Sunday, August 2, 2020

#NEWS7TAMILPrime  #A.rasa #a.raja
முட்டாள்கள் நிறைந்து இருக்கும் தேசத்தில் மோடியும் ஸ்டாலினும் ஆட்சியில் அமரலாம் ஆனால்...?


ஒரு தலைவருக்கு அழகு சரியாகச் சிந்திப்பதும் அப்படிச் சிந்திப்பதைத் தெளிவாகப் பேசுவதும்தான் அதைச் செயல்படுத்துவதும்தான்.. அப்படிப் பார்க்கையில் ஸ்டாலினாக இருந்தாலும் சரி மோடியாக இருந்தாலும் சரி அதற்குச் சற்றுப் பொருத்தம் இல்லாதவராகவே நான் கருதுகிறேன்.
இவர்கள் இருவரையும் இப்படிச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் அவர்கள் இருவரும்தாம் தமிழகத்தில் பேசும் பொருளாக இருக்கிறார்கள்....
 

ஸ்டாலின் ஒரு தலைவராக இருந்து பேசுகிறார் அந்தப் பேச்சில் எந்தவிதமான ஒரு உயிர்ப்பும் இல்லை என்பதுதான் உண்மை.. மோடி நன்றாகப் பேசினாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதும் உண்மை. மோடியின் பேச்சில் ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்காக இனத்திற்காக ஆதரவாகப் பேசுவது போலத்தான் நடிக்கிறாரே தவிர அந்தச் சமுகத்திற்காக இனத்திற்காக உண்மையில் பாடுபடுகிறார் என்றால் இல்லை என்றுதான் நன்றாகச் சிந்திக்கக் கூடியவர்கள் சொல்லுவார்கள்.

சில நாட்களுக்கு முன்னால் நீயூஸ் 7 ல் நடந்த விவாதத்தில் ராசாவின் பேச்சைக் கவனித்துக் கேட்கும் போது அவரின் பேச்சு ஒரு சிறந்த தலைவருக்குரிய பேச்சைப் போல இருக்கிறது ... இந்த விவாதத்தில் அவர் தெளிவாகவும் யார் மனதையும் புண்படுத்தாமல் ஆணித்தரமாகக் கருத்தை எடுத்துச் சொல்லுவதும் மிகவும் பாராட்டுக்குரியது.....


இவரது இந்தப் பேச்சு அவரது கட்சிக்காரர்களையும் தாண்டி பல தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இருக்கிறது என்பதைச் சமுக வலைத்தளங்களில் வலம் வருவதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது..

இப்படி இவர் பலரால் பாராட்டப்படும் போது அவரின் வளர்ச்சி கலைஞரின் குடும்பத்தால் பாதிக்கப்படுமோ என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது. எப்படிக் கலைஞரின் போர்வாளாகச் செயல்பட்ட வை.கோவாவின் எதிர்காலம் ஸ்டாலினுக்காகக் கலைஞர் நடத்திய சதித் திட்டத்தால் பாதிக்கப்பட்டதோ அது போல உதயநிதியின் வளர்ச்சிக்காக ஏன் ஸ்டாலினின் வளர்ச்சிக்காக ராசாவின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் என்பதுதான் யோசிக்கும் போது தோன்றுகிறது

முட்டாள்கள் நிறைந்து இருக்கும் தேசத்தில் மோடியும் ஸ்டாலினும்  தலைவர்களாக வரலாம் , ஆட்சியில் அமரலாம் ஆனால் திறமையுள்ள ராசா போன்றவர்கள்  தலைவர்களாக ஆகவும் முடியாது & ஆட்சியில் அமரமுடியாது என்பது கசக்கும் உண்மை



Courtesy : #NEWS7TAMILPrime




11 comments:

  1. சரியான கணிப்பு தமிழரே...

    ReplyDelete
  2. அடித்து துவைப்பது எப்படி...? இணைப்பில் அறியலாம்...!

    "அந்த நெறியாளர் எப்படி இவ்வாறு கேள்வி கேட்கலாம்...? இது திட்டமிட்ட சதி... நெறியாளர் பதவியில் அமரக் கூடாது" என்று அவருக்கும் விரைவில் ஒரு காணொளி வரலாம்...

    ReplyDelete
    Replies

    1. இந்த இண்டர்வியூவில் நான் அறிந்து கொண்டது தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்த வந்த ஒருவன் படித்தால் எவ்வளவு தெளிவாக சிந்தித்து பதில் சொல்லுகிறான் ஆனால் அதே சமயத்தில் படித்த மேல்மட்ட சாதியில் இருந்து வந்தவர்கள் எப்படி சங்கிகளாக மாறி நச்சை விதைக்கிறார்கள் என்பதுதான்.. எந்த சங்கியாவது இப்படி நிதனாமாக எளிமையாக ஆவேசப்படாமல் கூச்சல் போடாமல் ஒரு பேட்டி அளிதிருக்கிறார்களா என்று பாருங்கள்

      Delete
  3. தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதால் தலைமை என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதனால்தான் முட்டாள்கள் நிறைந்த தேசம் என்று சொல்லி இருக்கிறேன்

      Delete
  4. கட்சிதான் அதைத் தீர்மாணிக்கும். இயக்கம் தவிர்த்து தனிமனிதராக செல்வாக்கும் இங்கு முக்கியம்.

    ReplyDelete
    Replies

    1. திறமையானவர்கள் செல்வாக்கு பெற முடியாத தேசமாக இந்தியா இருக்கிறது....

      Delete
  5. நலமா சகோ?
    திறமைதான் தலைமை உருவாக்குமா சகோ? ஓ!!

    ReplyDelete
    Replies
    1. திறமைதான் தலைமையை உருவாக்குமா இல்லையா என்று சொல்லவில்லை.. திறமையானவர்கள் தலைமை இடத்திற்கு வர வேண்டும் அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என சொல்லு விழைகிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.