Wednesday, June 29, 2016



இந்திய அரசாங்கத்திற்கு 144 தடை உத்தரவு

ஹேய் இந்திய அரசாங்கமே! தமிழக அரசே! அரசியல் தலைவர்களே! நடிகர்களே கொள்ளையர்களே கொலைகாரர்களே  பேஸ்புக் போராளிகளே உங்களது செய்கைகளை நாளை முதல் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வையுங்கள் இது வேண்டுகோள் அல்ல இது உத்தரவு.


அதையும் மீறி நீங்கள் செயல்பட்டால் உங்களின் செயல்களுக்கு பதில் பதிவு போடவோ கருத்து சொல்லவோ என்னால் இயலாது. காரணம் நான் ஒரு வார நீண்ட பயணமாக காரில் எனது மைச்சினிச்சி வீட்டிற்கு போகிறேன். என் மைச்சினிச்சி வாட்ஸப்பில் வந்து நேரில் பார்க்கும் போது நன்றாக கவனித்து கொள்வதாக சொல்லி இருக்கிறாள். அப்படி அவள் சொல்லி இருப்பது மிரட்டல் தோணியிலா அல்லது அன்பான தோணியிலா என்பது புரியாத அப்பாவியாக  நான் இருக்கிறேன். என் மனைவியோட சேர்ந்து அவளும் பூரிக்கட்டையை தூக்க மாட்டாள் என நினைக்கிறேன்.. அவள் வீட்டிற்கு சென்று திரும்பியதும் ஒரு சுற்று பெருத்து போக வாய்ப்புக்கள் உண்டு ஒன்று அவள் சமைத்து போடும் சாப்பாட்டால் இருக்கலாம் அல்லது அவள் என் மனைவியுடன் சேர்ந்து பூரிக்கட்டையை பயன்படுத்துவதால் கூட இருக்கலாம். எது எப்படியோ போய்விட்டு வந்து நடந்ததை உண்மையை மாறாமல் கூறுகிறேன்

இது ஒரு நீண்ட தூர கார் பயணம் நீயூஜெர்ஸியில் இருந்து கேன்ஸாஸ் மாநிலத்திற்கு 1167 x 2 ( இது சென்னைக்கும் டில்லிக்கும் உள்ள தூரம் )மைல் கார் பயணம் நானும் என் குழந்தை மற்றும் நாயுடன் பயணம் செய்யப்போகிறேன் மனைவி தனியாக விமானத்தில் பயணம் மேற்கொள்கிறாள்.



அதனால் எனது வலைத்தளத்தை தொடரும் பெண் ஃப்லோவர்களே பேஸ்புக் போராளிகளே வலைபதிவர்களே இது எனது தனிப்பட்ட சொந்த பயணம் என்பதால் நீங்கள் யாரும் எனக்கு வழிநெடுக பேனர்களையோ கட் அவுட்களை வைக்க வேண்டாம் என்று பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் போகும் பாதையில் என்னை பார்ப்பதற்காக நின்று டிராபிக் ஜாம்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்..


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. பயணம் சிறக்கவும்
    கவனிப்பால் பெருக்கவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    ( அடுத்த வாரம் சந்திப்போம் )

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பயணம் முடிந்ததும் தகவல் தருகிறேன். ஏதாவது ஒரு வீக்கெண்டில் சந்திப்போம் குடும்பத்துடன்

      Delete
  2. வாழ்த்துக்கள் சார் நீங்கள் வரும் வரை நாங்கள் இந்த தடையை நீக்கும்படி உங்களை எதிர்த்து போராட்டம் செய்ய இருக்கிறோம்

    ReplyDelete
  3. பயணம் சிறக்க எனது வாழ்த்துகள்.... ஒரு வாரத்திற்கு பூரிக்கட்டையிலிருந்து தப்பிக்கவும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  4. ஹஹஹாஹ்ஹஹஹ் இது இது இதுதான் லொள்ளு அப்படின்றது!!ஹிஹிஹி அதான் அதென்ன பேனர் கட் அவுட்...ஹஹஹ் இங்க வந்தாலாவது வைக்கலாம் ஹும் அங்க யாரு...

    செம ட்ரிப் தமிழா...ரியலி...எப்படியோ நீங்கள் எப்படிப் பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்கிறீர்களோ இல்லையோ இங்கு அரசியல்வாதிகள் நிகழ்வுகள் எல்லாம் உங்கள் அடியிலிருந்து தப்பிக்கிறார்கள்..ஹஹஹ்

    பயணம் சிறக்க வாழ்த்துகள்! எஞ்சாய்! சன்னிக்கு ஸ்பெஷல் விஷ்ஷஸ்.

    ReplyDelete
  5. நீண்ட தூர கார்ப் பயணம் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தங்கள் பயணம் இனிமையாக (?) மகிழ்ச்சி யுடன் திரும்பி வர வாழ்த்துக்கள் ..தேவன்குமார் . இந்தியா , பெங்களூரு .
    devankumar100@gmail.com
    Whatsapp- +919739222376
    facebook.com/devan100kumar

    ReplyDelete
  7. மச்சினிச்சி அமைவதெல்லாம் .... மகிபன் - (இறைவன்) கொடுத்தவரம்.

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.