உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 29, 2012

மனிதனின் உள்ளங்கை இதுவரை நீங்கள் பார்க்காத கோணத்தில்(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

மனிதனின் உள்ளங்கை இதுவரை நீங்கள் பார்க்காத கோணத்தில்(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)இது உங்களை பயமுறுத்துவதற்காக போட்டது அல்ல இது நாம் தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய.
மதுரைத்தமிழன் படித்த பார்த்த ரசித்தவைகள் உங்கள் பார்வைகளுக்கு

Thursday, June 28, 2012

காதலியைத் தேடி ஒரு பயணம்....


காதலியைத் தேடி ஒரு பயணம்....

எனக்கும் ஒரு காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து
என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)
இவள் எனக்கு காதலியாக இருக்கும் போதே
இவ்வளவு அன்பு காட்டுகிறாளே(அப்படிதான் மக்கா நடிப்பாங்க)
அவளே எனக்கு மனைவியாக வந்தாள் எப்படி இருக்குமென(வேண்டாம் இந்த விபரீதம்)
கற்பனை சிறகை பறக்கவிட்டேன்( ஆமாம் இவரு பெரிய பாடகர்)
அதுவும் மிகவும் இனிமையாக இருந்தது.
இனிமையான கனவை நினைவாக்க முயற்சி செய்தேன்(உனக்கு நீயே கல்லறை தோண்டுகிறாயா?)
அதனால் காதலியை மனைவியாக்கினேன்(கடவுளே இந்த அப்பாவியை நீதான் காப்பாற்ற வேண்டுமப்பா)
காதலி மனைவியானது அன்பு அதிகாராமாக மாறியது.(இன்னொரு ஜெயலலிதாவாஆஆஆஆஅ)
அதிகாரத்தைவிட அன்புதான் எனக்கு பிடித்திருக்கிறது.
அதனால் அன்பைபொழியும் காதலியைத் தேடி எனது பயணம் தொடர்கிறது( டேய் நீ இன்னொரு பெண்ணுக்கு ஆசைபடுறேன்னு தைரியமா சொல்லேண்டா)


நீங்க நினப்பது மாதிரி நான் அப்படி மோசமானவன் இல்லைங்க. நான் சொல்ல வருவது என்னவென்றால் மனைவியை மீண்டும் காதலியாக்க நான் முய்ற்சி செய்கிறேன் என்றுதான். அதற்கு உங்களிடம் ஐடியா ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்

என்னடா இதெல்லாம் ஒரு பதிவா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய நம்ம வலைதளம் தினம் தேடி வருபவர்களை ஏமாற்ற கூடாது என்ற நல்ல எண்ணமும் மேலும் என்ன பதிவு போடவது என்று யோசித்ததில் மூளை சுளுக்கி கொண்டதால் வேறு வழியின்றி இந்த பதிவை இட்டுள்ளேன்.

டிஸ்கி: இது என்னுடைய கற்பனை பதிவுதான். அதனால் இது உங்கள் வாழ்க்கை அனுபவமா என்று என்னை கேட்டு என் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க பின்னுட்டத்தில் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்( அப்பாட  யாரவது மனைவியிடம் வத்தி வைச்சால் அதில் இருந்து தப்பிக்க ஒரு வழியா டிஸ்கியில் போட்டு விட்டோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இப்போதைக்கு கவலையில்லை)


அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

Tuesday, June 26, 2012

ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டும் அறிவு ஜீவிகள் படிப்பதற்காக (நீங்களும் படிக்கலாம்)


ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டும் அறிவு ஜீவிகள் படிப்பதற்காக (நீங்களும் படிக்கலாம்)

ஜெயலலிதா தமிழகத்திற்கு அம்மாவாம் ரொம்ப படிச்சவங்களாம் சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.அவர்கள் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். காரணம் அவர் மிக போல்டாக துணிச்சலாக எந்த முடிவையும் எடுப்பார்களாம். இதை அந்த அறிவு ஜீவிகள் சொல்லும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

அறிவு ஜீவிகள் சொல்வது போல அப்படி என்ன துணிச்சலான முடிவை எடுத்தார் அவர்? தமிழகத்திற்கு தாயாக போற்றப்படும் அவர் தமிழக மக்களை தன் பிள்ளையாக கருதி அவர்களின் நலன் கருதி டாஸ்மாக்  கடைகளை மூடிவிட்டாரா? அல்லது அணு உலை மக்களை பாதிக்கும் அதனால் அதை நான் ஆட்சியில் இருக்கும் வரை தொடங்க விட மாட்டேன் என்று அறிவித்தாரா?கர்நாடகா தண்ணிர் தரவில்லை அதனால் கர்நாடகம் கிடுகிடுங்க எதாவது செய்தாரா? இல்லை தமிழகத்தில் நடக்ககும் மணற் கொள்ளைகளை தடுப்பதற்காக எந்த துணிச்சாலான முடிவை எடுத்தார்?

