உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 31, 2013

அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்


அமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்


அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் அமெரிக்காவுடன் வியாபார தொடர்பு உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை தகவல்கள்


Tuesday, July 30, 2013

எனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து   மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


07/28/2013  அன்று மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகைகனகா:  என்ற பதிவு என்று தமிழக பத்திரிக்கை உலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது,.

செய்தி பத்திரிக்கைகளில் அவர் நோயால் மரணப்படுக்கையில் இருக்கிறார் எனறு செய்தியும் அதை தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள்  செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகளை அறிந்த கனகாதான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளதாக இன்று செய்திகள் வெளி வந்துள்ளன

Monday, July 29, 2013

நியூயார்க்கில் ஒரு தமிழ்பரதேசி


நியூயார்க்கில் ஒரு  தமிழ்பரதேசி

பரதேசிகளுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை. ஆனால் நியூயார்க் நகரத்திலும் ஒரு தமிழ்பரதேசி சுற்றி வருகிறார் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா? நான்  ஒன்றும் பொய் சொல்லவில்லை.. உண்மையைத்தான் சொல்லுகிறேன்..


இந்த பரதேசி பெயரளவில்தான் பரதேசி ஆனால் வசதிபடைத்தவர். இவர் குடும்பத்துடன் இங்கு வசிக்கும் ஒரு சுத்த தமிழன். பல நல்ல காரியங்களை செய்தும் வருகிறார் .இப்போது அவரைப்பற்றி அவரே சொல்லவதை கேளுங்கள்

Sunday, July 28, 2013

உங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூடிய வாய்ப்புக்கள் அதிகமுங்க!உங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூடிய வாய்ப்புக்கள் அதிகமுங்க!

அட உங்க குழந்தையும் பிரபலமா ஆக வேண்டும் என்ற ஆசையிலேதானே நீங்க இங்க வந்திருக்கீங்க சரி வந்ததே வந்தீங்க கொஞ்சம் வெட்கப்படாம உங்க குழந்தை பிரபலமாக கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்...

மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை கனகாஇந்த பதிவு கனகா கேன்சரில் பாதிக்கப்பட்டு தனியாக மரண வாசலில் இருக்கிறார் என்று தமிழக பத்திரிக்கை உலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது,.

இன்று கனகா வெளியிட்ட அறிக்கையின் படி அவர் உடல் நலத்துடன் இருப்பாதாக செய்திகள் வெளி வந்துள்ளன.


கனகா  மிகவும் நல்ல நிலையில் உயிரோடுதான் இருக்கிறார்.....ஆனால், இறந்ததென்னவோ ஊடகங்களின் நம்பகத்தன்மைதான்.

தமிழக ஊடகங்களில் வந்த செய்தியை உண்மை என்று நம்பி நானும் பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன். அது மிகவும் தவறு என்பதை நான் உணர்ந்ததால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


07/30/2013


============================================================

மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகை கனகா: 
மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகை கனகா


கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. பழைய நடிகை தேவிகாவின் மகள் ஆவார்  தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் மிக பிரபலமாக திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார் கனகா.

Saturday, July 27, 2013

அமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிறு தகவல்கள்

 
என் குழந்தையின் பள்ளிக்கூடத்தின் ஒரு புறத் தோற்றம்
அமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிறு தகவல்கள்

இந்தியாவில்  நீ எந்த வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டால் 1 standard , 2nd standard என்று சொல்லுவார்கள் ஆனால் அமெரிக்க மாணவர்களிடம் கேட்டால்  1 Grade, 2nd Grade என்று சொல்லுவார்கள்

 1-ல் இருந்து 5 ஆம் Grade வரை உள்ள வகுப்பு நடக்கும் இடம் Elementary ஸ்கூல் என்றும் 6 லிருந்து 8 வரை உள்ள வகுப்பு நடக்கும் இடத்தை Middle ஸ்கூல் என்றும் 9 லிருந்து 12 வரை High ஸ்கூல் என்றும் அழைக்கப்புடும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு டவுனிலும் குறைந்தது 4 லிருந்து 5 வரை Elementary ஸ்கூல் இருக்கும் அது போல ஒன்றோ இரண்டோ Middle, High ஸ்கூல் இருக்கும்.

Friday, July 26, 2013

அரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)அரபுநாடுகளுக்கு  வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)


கடனை உடனை வாங்கி கொண்டு பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு பணம் சேர்க்க செல்லும் இளைஞர்களே. நீங்கள் செல்வது கஷ்டப்படும் உங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைக்கதான். ஆனால் சபல புத்தியினால் நீங்கள் தவறுகள் செய்தால் அதன் விளைவுகள் என்ன தெரியுமா?

வெளிநாட்டில் வேலை  பார்க்கும் & பார்க்க போகும் நண்பர்களே கட்டாயம் இந்த விடியோவை பாருங்கள் .வீட்டு வேலைக்காரி உடன் தகாத உறவு வைத்ததால் வந்த வினைதான் இது அதை ஒரு முறை பார்த்துவிடுங்களேன் இங்கே
இதை பார்த்ததும் என் மனம் அதிர்ந்து போய்விட்டது  இவர்கள் செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு இப்படி தண்டனை கொடுக்கும் உரிமையை இந்த மனித மிருகங்களுக்கு  கொடுத்தது.யார்?

இவர்கள் கஷ்டப்படும் ஏழைகள் என்பதால்தானே இப்படி தண்டனை? இதே மாதிரி தவறுகள் செய்யும் பணக்காரர்கள் ,ஷேக்குகள் நாடுவிட்டு நாடு வந்து தவறுகள் செய்கிறார்களே அவர்களுக்கு தண்டனை தருவது யார்?

என்னை பொருத்தவரை கடவுளைதவிர வேறு யாரும் யாருக்கும் தண்டனை தரமுடியாது

மிகமன வருத்ததுடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: நண்பர்களே இந்த செய்தியை வெளிநாட்டில் வேலை செய்யும்  நண்பர்களுக்கும் செய்யப்போகும் நண்பர்களுக்கும் முடிந்தால் ஷேர் செய்யுங்கள்


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog