உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 30, 2012

ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

ஆமாம் ஆமாம் அவங்களை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும்.  வீட்டில் அவுங்க ஒரு கௌரவமான வேலைக்காரி , எல்லாருடைய தேவைகளையும் கவனித்து அனுசரித்து, குடும்ப பெயரை காப்பாற்ற பாடு படணும். அப்படின்னு அவசரம் அவசரமாக சொன்னவர்கள் நீங்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள்


 இதைப் படிக்கும் ஆண்களே  தங்கள் வீட்டு குடும்ப பொறுப்பை சுமக்கும் பெண்களுக்கு பிடித்தது எது , பிடிக்காதது எது என்று தெரிந்து வைத்து இருக்கீர்களா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். அது மனைவியாகவோ அல்லது கூட பிறந்த சகோதரியாகவோ இல்லை சித்தி ,பெரியம்மா,  மன்னி, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் சரி.


 அதே கேள்வியை அவர்களை போயி கேட்டு பாருங்கள் .கொஞ்சம் கூட யோசிக்காமல் பளிச்சென்று ஒரு லிஸ்டே போட்டு யார் யாருக்கு என்ன என்ன பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள். அது என்னவாக இருக்கட்டும் கலரா, சாப்பாடா, பாட்டா, சினிமா , ஊரா , ஹீரோ, ஹீரோயினோ எதுவாக இருந்தாலும் சரி, அதை சரியாக சொல்லிவிடுவாரகள் அது தான் தன்னை மிஞ்சிய பாசம் , எதையும் எதிர் பார்க்காமல் செய்வது அவர்கள் தான்.


அது யாரப்பா எனக்கு எல்லாம் தெரியும் என்று குதிக்கிறது அப்படி குதிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி? அதெல்லாம் தெரிந்து இருந்தும் அதை அவர்களுக்கு செய்து கொடுத்திருகீறிர்களா ? அதே போல் அவர்களுக்கு பிடித்தமானதை வாங்கி தந்திருக்கீர்களா

அப்படி செய்திருந்தால் நிச்சயம் நீங்கள் மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவர்தான், அப்படி இதுவரை செய்யவில்லை  என்றால், உடனே வாங்கியோ, அல்லது  வெளியே அழைத்து சென்றோ  அவர்களின்   சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். இப்படி செய்தால பெண்கள் உங்களை மனதாரக் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல, அந்தப் பெண்கள் எதிரில் நீங்கள் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர்கள் .


மிக அதிக அளவு வேலை செய்வது வீட்டில் இருக்கும் பெண்களே என்று ஒரு  சர்வே  சொல்கிறது.


எல்லோருக்கும் 'சண்டே'  என்றால் ரெஸ்ட் எடுக்கும் நாளாகவும் ஆனால் அவளுக்கு மட்டும் 'சண்டே' என்றால் ஓவர் டைம் செய்யும் நாளாகவும் ஆகிவிடுகிறது. எல்லோருக்கும் பிடித்ததை மெனு போட்டு செய்யணும் அல்லது நீங்கள் அழைக்கும் நண்பர் குடும்பத்திற்கு பார்த்து பார்த்து வித விதமாக சமைத்து போடணும்.

இதை சிறிது யோசித்துபார்த்தால் உங்கள் மனதுக்கே அது நல்லதா கெட்டதா கஷ்டமா இல்லையா என்று தெரிந்துவிடும்.

அதனால் முடிந்த வரை அவர்களுக்கும் சண்டே ஒய்வு நாளாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள் அல்லது அந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாளாக ஆக்குங்கள். ஆண்களே பெண்களை போற்றி துதி பாட வேண்டாம் அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை.........


பெண் என்பவள் சக்தியின் ரூபம் தான் . எவன் ஒருவன் வீட்டில் பெண்ணை மதித்து, மரியாதை கொடுத்து ஒரு உணர்ச்சியுள்ள மனுஷியாக நடத்துகிறானோ அவனுக்கு இந்த சமுதாயம் நிச்சயம் தலை வணங்கும்.


நான் கற்று அறிந்த பெண்ணின் மொழிகள் என்ற பொன்மொழிகள் "


எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்.

ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை-இங்கர்சால்

ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது-வால்டேர்.

தியாகம், அமைதி, சகிப்புத் தன்மை, பணிவு, நம்பிக்கை, அறிவு ஆகியவற்றின் உருவமாகவே பெண்குலம் இருந்து வருகிறது - காந்திஜி.

குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் - கார்ட

ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல - பெல்லா  அப்சக்


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"
Sunday, April 29, 2012

பொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மாபொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மா

பொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மா இப்படி ஒரு அம்மாவா என்று கலாச்சாரக் காவலர்களே நீங்கள் அவசரப்பட்டு, கலவரப்பட்டுக் அருவாளை தூக்க வேண்டியதில்லை. கொஞ்சம் அமைதிகாத்து கையில் உள்ளதை கிழே போட்டு. முதலில் நடந்ததை கேளுங்கள்.