துணிச்சலாம் துணிச்சல் நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது. அவர் செய்வதெல்லாம் சர்க்கஸில் வரும் ரிங் மாஸ்டர் மிருகங்களிடம் அப்படியே என்னை ஒரு ரவுண்டு சுற்றிவா? எல்லோருக்கும் ஒரு கும்பிடு போடு. இந்த பெஞ்சில் இருந்து அந்த பெஞ்சுக்கு தவ்வு. அப்படிய தரையில் விழுந்து வணங்கு என்று சொல்வது போல அமைச்சர்களை ஆட்டுவித்து கொண்டிருக்கிறார். இதையே பல பள்ளிகூட ஆசிரியர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஆனால் அவர்களும் பிரதமர் பதவிக்கு இவரை விட அதிக அளவு தகுதி வாய்ந்தவர் தானே?

ஆமாம் இதை ஏன் இப்ப சொல்லிக் கொண்டு இருக்கிறாய். இப்ப வருவது ஜனாதிபதி தேர்தல்தானே பிரதமர் பதவிக்கான தேர்தல் வரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

நேற்று டிவியில் நான் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் சிக்கிம் மாநிலத்தில் எடுத்த ஒரு நல்ல முடிவு அந்த மாநிலத்திற்கும் அந்த மாநில மக்களுக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர்களை இட்டு செல்கின்றது.அது மட்டுமில்லாமல் அந்த மாநிலம் இந்தியாவிற்கு ஒரு முன் மாதிரியான மாநிலமாகவும் விளங்குகிறது.. இந்த மாதிரியான துணிச்சலான முடிவை எடுத்து மக்களின் நலனை கருதும் அந்த மாநில முதல்வர்களை பாராட்டி அவர்கள் மாதிரியான மக்கள் நலன் கொண்ட ஆட்கள் இந்தியாவின் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வர வேண்டும் அப்போதுதான் நம் நாடு உலகின் தலை சிறந்த நாடாக இருக்கும் என்பது என் கருத்து. அப்படி என்ன முடிவை அந்த மாநில முதல்வர்கள் எடுத்தார்கள் என்பது தெரிய வேண்டுமா தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு புரியும்

2003 ம் ஆண்டில் இருந்து சிக்கிம் மாநிலம் செயற்கை உரங்களையும் மருந்துக்களையும்(chemical fertilizers and pesticides) முற்றிலும் தடை செய்துவிட்டது. 2015 க்குள் மாநிலம் முழுவதும் 100 சதவிகிதம் இயற்கையான முறையில் விவசாயம் செய்து மக்கள் உடல் நலத்திற்கு நலம் விளைவிக்கும் முறையில் பயிரிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர்  பவான் (Chief Minister Pawan Chamling) அறிவித்துள்ளார். இதை விவசாயிகளுக்கு மிக பக்குவமாக எடுத்து உரைத்து அதன் பலன்களை உணரச் செய்து இந்த இயற்கை முறையில் விவசாயம் செய்யது மக்கள் உடல் நலனை பாதுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.சிக்கம் மாநிலத்தை போல மற்ற மாநிலமும் இந்த திட்டத்தை தொடருமானால் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா வரும். உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா வரும் என்பது இயற்கை முறை உணவை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல மக்களின் உடல் நலத்திலும் கூடத்தான்.

 இப்ப சொல்லுங்க இந்த மாதிரி முடிவுகளை எடுப்பவர்கள் நம் நாட்டை ஆள வேண்டுமா அல்லது டாஸ்மாக்கின் டார்கெட்டை கடந்த ஆட்சியில் உள்ளவர்கள் செய்ததைவிட இந்த ஆட்சியில் உள்ளவர்கள் அதிகரித்து மக்களின் நலனை கெடுத்து அதில் வரும் வருமானத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று அறிவிஜீவித்தானமாகவும் போல்டாகவும் சிந்திப்பவர்கள் நம் நாட்டின் தலைவராக வேண்டுமா?

எது உங்கள் மனதில் என்ன  நியாமாகபடுகிறது என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமல்லாமல் இதை படிப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாமே?

அன்புடன்
உங்கள் அபிமானத்திர்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் 
இங்கு கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog