பெண் என்றாலே சுகம்தானோ...............
அம்மாவின்
மடியில் தலை சாய்க்க,
அவளும்
மெதுவாய் நம் தலை கோத,
எத்தனை
வருடமானாலும் மாறாத அவள் அன்பில்
அவள்
புடவை வாசனையில் மனம் மயங்க
அந்த
அனுபவம் என்றும் சுகமாக இருக்கிறதே...
இந்த அப்பாவி ஆண்களுக்கு
அது
போல காதலியின் மடியில் தலை சாய்க்க,
அவளும்
மெதுவாய் நம் தலை கோத,
அந்த
அனுபவமும் சுகமாக இருக்கிறதே....
இந்த அப்பாவி ஆண்களுக்கு
(இது எனது எல்லா காதலிகளுக்கும் பொருந்தும். அப்பா தப்பிச்சோமாடா பழைய காதலிகளை பார்த்தால் இதை அவர்களை
நினைத்துதான் எழுதியது என்று சொல்லி சமாளித்து விடலாம்)
( இதை எழுதும் போது மனைவி சமையல் கரண்டியோடு வருகிறாள் சமையலில் சந்தேகமா அல்லது
இந்த அப்பாவி கணவன் மீது சந்தேகமா தெரியவில்லையே. எதற்கும் அவளை
பற்றியும் இரண்டு வரி எழுதிவிடுவோம்.)
அது
போல மனைவியின் மடியில் தலை சாய்க்க,
அவளும்
மெதுவாய் நம் தலை கோத,
அந்த
அனுபவமும் சுகமாக இருக்கிறதே....
இந்த அப்பாவி ஆண்களுக்கு
அது
போல சிணுங்கிவரும் நம் குழந்தை
நம்
மடியில் தலை சாய்க்க
நாமும்
மெதுவாய் பாசத்தோட அவள் தலை கோத,
அந்த
அனுபவமும் சுகமாக இருக்கிறதே....
இந்த அப்பாவான ஆண்களுக்கு
பெண்ணே நீ
எந்த முறையாக இருந்தாலும் ஆண்களுக்கு சுகமாய்தான் இருக்கிறாய்!!!!!
அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக
பெண்ணே நீ எந்த முறையாக இருந்தாலும் ஆண்களுக்கு சுகமாய்தான் இருக்கிறாய்!!!!!//
ReplyDeleteஅருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
unmai unmai!
ReplyDeletearumai!
சுகம் என்பவர்களை சுமை என நினைக்காதவரை .
ReplyDeleteஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ
ReplyDelete