Saturday, August 30, 2014







அதிமுகவிற்கு சரிநிகராக திகழ்ந்து இருந்த திமுக நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும் அதன் தோல்விக்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறது.ஊழல் வழக்குகளில் அதன் தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை போடப்படுகிறது. ஜாமீனும் வாங்கப்படுகிறது. எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எந்த கட்சியும் அதிக இடங்களை கேட்கும் அளவுக்கு அதன் நிலை படுமோசம்.





பாமக , தேமுதிக , திமுக , மதிமுக , பாஜ என எல்லோரும் சேர்ந்து வந்தால் கூட இப்போதைய அதிமுகவை அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு எல்லா எதிர் கட்சிகளும் உட்கட்சி பூசல்களாலும் , அரசியல் ரீதியாகவும் பலவீனப் பட்டுக் கிடக்கின்றன . கூட்டணி அமைத்து தமிழகத்தில் வெற்றி பெற்ற காலம் மலையேறி விட்டது .



சமிபத்தில் ஜெ.சொன்னதை கவனித்து பாருங்கள். தமிழகத்தில் அதிமுகவுக்கு என்று எதிரிகள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். உண்மைதானே. செப்டம்பர் இருபது தீர்ப்பில் ஜெ . நிரபராதி என தீர்ப்பு வந்தால்( வந்தால் என்ன என்பதைவிட அவர் நிராதிபதிதான் என்று வருவது நிச்சயம் ) நிச்சயம் அடுத்த சட்டசபை தேர்தலிலும் ஜெ தான் அமோக வெற்றி பெறுவார். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் திமுக அரசியல் துறவறம் போக வேண்டியது தான் .




நிலமை இப்படி இருக்க ஸ்டாலின் ஊர் ஊரக சுற்றி கட்சிப்பணி என்று கடந்த நாடாளுமன்றத் தோல்விக்கு காரண காரணங்களை அலசுவது போல, தமது கோஷ்டிக்கு ஆட் பலம் சேர்த்து வருகிறாரே, அப்போதே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கலாமே!




தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலில் என்னென்ன தில்லு முல்லுகள் நடந்தன; குறிப்பாக, தலைநகர் சென்னையில் மாநகராட்சி இடைத் தேர்தல் எப்படி நடத்தப்பட்டது - மாநில தேர்தல் கமிஷன் எப்படி தி.மு.க வுக்கு சாதகமாக வளைக்கப்பட்டது, என்பதெல்லாம் திமுகவிற்கு மறந்துவிட்டதா என்ன?.



உண்மையை சொன்னால் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு குறிப்பிடத்தக்க வெறுப்போ அல்லது பெரிய அளவில் குறைகளோ இல்லை. குறை என்று சொன்னால் டாஸ்மாக் ஒப்பனாகி இருப்பதைதான் சொல்லவேண்டும் அது தவிர வேறு எதையும் பெரிதாக சொல்ல முடியாது. இதுதான் தி.மு.க தலைமைக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது . அதன் விளைவே இந்த உள்ளாட்சி தேர்தலில் பின் வாங்கல் என்ற நாடகம். இது தி.மு.க வுக்கு எந்தவொரு வகையிலும் பலம் சேர்க்காது.




இந்த தேர்தலில் ஒதுங்கிவிட்டால் திமுக ஒரு லெட்டர் பேடு கட்சியாக மாறிவிடும் இப்போது திமுக விழித்து கொள்ளவில்லை என்றால் பாஜாக பலம் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்தாலும் ஆச்சிரியமில்லை. அதன் பின் கலைஞர் காங்கிரஸாகத்தான் மாறும்



கலைஞரே குடும்ப பிர்ச்சனைகளை தூக்கி ஏறிந்துவிட்டு தமிழர் பிரச்சனை மீது கவனம் செலுத்துங்கள் அல்லது அறிஞர் அண்ணா ஒரு காலத்தில் சொன்னது போல நம் கட்சியை யாராலும் அழிக்க முடியாது அப்படி ஒன்று நடக்குமே ஆனால் அது நம் கட்சிகாரகளால்தான் நடக்கும் என்று சொன்னது உண்மையாக் போய்விடும்




நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
மதுரைத்தமிழன்



30 Aug 2014

4 comments:

  1. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் - தலைப்பை சொன்னேன்

    ReplyDelete
  3. என் மனதில் தோன்றியது/பட்டது:இந்த நூற்றாண்டு உலகெங்குமுள்ள,எதிர்க்(?)கட்சிகளுக்கெல்லாம்,சோதனை தான்.வளர்ச்சியடைந்த+மூன்றாம் உலக நாடுகளிலெல்லாம் நிலை இது தான்./////தமிழகத்தைப் பொறுத்த வரை,ஸ்டாலின் கைக்கு தலைமைப் பதவி போனால்....................!ஆளுமையற்ற ஒரு தலைவர்.(?!)

    ReplyDelete
  4. அண்ணன் , தம்பிக்கு இடையே சுமூகமான தீர்வு வரும்வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும். இதில் என்ன கொடுமைன அது என்னவோ அவங்க பரம்பரை சொத்து மாதிரி பங்காளிச் சண்டை போட்டுக்கிறது தான்:)) சரியான ஒப்பீடு சகா:))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.