கனவுகள் இல்லாத வாழ்க்கை
அர்த்தமில்லாத வாழ்க்கை
அதனால்தான் எங்கள் வாழ்க்கை
காதல் கனவுகளோட ஆரம்பித்தது இன்று வரை அர்த்தமுடன் சென்று கொண்டிருக்கிறது.
எதையும் ஆரம்பிக்கும் போது
பயமாகவும் முடிக்கும் போது வருத்தமாகவும் இருக்கும் ஆனால் இதற்கு இடைப்பட்ட நாட்கள் வாழ்க்கையின் மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள நாட்களாக கடந்துவிடும். இந்த அர்த்தமுள்ள சந்தோஷமான நாட்களில் இந்நாளும் ஒரு முக்கியமான நாள்
ஆமாம் இன்றுதான் ( ஜுன் 10) என்னுடைய திருமணநாள். எங்களுடைய காதல் திருமணத்தில் இருவரும்
இன்று வரை மதங்கள் மாறமால் அவரவர் மதத்திலே இருபது வருடங்களை கடந்து வந்துவிட்டோம்.
அரேஞ்ச்டு கல்யாணத்தில்
மாலை மாற்றிக் கொண்டு இருவரும் கைகளை ஒன்றாக சேர்த்து கொண்டு வலம் வருவார்கள் ஆனால்
எங்களை போல காதல் திருமணம் செய்தவர்களோ இதயங்களை ஒன்று இணைத்து கொண்டு வலம் வந்து கொண்டு
இருக்கிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
வாழ்த்துகள் பாஸ். காதல் கல்யாணம் என்பதே ஆச்சர்யம். மதம் வேறு என்பது அடுத்த ஆச்! இன்னமும் வற்புறுத்தல்கள் இல்லாத புரிதல் நிறைந்த வாழ்க்கை என்பது இனிய ஆச்சர்யம். வாழ்த்துகள் மறுபடியும்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். கேட்கவே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteதொடரட்டும் தங்களது காதல் கனவுகள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள் நண்பரே - கில்லர்ஜி
ReplyDeleteத.ம.1
உங்களின் இந்த காதல் அனுபவம் பற்றி மேலும் கொஞ்சம் விபரமாக ஓர் கதைபோல எழுதினால் நல்லது.
ReplyDeleteஃபேஸ்புக் மூலம் நட்புடன் பழக ஆரம்பித்த ஓர் இளம் ஆணும் பெண்ணும் தீவிரமாக காதல் கொண்டு விட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் என்ன ஜாதி என்றெல்லாம் கேட்டுக்கொள்ளவே இல்லை.
பிறகு மெயில் தொடர்பு, சாட் தொடர்பு என்றெல்லாம் அவர்களின் காதலும் மேலும் வளர்ந்துள்ளது. ஃபோன் நம்பர் போட்டோ முதலியன மட்டும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவில்லை. இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள்.
ஓராண்டுக்குப் பிறகு பொதுவான ஓர் இடத்தில், உடை அடையாளங்களைச் சொல்லி சந்தித்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்பதே பார்த்த மாத்திரத்திலேயே தெரிய வந்துள்ளது.
இத்துடன் நாம் நல்ல நண்பர்களாக இருந்துகொண்டு, நம் காதலிலிருந்து விலகி விடலாம் என அவள் எடுத்துச் சொல்லியும்கூட, அவன் அதனை ஏற்காமல் மேலும் அவளை அதிகமாகத்தான் விரும்பி வருகிறான்.
இவளுக்கும் அவனை முற்றிலுமாக மறக்க முடியாமலும் ரிஜக்ட் செய்ய முடியாமல் ஒரே தவிப்பாகத்தான் உள்ளது.
இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நன்கு உணர்ந்துள்ள போதிலும், குடும்ப கெளரவத்தை உத்தேசித்து (அதாவது அந்தப்பெண்ணின் உடன் பிறந்த தங்கையின் வாழ்க்கை முதலியவற்றை உத்தேசித்து) மேற்கொண்டு என்ன செய்வது எனப்புரியாமல் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
தாங்கள் எழுதும் தங்களின் அனுபவம் அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவக்கூடும் என நான் நினைக்கிறேன். அதனால் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ சார்.. இந்த மாதிரி ஒரு பிரச்சனையை நீங்கள் விவரித்து அதற்கு என்ன தீர்வு என்று எண்ண நினைப்பதே நீங்கள் எவ்வளவு அனுபவத்திலும் எண்ணத்திலும் முதிர்ந்தவர் என்பதைக் காண்பிக்கிறது. வாழ்த்துக்கள் (இந்த முதிர்ச்சி எனக்கு இன்னும் வரவில்லை)
Deleteஎன்னது காதல்ல்ல்ல் கல்யாணமா !!!! இத்தனைநாள் தெரியாம போச்சே !!! முன்னோடியே உங்களுக்கு தலைவணங்குகிறேன் ....
ReplyDeleteஅப்ப இவ்வளவு நாளா சொன்ன பூரி கட்டை எல்லாம் தமாசுக்கா? பாவி தமிழா, உன்னை பார்த்துதானே இம்புட்டுநாளா கொஞ்சம் ஆறதலா இருந்தேன்....
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.....
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் காதல் திருமண வாழ்க்கை அன்பு நிறைந்த இனிமையான நிறைவான வாழ்வாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றியுடன் இவ்வாழ்வு என்றும் எப்போதும் மகிழ்வுடன் இருந்திட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteசாரி தமிழன் தாமதமான வாழ்த்துக்கு. இப்பதான் துளசி சொல்ல, உங்கள் பதிவு பார்த்துத் தெரிந்தது.
கீதா
வாழ்த்துக்கள். இருவரையும் இணைக்கும் உணர்வெனும் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வதே காதலின், திருமணத்தின் வெற்றி. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇப்போதுதான் பார்த்தேன் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவிஜயன்