Tuesday, June 7, 2016



சர்க்கரைநோய்க்கு இந்தியாவில் புதிய ஆயுர்வேத மருந்து அறிமுகம் (அரசாங்கத்தால் அங்ககரீக்கப்பட்டது)


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்தொன்று மாத்திரை வடிவில் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.), National Botanical Research Institute (NBRI)  மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) Central Institute for Medicinal and Aromatic Plants (CIMAP)இணைந்து தயாரித்துள்ளன.



டாக்டர் சஞ்சீவ் குமார்  Sanjeev Kumar Ojha, Senior Scientist, CSIR- NBRI, Lucknow, டாக்டர் தயானந்தன் மணி Dayanandan Mani, Senior Scientist, CSIR- CIMAP, Lucknow, டாக்டர் மேதா குல்கர்னி  Medha Kulkarni, Vice Principal, D Y Patil Ayurvedic College and Research Centre, Pune and S P Srivastav, Director, AIMIL Pharmaceuticals (India) Ltd  அவர்கள் முன்னிலையில் இந்த மருந்து அறிமுகபபடுத்தப்பட்டுள்ளது.

இவர்கள்  செய்தியாளர்களிடம்  கூறியது  இந்தியர்களில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. இருப்பினும், நோய்க்கு சரியான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.எனவே, 500 மூலிகைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதன்பின். இதையடுத்து, தருஹரித்தா, மஜீத், மெதிகா உள்ளிட்ட ஆறு மூலிகைகள் அடையாளம் காணப்பட்டு, அந்த மூலிகைகளில் சரியான விகிதங்களில் கலந்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பிஜிஆர்.-34 எனும் மாத்திரைகள் லக்னோவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆரின் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்பட்டன.


 இந்த மாத்திரை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, இதர மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கிறது. மேலும், கணையத்தில் இன்சுலினைச் சுரக்க வைக்கிறது. ஏ.ஐ.எம்.ஐ.எல். என்ற நிறுவனத்திடம் மருந்தை தயாரித்து சந்தைப்படுத்தும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது பஞ்சாப் சண்டிகார் மற்றும் இதற்கு அருகில்  உள்ள அனைத்து முக்கிய மருந்துக் கடைகளிலும் ரூ.5 எனும் விலைக்கு ஒரு மாத்திரை கிடைக்கும் என்றனர்.


இது இப்போது ஆன்லைனிலும் கிடைக்கின்றது https://bgr-34.life/  இந்த மருந்தை பற்றிய எல்லா விபரங்களும் இங்கே கிடைக்கிறது. இதி இந்திய அரசாங்கத்தால் அங்ககரீக்கப்பட்ட ஒரு மருந்தாகும்




இதை உங்கள் டாக்டரிடம் சொல்லி வாங்கி சாப்பிட்டு பாருங்கள்....Note : This product is sold to you on the premise that you have received advice from a doctor and that you are not self-medicating.

இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால் மற்றவர்களுக்கும் நீங்கள் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
பலருக்கும் பயன்படும் என்பதால் படித்ததை பதிவாக வெளியிடுகிறேன்
#Ayurvedic  Anti-Diabetic Medicine 

10 comments:

  1. I fully endorse food as medicine...
    But here there were no human clinical trials conducted. Though reducing the blood sugar is highly desirable...but the ultimate goal is to push the glucose into cell for energy. (it is similar to having petrol in car but NOT mixed with air and sent for combustion to engine; reducing the petrol level would not help; you need to burn the petrol optimally)

    In this medicine, how this goal is achieved, and details of the same should be published in peer reviewed scientific journals.

    BTW, allopathic doctors are NOT against nature; முக்கால்வாசி, தோராயமா 70 விழுக்காடு மருந்துகள் இயற்கையில் இருந்து தான் கிடைக்கிறது. Should be sold only after human clinical trials as in allopathic medicine. If this is sold without the human clinical trails...the action by our government is highly irresponsible.

    அது சரி, மாட்டு மூத்திரம் கூட எல்லாவித நோய்களையும் குணப்படுத்துது என்று ஆயர்வேத மருந்தா விற்கும் போது எண்ணத்தை சொல்வது. டாக்டர் அன்புமணி மத்திய சுகாதரா மந்திரியா இருக்கும் போது..ஏன் மாட்டு மூத்திரத்தை தடை செய்யவில்லை என்ற கேள்வி என்னுள் உண்டு!

    கீழே...படியுங்கள் ஒரு சாம்பிள்.

    http://www.diabetesneed.com/bgr-34-gets-mix-review-results-feedback-of-customer/

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு நன்றி

    ReplyDelete
  3. எந்த அளவு வேலை செய்து,வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  4. Please enable people to read the following site with consumers' feed backs...

    http://www.diabetesneed.com/bgr-34-gets-mix-review-results-feedback-of-customer/

    Again, I fully endorse the Hippocrates' concept..."Let food be thy medicine and medicine be thy food."

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி... முதல்ல படிக்கும்போது தவறாகப் புரிந்துகொண்டேன். சாப்பாட்டை மருந்து மாதிரிக் குறைவாகச் சாப்பிடவும். மருந்தை சாப்பாடு மாதிரி அதிகமாகச் சாப்பிடவும் என்று. எங்களை மாதிரி தமிழன்'களுக்குக் கொஞ்சம் தமிழ்ப்படுத்திப் போடலாமே... (take this in lightervein)

      Delete
    2. I fully endorse food as medicine என்று சொன்னதை இப்படி அர்த்தம் எடுதுக்கொண்டீர்களா? அதாவது, உணவே மருந்து என்று இதன் அர்த்தம்!
      உணவே மருந்து; உணவே விஷம் என்றும் இதை சொல்லலாம்.

      எது எப்படியோ...நான் சொல்ல வந்த கருத்து திசை மாறுகிறது. எது முக்கியமோ அதை தமிழில் தான் எழுதியுள்ளேன்....

      The crux of the issue is our government is selling a drug that it "SHOULD NOT" sell without human clinical trials; அதைப் பற்றி சொல்லுங்கள்...

      இல்லை...மாட்டு மூத்திரத்தை சகல நோய் நிவாரணியாக விற்கும் அரசை எதிர்த்தும், அதை நம்பி சாப்பிடும் சூத்திர மக்கள் அவலம் பற்றியும் சொல்லலாமே!

      மாட்டு மூத்திரம் குடித்தால் சர்க்கரை வியாதி போய்விடும் என்று சொல்லி விற்கிறார்கள். அதனால், இதை விற்றால் என்ன? சாப்பிடப் போவது ஏழை மக்கள் தானே!

      Delete
  5. பலருக்குப் பயனுள்ள, தேவையான பதிவு. நன்றி. இளம் வயதினர்கூட இப்போது இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    ReplyDelete
  6. நன்றி மதுரைத் தமிழா தங்களின் இந்தப் பதிவிற்கு. இது உபயோகித்துப் பார்த்தால் தான் அதுவும் அளவு எல்லாம் தெரிந்தால்தான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. மட்டுமல்ல இப்போது எடுத்துக் கொள்ளும் மாத்திரையுடன் எடுத்துக் கொள்ளலாமா என்றும் நாம் அறிவுரை பெறும் அலோபதி மருத்துவர் இதனை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பாரா என்றும் தெரியவில்லை. பார்ப்போம் என்றாலும் இந்த மருந்து வெற்றிபெற்றால் நல்லதே.

    கீதா: மேற்சொன்ன கருத்துடன், எனது பின்னூட்டம் பெரிதாவதால் பதிவாக இடுகின்றேன் தமிழா. ஏனென்றால் இது பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால். நான் மருத்துவர் அல்ல நிபுணர் அல்லதான் என்றாலும் அனுபவத்திலிருந்து எழுதுவது...பதிவாய்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.