உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 29, 2016

இந்திய அரசாங்கத்திற்கு 144 தடை உத்தரவுஇந்திய அரசாங்கத்திற்கு 144 தடை உத்தரவு

ஹேய் இந்திய அரசாங்கமே! தமிழக அரசே! அரசியல் தலைவர்களே! நடிகர்களே கொள்ளையர்களே கொலைகாரர்களே  பேஸ்புக் போராளிகளே உங்களது செய்கைகளை நாளை முதல் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வையுங்கள் இது வேண்டுகோள் அல்ல இது உத்தரவு.

Tuesday, June 28, 2016

தமிழகத்தில் சீர் குலைந்தது எது? சட்ட ஒழுங்கா தனிமனித ஒழுக்கமா?தமிழகத்தில் சீர் குலைந்தது எது? சட்ட ஒழுங்கா தனிமனித ஒழுக்கமா?தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஸ்வாதி கொலையும் விஷ்ணு ப்ரியாதற்கொலையும் தமிழகத்தை உலுக்கி வருகின்றன.


ஸ்வாதி கொலை அரசியல் தலைவர்களுக்கும் மீடியாவிற்கும் சமுக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கும் கிடைத்த நொருக்கு செய்தியாகி இருக்கிறது. இந்த கொலைக்கு சாதி மத போன்ற பல காரணங்களை கற்பித்து பலரும் அசிங்கப்படுத்தி வருகின்றனர். யூகங்கள் பெயரில் என்னனென்னவோ மனசாட்சி இல்லாமல் எழுதியும் சொல்லியும் வருகின்றனர்.

Thursday, June 23, 2016

திருக்குறளால் தமிழனுக்கு பயன் ஏதும் உண்டா?திருக்குறளால் தமிழனுக்கு பயன் ஏதும் உண்டா?

திருவள்ளுவர் (Thiruvalluvar) இயற்றிய திருக்குறள் (Thirukkural) உலகப் புகழ் பெற்ற இலக்கியமாம். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாம். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறதாம்.

Sunday, June 19, 2016

விகடனின் மாணவப் பத்திரிகையாளர் எழுதிய மனதை நெகிழ வைத்த கட்டுரைவிகடனின் மாணவப் பத்திரிகையாளர் எழுதிய மனதை நெகிழ வைத்த கட்டுரை

இன்று இணைய விகடனில் வெளிவந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ந. ஆசிபா பாத்திமா பாவா என்ற மாணவப் பத்திரிகையாளர். மிக அழகாக ஒவ்வொரு ஆணின்(அப்பாக்களின்) மனதை கவரும் வண்ணம் எழுதி இருக்கிறார். இன்று தந்தையர் தினத்தில் சமுக வலைதளங்களில் பலரும் பல தகவல்களை சொல்லி தந்தையர் தினவாழ்த்தை சொல்லி இருந்த போதிலும் மிக எளிமையாக தெளிவாக எடுத்து சொல்லிய இந்த கட்டுரை என் மனம் கவர்ந்தது. எழுதியவருக்கும் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கும் எனது மனம் திறந்த பாராட்டுகள்.

பல பதிவுகளில் விகடன் தலையில் கொட்டி இருக்கிறேன். ஆனால் இன்று இந்த பதிவை படித்ததும் தட்டிக் கொடுக்க வேண்டும் தோன்றுவதால் அவர்களை பாராட்டி அந்த கட்டுரையை இங்கே வெளியிட்டு இருக்கிறேன்

Saturday, June 18, 2016

மோடி கல்லூரியில் படித்தற்கான ஆதாரங்கள் இதோமோடி கல்லூரியில் படித்தற்கான ஆதாரங்கள் இதோ


மோடி கல்லூரியில் படிக்காமலே பட்டம் பெற்று விட்டார் என ஆம் அத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதன் பின் காங்கிரஸும் மோடியுடன் டீ குடித்தவர்களோ அல்லது அவர்களுடன் பட்டம் படித்தவர்களோ அதை ஆதாரத்துடன் நிருபித்தால் அவர்களுக்கு 2 லட்சம் தருவதாக அறிவித்தனர்.

அந்த தொகையை கண்டதும் அதற்கான ஆதாரங்களை இணையத்தில் மதுரைத்தமிழன் தேடிய பொது கிடைத்த ஆதாரப் பூர்வ காட்சிகளை இங்கே வெளியிட்டு இருக்கிறேன் . இதை பார்த்த பின் காங்கிரஸ் தலைவர் தான் அறிவித்த 2 லட்சத்தை எனக்கு அனுப்பி வைப்பார் என நினைக்கிறேன்

Thursday, June 16, 2016

அமெரிக்காவை நல்லா புரிஞ்சுக்கோங்க மக்களேஅமெரிக்காவை நல்லா புரிஞ்சுக்கோங்க மக்களே


US Senate rejects Bill on special status for India, proposed after Modi-Obama talks 


அமெரிக்காகாரன் மோடிக்கு கைதட்டிய பின் இப்படியும் தட்டி இருக்கிறான்

Wednesday, June 15, 2016

மோடி என்ன செய்யப் போகிறார்?மோடி என்ன செய்யப் போகிறார்?
avargal unmaigal

மோடிக்கு ஜெயலலிதா வைத்த கோரிக்கைகளும் கண்டிஷனும்

Tuesday, June 14, 2016

ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?

ஜெயலலிதா டெல்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கோரிக்கை வைப்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் இன்னும் கருதி கொண்டு இருந்தால் அவர்களை போல அப்பாவிகள் யாருமே இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.
ஜெயலலிதாவிற்கு தமிழ் மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக்கை எப்போதோ மூடி இருப்பார். அப்படி செய்யதா ஜெயலலிதாவா டெல்லி போய் தமிழ் மக்கள் நலனுக்காக கோரிக்கை வைக்கப் போகிறார்.

Sunday, June 12, 2016

பேஸ்புக்கின் மூலம் தமிழனுக்கு நேர்ந்த கொடுமைபேஸ்புக்கின் மூலம் தமிழனுக்கு நேர்ந்த கொடுமை

இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நேர்ந்து இருக்காது என நினைக்கிறேன். ஆனால் பேஸ்புக்கில் நண்பர்கள் தந்த பதில்களால்தான் இந்த கொடுமை எனக்கு நேர்ந்தது... எனக்கு  ஏற்பட்ட இந்த நிலமை என் எதிரிகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது  என்றுதான் என் மனம் சொல்லுகிறது. அப்படி என்ன கொடுமை நேர்ந்தது என கேட்க தோன்றுகிறதா அப்ப இதை படிங்க அப்ப புரியும் எனக்கு நேர்ந்த கொடுமை என்னவென்று

அதிக மார்க் எடுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சிந்திக்கும் அறிவே இல்லையா?அதிக மார்க் எடுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சிந்திக்கும் அறிவே இல்லையா?


சமீபத்தில் வெளிவந்த ப்ளஸ்டூ தேர்வில் அதிக அளவில் மாணவ மாணவிகள் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்து இருக்கின்றனர். இதில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் விதமாக அதிக வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களும் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்து சாதித்து இருக்கின்றனர். இப்படி மாணவர்கள் அதிக அளவு மார்க் எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து இருக்கின்றனர். இப்படி பணி செய்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

Saturday, June 11, 2016

கனவுகள் இல்லாத வாழ்க்கை அர்த்தமில்லாத வாழ்க்கைகனவுகள் இல்லாத வாழ்க்கை அர்த்தமில்லாத வாழ்க்கை

அதனால்தான் எங்கள் வாழ்க்கை காதல் கனவுகளோட ஆரம்பித்தது இன்று வரை அர்த்தமுடன் சென்று கொண்டிருக்கிறது.


எதையும் ஆரம்பிக்கும் போது பயமாகவும் முடிக்கும் போது வருத்தமாகவும் இருக்கும் ஆனால் இதற்கு இடைப்பட்ட நாட்கள்  வாழ்க்கையின் மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள  நாட்களாக கடந்துவிடும். இந்த அர்த்தமுள்ள  சந்தோஷமான நாட்களில் இந்நாளும் ஒரு முக்கியமான நாள் ஆமாம் இன்றுதான் ( ஜுன் 10) என்னுடைய திருமணநாள். எங்களுடைய காதல் திருமணத்தில் இருவரும் இன்று வரை மதங்கள் மாறமால் அவரவர் மதத்திலே இருபது வருடங்களை கடந்து வந்துவிட்டோம்.

அரேஞ்ச்டு கல்யாணத்தில் மாலை மாற்றிக் கொண்டு இருவரும் கைகளை ஒன்றாக சேர்த்து கொண்டு வலம் வருவார்கள் ஆனால் எங்களை போல காதல் திருமணம் செய்தவர்களோ இதயங்களை ஒன்று இணைத்து கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Thursday, June 9, 2016

மோடிக்கு முன் அமெரிக்க காங்கிரஸ் சபையில் பேசி கைதட்டு வாங்கிய 5 இந்திய பிரதமர்கள்avargal unmaigal

மோடிக்கு முன் அமெரிக்க காங்கிரஸ் சபையில் பேசி கைதட்டு வாங்கிய 5 இந்திய பிரதமர்கள்


கடந்த சில தினங்களாக மோடி அமெரிக்க காங்கிரஸில் பேசியதை இந்திய மீடியாக்கள் மிக அதிக அளவு பேசிவருகின்றன.  மோடி என்னமோ செய்யாத சாதனையை செய்துவிட்டது போல அலப்பரைகள் சமுக வலைத்தளம்முதல் கொண்டு இந்திய மீடியாக்கள் வரை பரபரப்பு செய்திகள் பரப்பிவருகின்றன.

எல்லோரும் ஜோரா கைதட்டுங்கஎல்லோரும் ஜோரா கைதட்டுங்க


சின்ன புள்ளையாக இருக்கும் போது  மதுரையில் ரோட்டுல வித்தை காட்டுவாங்க அதை பார்த்து கை தட்டுவேன் அது போல இன்று அமெரிக்காவுலேயும் வித்தை காட்டி இருக்கிறாங்க எல்லோரும் ஜோரா கைதட்டுனாங்க பார்த்து ரசித்தேன்

பரிணாம வளர்ச்சி


அன்புடன்
மதுரைத்தமிழன்#modi

Tuesday, June 7, 2016

சர்க்கரைநோய்க்கு இந்தியாவில் புதிய ஆயுர்வேத மருந்து அறிமுகம் (அரசாங்கத்தால் அங்ககரீக்கப்பட்டது)சர்க்கரைநோய்க்கு இந்தியாவில் புதிய ஆயுர்வேத மருந்து அறிமுகம் (அரசாங்கத்தால் அங்ககரீக்கப்பட்டது)


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்தொன்று மாத்திரை வடிவில் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.), National Botanical Research Institute (NBRI)  மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) Central Institute for Medicinal and Aromatic Plants (CIMAP)இணைந்து தயாரித்துள்ளன.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog