Wednesday, April 29, 2020

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும் World Leaders thoughts about  Books and Reading

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும்


நூல் என்பது கருத்துகளை மற்றும் நம் எண்ணங்களை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. ஆரம்ப காலகட்டத்தில் பனையோலையில் எழுதி அப்படி  எழுதப்பட்ட பனையோலைகளைப் ஒன்றாகச் சேர்த்துத்  துளையிட்டு நூல் கயிற்றில் கோத்து வைத்தனர் 

முதலில் ஏடுகளில் எழுதியவர்கள் காகிதங்களைக் கண்டு பிடித்தவுடன் அதில் எழுத ஆரம்பித்து கையெழுத்து புத்தகமாக இருந்திருக்கிறது அதன் பின் அச்சு எந்திரங்கள் கண்டுபிடித்தவுடன் அவைகள் அச்சிடப்பட்டு தற்போதைய வழக்கில் இருக்கும் புத்தங்களாகி இருக்கின்றன. இந்த நவீன காலத்தில் புத்தங்கள் அச்சிடப்படுவதற்குப் பதிலாக இணையத்தில் வெளிவிடப்பட்டு மின்நூல் என்று அழைக்கப்படுகிறது.

எது எப்படியோ அறிவார்ந்தவர்கள்(இந்த கால சங்கிகள் அல்ல) எழுதிய புத்தங்களைப் படிப்பதன் மூலம் நாம் அறியாத நமக்குப் புரியாத பல விஷயங்களை அறியவும் அதன் மூலம் நம் சிந்தனைகளை எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் நம்மை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. அம்மா அன்பைப் போதிப்பார்கள் ஆனால் புத்தங்கள் நமக்கு அறிவை போதித்துக் கொண்டிருக்கிறது..வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டுவது மட்டுமல்ல நமது கற்பனையையும் அறிவை செதுக்கி செழுமை அடையச் செய்யும் செய்யும்.  அதுமட்டுமல்ல படித்த புத்தகங்களைச் சிறிது இடவெளிவிட்டு மீண்டும் படிக்கும் போது புது புது அர்த்தங்களையும் எண்ணங்களைத் தந்து கொண்டே இருக்கும்.

அறிஞர்களின் பார்வையில் புத்தகங்களும் நூலகங்களும் Books and Reading

விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். அவைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரை முறை இல்லாததால்  எப்படியும் வாழலாம் ஆனால்  இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை.  நமக்கு முன் வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் பெற்றுக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது..

புத்தகங்களைப் போல ஒரு சிறந்த துணை நம் வாழ்வில் நமக்குக் கிடைப்பது என்பது அறிது  நாம் போற்றும் அறிஞர்களையும் தலைவர்களையும் பார்த்தால் அவர்கள் தினமும் புத்தக வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள் அதனால்தான் என்னவோ அவர்கள் அறிஞர்களாகவும் தலைவர்களாகவும் ஜொலித்து வலம் வருகிறார்கள்       


என்னைத் தேடி நீங்கள் வாருங்கள் அதன் பின் உங்களை தேடி உலகம் வரும் என்கிறது நூலகம். இந்த கால கட்டத்தில் நூலகம் சென்று படிப்பது மனதிற்கு மிக அமைதியைத் தருவது மட்டுமல்ல அறிவையும் விசாலமாக்கும். கோவில்களுக்கும் ஒதுக்கும் நேரத்தைப் போல நூலகங்களுக்கும் அதைப் போல நாம் நேரத்தை ஒதுக்கச் சொல்லவேண்டும்.. உடனே ஜோதிக்காவின் மேல் பாய்ந்து போல என் மேலும் பாய்ந்துவிடாதீர்கள். நான் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை அங்கே செல்வது போல இங்கும் செல்ல நேரம் ஒதுக்கிச் செல்ல வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன். ஒரு வேளை நூலகம் செல்ல முடியாதவர்களுக்கு இணையமே ஒரு நூலகம் மாதிரிதான் ஆனால் என்ன இணையத்தில் நாம் நல்லதைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டும் அவ்வளவுதான் இணையத்தில் இல்லாதது நூலகத்தில் இல்லை என்று கூட சொல்லாம். இன்றைக் காலத்தில் இணையத்தின் மூலமே பலரும் கவ்லி கற்கின்றனர் இணையத்திலே பல ஆராய்ச்சி கட்டுரைகள் முதல் சாதாரண கவிதைகள் வரை படிக்கலாம்          

இதுவரை நான் சொன்ன கருத்துக்களைக் கேட்ட நீங்கள் அறிஞர்கள் புத்தகம் , புத்தகம் படிப்பது  மற்றும் நூலகம் குறித்துச் சொன்ன கருத்துகளை என்னவென்று பார்ப்போம்
            

1. ஃபிரடெரிக் டக்ளஸ்: நாம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் போது சுதந்திரமாக இருப்பதை உணர்வோம்

"
2. ஹாரி ட்ரூமன்: வாசிப்பவர்கள்  எல்லாம் தலைவர்கள் அல்ல ஆனால்  தலைவர்கள் எல்லாம் தினமும் வாசிப்பவர்களாகவே இருக்கிறார்கள்

3. எலோன் மஸ்க் (அவர் எப்படி ராக்கெட்டுகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார் என்று கேட்டபோது): "நான் புத்தகங்களைப் படித்தேன்."

