உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 30, 2012

ஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்ஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்

எதிலும் வித்தியாசமாக செயல்படுபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவர் செய்த அற்புதம் அமெரிக்காவையே முக்கில் விரலை வைக்க வைத்துவிட்டது.

உலகெங்கும் உள்ளவர்களுக்கு, மின்சாரம் இருந்து ,அதை தொட்டால்தான் ஷாக் அடிக்கும் என்று நேற்றுவரை நினைத்து இருந்தார்கள். அந்த நினைப்பை தூக்கி ஏறியச் செய்தவர் நமது தமிழக முதல்வர். அதை மின்சாரத்திற்கு விலையை ஏற்றியதன் மூலம் தமிழக மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் " ஷாக்" டீரிட்மெண்ட் கொடுத்துள்ளார்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது எனது நல்லாட்சியை புரிந்து கொண்டு என்னை சங்கரன் கோவில் மக்கள் மீண்டும் அதிக வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு நான் தொடர்ந்து நல்லதை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அவர் சொன்னபடி செய்த தமிழக "புத்திசாலி" மக்களுக்கு ஒரு நல்ல "ஷாக்" டீரிட்மெண்டை கொடுத்து ஆரம்பித்துள்ளார்.

என்ன மக்காஸ் டீரிட்மெண்ட்  எப்படி இருக்கிறது? இது போல பல டீரிட்மெண்ட் வரும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும்..இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி?

ஆமா இந்த ஷாக் டீரிட்மெண்ட்  ஒகே இதுக்கு ஒபாமா பாராட்டினரா ? எப்படி என்று கேட்கிறீர்களா?

ஆமாம் மக்காஸ் பொருளாதார தியரியை நிறுபவித்து காட்டியதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை மிக சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டி விரைவில் அமெரிக்காவிற்கு அழைத்து பாராட்ட போகிறார்.

தியரி புரியாதவற்களுக்கு : எங்கே டிமாண்ட் அதிகம் இருந்து அங்கே சப்ளை மிக கம்மியாக இருந்தால் விலை அதிகரிக்கும் என்பது தியரி அதை ஜெயலலிதா அவர்கள் நிறுபவித்து காட்டியுள்ளார்...

ஜெயலலிதா நன்றாக படித்த அரசியல் வாதிதானே இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அவருக்கு மெயில் அனுப்பி விசாரித்து கொள்ளவும்.

பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
நீங்கள் ஜெயலலிதாவை ரொம்ப நக்கல் பண்ணி பதிவு போடுவதாலும் மேலும் இந்த பவர் கட்டை வைத்து நிறைய ஜோக்குகள் போட்டு அவரை கிண்டல் செய்வதால் அதை குறைக்கும் வண்ணம் லேப்டாப் வைத்து பதிவு போடுபவர்களின் வீட்டிற்கான மின்சாரகட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைவிட 10 % அதிகம் என்று அறிவிக்க போவதாக செய்திகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அது மட்டுமல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் கம்பியூட்டருக்கு ஒவ்வொருவரும் பதிவு கட்டணம் செலுத்தி லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்றும் நீங்கள் போடும் பதிவுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வரிகள் விதிக்க வேண்டுமென்றும் ஆனால் அவரை பற்றி புகழ்ந்து எழுதும் பதிவுகளுக்கு மட்டும் கேளிக்கை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கபடும் என்று திர்மானித்திருக்கிறார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜாக்கிரதை மக்காஸ்

அன்புடன்
மதுரைத்தமிழன்

Wednesday, March 28, 2012

அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)அமெரிக்காவில் "கெளரவ வேலை" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)


அமெரிக்காவில் கெளரவ வேலை பார்க்க இந்திய முதியோர்களுக்கு கோடைகாலங்களில் எப்போதும் வாய்ப்புக்கள் அதிகம். இந்த வேலை வாய்பை  பெறுவதற்கென சில சிறப்பான தகுதிகள்  வேண்டும். அந்த தகுதிகள் இருந்தால் நீங்கள் இங்கு வந்து போவதற்கான செலவுகளில் இருந்து தங்குவதற்கான செலவுகள் அனைத்தும் இலவசம்.

