Monday, April 30, 2012



ஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

ஆமாம் ஆமாம் அவங்களை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும்.  வீட்டில் அவுங்க ஒரு கௌரவமான வேலைக்காரி , எல்லாருடைய தேவைகளையும் கவனித்து அனுசரித்து, குடும்ப பெயரை காப்பாற்ற பாடு படணும். அப்படின்னு அவசரம் அவசரமாக சொன்னவர்கள் நீங்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள்


 இதைப் படிக்கும் ஆண்களே  தங்கள் வீட்டு குடும்ப பொறுப்பை சுமக்கும் பெண்களுக்கு பிடித்தது எது , பிடிக்காதது எது என்று தெரிந்து வைத்து இருக்கீர்களா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். அது மனைவியாகவோ அல்லது கூட பிறந்த சகோதரியாகவோ இல்லை சித்தி ,பெரியம்மா,  மன்னி, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் சரி.


 அதே கேள்வியை அவர்களை போயி கேட்டு பாருங்கள் .கொஞ்சம் கூட யோசிக்காமல் பளிச்சென்று ஒரு லிஸ்டே போட்டு யார் யாருக்கு என்ன என்ன பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள். அது என்னவாக இருக்கட்டும் கலரா, சாப்பாடா, பாட்டா, சினிமா , ஊரா , ஹீரோ, ஹீரோயினோ எதுவாக இருந்தாலும் சரி, அதை சரியாக சொல்லிவிடுவாரகள் அது தான் தன்னை மிஞ்சிய பாசம் , எதையும் எதிர் பார்க்காமல் செய்வது அவர்கள் தான்.


அது யாரப்பா எனக்கு எல்லாம் தெரியும் என்று குதிக்கிறது அப்படி குதிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி? அதெல்லாம் தெரிந்து இருந்தும் அதை அவர்களுக்கு செய்து கொடுத்திருகீறிர்களா ? அதே போல் அவர்களுக்கு பிடித்தமானதை வாங்கி தந்திருக்கீர்களா

அப்படி செய்திருந்தால் நிச்சயம் நீங்கள் மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவர்தான், அப்படி இதுவரை செய்யவில்லை  என்றால், உடனே வாங்கியோ, அல்லது  வெளியே அழைத்து சென்றோ  அவர்களின்   சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். இப்படி செய்தால பெண்கள் உங்களை மனதாரக் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல, அந்தப் பெண்கள் எதிரில் நீங்கள் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர்கள் .


மிக அதிக அளவு வேலை செய்வது வீட்டில் இருக்கும் பெண்களே என்று ஒரு  சர்வே  சொல்கிறது.


எல்லோருக்கும் 'சண்டே'  என்றால் ரெஸ்ட் எடுக்கும் நாளாகவும் ஆனால் அவளுக்கு மட்டும் 'சண்டே' என்றால் ஓவர் டைம் செய்யும் நாளாகவும் ஆகிவிடுகிறது. எல்லோருக்கும் பிடித்ததை மெனு போட்டு செய்யணும் அல்லது நீங்கள் அழைக்கும் நண்பர் குடும்பத்திற்கு பார்த்து பார்த்து வித விதமாக சமைத்து போடணும்.

இதை சிறிது யோசித்துபார்த்தால் உங்கள் மனதுக்கே அது நல்லதா கெட்டதா கஷ்டமா இல்லையா என்று தெரிந்துவிடும்.

அதனால் முடிந்த வரை அவர்களுக்கும் சண்டே ஒய்வு நாளாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள் அல்லது அந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாளாக ஆக்குங்கள். ஆண்களே பெண்களை போற்றி துதி பாட வேண்டாம் அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை.........


பெண் என்பவள் சக்தியின் ரூபம் தான் . எவன் ஒருவன் வீட்டில் பெண்ணை மதித்து, மரியாதை கொடுத்து ஒரு உணர்ச்சியுள்ள மனுஷியாக நடத்துகிறானோ அவனுக்கு இந்த சமுதாயம் நிச்சயம் தலை வணங்கும்.


நான் கற்று அறிந்த பெண்ணின் மொழிகள் என்ற பொன்மொழிகள் "


எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்.

ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை-இங்கர்சால்

ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது-வால்டேர்.

தியாகம், அமைதி, சகிப்புத் தன்மை, பணிவு, நம்பிக்கை, அறிவு ஆகியவற்றின் உருவமாகவே பெண்குலம் இருந்து வருகிறது - காந்திஜி.

குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் - கார்ட

ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல - பெல்லா  அப்சக்


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"




16 comments:

  1. சூப்பர் பதிவு
    தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளும்
    சொல்லியுள்ள ஆணுக்கான கடமைகளும் அவசியம்
    கடைபிடிக்கவேண்ட்யவையே
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுல மகளிரணியின் சார்பில் நன்றி.

    ReplyDelete
  3. துணைவியை தன்னில் பாதியாக மதித்து, புரிந்து நடக்கும் கணவர்களின் எண்ணிக்கை சொற்பமே. இது பெருக வேண்டும். அதற்கு இதுபோல் பல பதிவுகள் வர வேண்டும். சல்யூட் உங்கள் எண்ணங்களுக்கு!

    ReplyDelete
  4. மிக நல்லபதிவுக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. சேம் ப்ளட்....

    மனசாட்சி வேறு மாதிரி சொல்லுச்சி - இது உங்க ஸ்டைல் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  6. ம்ம் இத பார்த்து பல பேர் கடைபிடித்தால் சந்தோஷம் தான்

    ReplyDelete
  7. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அடங்கிய பதிவு. அருமை நண்பரே!

    ReplyDelete
  8. அனைத்தும் யோசிக்கவேண்டிய விசயங்கள் ..!

    ReplyDelete
  9. சிந்திக்க வேண்டிய பதிவு. அருமை

    ReplyDelete
  10. நல்லதொரு பகிர்வு. எல்லா ஆண்களும் இதை படிச்சு புரிஞ்சு நடந்து கொண்டால், சண்டை, டவர்ச்ன்னு போக தேவை இல்லை சகோ

    ReplyDelete
  11. had you gone to police station at least once for crime (dowry) which you had not committed? do you know how women of today are misusing ?

    ReplyDelete
  12. neengal vaalha valamudan..
    miga alahaaha eludhi irukiringa..
    ungal karuthukal and the way u tell the karuthukal are very amazing..

    ungalai maathiri orruku oruthar irunthaal... elaa family yum sandhoshamaaha vaalum...

    Pengal sandhoshamaaha irundhaal ...
    andha family will be happy...
    family happy yaa irunthaaal....
    pakathil ulavanga elaarum happy..
    .then...andha city ae happy..
    .then..andha country will be happy...
    then andha world will be happy..

    all ur posts are very nice and interesting to read.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.