Wednesday, August 26, 2026

 குஜராத்துக்கு மறு ஆய்வு  அமெரிக்காவுக்கு விஜய் ஆய்வு!
இது ஜோதிடம் அல்ல வருங்கால வரலாறு!

 

#Vijay #India PM, mk stalin

மோடி இல்லாம இந்தியா ஓடாது . மோடிதான் நிரந்தர பிரதமர்ன்னு சிலர் பேசுறதைக் கேட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துல தேர்தலே வேண்டாம். ஒரே ஒரு பெயரை நிரந்தரமாகப் ப்ரிண்ட் பண்ணிட்டாலே போதும் போல இருக்கு!

ஆனா உண்மையிலே மக்கள் எப்போதும் அப்படியெல்லாம் நிரந்தர ஒப்பந்தம் போட்டுக்கிட்டு உட்கார மாட்டாங்க.

இப்ப பாருங்க தமிழகத்துல விஜய் முதல்வரான பிறகு, இவர் ஒருநாள் இந்தியாவுக்கும் பிரதமராவாரோன்னு மக்கள் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படித்தான் அவர் அடுத்த முதல்வர்னு சொன்னபோது சிரிச்சவங்க, இப்போ வாயடைத்து நிற்கிறாங்க!

அந்தப் பேச்சைக் கேட்கும்போதுதான் ஒரு விஷயம் புரியுது.

அரசியலில் யாரும் நிரந்தரம் இல்லை. சிலருக்கு மட்டும் அந்த உண்மை தேர்தல் முடிஞ்ச பிறகுதான் தெரியும்!

ஏன்னா அரசியல்ல பெரிய பெரிய கோட்டையெல்லாம் மக்கள் கட்டினதுதான். இடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, ஒரு வாக்குச் சீட்டே போதும்.

இப்போ விஜய் பெயர் கேட்டா சிலருக்கு சிரிப்பு வரலாம். நாளைக்கு அந்தப் பெயர் டெல்லி வரை போனா, சிரிப்பு முகத்துல இருக்குமா இல்ல தேர்தல் முடிவுல இருக்குமா தெரியாது!

கொளத்தூரில் மறு ஆய்வு வேண்டும் என்று ஸ்டாலின் கேட்பதைப் போல, வருங்காலத்தில் குஜராத்தில் மறு ஆய்வு வேண்டும் என்று மோடி கேட்கும் நாளுக்கு தூரம் அதிகம் இல்லை.

அதுமட்டுமல்ல… அப்போது அமெரிக்காவுக்கு அதிக வரி விதித்து, அமெரிக்காவையே கதற வைக்கப் போகும் ஒரே இந்தியப் பிரதமர் நம்ம விஜய்ண்ணா மட்டுமே!

ஜெய் த்ரிஷா!
இந்தியாவின் அண்ணை த்ரிஷா!

அன்புடன்,
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.