Sunday, June 12, 2016



அதிக மார்க் எடுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சிந்திக்கும் அறிவே இல்லையா?


சமீபத்தில் வெளிவந்த ப்ளஸ்டூ தேர்வில் அதிக அளவில் மாணவ மாணவிகள் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்து இருக்கின்றனர். இதில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் விதமாக அதிக வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களும் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்து சாதித்து இருக்கின்றனர். இப்படி மாணவர்கள் அதிக அளவு மார்க் எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து இருக்கின்றனர். இப்படி பணி செய்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்



இப்படி மாநில மாவட்ட அளவில் அதிக மார்க் எடுத்த குழந்தைகளிடம் பத்திரிக்கையாளர்களும் டிவி நிருபர்களும் மறக்காமல் இரண்டு கேள்விகள் கேட்கின்றனர் அதில் ஒன்று நீங்கள் இந்த அளவு மார்க் எடுக்க என்ன செய்தீர்கள் என்பதுதான். இதற்கு மாணவர்களின் டெம்ளேட் பதில் எங்கள் ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தினர் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஒத்துழைப்பினால் நாங்கள் இப்படி சாதித்தோம் என்பதுதான் இப்படி சொல்லும் போது தாங்கள் எப்படி கடுமையாக படித்து வெற்றி பெற்றதை சொல்லவே மாட்டார்கள்.


அடுத்ததாக இவர்களிடம் வைக்கப்படும் கேள்வி  உங்களின் ஆசை என்ன ? என்ன படிக்கவிரும்புகிறீர்கள் என்று கேட்டால் உடனே நான் டாக்டராக ஆக விரும்புகிறேன் அல்லது ஐஏஎஸ் ஆபிஸராக ஆகி மக்களுக்கு சேவை செய்யப் போகின்றேன் என்று சொல்வதாகத்தான் இருக்கும் .இதை தவிர அவர்கள் வாயில் வேறு ஏதும் வராது அல்லது சிந்திக்க தெரியாது. இப்படி அவர்கள் சொல்லக் காரணம் அவர்கள் படிக்கும் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை அதிக மார்க் எடுக்கவே வழிவகைகளை சொல்லிதருகிறார்களே தவிர சிந்திக்க வழி வகைகளை சொல்லி தருவதில்லை. அதனால்தான் சொல்லி வைத்தார் போல அதிகமார்க எடுத்த மாணவர்களும் வாந்தி எடுப்பது போல நான் டாக்டராக அல்லது ஐஏஎஸ் ஆபிஸராக ஆசை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

சிறு சாம்பிள்

இப்படி சொல்லும் பலரிடம்  இந்த படிப்பு படிக்க உங்களிடம் பண வசதி இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்றுதான் இருக்கும்  அது போல இந்த படிப்பை எதற்காக படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் படித்து முடித்துவிட்டு கஷ்டப்படும் என் குடும்பத்திற்கு உதவுவதற்காகவும் அல்லது பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் தாங்கள் படிக்க விரும்புவதாக சொல்லுகிறார்கள்


இப்படி பலரிடம் இருந்து பண உதவி பெற்று டாக்டருக்கு படிக்க விரும்புவர்களிடம் ஒரு கேள்வி? டாக்டருக்கு அல்லது ஐஏஎஸ் ஆபிஸருக்கு படித்தால் மட்டும்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா அல்லது உங்கள் பெற்றோர்களுக்கு உதவமுடியுமா என்ன?டாக்டருக்கு படித்துவிட்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா என்ன? அல்லது சேவைதான் செய்துவிட முடியுமா என்ன? டாக்டருக்கு படித்துவிட்டு வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?


மிகப் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து டாக்டர்களுக்கு படித்தவர்கள்மட்டுமே அந்த தொழிலில் சாதிக்க முடியும் மற்றவர்கள் எல்லாம் அவர்களை போல உள்ளவர்களிடம் அடிமையாகத்தான் டாக்டர்களாக வேலை பார்க்க முடியும். அப்படி இல்லாமல் ஒருவர் சாதிக்க முடியும் என்றால் அவர் தன் வாழ்க்கையில் முக்கால் பகுதியை செலவிட்ட பின்தான் சாதிக்க முடியும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை

ஒரு டாக்டர் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானால் அவருக்கு  சேவைமனப்பான்மை இருக்க கூடாது என்பதுதான் உண்மை. கஷ்டப்பட்ட குடும்பத்தில்   இருந்து படித்து வந்த டாக்டர்கள் ஏதாவது மருத்துவ மனையில்தான் வேலை செய்ய வேண்டும் அவர்களால் சொந்த க்ளினிக்குகள் வைத்து நடத்த முடியாது அதனால் அவர்கள் இப்படிபட்ட மருத்துவ மனைகளில் வேலை செய்யும் போது அவ்ரகளுக்கென அந்த மருத்துவ நிர்வாகத்துறையினர் வைக்கும் டார்கெட்டை செய்து முடிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியும் அதிக வருமானத்தையும் பெற முடியும் அப்படி இல்லாமல் நீங்கள் சேவை செய்ய நினைத்தால் அங்கு இருந்து நீங்கள் தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பதுதான் இன்று நடக்கும் நிதர்சனம்


சரி நீங்கள் டாக்டருக்கு படித்துவிட்டால் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் மருத்துவம் பார்த்துவிட முடியுமா என்றால் அதுவும் முடியாதுதான்.... என்ன சின்ன சின்ன காய்சல் மற்றும் உடல் உபாதைகளுக்கு மட்டும் உங்களால் மருத்துவம் பார்க்க இயலும் ஆனால் அவர்களுக்கு பெரிய அளவில் உபாதைகள் ஏற்படும்போது அவர்களை மருத்துவ மனைகளுக்குதான் எடுத்து செல்ல வேண்டும் அங்கு நீங்கள் மருத்துவர் என்பதால் இலவசமாக யாரும் மருத்துவம் பார்த்துவிடமாட்டார்கள் அங்கு நீங்களும் பணத்தைதான் அள்ளிக் கொட்டிக் கொடுக்க வேண்டி இருக்கும் அப்படி அள்ளி கொட்டிக் கொடுப்பதற்கு நீங்கள் சேவைசெய்து கொண்டிருந்தால் ஒன்றும் பண்ண முடியாது

டாக்டராக ஒருவன் படித்து முடித்துவிட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியதிற்கும் அதே நேரத்தில் நிர்வாக துறை ஐடி துறை மற்றும் வியாபார துறையில் படித்துவிட்டு சாம்பாதிக்கும் சாம்பாத்தியத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் போலத்தான் இருக்கிறது

இது போலத்தான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆவதும் .

அதனால் மாணவர்களே பெற்றோர்ளே கொஞ்சம் நீங்கள் சிந்தித்து வேறு மாற்று படிப்புகளை அதிக செலவில்லாமல் எடுத்து படித்து அதில் சாதித்து அதன் மூலம் அதிக அளவு சம்பாத்தித்து அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு உங்கள் குடும்பத்திற்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யலாமே...

நீங்கள் வேறு துறையில் சாதித்து சம்பாதித்து அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து சிறு சிறு மருத்துவமனைகள் அல்லது கல்விகூடங்கள் நடத்தி அதன் மூலம் உங்கள் சேவை ஆசையை நிறைவேற்றலாமே அதைவிட்டு விட்டு டாக்டராக ஆசை ஐஏஎஸ் ஆபிஸராக ஆசை என்று சிந்திக்காமல் உளரவேண்டாமே


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஆசிரியர்களே பெற்றோர்களே அதிக மார்க் எடுக்க சொல்லிதருவதுதான் கல்வி அல்ல நன்றாக சிந்திக்க கற்று கொடுப்பதுதான் கல்வி அதை நீங்கள் சிந்தித்து மாணவர்களுக்கு போதியுங்கள்

7 comments:

  1. சரியாதான் சொல்லி இருக்கீங்க.. ஆனா அவங்களுக்கு புரியணுமே...

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  3. "டாக்டராக ஒருவன் படிப்பை முடித்துவிட்டுச் சம்பாதிப்பதற்கும்.... மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்" - இது புரியவில்லை. டாக்டர்கள் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? டாக்டர்களைத் தவிர மற்றவர்களுக்கு 58-60 டாண்னு ஓய்வு. அப்புறம் சம்பாதிக்கணும்னா, சில அபூர்வப் பிறவிகளைப்போல, ஆட்சியாளர்கள் பணி நீட்டிப்பு கொடுக்கணும்.. இல்லைனா கவர்னராக போஸ்டிங்க் கொடுக்கணும். டாக்டர்கள் மட்டும்தான் கடைசி வரை, மக்கள் சேவை (அல்லது தொழில்) செய்யமுடியும். எங்கு பிரயாணம் சென்றாலும் அவர்களுக்கு ஒரு மதிப்பு உண்டு (அவசரகாலத்தில் அவர் உதவ முடியும் என்ற எண்ணத்தினால். இதனால், விமானம், ரயில், பஸ் பயணத்தில் டாக்டர் என்பதைக் குறித்துக்கொள்வார்கள்).

