Thursday, August 28, 2014



#vijay tv #super #singer point of view.jpg






இந்த பதிவை எழுதியவர் சுபரஜா ஸ்ரீதரன்  அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன்



1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.


   
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.



3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.



4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.



குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.



சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!



நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.



இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!



இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.



1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.

2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.



இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.



டிஸ்கி : இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் - அவசரம் - Share now to save the kids

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy



அன்புடன்

மதுரைத்தமிழன்

44 comments:

  1. எங்கள் இல்லத்தில் கேபிள் டிவி வருடக்கணக்கில் கிடையாது. இன்னும் 4 வருடங்களுக்கு இது எங்கள் இல்லத்திற்கு வரவும் போவது இல்லை. அதனால் நான் தப்பித்தேன். இருந்தாலும், சில மாதங்களுக்கு முன் நண்பன் ஒருவர் வீட்டில் இருக்கையில் அவர் இந்த நிகச்ழ்ச்சியை போட்டு மிகவும் பெருமையாக பேசினார். அப்ப்போது ஒரு சிறுவன் "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னு குட்டி நான்" என்ற பாடலை பாட, நடுவர்களும், பெற்றோர்களும் ரசித்து கொண்டு இருந்தனர். நண்பனிடம் இதை பார்க்கையில் வாந்தி வருவது போல் இருக்கிறது தயவு செய்துநிறுத்து என்றேன். ஆஹா! இது நம் இல்லத்தில் இல்லையே என்று ஒரு நிமிடம் சந்தோஷ பட்டு கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. கடந்த சில வருடங்களாகத்தான் நாங்கள் தமிழ்சேனல்களை வைத்து இருக்கிறோம் தமிழ் மூவிகளை பார்ப்பதற்காக டைம்பாஸ் பண்ணுவதற்காக. சில நிகழ்ச்சிகளை விஜய்டிவி நல்ல முறையில்தான் நடத்துகிறது ஆனால் நடுவர்கள்தான் நிகழ்ச்சியை திசை திருப்புகிறார்கள் அதிலும் மனோ பல சமயங்களில் முக்கியும் முணங்கியும் சிணுங்கியும் தவறான வழியை காட்டுகிறார். ஒரு வேளை வாங்கிய காசுக்காக குரைக்கிறாறோ என்னவோ?

      Delete
  2. இதுல இப்படி ஒரு ஆங்கிளை நான் யோசிக்காதது பெரும் பாவம்தான் .
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத்தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. இது சீனியர் நிகழ்ச்சிகளில் வந்து இருந்தால் இந்தளவு நாம் பேச வேண்டியிருக்க தேவையில்லை ஆனால் ஜுனியர் நிகழ்ச்சிகளில் வருவதுதான் தவறு என்று சொல்ல வருகிறோம்.. இதுதான் எனது ஆங்கிள்

      Delete
    2. அவருடைய ஆங்கிள் சரியானதுதானா என்று யோசித்தீர்களா ?

      Delete
  3. மிகவும் சிறப்பான பகிர்வு.... அவர் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மையே....

    ReplyDelete
    Replies
    1. விஜய்டிவியை கலாய்த்து ஜோக் இட்ட சமயங்களி இதைப்பற்றியும் எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன்.அப்படி நினைத்த சமயத்தில் இந்த கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது அதில் கட்டுரையாளர் சொன்ன கருத்துகளும் பல இடங்களில் என் கருத்துகளோடு ஒத்து போனதால் அதை அவர் அனுமதியுடன் இங்கே வெளியிட்டு இருக்கிறேன்

      Delete
  4. சுபரஜா ஸ்ரீதரன் அவர்கள் சொன்னதை நானும் பல முறை இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பவர்களிடம் சொல்லி இருக்கிறேன். அப்படி நான் சொன்ன போது எனக்கு ரசனை என்பதே இல்லை என்று கேலி செய்தார்கள்.
    அதைவிட குழந்தைகளின் நடனங்கள் சகிக்க முடியாது. இதையெல்லாம் கலை என்று சொல்கிறார்கள். சரி நமக்குத் தான் வயசு பத்தலையோ என்று பேசாமல் இருந்து விடுவேன்......(

    ReplyDelete
    Replies
    1. இது திறமையை வெளிக் கொணரும் ஒரு நல்ல நிகழ்ச்சிதான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது தவறான கருத்துகளை அந்த இளம் பாடகர்கள் மத்தியில் விதைத்தும் பார்ப்பவர்கள் மனதிலும் தவறான கருத்தை பதிந்தும் செல்கிறது. அதை தான் நாம் சுட்டிக்காட்டுகிறோம்

      Delete


    2. ரசனை எனது வேறு தவறான வழி காட்டல் என்பது வேறு இந்த நிகழ்ச்சிகள் தவறான பாதைக்கு இட்டு செல்லுகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது

      Delete
  5. தமிழா நம்புங்கள்.... நேற்றுதான் நாங்கள் இஅதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்...பொதுவாகவே தற்போது இங்கு பெற்றோர்களின் வளர்ப்பு முறை பற்றியும், குழந்தைகள் அந்ததந்த வயதிற்கேற்ற அந்த இன்னொசென்ஸ் இல்லாமல் போகின்றார்கள் என்றும் பேசி வரும் போது இது போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும்....
    சகோத்ரை அருணா செல்வம் சொல்வதையும் அப்படியே வழிமொழிகின்றோம்...நாங்கள் சொல்ல வந்ததும் அதையே...
    All kind of these programs shatter the personality (development) of a child!

    ReplyDelete
  6. எமர்ஜென்சி அறிவிப்பு....பெற்றோர்களுக்கு நல்ல கவுன்சலிங்க் தேவை!

    ReplyDelete
    Replies
    1. அதோட நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் தேவை என்பதை சேர்த்து கொள்ளுங்கள்

      Delete
  7. பதிவை படிச்சுட்டு ரிப்ரெஷ் பண்ணினா பாரதியார் காணமல் போய் விநாயகர் வந்துட்டார்:)) எனக்குமே பிடிக்கலை தான், ஆனா அதைப்பற்றியே எழுதுவது கூட அதற்கு ஒரு பப்ளிசிட்டியை கொடுக்குமே சகா:(

    ReplyDelete
    Replies
    1. கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப்படவேண்டாம் ஆனால் இந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் பல லட்ச மக்கள் அதிலும் நம் நண்பர்கள் அநேகம். அவர்களுக்காக இந்த விஷேச நாட்களில் நாம் வாழ்த்துவது நல்லதுதானே.நமது நட்புக்களின் பதிவுகள் சில சமயங்களில் நன்றாக இல்லையானலும் நாம் அவர்களை பாராட்டி வாழ்த்திவிட்டு செல்வோமே அது மாதிரிதான் இது...

      Delete
    2. ஒ!!! SORRY நான் விநாயகரை பிடிக்கலைன்னு சொல்லலை சகா:))) அவருக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா:))) நான் எனக்கு பிடிக்கலைன்னு சொல்லவந்தது ஜூனியரை பத்தி, ஆனா சரியான பிரேக் கொடுக்காமல் அடுத்த டாபிக் தாவினது என் தப்பு தான் >ஹா....ஹ...ஹா... .இப்போ ஒழுங்கா சொல்லுறேன், எனக்கு கூட அந்த ஷோ பிடிக்கலை தான் ஆனா அதைப்பற்றியே எழுதும் போது அந்த ஷோவிற்கு அது ஒரு நெகடிவ் பப்ளிசிட்டி தானே:)) இப்ப ஓகே வா??

      Delete
  8. பேஸ்புக்கில் Srinivasa Ragavan அவர்கள் இட்ட கருத்து


    இந்த சமூக விரோத விபசார கும்பல் இந்த நிகழ்ச்சியை தொடங்கியதில் இருந்தே அநேக உளவியலாளர்கள், பொதுமக்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வரும் குற்றச்சாட்டு இது. பேன் குழந்தைகளுக்கு அவர்கள் போட்டு விடும் இறுக்கமான ஆபாசமான உடைகளை கவனியுங்கள். இவர்கள் பாட வைக்கப்படும் பாடல்களை கவனியுங்கள். Child Pornography வகையை சேர்ந்தது இந்த கூத்து. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் தாய்மார்கள் பற்றி சமூகத்தில் என்ன நினைப்பார்கள்? பிஞ்சு குழந்தைகளிடம் நஞ்சை விதைத்து ஒரு தலைமுறையையே பாலியல் புறம்போக்குகளாக ஆக்கிக்கொண்டு வரும் இந்த மாதிரி ஊடக விபசாரங்களை தடுப்பது யார்? அரசா? இல்லை மக்களா? உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேளாமல் இந்த மாதிரி நிகழ்சிகளை நாக்கை தொங்கப்போட்டு கொண்டு பார்க்கும் வக்கிர புத்திக்கு அடிமையாகி போன தமிழ் சாதிகளா? இந்த மாதிரி நிகழ்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி குறுக்கு வழியில் பணமும் புகழும் சேர்க்க துடிக்கும் தமிழ் சாதி தாய்மார்களா? சினிமா மோகத்தில் சிதைக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் திணறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புது புது வடிவங்களில் விபச்சாரத்தை புகுத்தும் ஊடக விபச்சாரிகள் வலையில் தமிழ் சாதிகள் விழுவது கொடுமை. இது பண்பாட்டு பிரச்சினை. இதைப்பற்றிய சொரணையே இல்லாமல் தெருவில் வெட்கமில்லாமல் நடமாடி......விபச்சாரம் தமிழர் பண்பாட்டின் பிரிக்க முடியாத கூறா?

    ReplyDelete
  9. பேஸ்புக்கில் Angel Fish அவர்கள் சொன்ன கருத்து

    சில வருஷங்கள் முன்பு விஜய் டிவியில் டான்ஸ் ஆடுபவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு எபிசொட் பார்க்க நேரிட்டது .அப்போ அந்த ப்ரோக்ராமில் ஆடவிருக்கும் தகப்பன் மனைவியோடு ஆட்டம் போட்டார் ..பிறகு தனது மகள் நாலு வயது இருக்கும் அப்பெண்ணுக்கு அவளை ஆட சொன்னார் ..அந்த பொண்ணு கொஞ்சம் ஆடினதும் இந்த எருமை தாய் தகப்பன் ரெண்டும் சேர்ந்து அந்த குட்டிபெண்ணிடம் ஹிப்சை ஆட்டு ஹிப்ஸ் ஷேக் என்றதுகள் ....நாங்கள் இந்த தமிழ் தொல்லைகாட்சிகளை பார்ப்பதில்லை ..உங்கள் வீடுகளில் தயவுசெய்து இப்படிப்பட்ட நிகழ்சிகளை தவிர்க்க முயலுங்கள் ..
    மழலை பருவம் அழகானது அதை தொலைப்பதென்பது இல்லையில்லை !!அதை தடுப்பது மகா பாவம் !
    நம் ஒவ்வொருவரின் கைதட்டல்களும் டி ஆர் பி ரேட்டிங்கும் அப்பிள்ளைகளை அழிவுக்குத்தான் கொண்டு செல்கிறது

    ReplyDelete
  10. பேஸ்புக்கில் விக்கியுலகம் வெங்கட் அவர்கள் சொன்ன கருத்து

    சொன்னா எவன் கேக்கறான்...

    ReplyDelete
  11. பகிர்ந்துட்டேன் தல...

    ReplyDelete
  12. நீங்கள் சொல்வது உண்மை தான்...இரு நாட்களுக்கு முன் விஜய் டி.வி -யின் சூப்பர் சிங்கரில், ஒரு சின்ன பொடியன்(எட்டு,பத்து வயது இருக்கும் ) , ம.கா.பா வை பார்த்து, "என் கூட பேசினா மரியாதை கேட்டிரும்... " என்று சொல்கிறான்... அதை பார்த்து, பெற்றோர்களும், மற்றவர்களும், கேக்கே ..பிக்கே என சிரிக்கிறார்கள்....

    இது போன்ற நிகழ்ச்சிகள் கலாச்சார கேவலத்தின் உச்சம்.....

    ReplyDelete
  13. நானும் பகிர்ந்துட்டேன்..

    ReplyDelete
  14. நானும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எல்லோரும் இதைப் பாராட்டி வேறு பார்க்கிறார்கள். என்னை மாதிரி ஒன்றிரண்டு பேர் வேறு மாதிரி பேசினால்,பைத்தியம் மாதிரி தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நிகழ்ச்சிதான் அதை பாராட்டலாம் ஆனால் அதை தவறனா முறையில் கொண்டு செல்லும் போது சத்தமாக சுட்டிக்காட்ட தவறக்கூடாது. அப்படி தட்டிக் கேட்கும் போது கேலி பண்ணுபவர்களை சட்டை பண்ணாதீர்கள்

      Delete
  15. நானும் பகிர்ந்து விட்டேன் கூகிள் ப்ளஸ்ஸில். எல்லோரும் பார்த்து கேட்டு ரசிக்கிறார்கள்.தற்போதையா ஆட்டத்தில் எதிர்காலத்தைக் கோட்டைவிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி நன்றி

      Delete
  16. ஏன்,சன் டீ.வீ யில் கூட 'சன் சிங்கர்' என்று ஒரு போட்டி நடத்துகிறார்களே?அதுவும் குழந்தைகளுக்கானது தானே?அதில் விரசமான பாடல்களை குழந்தைகள் பாடுவதில்லையா,என்ன?விஜய் டீ.வீ,ஜூனியர்,சீனியர் என்று இரண்டு.சன் டீ.வீ.ஒன்று தானே என்று கண்டு கொள்ள மாட்டார்/டீர் கள் போல?

    ReplyDelete
    Replies
    1. "இந்த விமர்சனம் விஜய்டிவி பற்றிய விமர்சனம்தான்' கட்டுரையாளர் இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார், என் மனைவி சூப்பர் சிங்கே நிகழ்ச்சியை பார்ப்பாள் அவள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இதே கருத்துதான் கொண்டு உள்ளாள் எனக்கும் இதே கருத்து உண்டு. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள் இதைப்பற்றி விஜய்டிவிக்கு மெயில் அனுப்புங்களேன் என்று நாம் எழுதி அவர்கள் கேட்கவாப போகிறார்கள் என்று நினைத்துவிட்டுவிட்டேன். ஆனால் அதைப் பற்றி எனது தளத்தில் விரிவாக எழுத நினைத்த நேரத்தில் இந்த கட்டுரையாளர் எழுதிய பதிவு என் கண்ணில் பட்டது அந்த கருத்துகள் என் கருத்துக்கு சற்று ஒற்றுப் போனதால் அவரின் அனுமதியுடன் இங்கே வெளியிட்டு இருக்கிறேன்


      சன் டிவி இதே தவறுகள் செய்தாலும் அவர்களுக்கும் இதே கண்டனம்தான் அதில் மாற்றமில்லை

      Delete
  17. சுப்ரஜா ஶ்ரீதர் சொல்வது முற்றும் சரியே, பின்னூட்டங்களும் அதை ஆதரிப்பதிலும் சரியே. நான் இதைப் பார்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  18. சன் டிவில ஒரு நிகழ்ச்சியில ஒரு தம்பதி குத்தாட்டம் போட்டு செம லோக்கல் பார்ட்டிங்க போல அசிங்கமான அங்க அசைவுகளோட ஆடிட்டு கடைசியில ‘நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சர்ஸ்’ன்னாங்க. இதுங்க கிட்ட படிக்கிற பசங்க இதுங்களை எப்படி மதிக்கும்..? அப்புறம் இந்த மாதிரி பாட்டுப் பாட வெக்கிற, வயசுக்குப் பொருந்தாம ஒரு கறுத்த தின்னவேலி அண்ணாச்சியை கலாய்க்கற குழந்தைங்க.... ச்சை..! இதப் பத்தில்லாம் எழுதி, பேசி சோர்ந்து போய் விட்டுட்டேன். (நான் டிவி நிகழ்ச்சிகளை எப்போதாவது அந்தப் பெட்டியைக் கடக்க நேரிடுகையில்தான் கவனிப்பவன் என்பதை இங்கே அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.) சுப்ரஜா ஸ்ரீதரன் அவர்கள் எழுதியதில் வரிக்கு வரி நான் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  19. This is just a good write up focussing only on the darker side; a kind of 'Half Empty' perspective. In fact the author had blown certain things out of proportions. It would have been better had the author threw light on the other side as well.

