Friday, July 24, 2020

The state of Tamil Nadu maintains law and order and the Maha Yogi Rajinikanth  bows down to it
சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் தமிழக அரசும் அதற்குத் தலைவணங்கும் மகா யோக்கியனும்



தமிழ்நாட்டில் ஒருத்தர் கார் ஒட்டி சென்றாராம் அப்படி ஒட்டி செல்லும் போது சீட் பெல்ட்டை போடாமல் ஒட்டி சென்றாராம் அது சிட்டியில் உள்ள சிசிடிவியில் பதிந்து இருந்ததைப் பார்த்த காவல்துறை அவருக்கு அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பியதாம். உடனே அவரும் அபராத தொகை 100 ரூபாயை செலுத்தி அது ஊடக செய்திகளில் வரும் படி செய்தாராம் அந்த மகா யோக்கியர்....
 
அந்த யோக்கியர் வேறு யாரும் அல்ல நமது வருங்கால முதலமைச்சர் ரஜினிகாந்த்துதான்


சென்னை: 'சீட் பெல்ட்' அணியாமல்,கார் ஓட்டியதாக, நடிகர் ரஜினிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை வாசிகள், பிற மாவட்டங்களுக்குச் செல்ல, அரசிடம் முறையாக 'இ - பாஸ்' பெற வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரம் உள்ளிட்டவைக்கு மட்டுமே, இ - பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், நடிகர் ரஜினி நேற்று முன்தினம், அவரது பண்ணை வீடு உள்ள கேளம்பாக்கத்திற்கு, மருத்துவ அவசரமாக, இ - பாஸ் பெற்றுச் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது.

அதுமட்டுமின்றி, ஜூன் 20ம் தேதி, கேளம்பாக்கம் செல்லும் போது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக, ரஜினிக்கு காவல்துறை அபராதம் விதித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. சென்னை மாநகரபோலீஸ் எல்லைப் பகுதியைக் கடந்து, செங்கல்பட்டுப் காவல்துறை எல்லைப் பகுதியில் நுழைந்தபோது, சீட் பெல்ட் அணியாமல், கார் ஓட்டிய அவருக்கு, தாழம்பூர் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.


அடேய் அதிக வசதி இல்லாதவன் ஹெல்மெட் இல்லாமல் பைக்ல போனால் 1000 ரூபாய் அபராதம்.....ஆனால் வசதி மிக்கவன் கார்ல சீட் பெல்ட் போடாமல் போனால் 100 ரூபாய் அபராதம்.#சிஸ்டம் சரியில்லைன்னு மகா யோக்கியன் ரஜினி சொன்னது சரிதானோ



நான் ஒரு யோக்கியனுங்க
ரொம்ப நல்லா படிச்ச நாலு சங்கிங்க சொன்னாங்க
நான் ஒரு யோக்கியனுங்க


ஏற்கனவே சொன்ன தமிழனுங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்து மீண்டும் ஆன்மீக வேஷம் போட்டு ஏமாற்ற வந்தேங்க
நான் ஒரு யோக்கியனுங்க

நல்லா இருந்த தமிழனை முட்டாளுன்னு சொன்னாங்க
ஏ..ஏ ஏ.. முட்டாளு டாய்..
நல்லா இருந்த தமிழனை முட்டாளுன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..
நான் ஒரு யோக்கியனுங்க



தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் மாவட்ட அதிகாரிகள் அதிகம் சம்பாதிக்க எடப்பாடியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் E-Pass.. இந்தத் திட்டம் மூலம் பயனடைபவர்கள் . மாவட்ட ஆட்சியர்கள் வட்டாட்சியர்கள், முனிசிபல் கமிஷனர்கள்,, காவல் துறை அதிகாரிகள் போன்றோர்தான். இவர்கள் இந்தத் திட்டங்கள் மூலம் குறுநில மன்னர்கள்போல் அவர்கள் இஷ்டத்திற்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?


அன்புடன்
மதுரைத்தமிழன்.

3 comments:

  1. இவனோட வருமானவரி பாக்கியை கட்டச் சொல்லுங்களேன்...

    நாதாரிகள் நூறு ஓவா கட்டியதை செய்தியாக்கிடுறாங்கே....

    ஒழுங்காக முனிசிபாலிட்டி கடை வாடகையை கொடுங்கடா...

    ReplyDelete
  2. இவனும் அழியவேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.