தகுதிகள்:

1.கொஞ்சமாவது சமைக்க தெரிந்து இருக்க வேண்டும்.
2.அரை குறை ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.
3.ஹிந்தி தெரிந்து இருந்தால் மிக ப்ளஸ் பாயிண்ட் ( இது அவசியம் அல்ல ஆனால் இது இருந்தால் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்)
4.டையப்பர் மாற்ற தெரிந்து இருக்க வேண்டும் ( இல்லையெனில் அதற்கு இங்கு வந்தவுடன் செலவு இல்லாமல் பயிற்சி அளிக்கப் படும்)
5. மிக மிக முக்கிய தகுதி உங்கள்  மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ அமெரிக்காவில் வசிக்க வேண்டும்.

இத்தனையும் இருந்தால் உங்களுக்கு கோடைகால வேலைவாய்ப்பு கிடைக்கும். இது மினிமம் 6 மாத காலத்தில் இருந்து ஒரு வருடம் வரை செல்லும்.

சம்பளமாக கிடைப்பது இதுதான்:

நீங்கள் வந்து போகும் செலவை வேலைவாய்ப்பு தருபவர்களே ஏற்றுக்  கொள்வதாலும் மற்றும் இங்கு இருக்கும் போது உணவும் இடமும் அவர்களே ஏற்றுக் கொள்வதாலும் அதிகம் கிடைக்க வாய்ய்பு இல்லைநீங்கள் இங்கு தங்கி இருக்கும் காலத்தில் உங்களை வேலை தருபவர்கள் அவர்கள் செலவில் நயகாராவோ, டிஸ்னி வோர்ல்டுக்கோ, வாஷிங்டன், கோல்டன் ப்ரிஜ்ஜோ, நீயுயார்க்கில் உள்ள டைம் ஸ்கோயருக்கோ கூட்டி செல்வார்கள்மேலும் நீங்கள் திரும்பி செல்லும் போது இந்தியாவில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் பிடித்தமானதை வாங்கி உங்களிடம் தருவதால் உங்களுக்குள் வேண்டுமென்றால்  மட்டும் உங்கள் அக்கவுண்டில் சிறிது பணம் போடப்படும்.

இதற்கு சம்மதம் என்றால் நீங்கள் இப்போதே வேலைக்கு அப்ளை பண்ணவும். நீங்கள் தாமதித்தால் உங்கள் சம்பந்தி அப்ளை செய்து அந்த வாய்ப்பை தட்டி பறித்துவிடுவார்கள்

ஆனால் இரு கண்டிஷன்  நீங்கள் இங்கு வேலை பார்க்க வருவதை அமெரிக்கன் தூதரகத்தில் கண்டிப்பாக வாய் தவறியும் உளறி விடக் கூடாது மேலும் உங்கள் உறவினர்களிடம் , அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லும் போது எனது மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ மிக பாசத்துடன் எங்களை அழைக்கிறார்கள் என்று உதார்விட்டு வர வேண்டும்.

இதற்கெல்லாம் நீங்க ரெடியா? அப்ப எதுக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க ஒரு கால் பண்ணுங்க இப்போதே.

ஆ ஓண்ணு சொல்ல மறந்துட்டேன். உங்கள் மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ புதிதாக கல்யாணம் ஆகி இப்போதுதான் சென்று இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. உங்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பேரக்குழந்தைகளை நாங்கள் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும் சீக்கிரம் ஒன்றாவது பெற்று கொடு என்று பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். அதில் வெற்றி பெற்றால் வாய்ப்பு கிடைக்க சான்ஸ் உண்டு.


இதை நான் நகைச்சுவைக்காக எழுதி இருப்பதாக  நினைத்து படிக்க வேண்டாம் இதில் 90% க்கு மேலும் உண்மைதான் என்பதை மனசாட்சி உள்ள யாவரும் ஒத்துக் கொள்வார்கள். மன உறுத்தல் உள்ளவர்கள் யாரும் இதை ஒற்றுக் கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான்

குழந்தைகள் பிறந்த பின் அழைப்பதன் காரணம் குழந்தைகளை வளர்த்த அனுபவம் இல்லை என்பதாலும் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்ததாலும் அல்லது வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை யென்றாலும் குழந்தையுடன் தனியாக நாள் முழுவதையும் கழித்து கணவருக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டி இருப்பாதாலும்தான்.

