கொரோனா சாவும் தமிழர்கள் போடும் எமோஷனல் டிராமாக்களும்
ஒருவரின் சாவு என்பது கொடுமையானது அல்ல, ஆனால் ஒருவரின் சாவினால் அன்னாரின் குடும்பத்தில் ஏற்படும் இழப்புகள்தான் கொடுமை. குழந்தைகள் வளரும் பருவத்தில் தாயோ, தந்தையோ இறப்புதான் கொடுமை. காரணம், அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்னென்ன கஷ்டங்கள் பட வேண்டி இருக்கும் என்பது மட்டும்தான் கொடுமை....ஆனால் அந்தக் குழந்தைகள் வளருவதற்கு ஏற்ற அளவு செல்வமும் அந்தக் குழந்தைகளை ஆதரவுடன் கவனித்துக் கொள்ளும் உறவுகளும் இருந்துவிட்டால் எந்த ஒரு இழப்பும் பிரச்சனைகளும் இல்லை என்பதுதான் உண்மை
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இறந்தவர்களுக்காக யாரும் உண்மையில் வருந்துவதே இல்லை .. அவர்கள் வருந்துவது எல்லாம் இறந்தவர்களால் அவர்கள் பெற்ற இன்பங்களை, சந்தோசங்களை, அனுபவங்களை இழப்பதனால்தான் வருந்துகிறார்களே தவிர இறந்தவர்களுக்காக வருந்துவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை..
இந்தக் கொரோனா சமயத்தில், கொரோனா பாதித்துப் பலரும் இறக்கிறார்கள் .அப்படி இறந்தவர்களின் அருகில் உறவினர்கள் போக அனுமதி இல்லை அப்படி இறந்தவர்களை அரசே அடக்கம் செய்துவிடுகிறது, அப்படி அடக்கம் செய்யும் போது சில அரசு தொழிலாளர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல் இறந்தவர்களின் உடலைக் கண்ணியமற்ற முறையில் புதை குழியில் தூக்கி வீசுகிறார்கள் .அதைப் படம் எடுத்த சிலர் அதை வைரலாகப் பரப்ப நமது ஊடகங்களும் அதற்கு ஏற்ற மீயூசிக் சேர்த்துத் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை கூட்டுவறகாகப் பிரேக்கிங்க செய்திகள் போட்டு மக்கள் மனதில் ஒரு கழிவிரக்கத்தை உண்டு பண்ணிப் பயமுறுத்துகிறார்கள்
அதனைப் பார்க்கும் மக்கள் உடனே எமோஷனல் ஆகி உடலைப் பார்க்காமல் இறுதிச் சடங்கு என்பது மிகப் பெரிய கொடுமை என்று தங்கள் கற்பனைத்திறமையைப் பயன்படுத்தி அதைப்பற்றிப் பேசியும் எழுதியும் செய்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் போது இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு எமோஷனல் டிராமா ப்ளை பண்ணுவதாகவே தெரிகிறது.
எத்தனை பேர்கள் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வேலை செய்து, அங்கு அவர்கள் வசிக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இறக்கிறார்கள். அப்போது அவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அப்போது எல்லாம் இறப்பு ஒரு விஷயமே இல்லை கழிவிரக்கமும் இல்லை ஆனால் கொரோனாவால் மட்டும் இறக்கும் போது மட்டும் எமோஷன் சீன் ஏன்? இப்படிச் சீன் போடுபவர்கள் யார் என்று நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்களின் பெற்றோர்கள் ஒரு இடத்தில் வசிக்க, இவர்கள் ஒரு இடத்தில் வசிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். அப்படி இருப்பதும் தப்பு இல்லை .ஆனால் பண்டிகை நாட்களில் கூட அவர்களுக்கு நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்துத் தங்கள் வீட்டிலோ அல்லது அவர்கள் வீட்டிலோ பொழுதைக் கழிக்காமல் ,பண்டிகை நாட்களில் அவர்களுக்கு போனில் ஒரு வாழ்த்தைச் சொல்லிவிட்டுத் தங்கள் நண்பர்களைக் கூப்பிட்டு விருந்து கொடுத்து ஆடிப்பாடிப் பேசி மகிழ்வார்கள்..
இப்படிப்பட்டவர்கள்தான் அன்னையர் தினத்தின் போதும் அல்லது பெற்றோர்கள் இறந்த பின்னும் சமுக வலைத்தளங்களில் ஐ மிஸ் மை மாம் டாட் என்று ரொம்பச் சீன் போடுகிறார்கள். ஒருவரின் இறப்பு என்பது இயற்கைதான் அதை கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும்.
இறுதியாக உணவு என்பது கெட்டுப் போவது வரைக்கும் அல்லது வயிற்றுக்குள் போவது வரைக்கும் மட்டும்தான் அதன் பின் அது கழிவாக மலமாகத்தான் மாறிவிடுகிறது... உணவு மலமாகிவிட்ட பின் அதற்கு ஒரு மதிப்பும் இல்லை அது போலத்தான் மனித உடலில் உயிர் இருக்கும் வரைதான் .அதுவும் நல்ல மனிதர்களாக இருக்கும் வரைதான் மதிப்பு. அப்படி இல்லாமல் போகும் சமயத்தில் அது மலம் போல இருக்கும் பிணம்தான்
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உயிராக நேசித்தவர்களாக இருந்தாலும் அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி மனைவி அல்லது கணவனாக இருந்தாலும் , குழந்தைகளாக இருந்தாலும் உறவினர்களாக இருந்தாலும் அல்லது நண்பர்களாக இருந்தாலும் சரி .அது பிணம்தான் அதற்கு ஒன்று பெரிய மதிப்பு கொடுத்துக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை இதை நீங்கள் ஒப்புக் கொள்வதும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி. இதுதான் என் கருத்து
இதை ஒப்புக் கொள்ளாதவர்களிடம் ஒரு கேள்வி உங்களிடம் மிகவும் அன்பு காட்டி கஷ்டப்பட்டு வளர்த்த உங்கள் தந்தையோ தாயோ உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகப் படுக்கையிலே மலம் கழித்தும் அவர்களுக்கு மூன்று வேலையும் நீங்கள் உணவு கொடுத்து மற்றும் குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்து அவர்களுடன் அமர்ந்து சந்தோஷமாகப் பேசி மேலும் மணிக்கு ஒரு தரம் அவர்களை மாற்றிப் படுக்க வைப்பீர்கள் ஆனால் அதை எத்தனை காலம் தொடர்ந்து சந்தோஷமாகச் செயல்படுத்துவீர்கள் ஐந்து ஆறு மாதங்கள் செய்வீர்களா அதன் பின் முன்பு செய்த அதே சந்தோஷத்தில் உங்களால் செய்ய முடியுமா? அப்படி முடியாது என்றால் அவர் உங்களுக்காகப் படபாடுகள் அவர்கள் செலுத்திய அன்பு எல்லாம் கலாவாதியாக விடுமா என்ன? இப்படிப் பட்டவர்த்தாமாகப் பேசும் போது அது கசக்கத்தான் செய்யும் என்றாலும் அதுதான் உண்மை
மீண்டும் சொல்லுகிறேன் நாம் இறந்தவர்களுக்காக வருத்தப்படுவதில்லை இறந்தவர்களால் நாம் பெற்ற இன்பங்களை இழப்பதால்தான் வருத்தப்படுகிறோம்... அதை வைத்து எமோஷனல் டிராமா ப்ளை பண்ணுகிறோம்.

பிறக்கின்ற போதே
ReplyDeleteஇறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது
மெய் தானே...?
ஆசைகள் என்ன...?
ஆணவம் என்ன...?
உறவுகள் என்பதும்
பொய் தானே...
உடம்பு என்பது
உண்மையில் என்ன...?
கனவுகள் வாங்கும் பை தானே...
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்...
//பிணம்தான்...அதற்கு மரியாதை கிடையாது// - இந்த வரி மாத்திரம் தவறு என்றே நினைக்கிறேன். மத்தபடி இடுகையின் மற்ற பகுதி மிகச் சரிதான். உயிரற்ற சடலம் என்றாலும் நாம் அத்துடன் உணர்வு பூர்வமாக வாழ்ந்திருக்கிறோம். என் அப்பா இடுகாட்டில் சடலமாக இருந்தபோது, எங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக மண்பாண்டத்தில் இருக்கும் தண்ணீருடன் தலைப்பகுதிக்குப் பக்கத்தில் (சுற்றியபிறகு) உடைப்போம். அப்படி உடைக்கும்போது எனக்கு, ஐயோ..அப்பாவுக்கு இவ்வளவு சத்தம் ஆகாதே என்று மனதில் பட்டு திடுக்குற்றேன். காரியங்கள் முடிந்த பிறகுதான் நம் மனம் 'அவர் இனி இல்லை' என்று எண்ணும். ஒரு உதாரணம் சொன்னா நன்கு விளங்கும். நாம் வணங்கும் கடவுளின் படம், பத்திரிகையில் பிரிண்ட் செய்த பேப்பர், கீழே கிடக்கிறது. அதன் மீது நாம் காலை வைத்துவிட்டால் துணுக்குறுவோம். அந்தப் படம் கடவுள் இல்லை, வெறும் பேப்பர்தான் என்று விவாதித்தாலும் மனம் அதனை ஏற்றுக்கொள்ளாது.
ReplyDeleteயதார்த்தம் அதுதான்.
Delete//அதற்குப் பிறகு நம்மால் செய்யமுடியுமா?// - இதில் அர்த்தம் இருக்கிறது. மனிதனின் அன்பு பெரும்பாலும் கீழ் நோக்கித்தான் செல்லும். நம் பசங்க அந்த நிலைல இருக்கும்போது இன்னும் கொஞ்ச நாட்கள் ஜாஸ்தி செய்வோம் (நான் சொல்வது பெரும்பான்மை). பெற்றோருக்கு ஒரு அளவிற்குமேல் செய்யமுடிவதில்லை (எனக்கு இதை எப்போதுமே செய்யமுடியாது. மனம் எனக்கு எப்போதுமே அசூயைப்படும். என் தம்பி சுணங்காமல் செய்துவருகிறான். He is simply Great. கோபம் அப்போ அப்போ வரத்தான் செய்யும்-வேலைச் சலிப்பினால். ஆனாலும் செய்துவருகிறான்).
ReplyDeleteபெற்றோர் பட்ட பாடுகளுக்கு நான் எதையுமே செய்யமுடியாது. நாம் நம் பசங்களுக்கு எவ்வளவு பாடுபட்டுச் செய்கிறோம். அவங்கள்டேர்ந்து நாம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. இது உலக நியதி (விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு)
உயிருடன் இருந்தபோது கிடைக்கும் மதிப்பைவிட இறந்தபின்கிடைக்கும்ம்ரியாதையும் முக்கியம் at least they need a decent send off
ReplyDeleteஇதெல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சென்சிடிவ் மேட்டர். நம்ம தலையிடாமல் நம் பிரச்சினையை பார்த்துட்டுப் போறது நல்லது. யாரு இறப்பையும் அதற்கு அவர்கள் காட்டும் இமோஷனல் ரியாக்சனையும் விமர்சிக்க நமக்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது.
ReplyDelete