Sunday, August 9, 2020


நாட்டு நடப்புச் செய்திகள் இங்கு நையாண்டி செய்திகளாகிறது

#malan narayananl




நான் மோடி ஆதரவாளன். ஆனால் பாஜக இல்லை.- மாலன். இப்படிப் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்து இருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.. இதைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது நாங்கள் முட்டாள் அல்ல மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுவது மாதிரி எனக்குத் தோன்றுகிறது. அப்ப உங்களுக்கு???



துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்க நாங்கள் தயார்...!- அமைச்சர் ஜெயக்குமார்.
யோவ் அவர் உங்களை மாதிரி மானங்கெட்டவர் அல்ல அவர் உங்களைப் போலப் பாஜகவிற்கு அடிமையாக இருக்காமல் நேராகவே பாஜகவில் சேர்ந்துவிடுவார்


 


துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்க நாங்கள் தயார்...!- அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பது எல்லாம் முதல்வருக்கு மட்டுமே அப்படியானால் துரைமுருகன் அதிமுக முதல்வராக ஆக்கப்படுவாரா என்ன? சொல்லுங்க ஜெயக்குமார் சொல்லுங்க அப்படி என்ன உங்களுக்கு எடப்பாடி மீது கோபம்?



கேரளா விமான விபத்து மனவருத்தத்திற்குரிய செய்தி ஆனாலும் அதிலும் ஒரு சமுகத்திற்குரிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது..

கேரளாவில் விபத்திற்குள்ளான விமானத்தை ஒட்டிய அந்த விமானப் பைலட்ஒரு இஸ்லாமியர் இல்லை என்பதுதான்.. அப்படி இருந்திருந்தால் செய்திகள் வேறு வடிவில் விஸ்வரூபமாக வடிவெடுத்து இருக்கும்.



மோடியின் ஆதிக்கத்தால் பலர் மனநலம் பாதிக்கப்பட்டுச் சங்கிகளாக மாறி இருக்கின்றனர்.. அதோடு இல்லாமல் இந்தக் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பலரும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வந்து இருக்கின்றன... இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என நம்புகிறேன்


தினத்தந்தியில் வந்த கன்னித்தீவு தொடர் கதை போல நீளும் தமிழகத்தின் ஊரடங்கு உத்தரவு


இ-பாஸ்

கூடிய சீக்கிரத்தில் டாஸ்மாக் வருமானத்தைத் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவிற்கு இ-பாஸின் வருமானம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...



அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குச் செல்ல ஆகும் விமான டிக்கெட் செலவைவிடத் தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லுவதற்காகக் கொடுக்கும் இ-பாஸ் கட்டணம் அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை


தரகர் : சார் ஒரு நல்ல மருத்துவர் மாப்பிள்ளை மற்றும் எஞ்சீனியர் மாப்பிள்ளை இருக்குறாங்க நம்ம பெண்ணுக்குச் சரியாக இருக்குமான்னு பார்க்கலாமா?

பெண்ணின் பெற்றோர் : தரகரே என் பெண்ணிற்கு இ-பாஸ் கொடுக்கும் அதிகாரியாகப் பாருங்கள் இப்படி வீணாப்போன மருத்துவர் எஞ்சினியர் என்று ஜாதகங்களை எடுத்துவிட்டு வர வேண்டாம்


புதிய கல்வி கொள்கை படி மாற்றி அமைக்கப்பட்ட பாடம்

அ- அம்மா
ஆ- ஆடு
இ- இந்தி


இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன்....ஆனால் சம்ஸ்கிருத்த்திற்கு என்று எந்த மாநிலமும் ஒதுக்கப்படவில்லை..காரணம் அப்ப மோடி சின்னப் பையனாக இருந்ததால்தான்....



PuthiyathalaimuraiTV :ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

அடேய் 73 வயதான பாரதத்தைப் பலாத்கார கொடுமை செய்பவர் பாஜகவைச் சேர்ந்த தலைவர்தானே அவரைக் கைது செய்யத் துணிச்சல் யாருக்கு இருக்கு


மதச்சார்பற்ற நாட்டை மதச் சார்புள்ள நாடாக மாற்றும் மோடி தன் சர்வாதிகார ஆட்சிக்கு இன்னும் ஜனநாயக முக மூடியை போட்டுக் கொண்டு இருப்பது ஏன்??


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஒரு தீர்த்தம்... சே திருத்தம்...

    அ - அம்மா
    ஆ - ஆடு
    இ - இந்தி

    அல்ல...

    அ - அம்மா
    ஆ - ஆடு
    ஹ - ஹிந்தி

    ReplyDelete
  2. மதுரை தமிழன் பேச்சு பாஷயில் விஷயங்கள் சுவாரசியம். குறிப்பாக சிகப்பு கம்பளத்தில் உங்களால் (ஒருவருக்கு??)மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஆப்பு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.