Sunday, August 27, 2017

நான்தான் உண்மையான திமுகவின் செயல்தலைவர் துரைமுருகன் திடீர் போர்க் கொடி


மேலும் படிக்க...Read more click செய்க



சென்னை : நேற்று கவர்னரை சந்திக்க சென்ற துரைமுருகன் சந்திப்பிற்கு பின் உடனடியாக டெல்லி சென்று மோடியை சந்தித்தார் அந்த சந்திபிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் நான் தான் திமுகவின் உண்மையான செயல் தலைவர் என்று சொல்லி தனக்கு ஆதரவாக திமுகவில் 35 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்றும் மேலும் தனக்கு பின்பாக திமுகவின் கழக செயலளார்கள் அணி வகுத்து நிற்பதாக சொல்லி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கு  நிலையான அரசு  ஆட்சி செய்து மக்களுக்கு நல்லது செய்ய மோடியின் அறிவுரைப்படி எடப்பாடியின் அரசுக்கு தான் ஆதரவு தரப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

வாரிசு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை எத்தனை நாள்தான் உண்மையாண கழக தொண்டர்கள் ஒரு குடும்பத்தின் பிடியில் அடிமையாக இருப்பது என்று உண்மையான கழக தொண்டர்கள் எடுத்த முடிவிற்கு தான் கட்டுப்பட்டு கட்சியை வழி நடத்த தான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிரது என்று துரைமுருகன் கூறி இருக்கிறார்.


ஆனால் அரசியல் வல்லுநர்கள் மோடியின் சித்து விளையாட்டு இதன் பின் கண்டிப்பாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். திராவிடம் இருக்கும் வரை தன்னால் தமிழகத்திற்குள் நுழைய முடியாது என்பதை நன்கு உணர்ந்த மோடி அதிமுகவைமட்டுமல்ல திமுகவையும் கலைத்துவிட்டால் தான் எளிதாக ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று கருதி இந்த விளையாட்டை ஆரம்பித்து இருக்கிறார். பணத்தாசை பிடித்த தமிழக தலைவர்கள் மக்கள் நலனை கருதாமல் மோடியின் மாய வலைக்குள் அகப்பட்டு இருக்கிறார்கள்.


செய்தியாக்கம் : தலைமை நிருபர் மதுரைத்தமிழன்

டிஸ்கி: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க மோடி என்ன வேண்டுமானலும் செய்வார். தினகரன் பக்கம் எம்.எல்.ஏக்கள் சேர்ந்து இப்போது நடக்கும் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தால் திமுகவை உடைத்து அதன் எம்.எல்.ஏக்களை பண ஆசை காட்டி இழுத்து வரக் கூட செய்யலாம். அசிங்கம் பிடித்த பணத்தாசை பிடித்தவர்கள் உள்ள தமிழகத்தில் எதுவும் நடக்கலாம் என்று என் மனதில் உருவான கற்பனை பதிவுதான் இது. ஒரு வேளை என் பதிவை படித்த பின் இப்படியும் ஒரு நிகழ்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை


ஸ்டாலின் ரெடி ஆனால் பன்னீர் & எடப்பாடி நாட் ரெடி


ஸ்டாலின் :அடே நீங்கள் இரண்டு பேரும்தான் சேர்ந்திட்டீங்க்ளே இனிமே ¨தைரியம் இருந்தால் என் கிட்ட வாங்க

பன்னீர் :தம்பி அப்படி ஒதுங்கீக்கோ நீ நேற்று பெஞ்ச மழையில் முளைத்த காளான்.நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தினகரனோட தர்ம யுத்தம் நடத்தப் போரோம் இடையில மாட்டிக்கிட்டு அவதிப்பட போறே

ஸ்டாலின் :அடேய்  எங்கப்பா உரம் போட்டு என்னை வளர்த்து இருக்காருடா எப்படா என்னை ஆட்டைக்கு சேர்த்து கொள்ளப் போறீங்க.... நானும் வயசிற்கு  வந்து ரொம்ப நாளாகுதே

பன்னீர் :தம்பி இது பெரியவங்க விளையாடுற(adult only) விளையாட்டு உனக்கு ஒன்றும் புரியாது  அதனால சின்ன பையானக பார்த்து விளையாடப்பா ..அதோ பாரு அன்புமனி உன்னை விளையாட கூப்பிடுறாரு அவர் கிட்ட  போய் விளையாடு


கொசுறு :

பாஜக பின்புறம் வழியாக ஆட்சிக்கு வருவதற்கு பொன்னர் அவர்கள் அதன் வழியை சுத்தம் செய்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போது "திமுக பின்புறம் வழியாக ஆட்சியை பின்பற்ற முயற்சிப்பது தமக்கு நன்றாகவே தொ¢கிறது "என்று பேட்டி அளித்தார்

பாஜக தலைவர்கள் ஊழல்கள் செய்வதே இல்லை செய்வதெல்லாம் பாஜக ஆதரவாளர்கள்தான்


அலிபாவும் நாற்பது திருடர்களும்  அன்று ..அதிமுகவும் இரண்டு திருடர்களும்  இன்று

அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர்ந்துவிட்டன. அதற்கு அடுத்து என்ன இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டியதுதானே பாக்கி

மோடியும் அமித்ஷாவும் எவ்வளவோ முயற்சி செய்து பன்னீருக்கு துணைமுதல்வர் பதவியைத்தான் வாங்கி தர முடிந்தது


ஹலோ எடப்பாடி & பன்னீர் செல்வம் நீங்க ரெண்டு பேரும் இணைய மோடிதானே உதவி செஞ்சார்....நீங்கள் நன்றியுள்ள தமிழனாக இருந்தால் மோடியையும் அவர் மனைவியையும் இணைத்து வைக்க உதவி செய்யுங்கய்யா


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: எல்லாகட்சிகளும் இங்கு கலாய்க்கப்படும்

14 comments:

  1. உங்க ஒண்ணரைப் பக்க நாளேடு படித்து ரசித்தேன் ஜி :)

    ReplyDelete
  2. சுவையான செய்திகள் அனைத்து தலைப்புகளிலும். அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜம்புலிங்கம் சார்

      Delete
  3. சிறப்பான தயாரிப்பு. துக்ளக்கின் ஒண்ணரை பக்க நாளேடு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் சிறு வயதில் துக்ளக் படித்தன் விளைவுதான் இந்த மாதிரி பதிவுகளுக்கு காரணம் என நினைக்கிறேன்

      Delete
  4. அவுகளோட உம்மைங்க என்ற எம்ம தளத்தில் அனுமதி இல்லாம பதிவிடும் மதுர மாப்பு அவர்கள் உடனடியாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும்? நீக்கப்படுகிறார். (இப்டில்லாம் கூட அறி?விப்பு வரப் போகுதா மாப்பு)

    ReplyDelete
    Replies
    1. யோவ் இப்படி ஏதாவது ஐடியாவை தினகரணுக்கு சொல்லி விடாததைய்யா

      Delete
  5. ஒரு வேளை மதுரைத் தமிழனுக்கு அதிகம் செய்திக்சள் கிடைக்கிறதோஎன்னும் சந்தேகம்தலைப்பைப் பார்த்து வந்தது கடைசியில் கற்பனை என்று அணைத்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. எனது கற்பனைகள் நாளைய செய்தியாக மாறினாலும் அதிசயபடுவதிற்கில்லை சார்

      Delete
  6. சத்தியமா இது செய்தினு நினைச்சு வாசிச்சோம்....ஆனா கற்பனைனு கடைசிலதான் தெரிஞ்சுச்சு!!! ஹாஹாஹாஹா...நல்லா பண்ணிருக்கீங்க மதுரை...செம நக்கல்!!! உங்கள மட்டும் ஏதாவது பத்திரிகைக்காரங்க மட்டும் வெச்சுருந்தாங்கனு வையுங்க இப்படிப் பரபரப்பான, பரப்பான அக்ரஹார செய்திக்ளையும் கூட சென்சேஷனாலா தந்து பத்திரிக்கை எல்லாம் அமோகமா வித்துருக்கும்...ஆனா.அப்படியே நம்ம தலைமை நிருபர் மதுரைய...சரி வேண்டாம் விடுங்க...ஹிஹிஹி..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா சொல்லுறேன் இந்த செய்தியை எனக்கு சொன்னது ட்ரம்புதான் அவருக்கு மோடிதான் இதை சொன்னதாம் நம்பினால் நம்புங்கோ

      Delete
  7. Replies
    1. நான் மோடியை அங்கிள்ளாகத்தான் பார்க்கிறேன் ஆனால் நீங்க அடிக்கடி ஆண்டி மோடி என்று சொல்லுறீங்க ஆமாம் உங்களுக்கும் மோடிக்கும் ஏதாவது தகராறா என்ன?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.