சற்குருவின் சாம்ராஜ்யம் சரிந்ததா?" - அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு! Has Sadhguru's empire collapsed?" - Shocking verdict by US court!
அதிரும் ஈஷா... வெல்லும் உண்மை!
உலகெங்கும் கார்ப்பரேட் ஆன்மிக சாம்ராஜ்யம் நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு, அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாகாண நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை, சட்டத்தின் மூலமும் பண பலத்தின் மூலமும் ஒடுக்கிவிடலாம் என நினைத்த ஈஷாவின் பிம்பம் அமெரிக்க நீதிமன்றத்தில் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது!
ஈஷா அறக்கட்டளையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தம்பதி, அங்கு நடக்கும் உண்மைகளை உணர்ந்து வெளியே வந்தனர். தாங்கள் அனுபவித்த கொடுமைகளையும், கசப்பான உண்மைகளையும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்லத் தொடங்கினர் இதை சகித்துக்கொள்ள முடியாத ஈஷா நிர்வாகம், அவர்கள் மீது டென்னசி நீதிமன்றத்தில் 10 மில்லியன் டாலர் (சுமார் 83 கோடி ரூபாய்) கேட்டு பிரம்மாண்டமான ஒரு மானநஷ்ட வழக்கை (Defamation Suit) தொடர்ந்தது
இந்த வழக்கை விசாரித்த டென்னசி நீதிமன்றம், ஈஷாவின் மானநஷ்ட வழக்கைத் தூக்கி குப்பையில் வீசியுள்ளது. "இந்தத் தம்பதி சொன்னதில் எந்தப் பொய்யும் இல்லை. எந்தத் தீய உள்நோக்கமும் (No Malice) இல்லை. தங்களின் சொந்த அனுபவங்களையே அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் குரலை உங்களால் நசுக்க முடியாது" என நீதிபதிகள் அதிரடியாகத் தீர்ப்பளித்து ஈஷாவின் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்
இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் இன்னொரு பகீர் தகவல்... நிலம்! டென்னசி மலைப்பகுதியில் சுமார் 40,000 பேர் தங்கும் வகையிலான ஒரு பிரம்மாண்டமான நகரத்தை (Yogic City) உருவாக்க ஈஷா திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த ஒட்டுமொத்த கவுன்ட்டியின் (County) மக்கள் தொகையே 40,000 தானாம்! இவர்கள் உள்ளே நுழைந்தால், மொத்த ஊரின் அதிகாரமும், ஓட்டு வங்கியும் ஈஷாவின் கைக்கு மாறிவிடும், 'வைல்டு வைல்டு கன்ட்ரி' ஓஷோ ஆசிரமம் போல மாறிவிடும் என உள்ளூர் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்இதற்கிடையே, ஈஷா ஆசிரமம் அமையவுள்ள பகுதிக்கு அருகே, வழக்கில் வெற்றிபெற்ற அந்தத் தம்பதிக்குச் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தையும் தங்கள் வசமாக்க ஈஷா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது (ஒது மற்றொரு வழக்கு )
பண பலத்தையும், அதிகார பலத்தையும் காட்டி அனைவரையும் மிரட்டிவிடலாம் என்ற ஈஷாவின் கணக்கு அமெரிக்காவில் தவிடுபொடியாகி இருக்கிறது. 20 ஆண்டுகள் உள்ளே இருந்து, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் உண்மையை உரக்கச் சொன்ன அந்தத் தம்பதியின் துணிச்சலால், இன்று ஈஷா சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது
எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தாலும், உண்மையின் முன் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும். அதிகாரமும், பண பலமும் உண்மையை என்றைக்கும் உறங்க வைத்துவிட முடியாது!
தொடர்புடைய காணொளி: http://www.youtube.com/watch?v=vQcvbzJ8Sxw
மௌனம் ஒரு மொழி: உங்கள் துணையின் அமைதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மரண வலி!" https://avargal-unmaigal.blogspot.com/2026/02/silence-is-language-deadly-pain-hidden.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#Sadhguru #IshaFoundation #SadhguruExposed #TennesseeCourt #LegalBattle #IshaTruth #JaggiVasudev #FreeSpeech #BreakingNews #TamilnaduNews #AvargalUnmaigal #TruthWins #YogaCityDispute #DeejDurai


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.