சனிக்கிழமை (நேற்று)  மாலை 6 மணிக்கு அப்பறம் வேலை முடிந்ததும் நான், எனது லேடி மானேஜர்(அமெரிக்கன் வயது 52) ,கூட வேலை பார்க்கும் ஸ்பானிஷ் லேடி, மற்றொரு பஞ்சாபி லேடி மற்றும் ஒரு டில்லிகாரன் அனைவரும் அருகில் உள்ள மெக்ஸிகன் ரெஸ்டாரண்டிற்கு  சென்றோம். இந்தியன் ஆன நமக்கோ ஸ்னாக்ஸ் டைம் ஆனால் அமெரிக்கர்களுக்கோ அது டின்னர் டைம்.. அதனால் முதலில் நாங்கள் ஆளுக்கொரு Borderita Rock  டிரிங்க்ஸ் ஆர்டர் செய்து அருந்த ஆரம்பித்தவாறே  அவர்களுக்கு தேவையான உணவையும் ஆர்டர் செய்து பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது என் லேடி மேனேஜர் சொல்லியதுதான் இந்த பதிவிற்கான விஷயம். அவள் சொன்னது இதுதான்  என் ரெண்டாவது பொண்ணு (15வயசு) அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே  ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் முதல் பொண்ணுக்குப் 20 வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட்கூட இல்லை, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக்  கூட்டிட்டு வந்ததில்ல. அவளை நெனைச்சாதான் மிக கவலையாக இருக்கு ...எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? முடிந்தால் டாக்டரிடம் கவுன்சிலிங்க் கூட்டி போகனும் என்று  பாசமிக்க ஒரு அமெரிக்கா அம்மாவின்  அங்கலாய்ப்பாக இருந்தது.

இதை படிக்கும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் கேட்டு பழகி போய்விட்டது

இங்கெல்லாம் 15, 16  வயது வந்ததும் பெற்றவர்கள் உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே  தண்ணி தெளித்து விடுகிறார்கள், முடிந்த வரையில்  ஒயிட்டுகள் தங்கள் இனமான ஒயிட்டுகுள்ளேயே டேட்டிங்க் பண்ண அனுமதிக்கிறார்கள். பல சமயங்களில் அதுவும் முடியாமல் போய்விடுகிறது. சில வீடுகளில் அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி வைத்து அனுப்புவார்கள்.

இங்கு பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பாய் பிரண்டை தேர்ந்தெடுப்பது போல தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே திர்மானித்து அவர்களாகவே சம்பாத்தித்து படிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனா நம்ம ஊர்ல மட்டுமல்ல இங்க கூட  பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற
வரைக்கும் பெற்றவர்கள் தங்களோட ரெடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் வைச்சிருக்காங்க

நமக்கு அமெரிக்கன் கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்கு அவங்களுக்கு  நம்ம கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்குங்க


பேச்சு அதோடு முடிந்துவிடவில்லை  எங்களது மேனேஜரின் ந்யூ டேட்டிங்க் பற்றியும் வந்தது. அந்த மேனேஜர் 2 முறை கல்யாணம் செய்து விவாகரத்து பண்ணியவர். இப்போது முன்றாவது கணவருக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்க்கு கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறது. முன்பு பார்த்தவை இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டாம் கணவருக்கு பிறந்தவை. அவருக்கு இந்தியர்கள் எப்படி ஒருத்தரை கல்யாணம் பண்ணி அவரோடையே செட்டில் ஆகிவிடுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது ( ஆனால்  சாகற வரைக்கும் நம்ம மனசு  செட்டில் ஆகாதுங்கறது என்பது  வேற விஷயம். அந்த உண்மை அவர்களுக்கு தெரிவதில்லை)
 .

டிஸ்கி : எனது மேனேஜர் உயரம் 6 அடிக்கும் மேலே மிகவும் திடகாத்திரமானவர். 52 வயதுதான் நோய் நொடி இல்லாதவர். ரஜினி படத்தில்தான் சூப்பர் ஸ்டார் சுத்தி சுத்தி அடிப்பார் ஆனால் இவர் அப்படியல்ல..இவரை நாங்கள் லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றுதான் அழைப்போம். இதெல்லாம் எதுக்கு சொல்லுறேனா அவர் Still looking for 'RIGHTMAN'  அப்படிபட்ட ஒரு 'perfect' ஆண் மகன் யாரும் கிடையாது என்பதை அவர் இந்த வயதிலும் அறியவில்லை. நீங்க பெர்க்ஃக்ட் ஆணாக இருந்தால் அப்பிளை செய்யலாம். ஹீஹீ


கலைஞர் & ஜெயலலிதா இருவரையும் நாம் பாராட்டுவோமே!!!!!கலைஞர் & ஜெயலலிதா இருவரையும் நாம் பாராட்டுவோமே!!!!!


எப்ப பார்த்தாலும் நாம் அடுத்தவன் பொண்டாடிதான் ரொம்ப சமர்த்து தன் பொண்டாட்டி ரொம்ப மக்கு என்று நினைப்பவர் நாம் அது போல குஜராத் முதலமைச்சர் மிக கெட்டிகாரர் ஆனால் நம் தமிழகத்தை ஆளும் முதல்மைச்சர்கள் சுயநலக்காரர்கள் நாட்டுக்கு ஏதும் செய்வதில்லை என்று குறை கூறாமல் அவர்கள் தமிழகத்துக்கு செய்த நல்ல காரியங்களை பாராட்டுவோமே.