4. ஜான் ஆடம்ஸ்:  "வாசிப்பதன் மூலம் மனம் திறந்து விரிவடையாவிட்டால்  அந்த  மனிதனால்  எப்படி  நல்ல தீர்ப்பளிக்க முடியும்?"

5. ஓப்ரா வின்ஃப்ரே:  "என் பாட்டியின் மேல்மாடத்துக்கு  அப்பால் உள்ள ஒரு உலகத்தைப் பார்க்கப் புத்தகங்கள் என்னை அனுமதித்தன ... [மற்றும்] அந்த நேரத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தாண்டி சாத்தியங்களைக் காணும் சக்தி கிடைத்தன.

6  தாமஸ் ஜெபர்சன்: "நான் புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது."

7 . பராக் ஒபாமா: “படித்தல் முக்கியம். உங்களுக்குப் படிக்கத் தெரிந்தால், முழு உலகமும் உங்களுக்குத் திறக்கும்.

8. சிட்னி ஹர்மன்: “நான் படித்த கிட்டத்தட்ட எல்லாமே எனக்குப் பயனுள்ளதாக இருந்தன - அறிவியல், கவிதை, அரசியல், நாவல்கள். ஞானவியல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆர்வம் உண்டு. வணிகத்தில் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் வழியை வளர்க்க எனது புத்தகங்கள் எனக்கு உதவியுள்ளன. ”

9. பில் கேட்ஸ்: "நான் இரு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் என் புரிதலைச் சோதிப்பதற்கும் முக்கிய வழி படித்தல் தான்."


10. நெப்போலியன் போனபார்டே: "படிப்பவர்களின்  குடும்பத்தை எனக்குக் காட்டுங்கள், உலகை மாற்றும்  நபர்களை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்."

11. ஷெல்லி லாசரஸ்: "ஒரு உலகளாவிய நிறுவனத்தின் தலைவராக நான் செயல்படப் புத்தகம் படிப்பது  எனக்கு உதவுகிறது, வெவ்வேறு கலாச்சாரங்கள், நாடுகள், பிரச்சினைகள் பற்றிய புத்தகங்கள். இன்பத்துக்காகவும், ஒரு சிக்கலை எவ்வாறு சிந்திப்பது அல்லது தீர்ப்பது என்பதற்கான பிற கண்ணோட்டங்களைக் கண்டறிவதற்கும் நான் படிக்கிறேன் ”


12. வால்ட் டிஸ்னி: "  கொள்ளையர்கள் கொள்ளை அடித்துப் பதுக்கி இருக்கும் தீவுகளில் இருக்கும் புதையல்களை  விடப் புத்தகங்களில் அதிக புதையல் உள்ளது."

13. ஆபிரகாம் லிங்கன்: "நான் படிக்காத ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுக்கும் ஒரு நபர் எனது சிறந்த நண்பர்."

14 வாரன் பபெட் (வெற்றிக்கான திறவுகோலில்): “ஒவ்வொரு நாளும் 500 பக்கங்களைப் படியுங்கள். அறிவு செயல்படுகிறது. இது கூட்டு வட்டி போன்றது. நீங்கள் அனைவரும் இதைச் செய்ய முடியும், ஆனால் உங்களில் பலர் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ”

15. மார்க் கியூபன்:“நான் தொடர்ந்து புதிய புதிய யோசனைகளைத்  தேடிக் கொண்டிருப்பேன் . என்னால் முடிந்தவரை எல்லா  புத்தகத்தையும் பத்திரிகையையும் படித்தேன்.  அந்த  பத்திரிகைக்கு 3 ரூபாய் வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது,புத்தகம்  20 ஒரூபாய்க்கு வாங்கியதாகக் கூட இருக்கலாம் அதிலிருந்து கிடைக்கும்  நல்ல ஐடியாக்கள். ஒரு நல்ல ஐடியா ஒரு வாடிக்கையாளர் அல்லது தீர்வுக்கு வழிவகுக்கிறது  அதனால் கிடைக்கும் பலன், நாம் புத்தகத்திற்காகச் செலவிட்டதை விட மிக அதிகமாகத் திரும்பக் கிடைக்கிறது

தாங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து என்ன நல்ல தகவல்களை நாங்கள் பெறுகிறோமோ அதே தகவல்கள்தான்
அனைவருக்கும்  கிடைத்ததாக பபெட் மற்றும் கியூபனும் ஒப்புக்கொள்கிறார்கள்

16. வாரன் பபெட்: "நான் படித்ததை எல்லோரும் படிக்க முடியும், இது ஒரு நிலை விளையாட்டு மைதானம்."

17 . மார்க் கியூபன்: “நான் படித்த அனைத்தும் பொதுவில் இருந்தன.  புத்தகங்களையும் பத்திரிகைகளையும் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அதே தகவல்தான் படிக்கும்  எல்லோருக்கும் கிடைத்தது.  ஆனால் பெரும்பாலான மக்கள் அது தேவையில்லை என்று ஒதுக்குகிறார்கள், அறிவால் கிடைக்கும் நன்மைகளைப் பெற பெரும்பாலான மக்கள் நேரத்தை ஒதுக்க மாட்டார்கள். ”

18 :  மகாத்மா காந்தி        அறிவால் உயர்ந்து அரியாசனம் செய்வோம் என்கிறார் தேசத்தந்தை

19, அன்னை இந்திரா காந்தி       நூல்களால் நைந்த நேயங்கள் தைப்போம் என்கிறார்

20 .  பேரறிஞர் அண்ணா      ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிறார்

21      அப்துல் கலாம்.             புத்துலகம் படைக்கப் புத்தகம் படிப்போம் என்கிறார்     

 22  பெரியார்.         புத்தகம் படிப்போம் வித்தகம் படிப்போம் என்கிறார்     

 23.    சுவாமி விவேகானந்தர்.    ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார்          

24     சீன பழமொழி.    அடுத்த தலைமுறைக்குப் பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தைப் பரிசாகக் கொடு என்கிறது          
         
25 இங்கர்சால் அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலங்கள் செய்யும் படைவீடு நூலகம்! -
            
26 -ஷேக்ஸ்பியர் எனது நூலகமே எனக்குப் போதிய பெருஞ்செல்வமாகும்!           

27 -லாங்ஃபெல்லோ   ;நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்;இக்கால உலகின் புகழ்க்கொடிகள்!     

 28 முகமது ஜின்னா      நூலகமே ஒரு தனி உலகம். அதன் உள் சென்று வந்தால் அறிஞனாகலாம் - கலைஞனாகலாம் கவிஞனாகலாம்!

29 .     ஹோம்ஸ்மான்        நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு! -       

30 -எமர்சன்      தோழனுக்காகக் கூடத் திறந்து சொல்லாத சொற்கள், கருத்துகள் உனக்காகத் தெளிவாக விளக்கப்பட்டுக் காத்திருக்கின்றன!         

31  -டாக்டர் அம்பேத்கர்.  எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம்          

32  பகத்சிங்.  தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்     

33 சார்லி சாப்ளின். ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்

34 சேகுவாரா.     எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் -        

     
35 தோழர் சிங்காரவேலர்   ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம் -

36 எலன் எக்ஸ்லே         புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், ;கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்; என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது -  

37 வால்டேர் உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும் - வால்டேர்     

38 அரேபியப் பழமொழி ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் -    

39 கூகிவா திவாங்கோ.   உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது -     

  40  பகத்சிங்.         புத்தகங்கள் இருந்தால்போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒரு வரை அடைத்து வைக்க முடியாது -மாவீரன் பகத்சிங்.          

41      எட்வின் பி. விப்பிள்      காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் -     

42 ஹென்றிதொறோ :ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியினர் தேடித்தேடி அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே -      

43 கரோலின் கோர்டன்  நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம் -     

44 மார்டின் லூதர்கிங்   பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்    

45 வின்ஸ்டன் சர்ச்சில்     ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்     

 46 காந்தியடிகள்   ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்    

47 நேரு  தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்

48 பெட்ரண்ட்ரஸல்.            என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று -      

49 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று  வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் -

50   நெல்சன் மண்டேலா வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் -.          

51  குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.          

52      போவீ    பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம் -   

 53 சீனப் பழமொழி   புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கிறோம் அதை மீண்டும் வாசிக்கும்போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம் -   


54    சார்லஸ் இலியட்.     ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை -         

55     மார்க் ட்வைன்    ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் -

56 மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் - சீனப் பொன்மொழி.     

57  ஜான்மெக்காலே       அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி - .  

58  விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.         
          

இவ்வளவு அறிஞர்களும் புத்தகம் மற்றும் நூலகங்களைப் பற்றி இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்

நமது  துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிகச் சிறந்த சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில் உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும் நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவுஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும்.

நமது  துறையில் சிறந்து விளங்கப் புத்தகங்களைப் படித்த நான் வாழ்வை முன்னேற்றச் சிறப்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும் அதாவது மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறியக் கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனைச் சாதனையாளனாக்க வழிகாட்டுகிற சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.

அதோடு நம் பதிவர்களின் 'தல'யான  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எழுதிய   புத்தக வாசிப்பு என்பது.... என்ற பதிவையும்  என்னப் போலப் படிக்கத் தவறியவர்களுக்காக இங்கே தருகிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. அற்புதமான பதிவு. மீண்டும் என்னை தினமும் கட்டாயமாக நேரம் ஒதுக்க தூண்டியது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி யாருக்காவது இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று எழுதினேன் அது உங்களுக்கு பயன்படுகிறது என்பதில் சந்தோஷம்

      Delete
  2. “When I have a little money, I buy books; and if I have any left, I buy food and clothes.”
    ― Desiderius Erasmus Roterodamus

    மதுர ,

    அஞ்சாவது வகுப்பில் இருந்து பதினொன்னு வரை நான் நூலகம் போகாத நாளே கிடையாது. அதுக்கு அப்புறம் அது நின்னு போச்சி.. வாசிக்கிற பழக்கத்தை சமீபமா மீண்டும் துவக்கி இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு விபரம் தெரிந்து படிக்க ஆரம்பித்தது முதல் அமெரிக்கா வரும் வரை புத்தகங்கள் படிப்பதுதான் எனது முக்கிய பொழுது போக்கு.. இதில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. நான் எதற்கும் ஆசைப்படமாட்டேன் ஆனால் இதில் 2 மட்டுக்கும் விதிவிலக்கு 1.சொந்த நூலகம் 2 நல்ல உணவகம் வைக்க வேண்டும் என்பது மட்டும் ஆசை உண்டு உங்களை போல மில்லியனராக் இருந்தால் எப்போதோ இதை தொடங்கி இருப்பேன் விசு

      Delete
  3. நானும் ஒருகாலத்தில் புத்தகப்புழுவா இருந்தேன் அமெரிக்கன் கவுன்சில் பிரிட்டிஷ் கவுன்சில்ன்னு எல்லாத்திலயும்  மெம்பர் .இப்போ படிக்க நேரம் இருந்தாலும் ஒரு சோம்பேறித்தனம் .ஆனா எனக்கும் சேர்த்து மகள் புத்தகக்குவியலா வாங்கி  படிக்கிறா .வாசிப்பது என்பது சுவாசிப்பது என்றாக வேண்டும் .புத்தக வாசிப்பு பற்றி நல்ல quotes எல்லாம் தொகுத்து எழுதியிருக்கீங்க ட்ரூத் .மிகவும் மெனக்கெட்டு எழுதியமைக்கு பாராட்டுக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மதுர...

      உன் நகைச்சுவைக்கு அளவே இல்லையா... ? சல்லியை பார்த்து மில்லி என்று அழைப்பது? எனக்கு சிப்பு சிப்பா வருது.

      Delete
  4. நான் கடைசியாக முழுவதுமாக படித்த புத்தகம் Hitler and Churchill.சேத்தன் பகத்தின் ஓன் இண்டியன் பிரைட் 10 பக்கத்துக்குமேல் படிக்க முடியலை .அதோட இப்போதைக்கு ஆன்லைனில் மனதுக்கு இதமான அறிவை மட்டும் வளர்க்கும் நூல்களை தேடுகிறேன் .குறிப்பா இப்போதைய இன்டெரெஸ்ட் wild life ..

    ReplyDelete
  5. புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. தலைசிறந்த அறிஞர்களின் மொழி மூலம் வாசிப்பின் தேவை பற்றி சொன்னது சிறப்பு.

    சிறப்பான பதிவு மதுரை தமிழன். பாராட்டுகளும் வாழ்த்துகளும். என்றைக்கு வாசிப்பதை நிறுத்துகிறோமோ அன்று ஸ்வாசத்தினை நிறுத்தியதற்கு சமம் எனவும் சொல்வதுண்டு.

    ReplyDelete
  6. அருமை மதுரைத் தமிழன்.சிறப்பான தொகுப்பு. அனைத்தும் குறித்துவைத்துக் கொள்ள வேண்டியவை. வாசுப்பிற்கான களம் விரிவடைந்து கிடக்கிறது. இப்போதைய தேவை நல்ல நூல்களை தேடிப்படிப்பதே.

    ReplyDelete
  7. நன்றி...

    தொகுப்பு சிறப்பு...

    ஆனால் உண்மை :-

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும் (குறள் 373)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.