உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, September 30, 2011

அகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்
அகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்

ஒரு முறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கிராமம் வழியாகச் செல்வதற்கு நேர்ந்தது.அந்தக் கிராமத்தின் சார்பாக யாராவது ஒருவரிடம் பேச ஆசைப்பட்டார் முதலமைச்சர்.அந்த  கிராமத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு முதியவர் ஒருவரை  முதலமைச்சரிடம் பேச தேர்ந்தெடுத்தனர் கிராம மக்கள்.ஆனால் முதியவர்க்கு சிறிது தயக்கம் இருந்தது.

முதல்வரிடம் நான் எப்படிப் பேசுவது? அவர் தமிழக முதலமைச்சர் , நான்  சாதாரண கிராமத்து மனிதன்'.இதற்கு தமிழக முதலமைச்சர்  ஆலோசகர்கள் ஆலோசனை கூறினர். முதலமைச்சர்  என்னென்ன கேள்விகள் கேட்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் கூற வேண்டும் என்பதை நாங்கள் உங்களிடம் கூறி விடுகிறோம், அதன்படி நீங்கள் பதில் சொன்னால் போதும் என்ற முதலமைச்சர்  ஆலோசகர்களின் யோசனையை முதியவர் ஒத்துக்கொண்டார்.

முதலமைச்சர்  ஆலோசகர்கள் " முதல்வர்  கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் எப்படிச் சொல்வது?" என்பதற்கான வகுப்பினை நடத்தினர்."ஐயா, முதலமைச்சர் உங்களிடம் முதல் கேள்வியாக தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்து கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்பார். அதற்குத் தாங்கள் 15 வருடங்களாக என்று கூறவேண்டும், சரியா?"


"
முதல் கேள்விக்கு 15 வருடங்கள் என்று பதில் சொல்லவேண்டும், அவ்வளவுதானே! சரி, அடுத்த கேள்வி என்ன?"
"
இரண்டாவது கேள்வியாகத் தங்களுக்கு எத்தனை வயது?" என்று கேட்கப்படும். அதற்குத் தாங்கள் 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரியா ஐயா"


"
இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரி எனக்கு ஒரு சந்தேகம்?""கேளுங்கள்"
"
எனக்கு வகுப்பு எடுத்தது போலவே முதலமைச்சரிடமும் கூறிவிட்டீர்களா?"

கூறிவிட்டோம், இந்தக்கிராமம் படிப்பறிவு அற்ற ஏழைகள் நிறைந்த கிராமம், யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. முதியவர்  ஒருவருக்கு மட்டுமே ஒரளவு தெரியும். எனவே இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனவும், இந்த வரிசையில் மட்டுமே  கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை  என்று மேலும் சில கேள்விகளை சொல்லி கொடுத்தனர்.

முதலமைச்சர் ஆலோசகர்கள் கூறியபடியே முதியவர் செயற்படுவது என்று முடிவு செய்தார்.அதைப் போலவே முதலமைச்சரிடமும் இது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.முதலமைச்சரும் அவ்வூருக்கு வந்தார்.ஆலோசகர்கள் சொன்ன கேள்விகளை முதலமைச்சர் ஞாபகத்தில் வைத்திருந்தார், ஆனால் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது என்பதை மறந்து விட்டார். அருகில் உள்ள ஆலோசகர்களைக் கேட்க மனதினுள் அகங்காரம் தடை போட்டது.(ஜெயலலிதாவுக்கு அழகே அகங்காரம்தானே)

"
முதியவரே உங்கள் வயது என்ன?"இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது, இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வியை முதலமைச்சர் முதல் கேள்வியாகக் கேட்டு விட்டார். முதியவரோ முதல் கேள்விக்கு 15 வருடங்கள், இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என மட்டுமே ஞாபகத்தில் வைத்திருந்தார்.

"15
வருடங்கள்" முதல் கேள்விக்கு முதியவர் பதில் சொல்லிவிட்டார்.

முதலமைச்சருக்கு தலை சுற்றியது! பார்ப்பதற்கு 60 வயதானவராகத் தோன்றுகிறார்! ஆனால் 15 வருடங்கள் என்கிறாரே! முதலமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை!இரண்டாவது கேள்வியை கேட்டார்.

