உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.
ஒரு அழகிய மணமுள்ள ரோஜா மலரை சில மீன்களோடு போட்டு ஒரு பையில் வைத்தால் சிறிதுநாளில் அது நாறத்துவங்கும். அது போலத்தான் நம் கூட உள்ள மோசமான நட்பால் நமது வாழ்வும் கெட்டுப்போகும்
உங்கள் நண்பர்கள் உண்மையிலேயே உங்களின் நல்ல நண்பர்கள்தானா? உங்கள் வாழ்வு பிரகாசிக்க வழி சொல்லுகிறார்களா அல்லது தவறான இருட்டு வாழ்விற்குச் செல்ல வழி சொல்லுகிறார்களா? நண்பர்கள் நம் வாழ்விற்கு மிக முக்கியம். நாம் வைத்திருக்கும் நட்பு நம் வாழ்வில் நம்மை அறியாமல் பல மாற்றத்திற்கு இட்டுச் செல்லும். அதனால் நல்ல நண்பர்கள் நல்வாழ்விற்கு மிக அவசியம்.
நமக்குப் போரடிக்கும் போதும் ,கவலையுடன் இருக்கும் போதும், உடல் நிலை சரியில்லாத போதும், நாம் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு உடனடியாக பின்னூட்டம் இட்டும், நாம் இடும் பேஸ்புக் ஸ்டேடஸுக்கு தொடர்ந்து லைக்ஸ் போட்டுக் கொண்டும், பதிவர் கூட்டங்களில் அல்லது நமது இல்ல விழாக்களில் கலந்து தோளில் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தும், பாருக்கு வந்து நம்மோடு அமர்ந்து தண்ணி அடிக்கும் நட்புகளைப் பற்றி நான் இங்குக் கூறவில்லை.
நான் சொல்லும் நட்பு உங்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் நட்பு. எதையும் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை நல்ல வழியில் செய்து நம் வாழ்வில் ஒரு பிரகாசத்தைக் கொடுக்கும் நட்பு
நாம் கஷ்டப்படும் போது, நமது நண்பன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நமக்குக் கொடுத்து நாம் கஷ்டப்படாமல் இருக்கச் செய்ய வேண்டும் என்று நினைப்பது நட்பல்ல. நாம் கஷ்டப்படும் போது நம்முடன் உறுதுணையாக இருந்து நீ இப்படிச் செய்து கொண்டிருக்கிறாய் அதனால்தான் உனக்குக் கஷ்டம் அதற்குப்பதிலாக நீ இப்படி இப்படிச் செய்தால் அல்லது நடந்தால் இப்படிப்பட்ட பலன் கிடைக்கும். அதன் மூலம் உன் வாழ்வு இப்படி மாறி துன்பம் இல்லாமல் நன்றாகப் பிரகாசிக்கும் என்று சொல்லி நம் வாழ்வில் யார் கையையும் எதிர்பார்க்காமல் நம் கையால் மாற்றத்தை ஏற்படுத்துபவனே உண்மையான நண்பன்.
உங்களைச் சுற்றி இப்படிப்பட்ட நண்பர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று உங்களையே நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் ரோஜாவைப் பற்றி எழுதியிருப்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். அது மிக முக்கியம் நல்ல நட்புக்கு & நல்வாழ்க்கைக்கு!
நீங்கள் எப்படி வர வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இமயமலைக்குச் சென்று அங்குவசிக்கும் யோகிகளுடனும் சாதுக்களுடன் வசித்து வந்தால் உங்கள் இயற்கை குணம் மாறி நீங்கள் மிக மென்மையுள்ளம் கொண்டவராகவும் அல்லது நடிகர்களுடன் சேர்ந்து வசித்தால் வாழ்க்கையிலும் நீங்கள் நடிக்கவும், பணத்தாசை கொண்ட அம்பானி, டாட்டா கூட சேர்ந்தால் பண ஆசை கொண்டவராகவும், அரசியல்தலைவர்களூடன் சேர்ந்து இருந்தால் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சிறைக்குச் சென்றும், என்னுடன் சேர்ந்து இருந்தால் நல்லவனாகவும் பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல மாறலாம். (ஹீ.ஹீ நம்ம தமிழ் பழமொழி எப்படி எல்லாம் எனக்கு கை கொடுக்கிறது பாருங்க)
நீங்கள் அதிக நேரம் யார் கூட சேர்ந்து இருக்கிறீர்களோ அவர்களின் பழக்க வழக்கங்கள் நீங்கள் அறியாமல் உங்களை மாற்றிவிடும் என்பதுதான் உண்மை. காரணம் மனிதர்களாகிய நாம் இந்த உலகின் பல இடங்களிலிருந்து தகவல்களை எடுத்துக் கொண்டு நாம் அதற்குத் தகுந்து நம்மை மாற்றிக் கொள்கிறோம். அதனால் நட்பு மிக முக்கியம் . அது இந்த உலகில் மிக முக்கியமான பாத்திரமாக இருந்து நமது வாழ்க்கையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. நண்பர்களின் ஆதிக்கத்தைச் சார்ந்துதான் நமது எதிர்கால வாழ்க்கை மாறுகிறது. அதனால் இப்ப சொல்லுங்கள் உங்கள் நண்பர்கள் உண்மையான நண்பர்கள்தானா ?????
இந்த பதிவைப் படித்த அனைவருக்கும் நான் கேட்டுக் கொள்வது இதுதான்.. உங்களைச் சுற்றி இருக்கும் நண்பர்களைப் பாருங்கள் அவர்களில் யார் மிகவும் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து ஒரு காசைகூட தரவேண்டாம். ஆனால் அவனும் உங்களைப் போலக் கஷ்டம் இல்லாமல் இருக்கும் நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்யவேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள் அதைவிட்டு விட்டு எங்கே நாம் அவனுக்கு வழிகாட்டினால் எங்கே அவன் நமக்கு இணையாக வந்துவிடுவானே அப்போது நம்மைப் பற்றி பெருமை பேச ஆள் இருக்க மாட்டேன் என்று மட்டும் நினைத்து இருந்து விடவேண்டாம்
இப்படியும் ஒரு நட்பா? ஆண் பெண் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு https://avargal-unmaigal.blogspot.com/2012/01/blog-post_13.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
இது ஒரு மீள்பதிவு
#நட்பு #நல்லநட்பு #வாழ்க்கைமாற்றம் #உண்மையானநட்பு #நட்பின்அழகு #நட்புசிந்தனை #நட்புமிகமுக்கியம் #நட்புவாழ்க்கை #நட்பின்மூலம் #நட்புசிறப்பு #நட்புக்காக #நட்பைபுரிந்து #நட்பைபார்க்கும் #நட்பைமாற்றும் #நட்பைநினைத்துப் பாருங்கள்#TrueFriendship #PowerOfFriendship #FriendshipMatters #ChooseYourCircleWisely #LifeChangingFriendship #PositiveVibesOnly #FriendshipGoals #RealFriendsOnly #InfluenceMatters #FriendshipWisdom #CircleOfInfluence #FriendshipReflection #MeaningfulConnections #FriendshipAwareness
அருமையான பதிவு ஒன்றைப் போட்டுள்ளீர்கள்... உண்மை நட்பு குறித்த உங்கள் வரிகள் மிக உண்மை..நன்றி.
ReplyDeleteகருத்திற்கு நன்றி
Deleteதல: ஒரே செண்டிமெண்ட்ஸ்ல இறங்கீட்டீங்க! :) இந்த நவீன உலகில் நட்பு பற்றியெல்லாம் எனக்கு பெரிய அபிப்பிராயம் (அப்பாட ஒப்பீனியனுக்கு தமிழ் வார்த்தையை ஒரு வழியா சொல்லியாச்சு :) ) கிடையாது!
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லீட்டீங்க,' நட்பின் சிகரம் வருண்' ணு சொல்லாதீங்க.. :)))
முடிஞ்சா இதைப் பாருங்க!
மறந்து வாழ வேண்டும்!
இதையும்தான் நான் என் பதிவில் சொல்ல நினைத்தேன் பதிவு மிகப் பெரிதாகிவிடும் என்பதால் சொல்லவில்லை. இதில் நீங்கள் சொல்லியதுதான் நான் நினைப்புதும் எந்த விசயத்தில் நமக்கு ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்த விசயத்தில் நாம் இருவரும் ஒத்து போகிறோம் பாஸ்
Deleteமுடிஞ்சா இதையும் பாருங்க!
ReplyDeleteஇதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!
படித்தேன் ரசித்தேன்...
Deleteஉண்மையான நட்புக்கு இதுவரை யாரும் சொல்லாத (அல்லது நான் படிக்காதது....?) ஒரு புதிய விளக்கம் சொல்லும் உங்கள் பதிவு நிச்சயம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்
ReplyDelete
Deleteபலருக்கும் பயனுள்ளதாக இருக்குமானால் மிகவும் மகிழ்ச்சியே. கருத்திற்கு மிக நன்றி
//அவர்களின் பழக்கவழக்கங்கள் நீங்கள் அறியாமல் உங்களை மாற்றிவிடும் //
ReplyDeleteமிக சரியாக சொன்னீங்க ..
//accept your friends for who they are // இதன் அர்த்தம் அவர்களின் நிறை குறைகளோடு ஏற்றுகொள்வது மட்டுமே ..அவர்கள் கூட சேர்ந்து நாம் குப்பையில் விழுவதில்லை !! குப்பையில் இருந்து தூக்கி எழுப்புவது மட்டுமே நாம் செய்யணும்
சரியான உவமை ரோஜா மலர் .!!.
அப்புறம் அந்த மற்ற பதிவையும் படிச்சேன் ..ரொம்ப நல்லா இருக்கு .
படித்து ரசித்து இட்ட கருத்திற்கு மிக நன்றி
Deleteநட்பு குறித்து அழகான பகிர்வு.
ReplyDeleteபடித்து புரிந்து இட்ட கருத்திற்கு மிக நன்றி
Deleteநட்பைப்பற்றி அழகாக, அழுத்தமான விளக்கவுரை நண்பா,,, இன்று முதல் நீரே எமது நண்பன்...
ReplyDeleteநான் கடைசி பாராவில் சொல்லியது போல செய்யுங்கள் அல்ல்து அதற்கு முயற்சி செய்யுங்கள்
Deleteமிக சிறப்பான பதிவு! முதலில் சொன்ன ரோஜாப்பூ, மீன் உவமையும் ரெட் லைட்டில் மின்னிய வாசகங்களும் மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது முதல் பதிவிற்கும் மீள்பதிவான இதற்கும் இட்ட கருத்திற்கு மிக நன்றி
Deleteஅருமையான விளக்கங்கள் நட்புக்கு நல்ல உதாரணங்களுடன். விளையாட்டுப் பிள்ளை என்றல்லவா நினைத்தேன் இப்படி விளாசுகிறீர்களே சகோ. இன்று முதல் கில்லர்ஜீ உங்க நண்பனாமே அப்போ இவ்வளவு நாளும் இல்லையா. ok ok நடக்கட்டும் நடக்கட்டும். நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!
ReplyDelete
Deleteஇது ஒரு மீள்பதிவு இதை கடந்த 2 வருடங்களாக பதிவு இட்டு வருகிறேன். ஆரம்பத்தில் சீரியஸாக இருந்த நான் இப்போது காமெடி பீஸாக மாறிவிட்டேன் அவ்வளவுதாங்க்
நல்ல பகிர்வு.... உண்மையான நட்பு பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி......
ReplyDeleteஎனது எண்ணங்களை புரிந்து இட்ட கருத்திற்கு மிக நன்றி
Deleteஅருமையான கருத்துக்கள் அடங்கிய நல்ல பகிர்வைத் தந்திருக்கிறீர்கள். குறிப்பாக கடைசிப் பாரா... எனக்கு மிகமிகப் பிடித்திருக்கிறது நண்பரே.
ReplyDeleteகருத்திற்கு மிக மிக நன்றி
Deleteஅறிவுரை ஒன்றுதான் இந்த உலகில் மிக மலிவாகக் கிடைக்கும் பொருள். அதை தாரளமாக நண்பர்களுக்கு வழங்க அறிவுறுத்தும் உண்மைத்தமிழனுக்கு பாராட்டுகள். மேலும் பெண்கள் பற்றிய பார்வை, குடிப்பழக்கம் ஆகியவற்றைக் குறித்து உண்மைத்தமிழனுக்கு உள்ள கருத்துக்கள் நண்பர்களுக்கு ஆலோசனையாகவோ அல்லது அறிவுறை ஆகவோ சென்றடைந்தால் அந்த நண்பர் உருப்பட்டது போலத்தான். காலப்போக்கில் உண்மைத்தமிழனின் வலைத்தளம் ஜால்ரா கோஷ்டிகளின் கூட்டமைப்பாக மாறிவருவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது காலத்தின் கோலமே. பாராட்டுக்கள்.
ReplyDeleteநண்பரே நான் உண்மைதமிழன் அல்ல மதுரைத்தமிழன் உண்மைதமிழன் என்று என்னை அழைத்தால் அவர் உங்களிடம் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்
Deleteஅறிவுரை விளக்கெண்னைப் போலதான் கொடுப்பவருக்கு எளிது ஆனால் அதை உபயோகப்படுத்துபவருக்கு மிக கடினம் என்பதை நான் அறிவேன்
பெண்களை பற்றி நான் எப்போதும் எங்கும் தவறாக சொல்லவில்லை.... நான் பூரிக்கட்டை & என் மனைவி பற்றி கிண்டல் அடிப்பது நகைச்சுவைக்காக ஆனால் அதில் எங்கும் தவறாக சொல்லவில்லை.. உங்களுக்கு எல்லாம் நான் முகம் தெரியாதவன் ஆனால் என் முகம் தெரிந்தவர்களுக்கும் என்னப்பற்றி தெரிந்துதவர்களுக்கும் நான் எப்படி என்று மிக நன்றாகவே தெரியும்
அடுத்தாக என்னைப் போல ஒரு குடிகாரன் என்றால் அவன் மிக நல்லவனாகத்தான் இருப்பான் அதில் மாற்று பேச்சுக்கே இடமில்லை. என்னை போல உள்ளவர்கள் சோசியலுக்காக குடிப்பவர்கள் ஆனால் யார் குடியையும் கெடுக்காதவர்கள்
நான் இந்த பதிவில் நல்லதைத்தான் கூறி இருக்கிறேன். ஒரு வேளை அது உங்களுக்கு உகந்ததாக இல்லை என நினைக்கிறேன்.
நீங்கள் ஒருத்தாரவது ஜால்ரா போடாமல் கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே
இதுவரை தங்களின் நகைச்சுவை கற்பனை திறனை கண்டு வியந்திருக்கிறேன்.
ReplyDeleteஇப்பொழுதோ சிந்திக்கக்கூடிய ஒரு பதிவை எழுதி,தங்களின் ஆழமான எழுத்துத் திறனை கண்டு மேலும் வியக்கிறேன்.
அதிலும் அந்த கடைசி இரு வரிகள் - அனைவரும் பின்பற்ற வேண்டிய வரிகள்.
நண்பரே நீங்கள் என்னுடைய பழைய பதிவுகளை படிக்கவில்லை என்பதால் நான் இப்பொழுதுதான் இதை எழுதியதாக நினைத்து இருக்கிறீர்கள். இது 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மீள்பதிவு
Deleteமதுரைத் தமிழா ஆஹா நட் பூ பற்றிய அழகான பூ ஆனால் வாடாத பூ போன்ற பதிவு.....அதுவும் கடைசில வைச்சீங்க பாருங்க பஞ்ச்...சூப்பர்!
ReplyDeleteநாங்கள் இருவரும் 29 வருடங்களுக்கு முன் கல்லூரியில் நட் பூவை மலர்த்தி, பின்னர் வாழ்க்கை திசை மாறி வேறு வேறு ஓடங்களில் பயணித்து, தொடர்பு எதுவும் இல்லாமல், சென்ற வருடம் நாங்கள் சந்தித்த போது, கொஞ்சம் கூட எதுவுமே மறக்காமல், அதே பழைய நட் பூ வாடாமல் அப்படியே இருந்தது நினைத்து அப்படியொரு வியப்பு.....இதோ நாங்கள் நட் பூவால் வலைப்பூ தொடுக்கின்றோம். மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.....
எதிர்பார்ப்பில்லாமல் பழகக் கூடியவர்கள்தான் நண்பர்கள். நம் பலவீனங்களையும் அறிந்தும் பழகுவதாலேயே அந்த நட்புக்குக் கூடுதல் பலம். நட்பில் சறுக்கும் இடங்களும் உண்டு என்பதை எனக்குக் கூட கொஞ்சம் லேட்டாகப் புரிய வைத்த நண்பன் ஒருவன் உண்டு! ஒருவேளை, அவனும் என்னைப் பற்றி இதே போல அபிப்ராயம் வைத்திருக்கக் கூடும். நட்பைப் பற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநண்பர்கள் பற்றிய
ReplyDeleteசிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteநம்முடன் இருக்கும் நட்புகளே பல நேரங்களில் நம் மன நிலையை தீர்மானிக்கும்..