ஜெபமாலை குற்றமெனில், அரசு அலுவலக பூஜை என்ன தத்துவம்?
#Sridhar Subramaniam
அமைச்சர் மரீ வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் வருகையில் கையில் ஜெப மாலையுடன் வந்தார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக இந்துத்துவர்கள் இதனை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள். 'அதில் ஏதும் தவறில்லை, அது அவர் நம்பிக்கைதானே,' என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். 'நாளை நிர்மலா சீதாராமன் ராமர் சிலையுடன் பட்ஜெட் ஃபைலை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் வந்தாலும் இதையே சொல்வீர்களா?' என்று மருத்துவர் ஷர்மிளா கேட்டிருக்கிறார்.
அதுதான் முக்கியமான கேள்வி. பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்துத்துவ அரசியல்வாதிகளின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கண்டிப்பாக ஆக வேண்டியதுதான். அதே விமர்சனம் கிறித்துவ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். ஜெபமாலையோ, ராமர் சிலையோ, அவை வீட்டோடு இருக்க வேண்டும்; அரசாங்க கட்டமைப்புகளுக்குள் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தொடர்ந்து மீறி வருவதால்தான் பாஜக கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மோடியும் அந்த விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அமைச்சர் மரீ வில்சனின் ஜெபமாலை அவர் வீட்டோடு இருக்கும் வரையில் அவர் நம்பிக்கை என்பது அவரின் உரிமை. போலவே, அந்த நம்பிக்கைகளை அரசுக் கட்டிடத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்பது அவர் கடமை. அப்படி செய்ததன் மூலம் தன் செக்யூலரிசக் கடமையை மீறி இருக்கிறார்.
கண்டனங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
மேலேயுள்ள பதிவிற்கு எனது பதில்
போலிச் செக்யூலரிசப் போர்வையில் தனிமனித சுதந்திரத்தின் மீது நடத்தும் அப்பட்டமான ஒடுக்குமுறை இது ஸ்ரீதர்
கையில் ஒரு எளிய ஜெபமாலையை வைத்துக் கொள்வதையும், அரசியல் மேடைகளில் அதிகார பலத்துடன் மதச் சின்னங்களைத் திணிப்பதையும் ஒரே தராசில் வைப்பது மாபெரும் அயோக்கியத்தனம் .
இந்தியச் சூழலில் மதச்சார்பின்மை என்பது அரசாங்கம் எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவாகவோ அல்லது விரோதமாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்பதுதானே தவிர தனிமனிதர்கள் தங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை எங்குமே வெளிப்படுத்தக் கூடாது என்று சடலமாக்குவது அல்ல
ஒரு அமைச்சர் தன் சொந்த நம்பிக்கையாக எதைக் கையில் வைத்திருந்தாலும அது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம். அதை விட்டுவிட்டு, ஜெபமாலையையோ, அடையாளங்களையோ அரசாங்கக் கட்டடத்திற்கு வெளியே கழட்டிவிட்டு வாருங்கள் என்று சொல்லுவது செக்யூலரிசம் அல்ல அப்பட்டமான பாசிசம்.
அரசாங்க கட்டமைப்புகளுக்குள் மதம் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு என்றால் அரசாங்க அலுவலகங்களுக்குள்ளேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவது எந்தக் கோட்பாடு ஸ்ரீதர் எந்த ஒரு அரசியல் கட்சிகளையோ அல்லது பெரும்பான்மை மதவாதத்தையோ விமர்சிக்கிறேன் பேர்வழி என்று, தனிநபர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் ஆன்மீக அடையாளங்களையும் குறிவைக்கும் இந்த இரட்டை வேடப் போலி முற்போக்குவாதத்தை வன்மையாகக் நான் கண்டிக்கிறேன்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
#Secularism, #Jabamala, #PoliticalHypocrisy, #TamilPolitics, #TamilBlog, #SecularismDebate, #IndiaPolitics#செக்யூலரிசம் #ஜெபமாலை #அரசியல்நையாண்டி #போலிமுற்போக்கு #அரசுஅலுவலகபூஜை #தமிழ்வலைப்பதிவு #சமூகவிமர்சனம் #தனிமனிதசுதந்திரம்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.