    குழந்தைகள் சொல்வதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொண்டுவிட்டீர்களே.. அது ரொம்பவும் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த வயதல்லவே (குறைந்தபட்சம் இந்தியாவில்). சேவை செய்வதற்கு மனதும், முனைப்பும்தான் தேவை. பணம் முக்கியம் கிடையாது. சேவை செய்பவர்களுக்குத் தானாகவே பணம் சேரும். ஏகப்பட்டபேர் (பணம் சம்பாதிப்பவர்கள், வைத்திருப்பவர்கள்), உண்மையாகத் தேவைப்பட்டவர்களுக்கு உதவக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை, அவர்கள் கொடுக்கும் பணம் சரியாகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கைதான்.

    ReplyDelete
  4. இதுவரை முதல் மதிப்பெண் எடுத்து மருத்துவராகி பேட்டியில் சொன்னது போல் சேவை செய்தவர் யாருமில்லை.அதெல்லாம் சும்மா நீங்கள் சொல்வது போல டாகடரரின் வாரிசுகள் டாகடர் படித்தால் சமாளித்து விடலாம் முதல் தலைமுறை டாக்டர்கள் செட்டில் ஆவதற்கு போராடவேண்டும். ஐ.ஏ .எஸ் படிக்க +2 வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியதில்லை. டிகிரியிலும் பாஸ் செய்தால் போதும். பொது அறிவும் பாடங்களை புரிந்து வாசிப்பவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்.தேர்வில் பாஸ் செய்ய முடியும். இடைநிலை ஆசிரியராய் இருந்து கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் டிகிரி படித்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற நண்பர் ஒருவர் உண்டு.

    ReplyDelete
  5. மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்! மார்க் எடுக்கும் மாணவர்கள் சிந்திக்க முயல வேண்டும்!

    ReplyDelete
  6. Amutha Krishna பெரும்பாலான டாக்டர்கள் மாத சம்பளம் வாங்கி தான் குடும்பம் நடத்துகிறார்கள் அதிலும் வேலை பளு அதிகம். GH டாக்டர்கள் வேலை செய்யும் இடமும் பெரும்பாலும் சொந்த ஊரை விட்டு தள்ளி ட்ரான்ஸ்பருக்கு காசு கொடுத்து, PG படித்து அந்த லைனில் முன்னேற நிறைய தியாகம் செய்ய வேண்டும். லைஃப் ஸ்டைலே மாறும்.

    ReplyDelete
  7. சுயமாய்ச் சிந்திக்கத் தெரியாமல் பெற்றோரின் கைப்புள்ளைகளாக இருக்கும் பருவம் பல குழந்தைகளுக்கும் அதனால் இப்படித்தான். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கோல்ட் மெடலிஸ்ட், முதல் ரேங்க் ஹோல்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலரும் அதன் பின் காணாமல் போய் விடுகின்றனர். அல்லது தொழில் ரீதியாகவோ, இல்லை பெர்சனல் வாழ்க்கையிலோ சறுக்கிவிடுகிறார்கள். சாதரண மாணவர்எ, இவன் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று பள்ளியிலோ, கல்லூரியிலோ முத்திரைக் குத்தப்படுபவர்கள் பிற்காலத்தில் வெற்றியடைகின்றார்கள். மனித நேயத்துடன், எல்லா உயிர்களையும் நேசித்து உதவி மன நிம்மதியுடன், மகிழ்வுடன், குன்றின் மீதிட்ட விளக்காக வாழ்ந்து வருபவர்கள் இருக்கின்றார்கள். பலருக்கும் வாழ்க்கையில் எது வெற்றி என்பது தெரியவில்லை. மதிப்பெண்ணும், தொழில் வெற்றியுமே வெற்றி என்று நினைத்து விடுகிறார்கள்.

    ப்ரொஃபஷனல் கோர்ஸ் அதாவது டாக்டர்கள், எஞ்சினியர்கள் எல்லோருமே ஒன்றும் அப்படியே செல்வத்துடன் வாழ்வதில்லை. கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். புத்திசாலித்தனம் என்பது அறிவுக் கூர்மையும், காமன்சென்சும்,கற்பதை வாழ்க்கையில் ப்ராக்டிக்கலாக அப்ளை செய்து வாழ்க்கையை சமனிலையுடன் எதிர்க்கொண்டு மனம் தளராமல், புரளாமல், நாமும் மகிழ்ந்து நம்மைச் சுற்றி உள்ளவரையும் மகிழ்வுடன் வாழ வைப்பது என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகின்றோம்.

    அருமையான கட்டுரை தமிழா.

    (இருவரது கருத்தும்)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.