"
முதியவரே, தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?"முதியவரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது."60 வருடங்கள்"

முதலமைச்சருக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. முதியவரே, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?""நிச்சயமாக எனக்கு இல்லை முதல்வரே! உங்களுக்குத்தான் என்று நினைக்கிறேன்"

"
என்ன சொல்கிறீர்கள்?" முதல்வர் வெகுண்டெழுந்தார்.

"
முதலமைச்சரே! எனக்கு எந்த வரிசையில் பதில்கள் சொல்லப்பட்டனவோ, அதே வரிசையில்தான் உங்களுக்கு கேள்விகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் அதன்படி கேட்காமல் மாற்றிக் கேட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். தவறு செய்தது நானல்ல, எனக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதன்படியே நான் நடந்துள்ளேன். நீங்கள்தான் மாற்றி நடந்துவிட்டீர்கள்.
எனவேதான் எல்லாக் குழப்பமும் நடந்துவிட்டது!"

முதலமைச்சர் திகைத்தார் முதியவர் சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த ஞானி போலத் தெரிகிறது. நான் மாற்றிக் கேள்விகள் கேட்டிருந்தாலும், பதில்களைச் சரியாகச் சொல்லியிருக்கலாமே!

"
முதியவரே! தங்களுடைய விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தாங்கள் கூறியது போலவே, நான் கேள்விகளை மாற்றி கேட்டிருக்கலாம் தாங்கள் அதற்குச் சரியான பதில்களைக் கூறியிருக்கலாம் அல்லவா? ஏன் கிளிப் பிள்ளை போல் பதிலைத் தந்தீர்கள்?"

"
எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை அப்படி! இப்போது நாம் இருவரும் ஒன்று செய்யலாம். நாம் இருவரும் கூடிப் பேச வேண்டும். இந்த கிராமத்தைப் பற்றிப் பேச வேண்டும் அவ்வளவுதானே"

"
ஆமாம் முதியவரே! அதற்காகத்தான் நான் வந்துள்ளேன்""அப்படியானால், நாம் இருவரும் நம் முகமூடிகளைக் கழற்றிவிடவேண்டும்"

"
முகமூடிகளா!"

"
ஆமாம், தாங்கள் முதலமைச்சர் என்ற முகமூடியை அணிந்துள்ளீர்கள், நானோ 'புத்திசாலி'என்ற முகமூடியை அணிந்துள்ளேன்! இருவரும் ஏதோ ஒருவித முகமூடிகளை அணிந்துள்ளோம். அந்த முகமூடிகளை நாம் கழற்றிவிடுவோம். நான் இந்த கிராமத்தை சேர்ந்த மனிதன். தாங்கள் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த முறையில் மனம்விட்டு வெளிப்படையாக இயல்பாகப் பேசுவோம். எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். முகமூடிகளை அணிந்துள்ளவரையில் பிரச்சனைகளும், சங்கடங்களும், இடைஞ்சல்களும் தீர்க்கப்படாது,  வளர்ந்துகொண்டுதான் இருக்கும்".

முதியவர் கூறியது உண்மைதான். "நாம் அனைவரும் நமது அகங்காரத்திற்கேற்ப ஒவ்வொரு முகமூடியை அணிந்துள்ளோம். அதன்காரணமாகவே மற்றவர்களுடன் ஒத்துப்போக மறுக்கிறோம்.

நமது முகமூடியை நாம் கழற்றிவிட்டால், நமது அகங்காரமும் விட்டுப்போகும். அகங்காரம் வெளியேறிவிட்டால், நமது இயல்புத் தன்மை நம்மிடம் இருந்து வெளிப்படும். எல்லாவற்றிற்கும் மேலான சக்தி மனிதர்க்கு வழங்கிய பெருங்கொடை நமது அகங்காரமற்ற இயல்பே.இது போல நாம் அணிந்திருக்கும் முகமுடிகளை தூக்கி எறிந்துவிட்டால் வாழ்வில் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.நாம் முயற்சி செய்து பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்களேன்நான் படித்த முல்லா கதையைமாற்றி எனது வழியில் நான் கொடுத்துள்ளேன்


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog