உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 30, 2017

சாமியார்கள் மட்டுமா மோசமானவர்கள் பக்தர்களும் மோசமானவர்களே (விசு அரட்டை அரங்கம்)

சாமியார்கள் மட்டுமா மோசமானவர்கள் பக்தர்களும் மோசமானவர்களே (விசு அரட்டை அரங்கம்)விசு ..என்ன மதுரைத்தமிழா சாமியார்கள்தான் மோசம் என்று எல்லோரும் பேசிகிட்டு இருக்கும் நிலையில் நீங்கள் பக்தர்களும் மோசம் என்று சொல்லிறீங்களே அவங்களும் சாமியார் மாதிரி ஏதாவது பொண்ணுங்களை ரேப் பண்ணுறாங்களா என்ன?

மதுரைத்தமிழன்: சேச்சே அப்படி எல்லாம் பக்தர்கள் பண்ணவில்லை....

விசு : அப்ப அவர்கள் தப்பு பண்ணவில்லை என்றால் எப்படி பக்தர்களை மோசமானவர்கள் என்று சொல்லுறீங்க... நீங்கள் என்னை ரொம்பவே குழப்புறீங்க

Tuesday, August 29, 2017

அமெரிக்கன் என்று பெருமைபட நடந்த ஒரு நிகழ்வு

அமெரிக்கன் என்று பெருமைபட  நடந்த ஒரு நிகழ்வு


சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மை பெருமைபட வைக்கின்றன அதே சமயத்தில் சில நிகழ்வுகள் நமக்கு தலை குனிவையும் ஏற்படுத்துவிடுகின்றன. சென்னையில் பெரும் வெள்ளம் வந்த போது ஜெயலலிதா அரசு ஸ்டிக்கர்மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் சென்னை பொது மக்களோ சமுக வலைத்தளங்கள் மூலம் தகவல் பறிமாறி ஒருவருக்கொருவர் உதவி அந்த வெள்ள நேரத்தை சாமாளித்தது. அந்த சமயத்தில் அரசாங்கத்தை எண்ணி தலை குனிந்தாலும் சமுக வலைத்தளம் மூலம் பொதுமக்கள் ஆற்றிய பங்கு நம்மை பெருமைபட வைத்ததது.

இதற்கெல்லாம்வா கவர்னரிடம் போவார்கள் (படிக்க தவறாதீர்கள் ஒரு பக்க கலாய்ப்பு நாளிதழை )

@avargalunmaigal
இதற்கெல்லாம்வா கவர்னரிடம் போவார்கள் (படிக்க தவறாதீர்கள் ஒரு பக்க கலாய்ப்பு நாளிதழை )


கவர்னரா அல்லது தரகரா?

சென்னை: கவர்னர் சட்டசபையில் பதவி ஏற்பவர்களுக்கு சட்டப்படியாக பதவி ஏற்க துணை செய்யவேண்டும் ஆனால் இந்த கவர்னர் ஒருபடி மேலே சென்று எடப்பாடியையும் பன்னீர் செல்வத்தையும் கையை பிடித்து இணைத்து வைத்தாராம். அதனை அறிந்த மக்கள் தங்களுக்கும் அது போல உதவ வேண்டும் என்று சொல்லி கவர்னா¢டம் மனு கொடுக்க செல்கிறார்களாம். அப்படி சென்ற இருவர்களை வழி மறித்து பேட்டி கண்டபோது அவர்கள் மனுக் கொடுக்க செல்லும் காரணத்தை மதுரைத்தமிழனிடம் சொன்னார்கள் அதன் உரையாடலதான் இது.

Monday, August 28, 2017

விவேகமும் ப்ளூ சட்டைகாரர் விமர்சனமும்

விவேகமும் ப்ளூ சட்டைகாரர் விமர்சனமும்


விவேகம் படம் வசூல் மிக அதிகம் என்றும் சொல்லும் வேளையிலே அந்த படத்தை விமர்சனம் செய்த ப்ளூசட்டைகாராரின்  விமர்சன வீடியோ யூட்யூப் இணைய தளத்தில் 18 லட்சம் பார்வைகளை கடந்து போய்க் கொண்டு இருக்கின்றது.இவது விமர்சன வீடியோ பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சினிமா துறையினருக்கு ப்ளட் பிரசர் அதிகரிக்க தொடங்கி சகட்டுமேனிக்கு திரைத்துறை பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.  அதுமட்டுமல்லாமல்  மரியாதை குறைவாக விமர்சனம் செய்து இருக்கிறார் என்று சொல்லி அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு இருக்கின்றார்கள் என்று தகவல் எல்லாம் வருகின்றது

Sunday, August 27, 2017

நான்தான் உண்மையான திமுகவின் செயல்தலைவர் துரைமுருகன் திடீர் போர்க் கொடி

நான்தான் உண்மையான திமுகவின் செயல்தலைவர் துரைமுருகன் திடீர் போர்க் கொடி


மேலும் படிக்க...Read more click செய்க

தமிழக கிளி ஜோசியர் குருமூர்த்தி ஸ்டாலினுக்கு சொல்லும் அரசியல் பலன்

@avargalunmaigal
தமிழக கிளி ஜோசியர் குருமூர்த்தி(துக்ளக்)  ஸ்டாலினுக்கு சொல்லும்  அரசியல் பலன்


தமிழகத்தில் இப்போது  புதிதாக வந்துள்ள அரசியல் கிளி ஜோசியர்  தான் நிர்வாகிக்கும் துக்ளக் பத்திரிக்கையில் இந்த மாதம் ஸ்டாலினுக்கு  கிளி ஜோசியம் பார்த்து எதிர்கால பலனை சொல்லி இருக்கிறார். அதுதான் இந்த பதிவு. சிவப்பு எழுத்தில் இருப்பவை மதுரைத்தமிழனின் கருத்துக்கள் மற்றவை குருமூர்த்தி துக்ளக்கில் எழுதி பதிவிட்டதாக பேஸ்புக்கில் வெளிவந்த கட்டுரைகேள்வி: அதிமுக இவ்வளவு பிளவுபட்டும்,அது திமுகவுக்கு சாதகமாக அமையாதது ஏன்?

Sunday, August 20, 2017

பிராமணர்களின் மதிப்பும் பெருமையும் வெகுவாகக் குறைந்துவிட்டதற்குக் காரணம் பிராமணர்களே

பிராமணர்களின் மதிப்பும் பெருமையும் வெகுவாகக் குறைந்துவிட்டதற்குக் காரணம் பிராமணர்களே


இக்கட்டுரை நாற்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முன் ஸ்ரீமான் ரா. கணபதி என்பவரால், சென்னை, மாம்பலம் ஸ்ரீ பக்தஸமாஜத்தின் 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் வைரவிழா மலரில்' வெளியானது. அதிலிருக்கும் தகவல்தான் கீழே தரப்பட்டு இருக்கின்றன:( நன்றி.பிராமிண்டுடே)
'வித்யை, வீரம், வாணிபம், விவசாயம் யாவுமே சமூகத்திற்கு அவசியமான தொழில்கள். இவற்றில் உயர்வு, தாழ்வு கிடையாது. இவற்றில் எந்தத் தொழிலை யார் தேர்ந்தெடுப்பது என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே இன்னாருக்கு இன்ன தொழில் என்று சமூகத்தையே பல பிரிவுகளாக நமது மதத்தில் பிரித்தனர். தலைமுறைத் தத்துவமாகத் தொழில்கள் ஏற்பட்டதால் தொழிற்பிரிவினை. சரியான விகிதாச்சாரத்திலும் அமைந்தது. ஒவ்வொரு பிரிவினரும் அவரவரது தொழிலுக்கு ஏற்றபடி கடுமையான அல்லது நெகிழ்ச்சியான விதிகளைக் கடை பிடித்தனர். உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு, உழைப்பே உளத் தூய்மை தரும் என்பதால் அவர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் இல்லை. அறிவு வேலை செய்பவர்களுக்கு, புத்தி தடம்புரண்டு போகாமலிருப்பதற்கே, அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லா ராகங்களும் சேர்ந்து 'ஸங்கீதம்' என்பது போல, எல்லாத் தொழிலினரும் சேர்ந்து சமூகமாக அமைந்தார்கள். இதில் ஒருவித துவேஷ மனப்பான்மையும் இல்லாதிருந்தது.

மோடிக்கு ஆபத்து எதிர்கட்சிகளினாலா அல்லது அமித்ஷாவினாலா?

@avargalunmaigal
 மோடிக்கு ஆபத்து எதிர்கட்சிகளினாலா அல்லது அமித்ஷாவினாலா?தமிழகம் மற்றும் சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் மோடி ஒரு இரும்பு மனிதர் போல ஒரு கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் இவரை ஆண் ஜெயலலிதா என்று கூறலாம். என்ன ஜெயலலிதா மாநில அளவில் வலம் வந்தார் இவர் இந்தியா அளவில் வலம் வருகிறார்.ஜெயலலிதா அதிக அளவில் விளம்பரம் செய்து தம்மை முன்னிருத்துவது போல இவரும் தன்னை முன்னிலை படித்து கொண்டிருக்கிறார்

Saturday, August 19, 2017

என்னை விட்டுடுங்கப்பா! வக்கில்கள் மூலம் அஜித் குமார் கதறல்

@avargalunmaigal


Friday, August 18, 2017

உள்ளதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

 
உள்ளதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

நீங்க இந்து ,இஸ்லாமிய, அல்லது  கிறிஸ்துமதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.. நீங்க எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் மத தலைவர் தங்கள் மதத்தில் உள்ள கருத்துக்களை எடுத்துரைத்து உங்களை வழி நடத்த வேண்டும் அப்ப்டியில்லாமல்  மாற்று மதத்தை பற்றி பேசி துவேசித்தால் அவர் மதத்தலைவராகவே இருக்க அருகதையில்லாதவர் அவரை ஒதுக்கிவிட்டு உங்கள் மத போதிக்கும் நல்வழியில் செல்லுங்கள் அவர் மாற்று மதத்தை பற்றி துவேசிப்பது தம் மதத்தை வளர்க்க அல்ல தன் வயிற்றை வளர்க்கவே

Thursday, August 17, 2017

பாஜக தலைமையிடத்தும் காவிகளிடத்தும் ஆண்மை இல்லையா?

   பாஜக தலைமையிடத்தும்  காவிகளிடத்தும் ஆண்மை இல்லையா?


Saturday, August 12, 2017

இந்தியா வல்லரசு ஆகும் போது 63 குழந்தைகள் இறப்பது தவிர்க்க முடியாதுதானே?

#modi #yogi #avargalunmaigal
இந்தியா வல்லரசு ஆகும்  போது  63 குழந்தைகள் இறப்பது தவிர்க்க முடியாதுதானே


செய்தி :லக்னோ: உ.பி.,மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயரிழந்தன.


உ.பி., மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 63 குழந்தைகள் உயரிழந்தன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏன்?

சம்பவம் குறித்து கோராக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியதாவது: ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கிகாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

Friday, August 11, 2017

அடபாவிங்களா? பன்னீர் செல்வமும் எடப்பாடியும் இப்படியா செய்வாங்க?

#modi @avargalunmaigal
அடபாவிங்களா? பன்னீர் செல்வமும் எடப்பாடியும் இப்படியா செய்வாங்க?

என்னது பன்னீர் செல்வமும் எடப்பாடியும் நடத்திய பேச்சு வார்த்தையில் மோடியை அதிமுகவின் பொது செயலாளராக  ஒரு மனதாக தேர்ந்தெடுத்துவிட்டார்களா?


செய்தி :சென்னையில் இன்று (ஆக., 10 )முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் நியமனம் செல்லாது என அறிவித்துள்ளனர்.இந்நிலையில் பன்னீர் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிஇருந்தார்.

Wednesday, August 9, 2017

எங்க ஊரு கூத்து

எங்க ஊரு கூத்து

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர். போட்டுள்ளது. 89 கோடி ரூபாய் பணம் பங்கு பிரிக்கப்பட்டதாகக் கிடைத்த ஆவணத்தின் அடிப்படையில்தான் ஆர்.கே. நகர் தேர்தலே நிறுத்தப்பட்டது. இதில் முதலமைச்சரோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மின்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன..

Tuesday, August 8, 2017

பயனுள்ள சில தகவல்கள்


Monday, August 7, 2017

மோடியிலிருந்து எடப்பாடி வரை அனைவரும் தமிழர்களுக் ஏற்ற தலைவர்கள்தான்

மோடியிலிருந்து எடப்பாடி வரை அனைவரும் தமிழர்களுக் ஏற்ற தலைவர்கள்தான்


வளர்மதி இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். விவசாய நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தி துண்டுக் காகிதங்கள் கொடுத்தார் என்று கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.


அவர் பொது நல சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை.பொது மக்களுக்கு தீங்கு ஏற்படும் நிகழ்வுகளிலும் ஈடுபடவில்லை அவர் செய்தது எல்லாம் தன் கருத்தை சொல்லி துண்டு காகிதம் மூலம் பிரசுரம்தான் செய்தார். இந்த துண்டு சீட்டில் தேசத்திற்கு எதிரான எந்த கருத்துகளையும் அவர் பரப்பவில்லை.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog