உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, November 29, 2012

தமிழகத்தில் 24 மணி நேரமும் பவர் கிடைக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம்


தமிழகத்தில் 24 மணி நேரமும் பவர் கிடைக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம்அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு மதுரைத்தமிழன் எழுதும்  கடிதம். நான் உங்களுக்கு பல முறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன் ஆனால் அத்தனை கடிதங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களின் பார்வைக்கு கொண்டு வராமல் மறைத்து விடுவதால் இந்த கடிதத்தை பொதுக் கடிதமாக எழுத நேரிட்டது.அம்மா அவர்களே தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனை பவர் பிரச்சனை. பவர் பிரச்சனை என்றால் திமுக-வில் கலைஞருக்கு அடுத்தாக யாரு பவருக்கு வரவேண்டும் என்ற பிரச்சனை என்பதல்ல. இது தமிழகத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிய பிரச்சனை. அதுதாங்க மின்சாரப் பிரச்சனை

இந்த பிரச்சனைக்காக எல்லோரும் உங்களை குறை கூறுகிறார்கள். அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும். அம்மாவாகிய நீங்கள் மின்சாரம் அதிகம் வைத்து கொண்டா வஞ்சனை செய்யப் போகிறீர்கள் இது எப்படி மக்களுக்கு புரியப் போகுதென்று தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் உங்களின் முக்கிய எதிரியும் தமிழகத்தின் இன்னொரு தலைவரும் மத்திய அரசாங்கத்தோடு சேர்ந்து மின்சாரம் அதிகம் தமிழகத்தீற்கு கிடைத்துவிடக் கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிறார்.


இப்படி பல பிரச்சனைகளில் நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள் இதற்கு காரணம் நீங்கள் பெண்ணாக பிறந்தது மட்டுமல்லாமல் பெண் முதல்வராக இருப்பதால்தான். நீங்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் பவர்கட்டினால் கஷ்டப்படுகிறார்கள் இந்த நிலமை நீடித்தால் மின்சாரசெல்லும் வயரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற நிலமை மாறிவிடும் அதுவும் நல்லதற்கல்ல.மேலும் இரவு நேரத்தில்  மின்சாரம் கிடைப்பதை தமிழக மக்கள் பார்க்க வேண்டுமானால் சிங்கப்பூர் துபாய் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வந்துதான் பார்க்கமுடியும் என்ற நிலமையும் ஏற்பட்டுவிடும் அதுவும் நல்லதற்கல்ல.

ஒரு பெண் முதல்வாரகிய நீங்கள் இப்படி கஷ்டப்படுவதை பார்த்து இந்த மதுரைத்தமிழனால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. அதனால் என்னிடம் இருந்த மூளையை மிகவும் கசக்கி பிழிந்து இராப்பகலாக யோசித்து ஒரு வழியை கண்டுபித்துள்ளேன். இந்த முறையை நீங்கள் உபயோகப்படுத்தினால் மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சார சப்ளை கிடைக்கும். மக்களுக்கு வேண்டியதெல்லாம் 24 மணி நேரம் மின்சாரம்தானே?

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தமிழகத்தை  7 பகுதிகளாக பிரித்து ஒரு நாளைக்கு ஒரு பகுதியில் மட்டும் 24 மணி நேரம் பவர் சப்ளை செய்யுங்கள் இப்படி செய்தால் 24 மணி நேரமும் பவர் கிடைக்கும்தானே....மக்கள் இப்போது கேட்பது  24 மணி நேரம் பவர் சப்ளைதான் ஆனால் 7 நாட்களுக்கும் வேண்டும் என்று இது வரை குரல்தரவில்லை அதனால் இந்த ஐடியாவை செயல்படுத்தி பாருங்கள்..

அப்ப நான் வரட்டுமா அம்மா......


டிஸ்கி : மக்களே இதை படித்துவிட்டு எனக்கு பாராட்டுவிழா எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் அதுபோல அவார்ட் எதுவும் கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டாம்.. நான் புகழுக்காக இதை செய்யவில்லைஅன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog