மோடி என்ன செய்யப் போகிறார்?
மோடிக்கு ஜெயலலிதா வைத்த
கோரிக்கைகளும் கண்டிஷனும்
மோடி அவர்களே கிழே கண்ட
29 அம்ச கோரிக்கைகளை ஏற்று உங்களை தோற்கடித்தவர்களான தமிழக மக்களின் நலனை காக்கப் போகிறீர்களா
அல்லது உங்களுக்கு மறைமுக சப்போர்ட் தரும் எனது மறைமுக கோரிக்கையாகிய சொத்து குவிப்பு
வழக்கில் மட்டும் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க எனக்கு உதவுப் போகிறீர்களா?
எனக்கு உதவி செய்தால் உங்களுக்கும்,
நீதீபதிகளுக்கு நான் கோடிக் கணக்கில் நிதி வழங்குவேன் என்பதை உறுதி படுத்துகிறேன் இல்லையென்றால்
தமிழகத்திற்கு நீங்கள் மத்திய அரசின் சிறப்பு
நிதியை கொடுப்பது மட்டுமல்லாமல் கீழ்க் கண்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்
டில்லி சென்ற தமிழக முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி தமிழக நலன் அடங்கிய
29 அம்சங்கள் கொண்ட 96 பக்க கோரிக்கையை வைத்தார்.
அந்த மனுவில்,
*காவிரி மேலாண்மை வாரியம்,
காவிரி நதிநீர் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும்.
*மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை
தடுக்க வேண்டும்.
*பொது நுழைவுத்தேர்விலிருந்து
தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.
*தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும்.
*ஜல்லிக்கட்டு மீதான தடையை
நீக்க வேண்டும்.
*ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு
மொழியாக்க வேண்டும்.
*சென்னை மெட்ரோ ரயில் பணிகளை
விரைந்து முடிக்க வேண்டும்.
*மெட்ரோ ரயில் திட்டத்திற்கு
தேவையான நிதியை வழங்க வேண்டும்.
*பறக்கும் ரயில் மெட்ரோ ரயில்
இணைக்க வேண்டும்.
*தமிழக அரசு பரிந்துரைத்த
இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதிக்க வேண்டும்.
*தமிழக அரசு கேபிள் டிவிக்கு
டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்.
*முல்லைப்பெரியாறில் 152
அடி நீர் தேக்க அனுமதிக்க வேண்டும்.
*சரக்கு மற்றும் சேவை வரி
மசசோதா மீதான அதிமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அதிமுக முன்வைத்த திருத்தங்களை
மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
*பெட்ரோலிய பொருட்களுக்கு
ஜிஎஸ்டி மசோதாவிலிருந்து விலக்க அளிக்க வேண்டும்.
*இலங்கை வசமுள்ள கச்சத்தீவை
மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கச்சத்தீவில் உள்ள அந்தோணியார்
கோவிலை புதுப்பிக்க வேண்டும்.
*இலங்கை பிடியில் உள்ள
21 மீனவர்கள் 92 படகுகளை மீட்க வேண்டும்.
* இலங்கை கடற்படையால் மீனவர்கள்
தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
* மீனவர்களை பழங்குடியினர்
பட்டியலில் சேர்க்க வேண்டும்.
*உணவு தானியங்கள் வழங்குவதை
குறைக்க்கூடாது.
*தமிழகத்தில் ஓடும் நதிகளைஇணைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*நதிநீர் இணைப்பை நடைமுறைப்படுத்த
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தமிழகத்திற்கான மண்ணெண்ணையை
குறைக்கக்கூடாது.
* கூடங்குளம் 2வது அலகில்
மின் உற்பத்தியை துவக்க வேண்டும்.
*13வது நிதிக்குழுவில், மத்திய
அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பிரதமர் மோடியால் ஜெய லலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து பெய்ல் அவுட் செய்ய முடியுமா. நீதித்துறை மோடியின் பேச்சைக் கேட்குமா
ReplyDelete29 கோரிக்கையா ஒரே கோரிக்கையா பொறுத்திருந்து பார்ப்போம்!
ReplyDeleteநமக்கு பயமே வேணாம் சார் தலைக்கு ஒரு புது நாட்ட காமிச்சா போதும் !!! எல்லாத்தையும் மறந்துரும் !!! குழந்த சார் அது குழந்த அதப்போயி ???
ReplyDelete