Thursday, April 16, 2020


@avargal unmaigal
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் விமர்சனம்


நான் பொதுவாக ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற தமிழ்த் திரைப்படங்களை வீட்டு தொலைக்காட்சியில்தான் பார்ப்பதுண்டு சாரி கேட்பதுண்டு.. அதாவது தமிழ்ப் படங்களை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு அதன் வசனங்களை மட்டும் கேட்டுக் கொண்டு இணையதளங்களில் மேய்ந்து கொண்டிருப்பதுதான் என் வழக்கம் அதுமட்டுமல்லாமல் சண்டை காட்சி பாட்டு காட்சி இவைகளை எல்லாம் பார்வோர்ட் பண்ணி விட்டுக் கேட்பதுதான் வழக்கம்..


ஆனால் முதன் முறையாகப் படம் ஆரம்பித்த 20 நிமிடங்களில் இதுவும் வழக்கமான தமிழ் படம்தான் என நினைத்துக் கொண்டிருக்கையில் சடன் என்று ஒரு மாற்றம் ஏற்பட்டு  ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு திருப்பம் ஏற்பட்டு படம் சுவாரஸ்யமாகிக் கொண்டே செல்கிறது. படம் இப்படித்தான் செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பை நினைப்பை  ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிக் கொண்டே போவதில்தான் இந்த படத்தின் வெற்றி இருக்கிறது. இப்படித்தான் படம் செல்லும் செல்லும் என நாம் நினைக்க நினைக்க அதைச் சுக்கு நூறாக்கி கொண்டே படம் சென்று முடிகிறது


இந்த படத்தை இயக்கியவர்      தேசிங் பெரியசாமி என்பவராம் இவர் பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை ஆனால் நான் கேள்விப்பட்ட ரவிக்குமார் முருகதாஸ் அட்லி போன்றவர்களின் இயக்கத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் என்றே சொல்லாம்.


பெரிய நடிகர்களான ரஜினி,கமல், அஜித் விஜய் போன்றவர்களின் படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது எந்த வித ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பார்க்கும் எனக்கு இந்த படத்தை நெட் பிளிக்ஸில் பார்த்தது முடித்த போது ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன் எனச் சொல்லாம், இப்படிப்பட்ட நல்ல படத்திற்கு இணையம் மூலமாக நன்கொடை போலப் பணம் செலுத்தும் வசதி இருந்தால் அள்ளிக் கொடுக்கலாம் போலத் தோன்றுகிறது...( இந்த் மாதிரி ஒரு திட்டத்தை யாரவது ஆரம்பித்து வைக்கலாம் )
@avargalunmaigal

இந்த படத்தில் சித்தார்த்தும் (துல்கர் சல்மான்), காளீஸும் (ரக்ஷன்) இருவரும் நண்பர்கள். இன்றைய கால இளைஞர்கள் போல பார்ட்டி, குடி, ஸ்போர்ட்ஸ் கார் என்று ஆனந்தமாகப் பொழுதைக் கழிப்பவர்கள். இந்த இருவரும் கணணித் துறையில் பணியாற்றுபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும், உண்மையில் புதிய டெக்னாலஜியை பயன்படுத்தித் திருடும்  ஹைடெக் திருடர்கள்



இதில்  சித்தார்த்துக்கு  ஆசிரமத்தில் வளர்ந்த, அழகுக் கலை நிபுணரான மீரா (ரிது வர்மா) மீது  காதல் ஏற்படுகிறது . மீராவிற்கு ஒரு நெருங்கிய தோழி  ஒருவர் உண்டு ஷ்ரேயா  (நிரஞ்சனி) அவர்  மீது காளீசுக்கு காதல் ஏற்படுகிறது .

சித்தார்த்தும்  காளீஸும் பக்கா திருடர்கள் என்பது  தெரியாமல் மீரா சித்தார்த்தையும் நிரஞ்சனி காளிஸையும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு.  நால்வரும் வேறு நகரத்திற்குப் போய் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள். அப்போது ஏற்படும் ஒரு சம்பவம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது.  இப்படி ஒவ்வொரு 20 நிமிடமும் படத்தில் நாம் நினைப்பதற்கு  மாறாக மாற்றம் நிகழ்ந்து நம்மைச் சீட்டின் நுனியில் கடைசி வரை இயக்குநர் நம்மை உட்கார்த்தி வைக்கிறார், பொதுவாகத் தான் எடுக்கும் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டும்  கௌதம் வாசுதேவ் மேனன்  இந்த படத்தில் ஒரு ஒரு காவல்துறை அதிகாரியாகத் தனது மேன்லி பெர்பாமன்ஸ்களால் கைதட்டுதலை அள்ளி  மிகச் சிறப்பாக நடித்து ஒரு சிறந்த  நடிகர் என்ற பெயரையும் தட்டி செல்லுகிறார்..

எனக்கு இந்த படத்தில் நடித்த கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நிரஞ்சனி  என்பவரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருக்கிறது , இந்த காலத்தில் பெண்கள் நிரஞ்சனி போல கம்ப்பிரமாக இருக்க வேண்டும் நளினமாக அல்ல

படக்கதையை இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் போய்விடும், அதனால் இத்தோட நிறுத்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் சென்ற விதம் சிறப்பாக இருப்பதால் குறைகளை மறந்து விடலாம்.. பாடல்கள் இல்லாமல் இருந்தால் ஆங்கிலப் படத்தை பார்ப்பது போல இருந்திருக்கும்

இந்த படம் கொரோனா காலத்தில் வராமல் இருந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் என்பது என் எண்ணம்

*****

படம்     கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

இயக்கம்     தேசிங் பெரியசாமி

ஒளிப்பதிவு     கே.எம். பாஸ்கரன்
   
இசை     ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
   
நடிகர்கள் &நடிகைகள்     துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் வாசுதேவ் மேனன்,
   

   


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. இந்தப் படம் பற்றி வீட்டிலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே தொலைக்காட்சியில் போட்டு விட்டார்கள் போல. பாருங்கள் என எனக்கும் சொல்லி இருக்கிறார்கள். முடிந்த போது பார்க்க வேண்டும்.

    உங்கள் பக்கத்தில் சினிமா விமர்சனம் - எதிர்பார்க்கவில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. நெட்பிலிக்ஸில் வந்துவிட்டது பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதனால் பதிவையும் இட்டுவிட்டேன்

      Delete
  2. நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். நல்ல படம். ஆனால் இந்த படம் இப்போது டிவிலேயே வந்து விட்டதே. என்ன சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன பணத்தை என்னிடம் அனுப்பிவையுங்கள் அதை நான் தயாரிப்பளாரிடம் கொடுத்து விடுகிறேன்

      Delete
  3. இது ட்ரூத் பக்கமா :))  சினிமா விமர்சனம்லாம் வருதே :) உங்களுக்கு நன்கொடை கொடுக்கணுமா இருங்க :)  just giving/crowdfunding எதிலாவது ஆரம்பிச்சி வைக்கிறேன் :)அதில் வரத்தை அவங்களுக்கு கொடுக்கலாம் :) நான் ஒரு பெரிய தவறு செஞ்சிட்டேன் . இந்த படத்தை தேடி ஸ்டார்டிங் 5 நிமிஷத்தில் பார்த்து  நிறுத்திட்டேன் .அடுத்த வாரம் மீண்டும் பார்க்கின்றேன் .அந்த பொண்ணு நிரஞ்சனா காதல்கோட்டை டைரக்டரின் மகளாம் .ஒரு ரிவ்யூவில் பார்த்தேன் .

    ReplyDelete
    Replies

    1. படம் பிடித்து இருப்பதாலும் எந்த அரசியல் தலைவர்கள் இன்று என்னிடம் சிக்காததாலும் எனக்கு நேரம் கிடைத்தாலும் நயன் தாராவை விட்டு பிரிந்ததாலும் அதிலும் அகத்தியன் மகள் நிரஞ்சனியின் நடிப்பும் அவரின் வனப்பும் எனக்கு பிடித்து இருப்பதாலும் பட விமர்சனம் வந்திருக்கிறது..... நான் நன்கொடை என்று சொல்லி இருப்பது இந்த படத்தை டிக்கெட் எடுக்காமல் பார்த்து இருப்பதால் மனதை உறுத்தியது அதனால் சொன்னேன் ... மற்றபடி நான் நன் கொடை பெறும் இடத்தில்தான் இருக்கிறேன் அதனால் giving/crowd funding என்று ஆரம்பித்து எனக்க்கு வசூல் பண்ணி தரவும் அப்படியே அதிராவின் நெக்லைஸையும் தரவும்

      Delete
  4. படம் பார்த்தேன் சகோ, நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ ஒரு தடவை நிச்சயமாக பார்க்கும் நல்ல படமாகவே இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.