Tuesday, August 4, 2026

 எழுத்தாளர் சாரு நிவேதிதா  முதல்வர் விஜய்க்கு அனுப்பிய லெட்டர் 
     

#CharuNivedita  #ThalapathyVijay  #TVK  #PoliticalSatire  #TamilSatire  #TamilBlog  #TNPolitics  #Existentialism


அனுப்புநர்:

சாரு நிவேதிதா
பிரெஞ்சு காத்து வாங்கிப் பழுத்த உலக மகா தத்துவவாதி
100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, 
வாசகர்களைத் திணறடித்த சரித்திர நாயகன்
கிராஸ்வேர்ட், விஷ்ணுபுரம் மற்றும் கண்ணதாசன் விருது பெற்றவர்

பெறுநர்:
தமிழக முதல்வர்  
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
 ஏகப்பட்ட லட்சியத்தின் சொந்தக்காரர் 

அன்புள்ள தளபதி அவர்களுக்கு,

வணக்கம். நான் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கும் நீங்கள் பதில் தராமல் காட்டும் மௌனம் இருக்கிறதே... அது பிரெஞ்சு இயக்குநர் கோடார்ட் (Godard) 'Breathless'  திரைப்படத்தின் கிளைமாக்சை விடப் பரிதாபமாக இருக்கிறது!

நான் உங்களைச் சந்தித்து, பிரெஞ்சு இலக்கியத்தின் இருத்தலியல் (Existentialism) தத்துவத்தைப் பற்றியும், #கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் அடிக்கும் லூட்டிக்கும் பின்நவீனத்துவத்துக்கும் உள்ள ஆழமான மறைபொருளைப் பற்றியும் விளக்கத்தான் அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். ஆனால், ஒரு மாநிலத்தின் எதிர்காலம் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள், ஒரு மூத்த எழுத்தாளரின் அழைப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றால், தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம் எங்கோ ரொம்பவே தடம் புரண்டுவிட்டது என்றே அர்த்தம்!

சரி, உங்களுக்கும் முதல் பட்ஜெட்டை சமாளிக்கும் டென்ஷன் இருக்கும், எனக்கும் காபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டு அடுத்த நாவலுக்கு பில் கட்ட வேண்டிய வேலைகள் இருக்கின்றன. அதனால் இந்தச் சந்திப்பை எளிமையாக்க ஒரு  ஸ்மார்ட் ஷார்ட்-கட் தருகிறேன்.

உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது வங்கிக் கணக்கிற்கு ஒரு கோடி ரூபாயை (₹1,00,00,000) நெப்ட் (NEFT), ஜிபே (GPay) அல்லது கூகுள் பே மூலம் தட்டி விடுங்கள்.

 சில சிறு நிபந்தனைகள் உண்டு

 பணம் அனுப்பும் போது குறிப்பில் அறிவுலகத்தின் மாமேதை, உலகப் புகழ்பெற்ற சாருவுக்கான குரு தட்சணை என்று ரத்தம் சிந்தி எழுத வேண்டும்.

 பணம் என் பாக்கெட்டுக்கு வந்த அடுத்த நொடியே, ட்விட்டரில் ஒரு அனல் பறக்கும் அறிக்கை விடுவேன்: விஜய் வெறும் அரசியல் தலைவர் அல்ல; சோகரேட்டீஸுக்கே ஞானம் ஊட்டிய உலகத்தின் உன்னதத் தத்துவவாதி என்று சிலாகித்துத் தள்ளுவேன்!

ஒருவேளை பணம் அனுப்பத் தாமதமானால், உங்கள் அடுத்த படத்தின் தலைப்பை  சாருவின் சவகாசம்: கோடாரி சுழலும் நேரம்' என்று மாற்றி பாக்ஸ் ஆபிஸை காலி   செய்துவிடுவேன், பார்த்துக்கொள்ளுங்கள்!

வங்கிக் கணக்கு விவரங்கள் (பாண்டிச்சேரி கிளை)


கணக்கு பெயர்: சாரு நிவேதிதா (தன்னிகரற்ற பின்நவீனத்துவப் போராளி & பிரெஞ்சு பிரியர்)
கணக்கு எண்: 420420420420
வங்கி மற்றும் கிளை: எக்ஸிஸ்டென்ஷியல் அண்ட் பரோட்டா பேங்க் (Existential & Porotta Bank, Pondicherry)
IFSC குறியீடு:** PHILOSOPHY007

பதிலையும், அதைவிட முக்கியமாக அந்தப் பணத்தையும் உடனடியாக எதிர்பார்க்கிறேன்.
    


இப்படிக்கு,
சாரு நிவேதிதா
மௌனத்தை மன்னிக்காதவன்
புறக்கணிப்பை மறக்காதவன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பணம் கேட்டு லெட்டர் எழுதாமல் சமுக நலத்தை எண்ணியா இந்த மண்ட லெட்டர் எழுதி இருக்கப் போவுது..


இன்றைய தலைவர்கள் மறந்துபோன ஒன்று: அரசியல் வெற்றியை விட மனிதக் கண்ணியம் பெரிது https://avargal-unmaigal.blogspot.com/2026/08/udhayanidhistalin-trisha.html

#CharuNivedita, #ThalapathyVijay, #TVK, #PoliticalSatire, #TamilSatire, #TamilBlog,  #TNPolitics, #Existentialism  #சாருநிவேதிதா #விஜய் #தவெக #அரசியல்நையாண்டி #பகடி #தமிழ்வலைப்பதிவு #சமூகவிமர்சனம்#தளபதிவிஜய்


  • 0 comments:

    Post a Comment

    நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.