Friday, August 29, 2014


p

These are questions I would ask myself if I met them in personஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்
ஜெயலலிதா: வானாளாவிய அதிகாரம் படைத்த பெண் முதலமைச்சராகிய நீங்கள் ஏன் பெண்களின் முக்கிய பிரச்சனையான கழிப்பிட பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?கலைஞர்: தங்களுக்கு பின் தலைவர் யார் என்பதை ஜனநாயக முறையில் கட்சிக்குள் தேர்தலை வைத்து ஏன் தேர்ந்தெடுக்க கூடாது? இதனால் கட்சியில் மட்டுமல்ல உங்கள் குடும்பத்திலிலும் குழப்பம் ஏற்படாதே. அதை ஏன் நீங்கள் முயற்சி செய்து பார்க்க கூடாது?
ஸ்டாலின் & அழகரி : உங்களின் இருவரிடமும் நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பணம் இருந்தும் ஏன் இப்படி பதவிக்கு அதுவும் ஒரே குடும்பதிற்குள் அடித்து கொள்கிறீர்கள் அண்ணணுக்கோ அல்லது தம்பிக்கோ கிடைத்தால் அது தம் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையாக எண்ணி செயல்படலாமே அதில் என தப்பு இருக்கிறது?கனிமொழி : உங்களிடம் திறமைகள் பல இருந்தும் ஏன் அரசியல் சாக்கடைக்குள் வந்து விழுந்தீர்கள்?விகடன் & தினமலர் உரிமையாளர்களே உங்களுக்கு தெரியவில்லையா உங்களின் பத்திரிக்கைகள் நாளுக்கு நாள் தரம் குறைந்து போகிறதே அது பற்றி நீங்கள் உண்மையாக வருத்தப்படுவதில்லையா?நீங்கள் பார்த்து பாரத்து ஆரம்பித்து வளர்த்த குழந்தைகள் போலதானே இந்த பத்திரிக்கைகளும் அதை நீங்கள் இப்படி தரம் குறைய விடலாமா என்ன?மக்களே இவர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன?

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:


 1. தெருவிற்கு ஒரு டாஸ்மாக் என்ற கொள்கையோடு வாழ்பவரிடம் என்ன இது கேள்வி..

  வயாசாகிடுச்சுன்னு கொஞ்சமும் யோசிக்காமல் கஷ்டமான கேள்வி கேட்டு பெரியவரை குழப்புறீங்க..

  அண்ணன் என்னடா,தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..நான் சம்பாதிக்க நினைப்பதை,சொத்தை என் உடன்பிறந்தவனுக்கு எப்படி தர முடியும்..என்கிறார்கள் சகோதரர்கள்.

  என்னது திறமையா?? கவிதை எழுதுவதில் எப்படி நாலு காசு பார்க்க முடியும்.ஜெயில் போனாலும் இப்பவும் எனக்கு எவ்ளோ விளம்பரம் செய்றாங்க கழக கண்மனிகள்..

  ReplyDelete
 2. எனக்கெனவோ விகடன் தரம் குறைவதாக தெரியவில்லை. அறிவுமதியின் தங்கத்தமிழ், கல்வி நிறுனங்கள்(தனியார், அரசு என பேதமின்றி) சட்டையை பிடித்து உலுக்கும் கற்க கசடற, பெண்கள் பொதுவெளியில் பேசவே வாய்ப்பளிக்கபடாத பேசாத பேச்செல்லாம் இன்னும் சொல்லிகிட்டே போலாம். நானும் ஏழாம் வகுப்பு படிக்கையில் இருந்து தொடர்ந்து விகடன் படிக்கிறேன். இன்னும் சரியா சொல்லனும்ன முத்துக்குமார் தீக்குளிக்கும் முன்பிருந்தே வாரம் தவறாது ஈழம் பற்றி மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்கும் ஒரே பத்திரிகை விகடன் தான் என தயக்கமில்லாமல் சொல்லமுடியும். அதுவும் வியாபாரத்தந்திரம் என்று சொல்லிவிடாதீர்கள். :) இப்போ கூட முத்துலிங்கம் கடவுள் தொடங்கிய இடம் என்று அவர்கள் வலியை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார். இன்று சிருதானியம் பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்திகொண்டிருக்கும் விகடனின் பங்கை மறுக்கமுடியாது. இன்பாக்ஸ் நடிகைகள் கவர்ச்சிபடங்களை மட்டும் வைத்துகொண்டு தரம் தாழ்ந்து விட்டது என்று சகா சொல்லவது சரியா? அதுதான் காரணம்னா அந்த காஜல் அகர்வால் போட்டோவை எடுத்துட்டு ரிப்ளை கொடுங்க:), நானும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். அப்புறம் சகா நானும் விகடனும்னு அடுத்த பதிவு பிளான் பண்ணி வச்சுருந்தேன். இப்போ அதை போஸ்ட் பண்ணினா அரசியல் ஆகிடும். எல்லாத்தையும் விட மனிதர்களும், நட்பும் தானே முக்கியம்:)) இன்னொரு தபா பார்க்கலாம்:))

