மோடிக்கு முன் அமெரிக்க காங்கிரஸ்
சபையில் பேசி கைதட்டு வாங்கிய 5 இந்திய பிரதமர்கள்
கடந்த சில தினங்களாக மோடி
அமெரிக்க காங்கிரஸில் பேசியதை இந்திய மீடியாக்கள் மிக அதிக அளவு பேசிவருகின்றன. மோடி என்னமோ செய்யாத சாதனையை செய்துவிட்டது போல
அலப்பரைகள் சமுக வலைத்தளம்முதல் கொண்டு இந்திய மீடியாக்கள் வரை பரபரப்பு செய்திகள்
பரப்பிவருகின்றன.
மோடி சபையில் நுழைந்ததில்
இருந்து பேசி முடிக்கும் வரை அங்குள்ளவர் எழுந்து நின்று கை தட்டியதை மோடியின் சாதனைகளாக
பேசியும் வருகின்றனர்.
இங்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்
இங்கு எந்த வித கூட்டம் நடந்தாலும் இது போன்று எல்லோருக்கும் கைதட்டி எழுந்து இருந்து
மரியாதை கொடுக்கும் வழக்கம் அமெரிக்காவில் உண்டு என் குழந்தை படிக்கும் பள்ளி கூடத்தில்
கூட என் குழந்தை பேசினால் கூட இது மாதிரிதான் செய்வது வழக்கம். இப்படி நடப்பது அமெரிக்காவில்
உள்ளவர்களுக்கு அதிசயம் அல்ல ஆனால் இந்தியர்களுக்கு இது மிக பெரிய சாதனையாக இருக்கிறது
அதிலும் மோடியின் அடிவருடிகளுக்கு..
இப்படி பேசி கைதட்டு வாங்கியது
மோடி மட்டுமல்ல இப்படி முதன் முதலில் கைதட்டு வாங்கியது பாரதப் பிரதமர் நேருதான் 9
October 13, 1949 )அதன் பிறகு ராஜிவ் காந்தி 1985, நரசிம்மராவ் 1994 வாஜ்பாய் 2000
மன்மோகன் சிங் 2005
அதன் பின் தான் விளம்பர பிரியர்
அலப்பறை மோடி .
நான் சொன்னதற்கான ஆதாரப்
பூர்வ வீடியோக்கள் இங்கே கிழே இணைக்கப்பட்டுள்ளது
Prime Minister Jawaharlal Nehru address United States Congress -
October 13, 1949
Rajiv Gandhi in 1985, Rajiv
Gandhi addresses US Senate House 1985
P.V. Narasimha Rao in 1994
Atal Bihari Vajpayee, Prime
Minister of India, addresses U.S.
Congress 2000
Prime Minister Dr. Manmohan Singh addresses the US congress 2005
Narendra Modi Addresses US Congress 2016
இப்பவாது நம்புங்கப்பா.....மோடி
ஒரு மிகப் சிறந்த நடிகன் என்று
அன்புடன்
மதுரைத்தமிழன்
நடிகன் நடிகை கதை ஆசிரியர்களுக்கு ஆளுமை அதிகம். அம்மா ,அம்மாவின் தலைவர் ,
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி
Deleteமோடியின் பேச்சு காணொளி திறக்கவில்லை எட்டுமுறை ஸ்டாண்டிங் ஒவேஷன்ஸ் 64 முறை கைதட்டல்கள் என்று அர்நாப் கோசாமிகணக்கிட்டிருக்கிறார் ஆங்கிலப் புலமை மோடிக்கு இல்லாவிட்டாலும் அவர் ஆங்கிலத்தில் எக்ஸ்டெம்போராகப் பேசியதும் டைம்ஸ் நௌவில் சிலாகிக்கப் பட்டது. மீடியாக்களின் அலப்பறை காதின் ஜவ்வைக் கிழிக்கிறது
ReplyDelete
Deleteஇன்னொரு வீடியோ க்ளிப்பை இணைத்துள்ளேன் பார்க்கவும்
ஜால்ராக்கள்! என்ன செய்வது?
ReplyDeleteஅர்னப் கோசாமி பெரிய BJP. ஜால்ரா அவன் தொல்லை தாங்கமுடியலை இங்கே டிவியிலே. அய்யா மதுரை அந்தாளை புடுச்சு இந்தியாவுக்கு ஏத்தி விடுங்கையா ! மனுஷன் ஊர் ஊரா சுத்திக்கிட்டு இந்தியாவிலேயே தங்கமாட்டின்கிறார் புத்திமதி எடுத்து சொல்லியானுப்புக்கையா புண்ணியமா போகுது !!!!
ReplyDeleteM. செய்யது
Dubai
இதுக்கு தாம்யா நம்மாளு ஒருத்தன் வேணுங்கறது.
ReplyDelete
ReplyDeleteசெக் பண்ணிட்டேன்.
கம்பேர் பண்ணிட்டேன்.
-----------------
மன்மோஹன் சிங் க்கு, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழையும்போது, முடிக்கும் போது, மொத்தம் இரண்டுதரம் நின்று கைதட்டினர். இது அடிப்படை நாகரீகத்தின் பேரில் நிகழ்ந்த விஷயம்.
தவிர ஒரு 29 தடவை கைதட்டினர்,... அதில் பத்து தடவைக்கு மேல் குறைந்த அளவினரே.! மேலும், MMS நிற்காமல் பேசிக் கொண்டே போன போது முதல் இரண்டாம் கைதட்டல்களே போனால் போகிறது, என்று கைதட்டியது போன்றிருந்தது!
மொத்தத்தில்,... வயதானவர், படித்தவர், மரியாதைக்குரிய பதவிகள் வகித்தவர் என்பதால் பெற்ற கைதட்டல்களே அதிகம் என்பது வெளிப்படை.
தவிர, வகுப்பறையில் ஆசிரியர் முன், தன் முயற்சியை ஒரு கட்டுரையாக எழுதி, ஒப்பித்துக் காட்டி, ஆசிரியரின் பாராட்டைப் பெற முயலும் ஒரு இந்தியத்தனமான தாழ்வு மனப்பான்மையுடன், வந்த மாணவனின் முயற்சியாகவே MMS பேச்சு இருந்தது!
---------
மாறாக,...
இரண்டு வருடம் முன்புவரைகூட,.. (ஏன் இப்பொழுதும் கூட முடிந்தால்,...) மோடியை ஒரு திட்டமிட்ட campaign அடிப்படையில் வெறுத்து,... ஒதுக்கி ஓரம் கட்டி அசிங்கப்பட வைக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள் கூடிய சபையில்,
ஒரு பலம் வாய்ந்த நாட்டின் ஏகோபித்த பிரதமராக, மோடி வெளிப்படுத்திய சஞ்சலமில்லாத, ஆளுமை மிக்க, ஆனால் ஒப்புக் கொண்டே தீரவேண்டிய தொலை நோக்குக் கருத்துக்களுக்காக மட்டுமே,
தங்களை மறந்து, அசந்துபோய் எழுந்து நின்று (அவர்கள் செலுத்தும் உச்ச மரியாதை அது!) கை தட்டி ஆர்ப்பரித்து, தங்கள் பிரமிப்பையும், மரியாதையையும் மோடி அவர்களுக்கு காண்பித்தது,
நிஜம்.
-----------------
தற்போது, மோடிக்கு கிடைத்தது போல் அல்லாமல்,...
மன்மோஹனுக்கு அன்று கிடைத்தது,
பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த மரியாதை மட்டுமே !
மோடியத் திட்டி நல்ல பேர் வாங்க பலபேர் அலையுறாங்க. உண்மை எப்படியும் வெளியவரும். ஆதாரம் பக்கா காமெடியா இருக்கு. மேல கமெண்ட்ஸ் போட்டவங்க எல்லாம் எதுக்கும் திரும்ப ஒருமுறை ஆதாரங்கள பாருங்க!
Deleteபூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டாகாது.
மோடி நடிக்கவில்லை!! மோடியைக் கெட்டவராக்க பலர் கங்கணம் கட்டிக்கொண்டு நடிக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது
உலக ஆளுமைக்கு, பேச்சுத் திறன் இல்லாவிட்டாலும், அவர்களின் எண்ணத்தின் தரம் கருதி, அவர்களின் உயர்ந்த ஆன்மா கருதி, எந்தச் சபையிலும் தானாகவே மரியாதை தருவார்கள்.
ReplyDeleteபாராளுமன்றப் பேச்சுக்கு (அமெரிக்க) கிடைக்கும் கைதட்டல்கள் எல்லாம் உற்சாகப்படுத்தத்தான். அதை மிகப் பெரிய வெற்றி அல்லது தன்னை மிகவும் மதித்துவிட்டார்கள் என்று யாரும் எண்ணமாட்டார்கள். மோடியைப் புறக்கணித்த அமெரிக்கா, இப்போது வியாபார நிதர்சனத்தில், அவருடனான உறவை, அவர் இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் பேணுகிறது. அதற்குமேல் இதில் விஷயம் ஒன்றும் இல்லை. நேரு ஒரு சமாதானப் புறா. வாஜ்பாய் ஒரு நல்ல பேச்சாளர். மற்றவர்களின் திறமை நிரூபிக்கப்படவில்லை. இதுதான் 'நடுனிலையான விமர்சனம்.