Saturday, August 15, 2026

அடிமைக் கூட்டமும் வடை சுடும் அரசியலும்!  சுதந்திர தின ஸ்பெஷல் நையாண்டிப் பார்வை

வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் தேசப்பக்தியை வாடகைக்கு எடுத்து கொடி ஏத்துற கூட்டமா நீங்க.. அப்போ இந்த நையாண்டி உங்களுக்காகத்தான்!

நாட்டுல பிரச்சினைகள் மலை மாதிரி குவிஞ்சு கிடக்குது. ஆனா நம்ம அரசியல்வாதிகள் மைக் முன்னாடி நின்னு புதுப்புது ஸ்டைல்ல வடை சுடுறதுல பிஸி. அதை கைதட்டி ரசிக்கிற பொதுமக்களும் பிஸி.

சுதந்திர தினம் கொண்டாடுறோம். ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் எங்கேன்னு கேட்டா மட்டும் முகம் சுளிக்குறோம்.

இதோ, அந்த அடிமைக் கொண்டாட்டத்தின் அப்பட்டமான முகத்தைக் காட்டும் சில நையாண்டிக் கார்ட்டூன்கள்!

கார்ட்டூன்களைப் பார்ப்பதற்கு முன், மனதில் எழுந்த சில வரிகள்

கொடி உயரட்டும் கேள்வியும் உயரட்டும்!

காகிதக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு, மேடையில் ஒலிக்கும் ஒவ்வொரு வெற்றுக் கோஷத்துக்கும் கைதட்டுவதற்குப் பெயர் சுதந்திரம் அல்ல.

அதிகாரம் காட்டும் திசையிலேயே தலை திருப்பாமல், ஏன் இப்படி நடக்கிறது என்று அதன் முகத்தைப் பார்த்துக் கேட்பதுதான் சுதந்திரம்.

வயிற்றுக்காக மௌனம் காக்கச் சொல்லும் அரசியலும், வாக்குக்காக தேசப்பக்தியை விற்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை, கொடி மட்டும் பறந்தால் நாடு சுதந்திரமாகிவிடாது.

இந்தச் சுதந்திர தினத்தில் ஒரு சபதம் ஏற்போம் .கொடியை உயர்த்துவதோடு நிறுத்தாமல், நம் சுயமரியாதையையும் உயர்த்திப் பிடிப்போம். கைதட்டுவதற்கு முன் கேள்வி கேட்போம். அடிமைத்தனத்தை அலங்காரமாகக் கொண்டாடாமல், சுயசிந்தனையை உரிமையாகக் காப்போம்.

கொடி உயரட்டும். குரலும் உயரட்டும்.சுதந்திரம் வெறும் விழாவாக அல்ல வாழ்க்கையாக.

அடிமைச் சங்கிலிகளை உடைக்கும் சுயசிந்தனைத் திருநாள் நல்வாழ்த்துகள்!



#Independence day 2026


நையாண்டித் துளிகள் : சுதந்திரம் free கேள்வி premium

  

    

நையாண்டித் துளிகள் : சுதந்திரம் கிடைத்தது ஆனால் அதைப் பயன்படுத்த சுதந்திரம் இல்லை


    

   

நையாண்டித் துளிகள் :     பேச்சு சுதந்திரம்  இருக்கிறது ஆனா அதைப்பயன்படுத்த  usage charge மட்டும் சற்று அதிகம்





 அன்புடனும் ஆத்திரத்துடனும்,
மதுரைத்தமிழன்

#IndependenceDay #MaduraiTamizhan #PoliticalSatire #TamilBlogs #சுதந்திரதினம் #நையாண்டி #PoliticalSatire #TamilBlogger #SocialCommentary #FreedomOfSpeech #IndianPolitics #DesiSatire #OpinionPiece #SatiricalWriting #TamilWriting #CurrentAffairs #SocialMediaPost #அரசியல்நையாண்டி #தமிழ்வலைப்பதிவுகள் #சமூகநையாண்டி #சுதந்திரம் #சுயசிந்தனை #தமிழ்எழுத்துக்கள் #சமூகச்சிந்தனை #தமிழ்ப்பதிவுகள்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.