மேலும் பள்ளிக்கு செல்லும் வயதில் சிறு குழந்தைகள் இருந்தால் கோடை விடுமுறையை சாமாளிக்க பெற்றோர்களை அழைப்பதுண்டு. காரணம் சம்மர் கேம்ப்க்கு அதிக செலவு பிடிக்கும் என்பதாலும் சம்மர் கேம்ப் அதிக பட்சம் அவுட்டோரில் செயல்படுவதால் நம்ம குழந்தைகள் வெயிலுக்கு தாங்க மாட்டார்கள் என்பதாலும்தான் இந்த ஏற்பாடு. அதனால் பெற்றோர்களை இந்த மாதங்களில் அழைப்பவர்கள் அநேகம்.அவர்கள் வந்தால் குழந்தைகளை கவனித்து கொள்வதோடு வேலைவிட்டு வீட்டுக்கு வந்தால் சுட சுட நமது இந்திய பாரம்பரிய உணவுகள் தட்டில் அல்ல தமது வாய்க்கே நேரடியாக வருவதால் பெற்றோர்கள் மீது அதிக திடீர் பாசம் முழைத்துவிடும் நம் இந்திய குழந்தைகளுக்கு.

இந்த பாசம் எல்லாம் குழந்தைகள் ஹை ஸ்கூல் போவது வரை மட்டும் அல்லது பெரியவர்கள் இறைவனிடம் சேரும் வரை மட்டும்தான்.


மனதை சுடும் பதிவு என்றாலும் இதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நஞ்சை விதைப்பதற்கோ அல்லது யாருடைய மனதை காயப்படுத்துவதற்கோ இந்த பதிவு போடவில்லை என் அறிவுக்கு எட்டிய எனக்கு தெரிந்த விஷயத்தை இங்கே பதிவாக போட்டுள்ளேன். அறிவி ஜீவி போட்ட பதிவாக எடுத்து கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதன் போட்ட பதிவாக எடுத்து இதைப் படியுங்கள். நன்றி

Tuesday, March 27, 2012

சண்டியர் யாரு? (சைனா Vs இந்தியா )


சண்டியர் யாரு? (சைனா Vs இந்தியா )

சைனா இராணுவத்திற்கு பண்ணு செலவை இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். சைனா வெளி உலகத்திற்கு அறிவிக்கும் செலவைவிட உண்மையான செலவு இன்னும் மிக அதிகம். காரணம் அவர்கள் கவர்மெண்ட் எப்போதும் சீக்ரெட் கவர்மென்ட் என்று அழைக்கபடும் அதனால் அவர்கள் எதையும் எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிவப்பதில்லை.

ஆனால் இந்திய அரசாங்கம் அப்படியல்ல அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசாங்கத்திற்கும் சைனாவிற்கும் உள்ள வேறுபாடு. சைனா அறிவித்த அளவை விட அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இந்தியா அறிவித்த அளவைவிட குறைவாக செலவழிக்கும் காரணம் இங்கு நடக்கும் ஊழல்கள்தான். இராணுவத்திற்கு வாங்க வேண்டிய அனைத்திற்கும் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்தே பாதி பணம் காலி ஆகிவிடும் அவர்கள் கமிஷன் கொடுப்பதினால் தரமற்ற ஆயுதங்கள் மற்றும் அவுட் டேட் ஆயுதங்கள் தான் மலிவு விலைக்கு கிடைக்கும்.

என்ன நான் சொல்வது சரிதானே?

கிழேயுள்ள விளக்க படங்கள் உங்கள் பார்வைக்கு


Courtesy : economictimes


என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???


என்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்???

கொடுமை...... கொடுமைன்னு விலங்குகளை வதைக்கும் படங்களை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறோமே. உண்மையில் 'ஜீவவதை சட்டம்' என்பது நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டதா? இப்படி  அக்கிரமம் பண்ணுகிறார்களே.. இவர்களை தட்டி  கேட்க யாருமே இல்லையா? அல்லது இந்திய  மக்களிடம்தான் இரக்கம் என்பது இல்லாமல் போய்விட்டதா?உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்களேன்


மிக வேதனையுடன்,
மதுரைத்தமிழன்

Sunday, March 25, 2012

இதுதாண்டா நீயூஜெர்ஸி (அமெரிக்கா)
இதுதாண்டா நீயூஜெர்ஸி (அமெரிக்கா)

