ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஊற்றும் கூழ் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுமா?
ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் காரணம் இதுதான்
தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிகச் சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, செவ்வாய் விரதம், ஆடி ஞாயிற்றுக்கிழமை என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும்.
அம்மை நோய் என்பது கோடைக் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று என்று சொல்லப்படுகிறது