    ReplyDelete
    Replies
    1. காலில் காயம்பட்டால் காயம்பட்ட பகுதியைதான் கவனிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு மற்றப் பகுதி எல்லாம் அழகாக இருக்கிறது என்று நினைத்து விட்டுவிட முடியுமா என்ன? அதைத்தான் கட்டுரையாளர் இங்கு சொல்லுகிறார்

      Delete
    2. If this is analogous to a cut in the toe, I don't understand how the title 'Sexual Assault' consummate with the content?

      Delete
  20. சிறந்த எண்ணப்பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete
  21. இது திறமையை வெளிக்கொணரும் நல்ல நிகழ்ச்சிதான் சந்தேக மில்லை ஆனால் , முக்கல்,முனகல் பாடல்களை பாடவைப்பதும் ,அதை பெற்றோர்கள் அமர்ந்து அவர்களும் எழுந்து ஆடுவதும் , நடுவர்களும் சேர்ந்து உற்சாக குரல் எழுப்புவதும் ஆபாசம்தான் குழந்தைகள் மனதில் வக்கிரத்தை திணிப்பதுபோல்தான்
    உண்ருகிறோம், புகழுக்கும் ,பணத்திற்கும் ஆசைப்பட்டு பெற்றோர்கள் கலாச்சார சீரழிவுக்கு துணை போகிறார்கள் .இது ஆபத்தானது.---சரஸ்வதி ராசேந்திரன்

    ReplyDelete
  22. வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் குழந்தைகள் பாடும் பாடல்களைக் கேட்டு முகம் சுளிக்காமல் இருக்க முடியாது.மனோவின் கோமாளித்தனங்கள் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றன. அவர் மீது கொண்ட மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது, தொகுப்பாளர்களின் கெக்கே பிக்கே பேச்சுக்கள் சகிக்க முடியவில்லை.சுப்ரஜா ஸ்ரீதர் சொன்னதை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  23. I was very much angry when the kids were talking too much, that too with no respect. Then came to know from a very reliable source that the kids answer as per instructions from the anchors who think by such interactions between the anchors and the kids will make the program interesting. The replies from the kids are all taught by the anchors. The male anchor talk bad about the female and she does the same in return, all through the kids. Vijay TV happily telecast every nonsense,

    ReplyDelete
  24. அன்பரே உங்கள் கருத்து பல ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. தென் இந்தியாவின் சாப கேடு என்னவெனில் தென் இந்தியாவின் அரசியல் நிர்ணயம் சினிமா தான் என்கின்ற நிலை. நான் ஒரு பதிவில் படித்தேன் "வர வர நாட்டில் மழை குறைய காரணம் நடிகை நயன்தாரா சீதை க்கும் நடிகை ரோஜா அம்மனுக்கும் நடித்தது தான?" என்ற பதிவு.

    நன்றி
    கிருஷ்ணா - ஈழ நேசன்
    வட இலங்கை (ஈழத்தில் இருந்து)
    இலங்கை

    ReplyDelete
  25. நீங்கள் இதையெல்லாம் சொல்லுகிறீர்கள் .உங்கள் எண்ணத்தில் உள்ள விசாலம்
    மனதில் இல்லை .ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் .இந்த அருமையான கட்டுரையை
    வலைத்தளத்தில் போட முடியாதபடி protect பண்ணியிருக்கீங்க .
    நீங்கள் குன்றின் மீதுள்ள விளக்கல்ல,குடத்தில் இட்ட விளக்கு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.