எங்கவூரு  என்கவுண்டர்  பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

மார்ச் எட்டாம் தேதி எங்க ஊர்ல உள்ள மாலில் ஒருத்தர் $ 200 மதிப்புள்ள CD மற்றும் சில ஐட்டங்களை (Shop lift) திருடி இருக்கிறார்.அதை பார்த்த கடை ஆட்கள் மாலில் உள்ள செக்யுரிட்டிக்கு இன்பார்ம் பண்ணி அவர்கள் இவனை விரட்டி பிடிக்க சென்று இருக்கிறார்கள், மாட்டினால் தண்டனை நிச்சயம் என்பதால் தப்பிக்க நினைத்த அவன் ஒடும் போது இன்னொரு கடையின் வாசலில் இருந்த ஒரு பெண்ணை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து யாரும் அருகில் வரக்கூடாது என்று எச்சரித்தான். இந்த நிகழ்ச்சியை கவனித்த அந்த பக்கம் வந்த ஆஃப் டூட்டி போலிஸ் கத்தியை கிழே போடு என்று ஒரு தடவை சொன்னார். அதை கேட்க மறுத்தான் அவன் மேலும் அவன் அந்த பெண்ணை காயம் ஏதும் பண்ணக் கூடாது என்று நினைத்த அந்த போலிஸ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு கொன்றுவிட்டார்.

அவன் திருடியது நம் ஊர் மதிப்பில் 10,500 ரூ தான் ஆகும். பாத்திங்களா உயிரின் மதிப்பை.

நீங்க என்ன சொல்லிறீங்க இந்த போலிஸை நம்ம ஊர்பக்கம் அனுப்பி வைக்கலாமா?

மேலும் விரிவான விபரங்களுக்கு  இங்கே செல்லவும். செய்தியை படித்து அதற்குண்டான பின்னுட்டங்களையும் அந்த செய்தி தளத்தில் படிக்கவும் அது மேலும் அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியவரும்
இந்த பதிவை எழுதி வைத்து போட மறந்துவிட்டதால் அதை இப்போது மிக லேட்டாக போடுகிறேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

பெண்களாக மாறிய "தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள்" (வீபரிதம்)

பெண்களாக மாறிய "தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள்" (வீபரிதம்)


என்னடா பதிவு போடலாம் என்று யோசித்து கொண்ட போது என் மனதில் உதித்தது தமிழ்  பெண்களின் கனவுலக கதாநாயகர்களாக வந்த சிலர் என் மனதில் வந்தனர். அதில் ஐந்து பேரை செலக்ட் செய்து அவர்களின் படங்களை கூகுலாண்டவரின் உதவியால் எடுத்து என்னிடம் உள்ள சாப்ட்வேர் உதவியால் அதில் சிறிது மாற்றம் செய்து பார்த்தேன்.

அந்த மாற்றத்தை எனது மனைவியும் குழந்தையும் தமிழ் நண்பர்களும் பார்த்து ரசித்து சிரித்தனர். அதை நீங்கள் பார்த்து ரசித்து சிரிக்கவே இந்த பதிவு.
மிகவும் சிரிக்க வைத்தது தனுசுவின் அழகுதான். ஹீ.ஹீ.ஹீ.

எனக்கென்னவோ சிம்புதான் அழகாக பெண்ணை போல காட்சி அளிக்கிறார்.
இந்த பதிவை பார்த்து அவருக்கு ஆண்களிடம் இருந்து காதல் கடிதம் வந்தால் அதற்கு மதுரைத்தமிழன் பொறுப்பு அல்ல.இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டும் தரப்பட்டுள்ளது. அவர்களை இழிவுபடுத்த அல்ல.

அன்புடன்
மதுரைத்தமிழன்

Saturday, March 24, 2012

ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)

தன் மனைவி  சந்தோஷமாக வீட்டில் இருப்பது தாம் மட்டும் தினசரி வேலைக்கு சென்று கடினமாக உழைத்து வருவதில் வெறுப்பு அடைந்த ஒருவன் தான் தினமும் கஷ்டப்படுவதை மனைவி உணர வேண்டும் என்று கடவுளை நோக்கி  கிழ்கண்டவாறு பிரார்த்தித்தான்.

அன்பான என்னைக் காக்கும் கடவுளே எனது மனைவி  சந்தோஷமாக வீட்டில் இருப்பதும் நான் மட்டும் வேலைக்கு சென்று எட்டு மணிக்கு மேலாக கடினமாக உழைத்து வருகிறேன். நான் அனுபவிக்கும் இந்த கஷ்டங்களை என் மனைவியும் உணர வேண்டும். அதனால் ஒரு நாள் மட்டும் என்னை அவளாகவும் அவளை என்னையாகவும் மாற்றி விடு என்று அந்த மனிதன் கடவுளிடம் இடைவிடாமல் கேட்டான்.

அதற்கு கடவுளோ பக்தா இந்த மாதிரி விளையாட்டு தனமான வேண்டுகோளை கேட்காதே வேறு ஏதாவது கேளு என்றார்.ஆனால் அவன் விடாப்பிடியாக கேட்டதால் அவன் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்

அடுத்த நாள்  அந்த மனிதன் அதிகாலையில் விழித்த போது ஒரு பெண்னாக( மனைவியாக) மாறி இருந்தான். அதிகாலை 5 மணிக்கு எழுந்த அவன் காலை உணவுகளை முதலில் தாயாரித்து விட்டு உடனே மதியம் குழந்தைகளுக்கு தேவையான லஞ்சை தயாரித்து கொண்டே  குழந்தைகளை எழுப்பிவிட்டாள்

அதன் பின் அவர்களுக்கு தேவையான உடைகளை எடுத்து அயன் பண்ணி போட்டுவிட்டு, அவர்கள் பின்னாலேயே போய் அவர்களுக்கு மார்னிங்க் பிரேக் ஃபாஸ்ட் ஊட்டிவிட்டு, அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து வைத்துவிட்டு அதன் பின் கணவரான மனைவிக்கு தேவையானவைகளை செய்து கொடுத்துவிட்டு, அரக்க பரக்க தலையை வாரி குழந்தைளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று விட்டு விட்டு  வீட்டுக்கு வந்தால் கணவர் ஆன மனைவி இன்னும் ஆபிஸுக்கு செல்லாமல்  முக்கிய பைலை தேடிக் கொண்டிருந்தார். அதை அவருக்கு தேடி எடுத்து கொடுத்து விட்டு அவர்(அவள்) காரின் சாவியையும் தேடி கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பிவிட்டு ஆறிப் போன காலை உணவை கடமையே என்று சாப்பிட்டு விட்டு கொஞ்சம் மனதை அமைதிபடுத்த தனக்கு பிடித்தாமான பாடலை போட்ட இரண்டாவது நிமிடத்தில் "அம்மாவின்" ஆசிர்வாதத்தால் "பவர் கட்" ஆகி பாடலையும் கேட்க முடியாமல் ஆகிவிட்டது.

இப்படியே வீட்ல இருந்தா காரியம் ஒன்றும் நடக்காது அதனால பேங்கல செக்கை டெப்பாசிட் பண்ணிவிட்டு அப்படியே ட்டிரைய் க்ளினிங்ல டிரெஸ்ஸை கொடுத்துவிட்டு வரும் வழியில வீட்டுக்கு தேவையான பலசரக்குகளை வாங்கி வந்து. அதை அதற்குரிய இடங்களில் வைத்திவிட்டு அன்றைய வரவு செலவு கணக்கை அதற்குரிய நோட்டில் எழுதி வைத்துவிட்டு தலைநிமிர்ந்து மணியை பார்த்தால் மணி 1 P.M ஆகிவிட்டது.

மிச்சம் மீதி இருக்கும் ஆறிப்போன உணவை வாயில் அள்ளிப்போட்ட போது தாம் அநாதை போல தனியாக சாப்பிடுவதை எண்ணி  கண்ணில் வந்த தண்ணிரை முந்தானையால் துடைத்துவிட்டு பெட் ரூமிற்கு போய் அலங்கோலமாக இருந்த பெட்டை சரி செய்துவிட்டு, துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங்க் மெஷினில் போட்டு, எச்சில் பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கி விட்டு, டிவி மற்றும் ஜன்னிலில் இருந்த தூசியை தட்டி, எல்லா ரூமையும்  பெருக்கி துடைத்து விட்டு  கடைசியாக ஒரு நல்ல குளியல் போட்டு மணியை பார்த்தால் 4 P.M  ஆகி இருந்தது. உடனே அடித்து பிடித்து ஸ்கூலுக்கு போயி குழந்தைகளை கூட்டி வர்ம் போது அவர்கள் போடும் சண்டையை விலக்கி விட்டு அவர்களுக்கு தேவையான ஸ்நாக்ஸ் கொடுத்து அவர்களை ஈவினிங்க் எக்ஸ்ட்ரா அக்டிவிட்டி க்ளாஸுக்கு கூட்டி போய் வீட்டிற்கு வந்தால் மணி ஏழாகிவிட்டது. குழந்தைகளை ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண சொல்லிவிட்டு கிடைத்த நேரத்தில் இரவு உணவை அவசர அவசரமாக தாயாரித்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ,துவைத்த துணிகளை மடித்து வைத்துவிட்டு, குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அப்பாடி என்று  டிவி பார்க்க உட்கார்ந்தால் வாசலில் காலிங்க் பெல் சத்தம் கதவை திறந்தால் கணவர் நண்பருடன் வீட்டிற்கு வந்த்திருந்தார். அதனால் அவர் நண்பருக்கு பிடித்த சைடிஸ்ஸை பண்ணி அவர்களுக்கு பறிமாறிவிட்டு கிச்சனை ஒழித்துவிட்டு மணியை பார்த்தால் இரவு மணி 12 ஆகிவிட்டது.

உடம்பு எல்லாம் அடித்து போட்டாற் போல வலி. தூங்க போன அவளை கணவன் எழுப்பினான் உறவிற்காக அவன் மனம் கோண கூடாது என்பதற்காக அதற்காக ஒத்துழைத்து அதன் பின் அப்படியே படுத்து உறங்கினான்(ள்).

அடுத்தநாள் காலையில் முதலில் எழுந்ததும் கடவுளிடம் மண்டி போட்டு கடவுளே  நான் என் மனைவியை பற்றி தவறாக நினைத்துவிட்டேன் அவள் வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மா இருப்பதாகவும் நான் மட்டும் கஷ்டப்படுவதாகவும் அது மிக தவறு என்று உணர்ந்துவிட்டேன் அதற்காக என்னை மன்னித்து கொள். தயவு செய்து எங்களை பழையபடி மீண்டும் மாற்றி விடு என்று பிரார்த்தித்தான்

அதற்கு கடவுள் பக்தா... நீ இப்போது நல்ல பாடத்தை கற்றுக் கொண்டாய் என்பதை அறிந்து கொண்டேன் எனக்கும் உன்னை பழையபடி மாற்றிவிட மகிழ்ச்சிதான் ஆனால் நேற்று இரவு நீ குழந்தை (pregnant) உண்டாகி இருக்கிறாய் அதனால்   நீ ஒன்பதுமாதம் பொறுத்து இருக்க வேண்டுமென்று சொல்லி மறைந்துவிட்டார்

நான் படித்த  ஜோக்கை எனது வழியில் மாற்றி நீங்கள் ரசிக்க தந்துள்ளேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

Thursday, March 22, 2012

தமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா?தமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா?


என்னங்க ஒரு வழியா சங்கரன் கோவில் தேர்தல் முடிஞ்சிருச்சு...தேர்தல் ரிசல்டும் வந்திருச்சு.. அதை பார்த்திருப்பிங்க அதை பற்றி நம்ம பதிவாளர்கள் போட்ட பதிவுகளையும் பார்த்து இருப்பிங்க..அதை பற்றி நானும் பதிவு போடலைன்னா இந்த பதிவு உலகம் என்னை மன்னிக்காது என்பதால் தான் இந்த பதிவு.

இந்த பதிவை படித்துவிட்டு யாரு மாங்கமடையன்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்ன ரெடியா?????


பரிட்சையில் பிட்டு அடித்து எழுதி பாஸாகிவிட்டு நான் நல்லா படிக்கும் மாணவன் அதனாலதான் நான் பரிட்சையில் நல்ல மார்க்கு எடுத்து பாஸாகி இருக்கேன் என்று சொன்னால் அவனைப் பார்ப்பவர்கள் இவன் பிட்டு அடிச்சு பாஸானது ஊருக்கே தெரியும் இதுல வேற ஊர் பூரா நான் நல்லா படிபேன்னு சொல்லிகிட்டு திரியுறான் இந்த மாங்கமடையன் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அப்ப ஜெயிச்சு வந்த ஜெயலலிதாவை நாம் என்னான்னு சொல்லாம் நீங்களே சொல்லுங்களேன். ( ஜெயலலிதா அவர்களே நீங்கள் நல்ல ஆட்சி புரிந்து இருப்பாதாக நினைத்தால் அப்புறம் ஏன் அனைத்து மந்திரிகளையும், ஏன் முழு அரசாங்கத்தையும், அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தியது ஏன்? நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன் )


ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு புத்தியுள்ளவன் முதலில் யோசிப்பான் போட்டியில் கலந்து கொள்ள நமக்கு தகுதியுண்டா, அப்புறம் போட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களின் பலம் என்ன என்று தெரிந்து போட்டியிட வேண்டும். உதாரணமாக குத்துசண்டை வீரர் முகம்மது அலி கலந்து கொள்ளும் போட்டியில் நமது வடிவேல் நான் மதுரைகாரைய்யங்க, எனக்கு இதெல்லாம் சூசுப்பி என்று சொல்லி கலந்து கொண்டு முதல் ரவுண்ட்டில், முதல் குத்தில் முகத்தில் காயப்பட்டு தோல்வி அடைந்த பின் எனக்கு அப்பவே தெரியும் ஐயா அவர்தான் ஜெயிப்பாருன்னு மூக்காலா அழுதா வடிவேலுவை மாங்கா என்று அழைக்கலாம்தானானே? ( தோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் என்று இன்று சொல்லவதற்கு பதிலாக, அப்பவே தெரிஞ்சு இருந்தால்வேட்பாளாரை நீங்கள் அறிவிக்காமல் இருந்து இருந்தால், அதிமுக போட்டியில்லாமல் வென்று இருக்குமே அதனால் உங்கள் பணமும் நேரமும் மிச்சம் ஆகி இருக்கும்  அது போல ஆளும் கட்சிகளின் பணமும் மிச்சமாயிருக்கும் தமிழக அமைச்சர்களும் நாய்யாக சங்கரன் கோவிலை சுற்றி சுற்றி வராமல் தங்கள் அலுவலக வேலைகள் மீது சிறிதாவது கவனம் செலுத்தி நாடு முன்னேற ஏதாவது செய்து இருப்பார்களே... அது மட்டுமில்லாமல் மக்களும் அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக கழித்து இருப்பார்களே அப்படி ஏன் நீங்கள் செய்யவில்லை ? .நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன் )

தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களின் சார்பாக சங்கரன் கோயில் மக்களுக்கு கிடைத்த இந்த அற்புத வாய்ப்பை இந்த மக்கள் சரியாக பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை மீண்டும் ஜெயிக்க வைத்ததன் மூலம் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சரியானவை என்று நீங்கள் கருதி கொண்டதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது அவரை தோற்கடித்து இருந்தால் தீயில் கை வைத்த சிறு குழந்தை போல மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் மீண்டு இருக்கும் ஆண்டுகளை மிகவும் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பாக ஆட்சி செய்ய முயற்சி செய்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும் அதற்கான வாய்ப்பை சங்கரன் கோவில் மக்கள் செய்ய தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன் ( அவரை தோற்கடித்து இருந்தால் சங்கரன் கோவிலை பாலைவனமாக ஆக்கி விடுவார் அதனால்தான் அவரை ஜெயிக்க வைச்சு சங்கரன் கோவிலையே ( The problem is, stupid people won't get it anyway ) போயஸ் தோட்டம் என்ற சோலைவனமாக்கி ஒவ்வொரு வேளையும் தங்க தட்டில் சாப்பாட்டில் நல்ல அறுசுவை உணவு வந்திடும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் நீங்களும் ஒரு மாங்காதான் . நீங்கள் மாங்கா இல்லையென்றால்  கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்) "People who already don’t get it, never will "

இந்த பதிவை படித்ததும் சந்தோஷப்படும் தமிழக தலைவர் ஒருவர் இருந்தால் அவர் ஐயா ராமதாஸ் அவர்களாகத்தான் இருப்பார். காரணம் தான் மாங்கா இல்லை என்பதால். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் மாங்காவாய் இருந்து மாம்பழமாக மாறி யாருக்க்கும் உபயோகம் இல்லாமல் வீணா போன பழமாகிவிட்டார்

ஒகே மக்களே வந்தீங்க...படிச்சீங்க....நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதை கொஞ்சம் நேரம் இருந்தால் சொல்லிவிட்டு போங்க...

எனக்கு ஏதோ கிறுக்கணும் என்று தோன்றியதால் இந்த கிறுக்கல் பதிவு. மீண்டும் அடுத்த கிறுக்கலில் சந்திப்போம்..வாழ்க வளமுடன்

அன்புடன்,
மதுரைத்தமிழன்


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog