Wednesday, August 12, 2020


Things that are not Lockdown during Lockdown

லாக்டவுன் சமயத்தில் லாக்டவுன் ஆகாத விஷயங்கள்

சூரிய உதயம் லாக்டவுன் ஆகவில்லை ..

காதல் லாக்டவுன் ஆகவில்லை

குடும்ப நேரம் லாக்டவுன் ஆகவில்லை

கருணை லாக்டவுன் ஆகவில்லை

படைப்பாற்றல் லாக்டவுன் ஆகவில்லை

கற்றல் லாக்டவுன் ஆகவில்லை
    
உரையாடல் லாக்டவுன் ஆகவில்லை

கற்பனை லாக்டவுன் ஆகவில்லை

படித்தல்  லாக்டவுன் ஆகவில்லை

உறவு லாக்டவுன் ஆகவில்லை

பிரார்த்தனை லாக்டவுன் ஆகவில்லை

தியானம்லாக்டவுன் ஆகவில்லை

தூக்கம் லாக்டவுன் ஆகவில்லை

வீட்டிலிருந்து வேலை லாக்டவுன் ஆகவில்லை

நம்பிக்கை லாக்டவுன் ஆகவில்லை

உங்களிடம் இருப்பதை நேசிக்கவும்.

இப்போது இருக்கும் லாக்டவுன் நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதைச் செய்வதற்கான வாய்ப்பாகும் ...

* உங்களைஅன்லாக் செய்து கொள்ளுங்கள் *

அன்புடன்
மதுரைத்தமிழன்


10 comments:

  1. இல்லாததை யாசிப்பதை விட
    என்ன நடக்கும் என்று யோசிப்பதை விட
    இருப்பதை நேசிப்பது மேல்.

    நல்ல அறிவுரை.

    உதயசூரியின் லாக் டோவ்ன் இல்லை என்று படித்ததும் தாம் உடன்பிறப்போ என்று வியந்தேன், மதுர!

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை நண்பரே...

    ReplyDelete
  3. சூப்பர் மதுரை. கடைசில சொன்னீங்க பாருங்க அந்த வரி அருமை.

    கீதா

    ReplyDelete
  4. அருமை...இத்தனை பாஸிடிவ் இருக்க ஒரு நெகடிவை நினைத்து ஏன் கதி கலங்க வேண்டும்...

    ReplyDelete
  5. நம்பிக்கை ஊட்டும் வரிகள்தான்.  

    இப்போது செய்தித்தாள்களில் கூட செய்திகள் போடும் பாணியை மாற்றி விட்டார்கள்.  கொஞ்ச நாட்களுக்குமுன் இத்தனை பேர் பாதிப்பு, இத்தனை பேர் மரணம் என்றெல்லாம் செய்திகள் போட்டார்கள்.  இப்போதெல்லாம் இத்தனை பேர் மீண்டார்கள், இத்தனை சதவிகிதம் குறைந்திருக்கிறது என்று நேர்மறையில் தருகிறார்கள்.  அப்போது லாக் டவுனை நியாயப்படுத்த அப்படிச் சொல்லி, இப்போது லாக் டவுனை விலக்க இபப்டி சொல்கிறார்களோ என்கிற சந்தேகமும் வருகிறது!

    ReplyDelete
  6. சற்றே மாற்றத்துடன் :-

    கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
    காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
    இருப்பவர் யாரோ மறைபவர் யாரோ
    இருக்குது வாழ்வு நீதி சிரித்துவிடு...

    கண்ணதாசன்

    ReplyDelete
  7. இதனுடன்,லஞ்சம்,கமிஷன்,கலப்படம், அதிகார வெறி, நிறவெறி ஆணவ கொலை இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல சிந்தனை.

    ReplyDelete
  8. கருத்து மழை லாக் டவுன் ஆகவில்லை சூப்பர் கருத்து

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு. நம்முடைய செயல்பாடுகள் எதுவும் லாக்டவுன் ஆகவில்லை. அனைத்தும் லாக்டவுன் என்று புலம்பி நம் உற்சாகத்தை இழக்கிறோம். இயல்பாக இருத்தலே இப்போதைக்கு நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.