ஜெயலலிதா & கலைஞர் இருவரும் கீரியும் பாம்பும் போல எல்லாவற்றிலும் எதிரி போல ஏறுக்குமாறாக செயல்பட்டாலும் ஒன்றில் மட்டும் மிக ஓற்றுமையாக சிந்தித்து செயல்பட்டு தமிழக வளர்ச்சிக்கு செயல் பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிக ஆச்சிரியமாக இருக்கிறது . அப்படி அவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள் என்று அறிய ஆவலா அப்படியென்றால் கிழே உள்ள செய்தியை படித்து பாருங்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக தமிழக வளர்ச்சிக்கு பாடுபட்டது மிக தெளிவாக விளங்கும்.

கடந்த நிதி ஆண்டில் (2011-12) டாஸ்மாக் மூலம் ரூ.18081 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தமிழக அரசு. இது கடந்த நிதி ஆண்டைவிட ரூ.3116 கோடி அதிகமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20% வளர்ச்சியைக் கண்டுள்ளது அரசின் சாராய விற்பனை.

கள்ளச்  சாராயத்தைஒழித்ததன் மூலமாக தமிழக அரசின்நல்ல சாராயவிற்பனை 2003 ஆண்டிலிருந்து அதிகரித்தே வருகிறது. கலைஞரும் ஜெயலலிதாவும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி வளர்த்து வரக்கூடிய தமிழகத்தின் பிரதானமான ஒரே தொழில் சாராயத் தொழில்தான்..

என்ன மக்களே இப்ப உங்களுக்கு புரிஞ்சுதா அவர்கள் எப்படி தமிழக வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார்கள் என்பது.

இந்த வளர்ச்சியால நாம் அடைந்த பலன்கள் மற்றும் அடையப் போகும் பலன்கள் :

நாம் நமது தமிழக வளர்ச்சிக்கு முழுமையாக மத்திய அரசை நம்பி இருக்காமல் நாம் சுயமாக வருவாயை அதிகரித்து நமக்கு ஏற்ற திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது.

இதில் வரும் வருவாயை வைத்து வீணாக கல்வி மற்றும் சமுக நலன்கள் போன்ற யாருக்கும் பயன்படாத திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களுக்கு உபயோகப்படக் கூடிய பொருட்களை இலவசமாக தர முடிகிறது & முடியும்.

அடுத்தவதாக இந்தியாவின் மிகச் சிறந்த "குடி"மகன் களாக இருந்த நம் அண்டைய மாநிலமான கேரளாவை பின்னுக்கு தள்ளி நாம் இந்தியாவின் தலை சிறந்த குடிகாரர் என்ற பட்டத்தை தட்டி பறிக்கும் நிலமைக்கு வந்துள்ளோம்.

அடுத்தவதாக நம் மாநிலத்தில் வாழும் & தமிழக வளர்ச்சிக்கு ஒரு துணையாக இருக்கும் "குடி"மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவிக்காக எதிர்காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இருக்கும் பள்ளி கல்லூரி மற்றும் கோயில்கள் வேறு இடங்களுக்கு மாற்றும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அடுத்தபடியாக மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் டீ மற்றும் காபி கடைகள் ஒழிக்கபட்டு அதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் ஒயின் ஷாப்புகள் திறக்கபடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கோடை காலங்களில் மக்களிம் தாகம் தீர்க்க வைக்கப்படும் மோர்பந்தலுக்கு பதிலாக "பீர் பந்தல்" வைக்க அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு இருக்கின்றன.

போண்டியாகாத தொழிலுக்கெல்லாம் படிப்புகள் இருக்கும் போது கொடிகட்டிப் பறக்கும் சாராயத் தொழிலுக்கு மட்டும் படிப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?அதனால் வேலை வாய்ப்பை அள்ளித் தரும் சாராயப் பட்டப்படிப்பு தொடங்கப்படும் .அது முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்

பெரிய கம்பெனிகளிளெல்லாம் குடிக்காதவனைத்தான் தீண்டத்தகாதவனைப்போல பார்ப்பார்கள்  அதுமட்டுமல்ல அவன் குடிகாரன் என்று ஒதுங்கிய காலம் சென்று இப்பொழுது அவன் 'குடிக்காதவன்' என்று சொல்லும் இழிநிலை ஏற்பட்டுவிடும்.

சாராயக்கடைகளில் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆட்கள் மிக மிக கெளரவமான வேலைகளில் இருப்பதாக இந்த தமிழ் சமுதாயம் அங்கிகரித்து அதில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பொண்ணை தர எல்லோரும் நான் நீ என்று போட்டி போடுவார்கள்இப்படியெல்லாம் மாறப் போகும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் தலைவர்கள் ஜெயலலிதா கலைஞர் இருவரையும் நாம் கண்டிப்பாக பாராட்டிதான் ஆக வேண்டும். என்ன மக்களே நான் சொல்லவது சரியாதானே??


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog