Sunday, July 26, 2020

கொரோனாவால் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பற்றாக்குறைகள்



Deficiencies currently occurring in the United States by Corona
கொரோனாவால் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பற்றாக்குறைகள்



கொரோனா வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்ததில் இருந்து பணத்திலிருந்து உற்பத்தி பொருட்கள் வரை அனைத்திலும் பற்றாக்குறையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது


கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும்  இங்குக் கடைக்குச் செல்லும்போது, ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் தெரிகிறது.
 
முதலில், கழிப்பறை காகித பற்றாக்குறை இருந்தது, பின்னர் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக்குப் பற்றாக்குறை இருந்தது. இப்போது சில்லறை நாணயம், மரம் வெட்டுதல், காகித துண்டுகள் என்று பலவற்றிற்குப் பற்றாக் குறை ஏற்பட்டுப் பற்றாக்குறை நாட்களில் நுழைந்து கொண்டு இருக்கிறது

நாணயம் பற்றாக்குறை மிகவும் பொதுவானதாகிவிட்டது, கொரோனா ஆரம்பித்த போது டாய்லெட் பேப்பருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவிய அமெரிக்காவில் இப்போது சில்லறை நாணயங்களுக்கு மிகவும் தட்டுப்பாடு வந்திருக்கிறது. இங்குள்ள வணிக நிறுவனங்களில் சரியான சில்லறை கொடுக்கவும் இல்லையெனில் கார்ட் பயன்படுத்தவும் என்று அச்சடித்து ஒட்டி இருக்கிறார்கள்.


COVID-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய வணிக மற்றும் வங்கி மூடல்கள் அமெரிக்க நாணயங்களுக்கான விநியோகச் சங்கிலி மற்றும் சாதாரணச் சுழற்சி முறைகளைக் கணிசமாகப் பாதித்தன. பொருளாதாரத்தில் போதுமான அளவு நாணயங்கள் இருக்கும்போது, புழக்கத்தின் வேகம் நாட்டின் சில பகுதிகளில் கிடைக்கக்கூடிய சரக்குகளைக் குறைத்துள்ளது.பெடரல் ரிசர்வ் அமெரிக்கப் புதினா மற்றும் தொழில்துறையில் உள்ள மற்றவர்களுடன் தீர்வுகள் குறித்துச் செயல்படுகிறது. முதல் கட்டமாக, தற்போதைய வழங்கல் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகப் பெடரல் ரிசர்வ் உடனான நாணயங்களுக்கான ஆர்டர் வைப்புத்தொகை நிறுவனங்கள் மீது தற்காலிக Gap விதிக்கப்பட்டது. கூடுதலாக, நாணயம் புழக்கத்திற்கு இடையூறுகளை நிவர்த்திச் செய்வதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணவும், செயல்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஒரு அமெரிக்க நாணய பணிக்குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------
   வாழ்வதற்குத் தகுதி அற்ற நாடாக மாறப் போகும் இந்தியா 

------------------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்தாக வீடுகட்டப் பயன்படுத்தப்படும் மரங்களுக்கு மார்ச் மாதங்களிலிருந்து மிகவும் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இப்போது நிலைமையில் மிகச் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் மரங்களுக்கான தட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதற்கான விலைகளும் மிகவும் அதிகரித்து இருக்கிறது. அதிலும் பிரஷர் டிரீட்ட மரக்கட்டைகளின் விலைகள் 50%விகதம் அதிகரித்து இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் மரம் வெட்டும் நிலையங்கள் மூடப்பட்டதாலும் மேலும் நிறையப் பேர் வொர்க்க் பரம் ஹோம் பண்ணுவதால் அவர்களின் மாத வருவாய்க்குப் பாதிப்பு இல்லை என்பதாலும் மேலும் அவர்களால் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள முடியாததால் பணத்தை வீட்டைப் பராமரிப்பதற்கும் மேலும் புதிய டெக்குகளை அமைப்பதற்கும் செலவிடுவதால் மரக்கட்டைகளுக்கான தேவைகள் மிக அதிகரித்து இருக்கின்றன.குறிப்பு : இங்கு மரங்கள் இல்லாவிட்டால் வீடுகளே இல்லை..

There is also a lumber shortage slowing down construction. Not only is wood in short supply, so are the things made from it like cabinets, windows and doors. The industry blames the issue on coronavirus working requirements that have slowed or prevented production.

இங்குள்ள பிரபல ஹோம் இம்புருவ்மெண்ட் கடைகள் இந்த ஆண்டுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று நினைத்த டார்க்கட்டை மே மாத்திலே நிறைவு செய்துவிட்டு இப்போது மேலும் மரக்கட்டைகள் விற்பனைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.



அலுமினியத்திற்கும் தட்டுப்பாடு :

அது போலக் குளிர்பான நிறுவனங்கள் தங்கள் முக்கியப் பிராண்டுகளில் கவனம் செலுத்துகின்றன, ஏனெனில் அலுமினியம் கேன் தொழில் தேவைக்கு ஏற்ப இல்லை. வீட்டில் நிறையப் பேர் இருப்பதால், அந்தப் பானங்களின் நுகர்வு 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


வீட்டில் இருப்பவர்களும் பயன்பாட்டு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். கடைக்குப் பயணங்களைக் குறைக்க நுகர்வோர் சேமித்து வைப்பதால், அதிகமான மக்கள் refrigerator or a stand-alone freezer யை வாங்குவதால் அதற்கான தேவைகள் மிக அதிகரித்து இருக்கின்றன.அந்த அடித்தளக் குளிர்சாதனப் பெட்டி அல்லது தனியாக உறைவிப்பான்(freezer) வேண்டும்.

இப்போதைய நிலையில் ஒரு freezer கிடைக்க நல்ல புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அதிர்ஷ்டம் .

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் தமிழக அரசும் அதற்குத் தலைவணங்கும் மகா யோக்கியனும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"இந்தத் தொற்றுநோய் உலகம் முழுவதும் உற்பத்தித் திறன்களைப் பாதிக்கிறது,இன்றைய பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம் என்பதால், பாகங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பெறப்படுகின்றன, மேலும் உற்பத்தி மிக மெதுவான வேகத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது, மேலும் ஆர்டர்கள் உற்பத்தியாளர்களால் நிரப்பப்படுவதற்கு அருகில் இல்லை."


Freezers are short and on an 8- to 12-week back order. Refrigerators side by side and top-mount refrigerators are very short in supply.”

அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு:

அமெரிக்காவில் ஆரம்பத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நீயூயார்க் நீயூஜெர்ஸியில் இப்போது பாதிப்பு மிகவும் குறையத் தொடங்கிச் சாவு எண்ணிக்கைகளும் குறைந்துள்ளன..மற்றைய மாநிலங்களில் மிக அதிகமாகப் பரவி கொண்டு இருக்கிறது

ஐ.டி போன்ற துறையில் உள்ளவர்களின் நிறுவனம் இன்னும் திறக்காமல் மக்கள் இன்னும் வொர்க் பரம் ஹோம் என்று வீட்டிலிருந்து வேலை செய்வதால் இங்குள்ள ரயில்களில் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது அதிலும் ரயில் மட்டும் பேருந்துகளில் இண்டியன் "கறி மசாலா ஸ்மல்" இல்லாமல் பயணிக்க முடிவதாக இங்குள்ள மற்ற இன மக்கள் கருதுகிறார்கள்

ஐ.டியில் வேலை செய்யும் இந்தியர்கள் , சில சைனீஸ்கள் மற்றும் வயதானவர்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கையுறை அணிந்து செல்லுகிறார்கள். ஆனால் எல்லா இன மக்களும் முககவசம் அணிந்துதான் பொது இடங்களுக்குச் செல்லுகிறார்கள்..


9 comments:

  1. கொரானாவால் நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் தட்டுப்பாடுகள் வேறுபடுகின்றன . முதலில் இங்கே பாத்திரம் தேய்க்கும் பிரஷுக்குத் தட்டுப்பாடு இருந்தது லைப்பாய் சோப்பு கிடைக்காமல் இருந்தது . பிரெட் இவற்றுக்குத் தட்டுப்பாடு ஹைதராபாத்தில் இருந்ததாம் . பிஸ்கெட்டும் அதேபோல்தான்ஏப்ரல் மாதம் கிடைக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல கொரோனா ஆரம்பித்த காலத்தில் வாட்டர் பாட்டில் டாய்லெட் பேப்பர், ப்ளீஸ், சானிடைசர், பூண்டு வைட்டமீன் சி போன்றவைகளுக்கு ஏப்ரல் மாதம் வரை இங்கு மிகவும் தட்டுப்படுகள் இருந்தன..

      Delete
  2. சில செய்திகள் இரு முறை வருகிறதே

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக்காட்டியதற்கு நன்றி

      Delete
  3. இங்கு பொருளாதாரம் பற்றி எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாதாம்... தெரிந்தால் தானே சொல்வதற்கு...?

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு தெரிந்த பொருளாதாரம் எல்லாம் அதானி அம்பானி போன்றவர்களின் பொருளாதாரம்தான் அதைப்பற்றி தான் அவர்கள் கவலைப்படுவார்கள்

      Delete
  4. ரொம்ப வலியுறுத்திச் சொல்லவேண்டி, இரண்டுமுறை பிரசுரித்திருக்கிறீர்கள் போல...!!

    நாட்டுக்கு நாடு பற்றாக்குறைகள் விதம் விதமாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தவறுதலாக 2 முறை வந்திருக்கிறது இப்போது அதை நீக்கிவிட்டேன்... ஆமாம் பற்றாக்குறை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறதுதான்

      Delete
  5. அங்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை. பொருள் பிரச்சனை மட்டும்தான் இருக்கிறதோ?....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.