இந்தச் சாதி வெறி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துவிட்டது ஆனால் இன்னும் கெளரவக் கொலைகள் மட்டும் இங்கு வந்து சேரவில்லை அதையும் கூடிய சீக்கிரம் இங்கு எதிரப்பார்க்கலாம்
அமெரிக்காவில் சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கியக் கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடு காட்டி இரு உயர் சாதி இந்திய உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாக அறியவந்ததை அடுத்துகலிபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த அரசு அமைப்பு ஒன்று (California’s Department of Fair Employment and Housing). சிஸ்கோ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கைத் தனிப்பட்டவர் தொடர்ந்து இருந்தால் ஏதோ காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தொடர்ந்து இருக்கலாம் என நினைக்கலாம் ஆனால் வழக்கு தொடர்ந்ததோ ஒரு மாநில அரசு அமைப்பு , அவர்கள் முறைப்படியான ஆதாரங்கள் இல்லாமல் சும்மா வழக்கு தொடர்ந்து இருக்கமாட்டார்கள் . முறைப்படி அவர்கள் விசாரித்த பிறகே இந்த முடிவிற்கு வந்து இருப்பார்கள்.

ஈக்வாலிடி லேப்ஸ்' அமைப்பு 2018-ம் ஆண்டு சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் அமெரிக்கப் பணியிடங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 67 சதவிகிதம் பேர் மோசமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா இருவரும் மும்பை ஐஐடியில் படித்துப் பின்னர் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் PhD பட்டம் பெற்றவர்கள். எப்படி இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என யோசிக்கவே கசக்கிறது. பாதிக்கப்பட்டவர் பல முறை புகார் கொடுத்ததும் கவனிக்கவில்லை என்பதால் மாநில அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்தச் செய்தி அமெரிக்காவின் எல்லாச் செய்தித் தாள்களிலும் வந்து இருக்கிறது. அதுமட்டுமல்ல சமுக இணையதளங்களிலும் இது பற்றி ஆக்ரோஷமான கருத்து பரிமாற்றங்களும் நடந்து வருகிறது. காரணம் இந்த உயர் சாதிக்காரர்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால்....
இப்படிப்பட்ட சம்பவம் பலருக்கு ஆச்சிரியமாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் எனக்கு இல்லை. இப்படி அமெரிக்கா வந்து சாதி வேறுபாடுகள் பார்ப்பவர்கள் பிராமிண்கள் என்று மட்டும் என்று சொல்ல முடியாது மற்ற சாதியினரும்தான். நம் மக்கள் நம்ம அமெரிக்கா வரும் போது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல சாதிய மனப்பான்மை என்ற் குப்பைகளையும் இங்குக் கொண்டு இங்குச் சாதிய சங்கங்களையும் ஆரம்பித்துவிட்டனர், இந்த மனநோய் சூழல் மாற்றத்தினால் கூட மாற்றப்பட முடியாது எனக் காட்டுகிறது. பொதுவாக இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களில் இத்தகைய சமூக ஏற்றத் தாழ்வுகள் தான் இன்னும் அரசியல் பொருளாதார ரீதியில் வளராமைக்கான காரணியாக இருக்கிறது
பிராமணர்களைக் குறை கூறுவது எளிது .. அப்படிக் குறை கூறுவது என்றால் பலருக்கு இனிப்பானது ஒன்றாக இருக்கிறது... எப்படி இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த ஊடகங்கள் கட்டு அமைத்ததோ அப்படித்தான் சில பிராமணர்கள் செய்யும் தவறுகளை வைத்து ஒட்டு மொத்த பிராமணர்களையும் சம்பந்தப்படுத்தி ஊடகங்கள் கட்டமைத்து குறைகள் கூறுகின்றன.
தமிழகத்தில் பிராமணரை அல்லது பிராமணியத்தை விமர்சிக்கும் பிராமணரைக் கூடக் காணலாம் ஆனால் அது போல மற்ற சாதியினர்களிடத்தில் அதை நாம் காண முடியாது என்பதுதான் உண்மை
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது யார் எல்லாம் சாதிய மற்றும் மதம் சார்ந்த சங்கம் மற்றும் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அல்லது அதற்கு வெளியே இருந்து ஆதரவு தருகிறார்களோ அவர்களின் மனங்கள் எல்லாம் மனிதநேயத்தால் அல்ல மலத்தால் நிரப்பப்பட்டிருக்கும் . நிச்சயம் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா இவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் விஷ்வ இந்து பரிஷித் பொன்ற சங்க பரிவார்களின் செயல்பாடுகள் நிச்சயம் இருக்கும். இந்த இயக்கங்கள் இங்குள்ள பிராணமர்களின் மனத்தை மட்டுமல்ல மற்றைய இந்துக்களின் மனத்தையும் கெடுத்து வருகின்றன. அதுவும் பல குஜராத்திகள் இதில் மிகத் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
எது எப்படியோ நான் சிறு வயதிலிருந்து பிராமணக் குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்தும் பிராமணப் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வந்தும் அமெரிக்கா வந்தும் பல பிராமண மற்றும் பல சாதியை மற்றும் மதங்களைச் சார்ந்தவர்கள் கூட மிகச் சிறந்த நட்புகள் இருக்கிறது. இவர்களில் ஒருவர்கூடச் சாதி வேறுபாடுகள் பற்றி ஏற்ற தாழ்வு மனநிலை கொண்டவர்கள் இல்லை என்பது எனக்கு மிகச் சந்தோசத்தைத் தருகிறது. இதற்கு இவர்களில் ஒருவர்கூடச் சாதிய சங்கங்களில் சேராதிருப்பது கூடக் காரணம் எனலாம்..

இங்கு நான் சொன்ன நட்புகள் நான் நேரில் பார்த்துப் பழகி நட்பு கொண்டவர்கள் சமுக இணையத் தளம் மூலம் அறிமுகமான அல்லது நட்புகள் அல்ல சமுக இணையத் தளம் மூலம் அறிமுகமாகி தமிழகத்தில் வசித்த நான் நேரில் சந்தித்த கீதா ரெங்கன் இதற்கு விதிவிலக்கு... இவர் மிக நல்ல மனதுள்ள தோழி.....
அன்புடன்,
மதுரைத்தமிழன்
அட்டையை தூக்கி கட்டிலில் போட்டால் கிடக்குமா...
ReplyDeleteசும்மா கிடக்காதுதான்
Deleteவர்ணங்களை ஆய்வு செய்யுங்கள்... இன்னமும் அதிகம் புரிந்து கொள்ளலாம்...
ReplyDelete
Deleteகல்லூரி படிப்பின் போது இந்திய கலாச்சாரம் என்ற சப்ஜெக்ட்டில் இது பற்றி படித்து இருக்கிறேன்
பணியிடத்தில் திறமையைப் பார்க்காமல் சாதியைப் பார்ப்பதா? விநோதமாக இருக்கிறது. ஆபீஸ் என்று வந்துவிட்டால் அங்கு மதம், இனம், சாதி போன்றவற்றிர்க்கு இடம் இல்லை. வேலைத்திறன் மட்டும்தான் காரணியாக இருக்கணும்.
ReplyDeleteமனிதனின் குணம்தான் இதற்குக் காரணம் (வீட்டு வளர்ப்பு, பிறந்த குலம்). ஐஐடி படித்தால் மூளையை வாஷிங் மெஷினில் போட்டு சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று நினைப்பது தவறு. முன்பு, ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் தன் மனைவியை அங்கு மோசமாக நடத்தி, ஓடும் காரிலிருந்து கீழே தள்ளியவர் என்று படித்திருக்கிறேன், அந்த மனைவியின் பேட்டியையும் படித்திருக்கிறேன்.
வளர்ப்பு மட்டுமில்லை கூட சேரும் நட்புக்களாலும் இப்படி நேர வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.. நீங்கள் சொன்ன ஆந்திரக்காரர் விஷயம் மாதிரி பல விஷய்ங்கள் இங்கு நடை பெறுகின்றன். அமெரிக்க மாப்பிள்ளை என்று நினைத்து கட்டிக் கொடுத்துவிட்டு பல பெற்றோர்கள் மற்றும் அவர்களது பெண் பிள்ளைகள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல....
Deleteஎல்லா இடங்களிலும் இந்த வெறி! இல்லாத இடமே இல்லை என்றாகி விட்டது. வட இந்தியாவின் கிராமங்களில் இருக்கும் பிரிவினைகள், ஒவ்வொரு பிரிவினரும் மற்றவர்களைப் பார்க்கும் பார்வையே வித்தியாசம் தான். பல சண்டைகள், கௌரவக் கொலைகள் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது - இப்போதும்! இது உடலுக்குள் பரவிவிட்ட புரை! அழிப்பது கடினம் - மனித மனங்களில் இருக்கும் அழுக்குகள் மிக அதிகம்.
ReplyDelete