  ReplyDelete
 3. ஒரு மணி நேரம் வாயில நுரைதள்ள கமென்ட் அடிச்சு முடிச்சா:((( மோடம் காலை வாருது:( போன கமென்ட் வந்துச்சோ என்னவோ:((

  ReplyDelete
 4. நீங்களே க்ட்டுவிட்டீர்களே தமிழா....ஆனால் முதல் இரண்டும் தோன்றியதில்லை....மற்ற மூன்றும் அதில் தினமலர் தவிர்த்து அதே கேள்விகள் தோன்றியதுண்டு.

  ஆட்சியில் யாரு இருந்தாலும் கேட்க நினைக்கும் கேள்வி.....நாட்டிற்கு நல்லது செய்வதற்காகத்தான் ஆட்சியைப் பிடிக்கின்றோம் எங்கின்றீர்கள்....அப்படியென்றால் டாஸ்மாக்/மதுபானக் கடைகளினால் சமூகம் சீரழிகின்றதே...அதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை?

  விலைவாசி ஏற்றத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

  லஞ்சத்தை ஏன் ஒழிக்க முடியவில்லை

  ட்ராஃபிக் ரூல்ஸ்/சட்டம்/ஒழுங்கு ஏன் என்ஃபோர்ஸ் பண்ண முடியவில்லை?

  சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குப்பை போட்டால் ஃபைன் என்பது போல் இங்கும் ஏன் ரூல்ஸ் கொண்டுவந்து நாட்டைச் சுத்தாமாக்க முடியவில்லை?

  நிழல் உலகத்தை ஏன் தடை செய்ய முடியய்வில்லை இப்படிப் பல

  ReplyDelete
 5. மு.க விடம்....இவ்வளவு நாட்கள் இல்லாத, ஆட்சியில் இருந்த போதும் இல்லாத அக்கறை, அண்ணாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இப்போது மட்டும் எழுந்தது எப்படி? அரசியலில் பேச வேறு ஒன்றும் இல்லை என்பதால் போரடிக்கின்றதோ?

  ReplyDelete
 6. நீங்கள் கேள்வி கேட்ட அனைவரிடமும்,ஈழத் தமிழனாகிய நான்,கேட்க விரும்பும் ஒரே கேள்வி::::::எங்களையும் வைத்து அரசியல் செய்யும் உங்களில் எவருக்காவது,ஈழத் தமிழராகிய எமக்கு,ஈழத்திருநாட்டில் அரசியல்,பொருளாதார,மற்றும் இன்னோரன்ன அடிப்படைப் பிரச்சினைகள் என்ன,என்ன உள்ளனவென்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

  ReplyDelete
 7. நல்ல கேள்விகள்.

  அரசியலில் இருப்பதே பணம் செய்யத் தானே......

  விகடன்: படித்து பல மாதங்கள்/வருடங்கள் ஆகியிருக்கும்..... அதனால் அதன் தரம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. விகடன் மட்டுமல்ல, மற்ற தமிழ் பத்திரிகைகளும் படிக்க இங்கே வாய்ப்பில்லை.

  ReplyDelete
 8. ரசித்தேன் பதிவை கேள்விகள் திரும்பவுமா.... சகோதரர் துளசி அவர்கள் கேள்வியே எனக்கும் தோன்றியது.
  ஆமா என் வலைப்பக்கமும் வரலாமே அங்கு நிச்சயமாக பூரிக் கட்டை இல்லவே இல்லை.
  தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.