Sunday, July 12, 2020

 

 
In the world people are looking for good people but  no one is trying to be good

நல்லவர்களைத் தேடும் உலகில் ...நல்லவனாக இருக்க யாரும் முயற்சிப்பதில்லை





இந்தக் காலத்தில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை அறிந்து கொள்வது என்பது மிக எளிதான செயல் அல்ல. நல்லவர் போலத் தோற்றமளிப்பவர் நல்லவரும் அல்லர் அது போலக் கெட்டவர் போல் தோற்றமளிப்பவரும் பேர் கெட்டவரும் அல்லர்.

ஒரு குழந்தை பிறக்கும்போது, நல்ல மனத்துடனும் தூய சிந்தனையுடனும்  உண்மை, நேர்மை, ஒழுக்கம் எனும் நன்னடத்தைகளை அணிகலன்களாகக் கொண்டுதான் பிறக்கிறது. பல பெரியவர்கள் இப்படிச் சொல்ல நாமும் கேட்டு இருப்போம். ஆனால் இதில் நான் முரண்படுகின்றேன். பிறந்த குழந்தைகள் எழுதப்படாத நோட் புத்தகங்களாகவே இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி நாம் எப்படி எழுத ஆரம்பிக்கிறோமோ அப்படித்தான் அந்தக் குழந்தைகளும் மாறுகின்றன. அதை விட்டு விட்டு உண்மை, நேர்மை, ஒழுக்கம் எனும் நன்னடத்தைகளை அணிகலன்களாகக் கொண்டுதான் பிறக்கிறது என்று சொல்வது சரியல்ல. காரணம் இதற்கு அர்த்தம் என்னவென்பதுகூட அவர்களுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது
 

வளரும் குழந்தைகள் வீட்டில் பெற்றோர்கள் பாட்டி தாத்தா மற்றும் உறவினர்கள் வளர்ப்பிலும் பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுத்தரும் முறையிலும் கூ சேர்ந்த நண்பர்களின் செயல்பாடுகளிலும், வெளியில் சமுதாயச் சூழ்நிலைகளாலும் வளர்ந்து நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறி குடும்பத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு நல்லதையோ, கெட்டதையோ செய்து கொண்டு இருக்கிறார்கள்.


இந்த உலகத்தில் நாம் நுழையும் போது நல்லவராகத் தான் வருகிறோம். அடிப்படையில் அனைவரும் நல்லவர்களாக இருந்தாலும், சமுதாயச் சூழலால் தீயவர்களாக மாறி, கெட்டவர் என்ற முத்திரையுடன் வெளியேறுகிறோம்.நிலை இப்படி இருக்கப் பலர் ஒருவரின் தோற்றத்தைக் கண்டு அல்லது அவர்களின் செல்வத்தைக் கண்டு அதாவது ஒருவர் முக அழகுடனும், எடுப்பான விலை உயர்ந்த உடை அணிந்திருந்தாலோ அவரை நல்லவர் என்றோ அல்லது கரடு முரடான முகத்துடன் விகாரமாக அழுக்கான உடை அணிந்திருந்தால் அவரைக் கெட்டவர் என்றோ முடிவுக்கு வந்து விடுகின்றனர்.... இது எவ்வளவு தவறு இன்று அவர்களுக்குக் காலம்தான் உணர்த்தும்

நாம் தினசரி வாழக்கையில் எத்தனை பேர்களைச் சந்திக்கிறோம் அப்படிச் சந்திக்கும் நபர்கள் சந்தணம் குங்குமம், பட்டை அல்லது நாமம் தரித்தோ அல்லது நன்றாகத் தாடி வளர்த்துத் தலையில் குல்லா அணிந்து பார்க்கப் பெரிய மனிதர்களாக வலம் வரும் அவர்களின் தோற்றங்களைப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் நல்லவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் தான் பல துறைகளிலும் அரசுத் துறை மற்றும் எந்தவொரு துறையிலும் லஞ்ச லாவண்யத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் இதைக் கடை நிலை தொழிலாளியிலிருந்து தலைமைச் செயலர் வரை இதே கதைதான்.... ஆனால் இவ்ரளைத்தான் நாம் நல்லவர்கள் என்றும் கருதுகிறோம் இவர்களுக்கும் ரெள்டிகளாக இருந்து தவறனான வகையில் பொருள் சேர்ப்பவர்களுக்கு எந்தவித வேறுபாடுகளும் இல்லை.


ஆனால் அதே நேரத்தில் தினசரி கூலி வேலை பார்த்து சம்பாதித்து வாழ்க்கை நடத்தும் பலரை அவர்கள் தோற்றங்களைப் பார்த்தவுடன் அதிலும் அவர்கள் யாரையும் ஏமாற்றாமல் சொந்தக் காசில் குடித்து விட்டு வந்தால் அவர்கள் கெட்டவர்களாக நோக்குகிறோம். குடிப்பது தவறு இல்லை ஆனால் சந்தணம் குங்குமம் நெற்றியில் அணிந்து வெள்ளை வேட்டி சர்ட் போட்டு அடுத்துக் குடும்பங்களை நயவஞ்சகமாக அழிப்பவர்களைத்தான் நாம் நல்லவர்கள் என்றும் கருதிப் பழகுகிறோம் காரணம் அவர்களிடம் செல்வம் இருப்பதால்


ஒருவருக்கு நல்லவராக இருப்பவர் மற்றவருக்குக் கெட்டவராக இருப்பார். அதாவது, அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்குச் சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர் ஆனால் அதை எதிர்த்தாலோ மறுத்தாலோ அவர் கெட்டவர். இது தான் இன்றைய சமுதாயத்தின் கண்ணோட்டம். இதை வைத்துப் பார்க்கும் போது மக்கள் நல்லவர்களைத் தேடவில்லை தமக்கு உதபுவர்களை மட்டுமே நல்லவர்களைத் தேடுவது மாதிரி போலித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


மக்கள் பொதுவாக நயவஞ்சகர்களிடம் நட்பாக இருந்து கொண்டு போலித்தனமாக நல்லவர்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் . இப்படிப்பட்ட மக்கள்தான் நல்லதைக் குழி தோண்டி புதைத்த நாகரீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு நல்லதைப் பேசுவது போலக் கெட்டதை மட்டும் கற்றுத்தரும் மக்களாகச் சமுதாயமாக இருக்கின்றது.


இறுதியாக எல்லோரும் நல்லவர்களுடன் பழக வேண்டும் அவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அவர்கள் நல்லவர்களாக இருக்க முயற்சிப்பதில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்


தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ளக் கெட்டவர்களைத் தேடி உருவாக்கும் நல்லவர்கள் நிறைந்த உலகம்



21 comments:

  1. உண்மையான வரிகள் ...


    நாம் அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க முடியாது ..அதே போல தான் அனைவரும் ...

    நமக்கு உதவுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் என எண்ணும் காலம் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அனுபிரேம்.... நமக்கு உதவுபவர்கள் அவர்கள் எவ்வளவு மோசமான ஆளாக இருந்தாலும் அவர்களையும் நல்லவர்கள் என நினைக்கிறார்கள்.. அப்படிப்பட்ட மோசமானவர்களிடம் இருந்து உதவிகள் பெறுவதைவிட நாம் கஷ்டப்படலாம்

      Delete
  2. ஆம் நண்பரே எல்லா மனிதர்களிடத்திலும் இரண்டு முகம் உண்டு அதை இறைவனே அறிவான்.
    பிறரது தவறை சுற்றிக்காட்டும் நாம் அதே தவறை செய்து கொண்டுதான் கடக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களிடம் இரண்டு முகங்கள் மட்டுமல்ல அதற்கும் அதிகமான பல முகங்கள் இருக்கின்றன கில்லர்ஜி

      Delete
  3. அருமையான எண்ணங்கள்... எனது பல பகிர்வுகள் ஞாபகம் வந்தன...

    ReplyDelete
    Replies

    1. நல்லதையே நினைத்தால் அருமையான எண்ணங்கள் மட்டுமல்ல நல்ல பதிவுகளும் வரும் தனபாலன்

      Delete
  4. நிரூபிக்க முயலாதவர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்...வேஷத்தாலோ பேச்சாலோ பாவனையாலோ முயலுகிறவர்கள் அப்படி இல்லை.இது என் அனுபவம்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அனுபவ உண்மைகளை பதிந்து சென்றதற்கு நன்றி ரமணி சார்

      Delete
  5. வளர்ப்பிலும், சூழ்நிலையாலும்தான் ஒரு குழந்தை நல்ல குழந்தையாகவோ, கெட்ட குழந்தையாகவோ மாறுகிறது என்றாலும், எதைத் தேர்ந்தெடுப்பது, நல்லதா, கெட்டதா என்பதில் அதன் ஜீன்களுக்குப் பங்கிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லிய கருத்துக்கள் சரிதான் என்றாலும் ஜீன் கள் மீது காரணம் சொல்லி தப்பிக்க முடியாது ஸ்ரீராம்

      Delete
  6. சமுதாயச் சூழ்நிலை, வளர்ப்பு - இந்த அப்சர்வேஷன் சரியானது கிடையாது. ஒரு பெற்றோருக்குப் பிறந்த 3 குழந்தைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள். ஒருவன் நல்லவனாகவும், இன்னொருவன் கெட்ட குணங்கள் மிகுந்தும், ஒருவன் கோபக்காரனாகவும் இருப்பதை நீங்கள் அவதானிக்கமுடியும். இந்த குணம் ஜீனின் மூலமாக வருவது.

    ReplyDelete
    Replies
    1. சமுதாயச் சூழ்நிலை, வளர்ப்பு - இந்த அப்சர்வேஷன் சரியானது கிடையாது.


      ஒரு பெற்றோருக்குப் பிறந்த 3 குழந்தைகளையும் ஒன்று போல வளர்த்தாலும் அந்த குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள்.இதற்கு காரணம் அந்த குழந்தைகள் பழகும் நண்பர்களை பொருத்தும் சூழ்நிலைகலை பொருத்தும் மாறுகிறது . காரணம் அந்தக குழந்தைகள் பழகும் நண்பர்களின் வளர்ப்பையும் பார்க்க வேண்டி இருக்கிறது அவர்கள் நண்பர்களின் வளர்ப்பு அவர்களின் பெற்றோர்களை பொருத்து மாறுபடுகிறது அது மட்டுமல்ல குழந்தைகள் கேட்கள் செய்திகள் பார்க்கும் படங்கள் சீரியல்கள் படங்களை பொருத்தும் அவர்களின் மனநிலைகள் மாறுபகின்றது. ஒரு காலத்தில் கிடைத்தபொருட்களை கொண்டு குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்த்து பகிர்ந்து விளையாடுவார்கள். ஆனால் இன்றோ வன்முறை வீடியோ கேம்களை குழந்தைகள் விளையாடுவதாலும்ச சுயநலத்துடன் வாழ்வதலாலும் வன்முறைகள் இயற்கைகாகவே குழந்தைகள் மனதில் ஏற்படுகின்றன..... அதுமட்டும்மல்ல ஒரு கெட்டவர் சமுதாய தலைவனாகும் போது அந்த சமுதாயமும் மாறிவிடுகின்றன.இன்றைய சூழ்நிலையில் இதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது, அதனால்தான் சொன்னேன் சூற்றி உள்ள சமுதாயமும் இதற்கு காரணம் என்று... அதுமட்டுமல்ல இதற்கு ஜீன் தாரன் காரணம் என்று சொன்னால் அந்த மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவணுக்கு தண்டனை தருவது குற்றம் சொல்லுவதும் தவறாகைவிடும்....காரணம் ஜீனினால் ஏற்படுகிறது என்றால் அதற்கு அந்த மனிதன் என்ன செய்வான்?????

      Delete
  7. நல்லதொரு பகிர்வு. அனைவரிடத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு. நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். நாமும் நல்லதாகவே நடந்து கொள்வோம். நம்மிடம் இருக்கும் அழுக்குகளைக் களைவோம்.

    ReplyDelete
    Replies
    1. //நாமும் நல்லதாகவே நடந்து கொள்வோம். நம்மிடம் இருக்கும் அழுக்குகளைக் களைவோம். //

      நல்லதொரு கருத்து வெங்கட்ஜி

      Delete
  8. நல்லவர், கெட்டவர்னு டிஃபைன் பண்றதே கஷ்டம்ங்க. மனிதர்களை பொருத்தவரையில் அவர்களைக் கொல்லும் வைரஸ்கள் கெட்டவைகள். மனிதர்கள் அடித்து சாப்பிடும் மாடு, ஆடு, கோழி, வான்கோழிலளுக்கெல்லாம் மனிதர்கள் ஈனப்பிறவிகள். நிம்மதியா அவைகளை வாழவிடாதவன். பார்ப்பன்ர்களும் மாட்டுப்பாலையும், தேனையும், பல மிருகங்களை பலிகொடுத்து உருவாகிய மாத்திரை மருந்துகளை சாப்பிடும் ஈன ஜென்மக்கள்தான். அவர்களை உய்ரவானவர்கள்னு சொல்லிடாதீங்க. நல்லவர், கெட்டவர் எல்லாம் வரையறுக்க முடியாதவை.

    ReplyDelete
    Replies
    1. //நல்லவர், கெட்டவர்னு டிஃபைன் பண்றதே கஷ்டம்ங்க. மனிதர்களை பொருத்தவரையில் அவர்களைக் கொல்லும் வைரஸ்கள் கெட்டவைகள். மனிதர்கள் அடித்து சாப்பிடும் மாடு, ஆடு, கோழி, வான்கோழிலளுக்கெல்லாம் மனிதர்கள் ஈனப்பிறவிகள்.///

      வருண் இதுவரை சொன்ன கருத்துக்கள் மிக சரி... ஆனால் என் பதிவில் மனிதர்களை பொதுவாகத்தான் குறிப்பிட்டு இருக்கிறேனே தவிர எந்த சாதி மதத்தை சார்ந்தவர்களையும் குறிப்பிட்டு சொல்லாத போது எதற்கு இந்த வரிகள்


      //நிம்மதியா அவைகளை வாழவிடாதவன். பார்ப்பன்ர்களும் மாட்டுப்பாலையும், தேனையும், பல மிருகங்களை பலிகொடுத்து உருவாகிய மாத்திரை மருந்துகளை சாப்பிடும் ஈன ஜென்மக்கள்தான். ///

      தல உங்களுக்கு கருத்து சொல்ல உரிமைகள் இருந்தாலும் சம்பந்தமில்லாமல் இந்த கருத்து சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்

      //அவர்களை உய்ரவானவர்கள்னு சொல்லிடாதீங்க. ///
      குறிப்ப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்று என்றும் நான் சொல்லியதில்லை எந்த ஒரு சாதியிலும் மதத்திலும் இனத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உள்ளனர்தான்.. ஒருவரின் செய்களை வைத்தே அவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என முடிவிற்கும் நாம் வருகிறோம்


      ஒருவேளை நீங்களோ அல்லது உங்களை சார்ந்தவர்களோ அந்த சாதியினரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதானல் அவர்களை நீங்கள் குறை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு... ஆனால் அதி இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாகவே என் மனதிற்கு படுகிறது.

      நல்லவர், கெட்டவர் எல்லாம் வரையறுக்க முடியாதவை.///

      ஆமாம் இதை எளிதில் நாம் வரையறுக்க முடியாதுதான்

      Delete
    2. நான் வைரஸ் பத்தியும்தான் எழுதி இருக்கேன். அதை பத்தியும் நீங்க எதுவும் சொல்லவில்லை. ஏன் வைரஸ் பத்தி சொல்ற இப்போனு நீங்க நியாயம் பேசவில்லை?? பொத்தாம் பொதுவாக பார்ப்பனர்களை விமரிசிச்சா நீங்க ஏன் இத்தனை கவலைப் படுறீங்க? மனிதர்களையும் ஈனப்பிறவிகள்னுதான் சொல்லியிருக்கேன். அந்த "மனிதர்களில்" பார்ப்பனர்கள் இல்லைனு நினைச்சீங்களா?

      நீங்க என்ன சாதினு எனக்குத் தெரியாது.

      நான் என்ன சாதினு உங்களுக்கும் தெரியாது.

      சரிதானே?

      அதெப்படி உங்க நண்பர்களில் இவர் இவர் பார்ப்பனர்னு மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? அவர்கள் வருத்தப் படுவாங்கனு நீங்க ஏன் இப்படி கவலைப் படுறீங்க? எனக்குப் புரியலை? வலையுலகில் அவங்களை மட்டும் உங்களால் எப்படி ஐடென்டிஃபை பண்ண முடிகிறது? வன்னியர், மறவர், அகம்படியர், வெள்ளாளர் என்பரையெல்லாம் உங்களால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் பார்ப்பன்ர்கள மட்டும் கண்டு பிடிச்சுடுறீங்க? இதிலிருந்து என்ன தெரியுது? எப்படியோ அவர்கள் தங்கள் பூனூலை உங்களுக்கு காட்டிடுறாங்க. அபப்டித்தானே? ஏன் காட்டுறாங்க? தமிழர்னு அடையாளத்துடன் போக வேண்டியதுதானே? நீங்க அவர்களை டிஃபென்ட் செய்ய முயலும் முன்னால கொஞ்சம் யோசிக்கணும். எப்படி இவர்கள் மட்டும் தன்னை பார்ப்பன்ர்னு எப்படியோ அடையாளம் காட்டி விடுறாங்க னு.

      உங்க தளத்தில் சொல்லப்பட்டாலும், என் கருத்துதான் என் பின்னூட்டம். அந்தக் கருத்துக்கு நானே பொறுப்பு.

      Delete
  9. தலைப்பு ஈர்க்கும்விதமாக இருக்கிறது சகோ.. எல்லாருக்கும் எல்லாரும் நல்லவர்களாக இருக்க முடியாது. அவரவர் காரணம், அவரவர் பார்வை என்று தீர்மானிக்கிறது பெரும்பாலும் என்று நினைக்கிறேன். ஆனால் தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடுவது தவறுதான்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் நல்லவராக இருக்க சொல்லவில்லை யாரையும் காயப்படுத்தாமல் அழித்து வாழ முயற்சிக்காமல் நியாயதர்மங்களை கை கொண்டாலே போதும்

      Delete
  10. எல்லா நேரத்திலும் எல்லா மனிதர்களிடமும் நல்லவர்களாக இருக்க முடியாது..சில நேரம் யாரிடம் நல்லவர்களாக இருந்தோமோ அவர்களிடமே கெட்டவர்களாக நடக்க வாய்ப்பு உள்ளது நமது அப்போதைய மன நிலையைப் பொறுத்த விஷயம் .--அபயாஅருணா

    ReplyDelete
    Replies
    1. //எல்லா நேரத்திலும் எல்லா மனிதர்களிடமும் நல்லவர்களாக இருக்க முடியாது..//

      நல்லவர்கள் என்றால் எல்லா மனிதர்களிடத்தும் நல்லவர்களாக இருப்பதுதானே சரி சில மனிதர்கலிடம் நல்லவர்களாகவும் மற்றவர்களிடம் கெட்டவர்களாகவும் இருந்தால் அவர்கள் சந்தர்ப்பவாதிகள்தானே ஒழிய நல்லவர்கள் அல்லதானே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.