்சுவை அது எனக்கு பிடித்து இருந்ததால்தான் அதை இங்கே தந்துள்ளேன். அதை படித்து ரசித்தால் ரசியுங்கள் இல்லை என்றால் அப்படி ஒரமாக ஒதுங்கி போங்கள். உங்கள் பார்வையில் அது வக்கிரமாக இருக்கலாம் ஆனால் அது என் பார்வையில் நகைச்சுவை அவ்வளவுதான்.

      நண்பரே எனக்கு வக்கிரகாரன் பட்டம் தர ஆசைப்படுகிறீர்கள் உங்கள் ஆசையை கெடுப்பானேன் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
    4. இந்த நகைச்சுவை உங்கள் பார்வையில் வக்கிரம் என்றால் அது கன்னியாஸ்திரிகளை அவைத்து எழுதினால் என்ன என் தாயையோ அல்லது சகோதரியையோ வைத்து எழுதினால் என்ன அதுவும் வக்கிரம்தானே.. எனது தாயை வைத்து மட்டும் எழுதினால் அது எப்படி வக்கிரமாக இல்லாமல் போகும். இப்போது யார் மனதில் வக்கிரம் இருக்ககிறது.

      வக்கிர புத்தி உள்ள உங்களின் சந்தோசத்திற்காக மீண்டும் அந்த நகைச்சுவையை படியுங்கள் அப்போது கன்னியாஸ்திரிகளுக்கு பதிலாக எனது சகோதரியும் தாயும் ஒடியதாக கற்பனை பண்ணி படியுங்கள் ஒகே வா இப்போதாவது உங்களால் சிரிக்க முடிகிறதா அப்படியும் உங்களால் முடியவில்லை என்றால் ஒரு நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது நண்பரே

      Delete
  3. உங்கள் பார்வையில் இந்த அசிங்கம் பிடித்த பதிவு வக்கிரம் இல்லையென்றால் நான் சொன்னதுபோல உங்கள் குடும்பப் பெண்களை வைத்து இரட்டை அர்த்தத்தில் எழுதுங்கள், அதன் பிறகு உதார் விடுங்கள். உங்கள் வீட்டின் கழிவறையில் மலம் கழிக்காமல் பொது இடத்தில் வந்து கழித்தால் யார் வேண்டுமென்றாலும் கேட்கத்தான் செய்வார்கள். உங்கள் ஹிட்ஸ் வெறிக்கு கன்னியாஸ்திரிகள்தான் கிடைத்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. சார் இங்கு என்ன எழுதுவது ,எப்படி எழுதுவது என்பதை தீர்மானிப்பவன் நானும், நான் வசிக்கும் நாட்டின் சட்டமும் மட்டும்தான். அதனால் நீங்கள் மட்டுமல்ல வேறுயாரும் இப்படி எழுது அப்படி எழுது என்று என்னைக் கண்ரோல் பண்ண வேண்டாம்.


      ஐயா நான் இங்கு எந்த விதத்திலும் உதார்விடவில்லை

      பொதுஇடத்தில் மலம் கழித்தால் யார் வேண்டுமானாலும் கேட்பார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் கேட்க வேண்டாம் என்றா சொன்னேன் நல்ல கேளுங்க நண்பரே...

      பொதுஇடத்தில் மலத்தை பார்த்தால் மனிதர்கள் அதில் மிதிக்காமல் தாண்டி போவார்கள் அதில் விளையாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் எப்படி?

      இப்படி எழுதினால் ஹிட் கிடைக்குமா அப்படியா இதை எனக்கு முன்பே தெரிவித்து இருக்கலாமே அதை எனது ஹிட் வெறிக்கு பயன்படுத்தி இருப்பேனே...


      இந்தியாவில் உங்களை போல உள்ளவர்கள் மிக நல்லவர்களாக நடித்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ளவரை 'ஹீட்'(Heat) வெறிக்கு பயன்படுத்தி பலத்காரம் செய்கீறீர்களே அதை விட எனது ஹிட் வெறி மோசம் இல்லையே

      Delete
  4. நான் தவறத்தான் நெனச்சேன். என்ன பண்றது?

    ஆரம்பத்தில் ஏதோ கதை ஸ்வரஸ்யமா இருக்குனு நெனச்சேன். பாதிக்கு மேல ஏதோ தப்பான விஷயத்தை படிக்க ஆரம்பிச்சிட்டோமோனு "பக்"குனு இருந்துச்சி. நீங்க அப்படி எழுதியிருக்க மாட்டிங்கன்ற நம்பிக்கைல மீதிய படிச்சேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை.

    சொல்லவந்த விஷயம் உண்மைதான். ஆனா வேற விதத்துல சொல்லி இருக்கலாமோன்னு தோணுது தமிழரே.


    //(சிஸ்டர் மேத்தமெட்டிகல் = சிமே ,சிஸ்டர் லாஜிகல்= சிலா )//

    இது என்ன லாஜிகலோ.. ஒன்னும் புரியல போங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வழியில் என்றும் எழுதமாட்டேன் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும்

      இது ஒரு வகையான நகைச்சுவை படிப்பவர்களின் மனதில் தவறான எண்ணத்தை தருவது போல வந்து இறுதியில் அவர்கள் நினைத்தது தவறு என்று டூவிட் வைத்து மாற்றுவதுதான் இது மனப்பக்குவம் உள்ள வயது வந்த மனம் முதிர்ச்சி அடைந்தவர்களால்தான் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் ச்சீ ச்சீ.. அசிங்கமா இருக்குது என்று சொல்லுவார்கள்

      இது நான் படித்த ஆங்கில நகைச்சுவை அதை அப்படியே தமிழில் மொழிபெயர்தது மட்டும்தான் நான் செய்தது

      Delete
  5. enna erunthalum neenga thantha thahaval thavaran visayam

    ReplyDelete
    Replies
    1. அது எனக்கு தவறாகப்படவில்லை. ஆனால் அது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்

      Delete
    2. ACT OF CONTRITION:
      O my God, I am sorry for my sins with all my heart.
      In choosing to do wrong and failing to do good,
      I have sinned against You, Whom I should love above all things.
      I firmly intend, with Your help, to do penance, to sin no more, and to avoid whatever leads me to sin.
      Our Savior Jesus Christ suffered and died for us.
      In his name, my God, have mercy. - Amen

      Delete
  6. மேற்கத்திய மக்களின் நகைச்சுவைக்கும் நமது நகைச்சுவைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

    அவர்கள் நண்பர்களுக்கிடையே 'bastard' என்ற வார்த்தையை சரளமாக உபயோகிப்பர். நாம் தமிழ்நாட்டில் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

    காயப்படுத்தும் பதிவு

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இப்போது கடைபிடிப்பது மேலைநாட்டு கலாச்சாரத்தை தானே.. இப்போது தமிழ்நாட்டில் வரும் சினிமாக்களில், டிவியில் உள்ள நிகழ்ச்சிகளில் இதைவிட மோசமாக சித்தரிக்கிறார்களே அதைவிட இதில் தவறாக ஏதும் சொல்லப்படவில்லைதானே...

      நண்பர்களிக்கிடையே Bastard என்ற வார்த்தையை மேலைநாட்டில் மட்டுமல்ல நம்ம நாட்டிலும் உபயோகப்படுத்துகிறார்கள். அதை 15 வருடங்களுக்கு முன்பு சென்னையில் படித்த போது எல்லோரும் சர்வ சாதரணமாக உபயோகித்து இருக்கிறார்கள். நீங்கள் அப்படி உபயோகிப்பது இல்லை என்று சொல்லவது எனக்கு மிகவும் ஆச்சிரியத்தை தருகிறது. எப்போது இந்தியாவில் உள்ளவர்கள் நல்லவர்களாக மாறிவிட்டார்கள்.


      நான் படித்து ரசித்த இந்த நகைச்சுவையை வழக்கம் போல பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் அது இப்போது உங்களைப் போன்றவர்களை காயப்படுத்தி இருப்பதாக அறிகிறேன். அதற்காக வருந்துகிறேன்...மன்னித்து கொள்ளுங்கள்... ஒகே வா?

      Delete
  7. நீங்கள் அந்த மனிதன் என்று குறிப்பிட்டதற்கு பதில் robin என்றே குறிப்பிட்டிருக்கலாம் ⊙⊙⊙⊙⊙⊙⊙0

    ReplyDelete
  8. உங்கள் தளம்,உங்கள் விருப்பம், உங்கள் ரசனை, உங்கள் திருப்தி,..

    but i really Unexpected from you.. :(

    ReplyDelete
    Replies
    1. I don't know what to say ......But Sorry


      எழுதுவதை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்,,, அதுபோல யாரிடம் இருந்தும் எதையும் Expect பண்ணாதீர்கள் காரணம் எல்லோருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கும் அதனால் சில சமயங்களில் UNEXPECT க மாறி விட வாய்ப்புக்கள் உள்ளது ஸாரி நண்பரே

      Delete
  9. நண்பர்களே வழக்கமாக நான் படித்த ரசித்த விஷயங்களை தமிழக மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுவேன். ஆனால் நேரம் இல்லாததால் நான் படித்த இந்த நகைச்சுவையை அப்படியே மொழி பெயர்த்து எழுதி பதிவிட்டு விட்டேன். வழக்கமாக எனது தளத்திற்கு வருபவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தேன். இப்பொழுதுதான் புரிகிறது இதை அவர்கள் சீரியஸாக எடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அது எனது தவறுதான் ஒகே

    இரண்டாவதாக பின்னுட்டம் இட்டவர் இந்த நகைச்சுவையை மதரீதியாக எடுத்து கொண்டு சிறிது ஆவேசப்பட்டு இருக்கிறார் என் நினைக்கிறேன் அவருக்கு நான் மீண்டும் நான் சொல்வது இது சாதாரண நகைச்சுவைதான் அதை படித்து ரசியுங்கள் அதை சீரியசாக பார்க்காதீர்கள் என்பதே.

    இதே நகைச்சுவையை நான் வழக்கமாக மாற்றி எழுதும் வகையில் எழுதி இருந்தால் படித்து ரசித்து சிரித்து இருப்பீர்கள்தானே அது என்ன வழக்கமாக என்பவர்களுக்கு?

    இந்த NUN களுக்கு பதில் தமிழ் பெண்கள் என்றும் NUN கள் அணியும் கவுனிற்கு பதிலாக சேலை என்றும் எழுதி இருந்தால் படித்து ரசித்து ஆஹா அருமையான நகைச்சுவை என்றுதானே பின்னுட்டம் போட்டு இருப்பீர்கள். அப்போது இந்த நகைச்சுவை உங்களை காயப்படுத்தி இருக்காதல்லவா?

    கன்னியாஸ்திரிகள் புனிதமானவர்கள் என்றால் தமிழ் பெண்களும் புனிதமானவர்கள்தான் எனக்கு. தமிழ் பெண்களைப் பற்றி ஜோக் எழுதினால் அதை படித்து சிரிக்கும் உங்களுக்கு இதை மட்டும் படித்து சிரிக்க முடியாமல் போனதென்னவோ? கன்னியாஸ்திரி பற்றி நகைசுவை எழுதினால் வக்கிரம் ஆனால் தமிழ் பெண்ணை பற்றி எழுதினால் வக்கிரம் இல்லையா என்ன? நல்ல இருக்கு உங்க நியாயம் ஐயா நியாம்

    ReplyDelete
  10. கன்னியாகுமரியில் கிருத்தவர்கள் அதிகம் உள்ளனர் என்று தெரியாதா .கடைசியில் எங்கள் ஊரையும் கேவலபடுத்தி நம்பிக்கையும் , சரி ஓகே
    கொஞ்சம் கவனமா எழுதுங்கள் அண்ணா. உங்களுக்கு இந்த தவறு இனிமேல் வராமல் பார்த்துகொள்ளுங்கள் ,

    ReplyDelete
  11. கன்னியாகுமரியில் உள்ள கன்னியாஸ்திரியும் தமிழ் பெண் தான்

    ReplyDelete
  12. கன்னியாஸ்திரியும் தமிழ் பெண் தான் , எனது சகோதரியும் sister ஆக உள்ளார் , அப்போது எனது
    மனம் வலிக்கும் அல்லவா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.