மோடியின் அமெரிக்கா
வருகையும் ஒபாமாவின் பயமும்
என்ன மோடி வருகையை
கண்டு உலகின் வல்லரசான
அமெரிக்காவின் அதிபர்
ஒபாமாவுக்கு பயமா அதி
நிஜந்தானா என்ற கேள்வி
உங்களுக்கு எழக்கூடும்..
நம்பினா நம்புங்க
உண்மையிலேயே ஒபாமா மோடியை
கண்டு பயந்து போய்தான்
இருக்கிறார்.
காரணம் மோடி
அமெரிக்கா வரும் போது ஏதாவது
கறுப்பின பையனை உடன் அழைத்து
கொண்டு வந்து 20 வருடத்திற்கு
முன்னால் இந்த சிறுவனை
சிறுவர்களை கடத்தும்
ஆட்களிடம் இருந்து தான்
மீட்டு வளர்த்து வந்ததாகவும்
இப்போதுதான் தெரிந்தது அவர்
ஒபாமாவின் பையன் என்று கூறி
எதாவது ஒரு சிறுவனை தன்
தலையில் கட்டி வைத்துவிட்டால்
என்ன செய்வது என்று ஒபாமா
மிகவும் பயந்து போய்
இருக்கிறார்..
ஒபாமா மட்டுமல்ல ஐநா
சபையில் பேச வரும் மற்ற நாட்டு
தலைவர்களும் பயந்து போய்தான்
இருக்கிறார்கள் காரணம் எங்கே
இந்த மோடி ஏதாவது ஒரு பையனை
பிடித்து கொண்டு வந்து இது
உங்க பையன் உங்க நாட்டு பையன்
என்று கூறி குடும்பத்தில்
மட்டுமல்லாமல் நாட்டிலும்
குழப்பம ஏற்படுத்திவிடுவாரோ
என்ற பயம்தானுங்க
நடிகர் விஜய்யின் மீது
மோடியும் அவரது
ஆதரவாளர்களுக்கும் மிக கடும்
கோபமாம் காரணம் அடுத்த
சூப்பர் ஸ்டார் பட்டத்தை மோடி
பெறுவதற்கு முன்னால் காசு
கொடுத்து அந்த பட்டத்தை விஜய்
வாங்கி விட்டார்
என்பதால்தானாம்
போலீஸ் ஸ்டேஷனில்
பெற்றோர்: சார் எங்க குழந்தைய
காணும் என்று கம்பிளையண்ட்
கொடுத்தோமே ஏதாவது தகவல்
தெரிஞ்சதா?
போலீஸ் : சார் உங்க
குழந்தையை மோடி பாதுகாத்து
வளர்க்கிறார் என்று
சந்தேகப்படுகிறோம். அவர் எப்ப
உங்க ஊருக்கு வருகிறாரோ அப்ப
அந்த குழந்தையை மீடியாக்களின்
முன்னிலையில்தான் தருவார்.
அது வரை நீங்கள் பொருத்து
இருக்கதான் வேண்டும்
போலீஸ் ஸ்டேஷனில் : சார்
எங்க குழந்தைய காணும்
கண்டுபிடித்து தாருங்கள்
போலீஸ் : உங்களுக்கு
யார் மீதாவது சந்தேகம்
இருக்கிறதா?
பெற்றோர்: சார்
எங்களுக்கு மோடிமீதுதான்
சந்தேகம் இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
மோடி அமெரிக்கா வருவதே எதற்கு தெரியுமா நண்பரே, அவரைப்பற்றி இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவதால், உங்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்கத்தானாம்!!!
ReplyDeleteஇருந்தாலும்.... மோடியை இப்படி சித்தரித்தது மோசடிதான் நண்பா.....
ReplyDeleteட்ரெண்டுக்கு ஏத்த காமெடி! அருமை! உங்க தொல்லை தாங்காம மோடி ஓடிப்போயிருவார் போல இருக்கு! கண்ட்னியு பண்ணுங்க! நாடு பொழச்சுக்கும்!
ReplyDeleteமோடிக்கு இந்தியாவைக் கவனிக்கறத விட, தொலைஞ்சு போன பையங்கள எடுத்து வளத்து அப்புறம் அவங்கவங்க ஊருல கொண்டு சேர்க்கறதுதான் வேலை போல....பையன் யாராவது தொலஞ்சு போனா முடல்ல மோடி வீட்டுல போய் தேடிட்டு அப்புறம் போலீசுக்கு போனா போதுமோ?!!!
ReplyDeleteமோடி வரும்போது நான் அமெரிக்காவில் இருக்கமாட்டேனே!
ReplyDeleteபல வருசத்துக்கு முன்னால மதுரையில் ஒரு சின்ன பையனை காணோமாம். இப்போ அமெரிக்காவில் இருப்பதா கேள்வி! மோடி திரும்ப இந்தியா வரும்போது கையோட அந்த பையனையும் புடிச்சுகிட்டு வந்திடுவாரோ:))
ReplyDelete