ஐஐடி மேடையில் ஒலித்தால் வேதமா? கையில் ஜெபமாலை இருந்தால் பாசிசமா? தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பின்மையின் முகம்!
நான் என் பிராமண நண்பர்களின் இல்லங்களுக்கும், என் மனைவி வழி உறவினர்களின் விசேஷங்களுக்கும் எந்தத் தயக்கமும் இல்லாமல் போயிருக்கிறேன். என் மாமனாரும் மைத்துனர்களும் என் வீட்டுக்கு எண்ணற்ற முறை வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் என் வீட்டில் தங்கும் நேரங்களில் நடத்தும் வழிபாடுகளுக்குத் தேவையான ஏற்பாடுகளிலும் நான் முன்னின்று பங்கெடுத்திருக்கிறேன். அவர்கள் உச்சரிக்கும் வேத மந்திரங்கள் என் ஆன்மாவை ஒருபோதும் சுட்டதில்லை. அவற்றின் தொன்மையையும் பண்பாட்டு அடுக்குகளையும் அருகில் இருந்து ரசிக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு.
ஆன்மீகத்தை மனிதநேயத்தோடும் பரந்த பார்வையுடனும் அணுகத் தெரிந்தால், எந்த மத நம்பிக்கையும் எதிரியாகத் தெரியாது. ஆனால், தனிப்பட்ட நம்பிக்கைக்கும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளிக்கும் இடையே இருக்கும் கோட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
இங்கதான் எனக்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கிற ஐஐடி போன்ற ஒரு தேசியக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில், எதற்காகக் காயத்ரி மந்திரம் அதிகாரப்பூர்வமாக ஒலிக்க விடப்பட வேண்டும்? அது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குதானே. அதற்கு ஒரு தேசியக் கல்வி நிறுவனத்தின் மேடையில் என்ன வேலை.
இது என்ன குருகுலமா இல்லை வேதபாடசாலையா பல மதச் சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கிற பொதுக் கல்விக்கூடம்தானே இது.
ஒரு பொது நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்கை முன்னிறுத்துவதும், ஒரு தனிநபர் தன் சொந்த ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக ஒரு ஜெபமாலையைக் கையில் வைத்திருப்பதும் ஒன்றா. இந்த இரண்டையும் ஒரே தராசில் வைத்து எடைபோடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சில நாட்களுக்கு முன்பு தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒரு அமைச்சர் நிதிநிலை அறிக்கையுடன் கையில் ஒரு எளிய ஜெபமாலையை வைத்திருந்தார். அவர் அதை வைத்து எந்த மந்திரமும் ஓதவில்லை; யாரிடமும் எந்தச் சடங்கையும் திணிக்கவில்லை. அரசின் சார்பாக எந்த மதத்தையும் உயர்த்திப் பேசவில்லை. அது வெறும் அவரோட தனிப்பட்ட நம்பிக்கையின் ஒரு அடையாளம் அவ்வளவுதான்!
இதைக் கையில் எடுத்துக்கொண்டு, அரசுக் கட்டிடத்துக்குள் மத அடையாளம் வரக்கூடாது. அதை கழற்றிவிட்டு வாருங்கள் என்று ஸ்ரீதர் சுப்பிரமணியன் போன்றவர்கள் பிதற்றுவது எந்த வகையான மதச்சார்பின்மை.
மதச்சார்பின்மை என்பது தனிமனிதனின் நம்பிக்கையை நசுக்குவது அல்ல! அரசு தன் அதிகாரத்தை எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பயன்படுத்தாமல் நடுநிலையாக இருப்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை. இதே அளவுகோல் ஐஐடி காயத்ரி மந்திரத்திற்கும் பொருந்த வேண்டும்; அமைச்சரின் ஜெபமாலைக்கும் பொருந்த வேண்டும்.
ஐஐடி பட்டமளிப்பு மேடையில் ஒரு மதத்தின் மந்திரம் முழங்கும்போது ஒத்த வார்த்தை பேசாமல் ஊமையாகிப் போகும் இதே ஸ்ரீதர் சுப்பிரமணியன் கூட்டங்கள், ஒரு அமைச்சர் கையில் ஜெபமாலை இருப்பதை மட்டும் பெரும் பூதாகரமாகக் காட்டுவது ஏன் இது மதச்சார்பின்மை மீதான அக்கறையா இல்லை அரசியல் பிழைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமா.
ஒரு மதத்தின் சடங்கு பொது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வில் திணிக்கப்படும்போது அதைத் தட்டிக் கேட்பது அவசியம். அதேபோல், ஒருவரின் எளிய தனிப்பட்ட நம்பிக்கை அடையாளத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் கோழைத்தனம்.
மதச்சார்பின்மை என்பது மத நம்பிக்கைகளை அழிப்பதல்ல; அரசாங்கத்தின் அதிகாரத்தை எந்த ஒரு மதத்தின் ஆதிக்கத்திற்கும் அடிமையாக்காமல் காப்பதுதான்! இந்த அடிப்படை அரசியலை மறைத்துவிட்டுப் பேசப்படுவது முற்போக்கு அல்ல... பச்சைத் தனமான'தேர்ந்தெடுக்கப்பட்ட செக்யூலரிசம்
நீங்கள் இந்த தளத்திற்கு புதியவராக இருக்கலாம்.. அதனால் இந்த மாதம் வெளிவந்த பதிவுகளுக்கான் லிங்க்ஸ் உங்கள் வசதிக்காக
விஜய் Vs உதயநிதி சண்டையை விட்டுவிட்டு யோசியுங்கள்... சாமானியனின் உண்மையான வலி இதுதான்! https://avargal-unmaigal.blogspot.com/2026/08/vs-tamilnadupolitics.html
தேவை முடிந்ததும் மாறும் முகங்கள் https://avargal-unmaigal.blogspot.com/2026/08/thoughts-humannature-todayworld.html
ஜெபமாலை குற்றமெனில், அரசு அலுவலக பூஜை என்ன தத்துவம்? https://avargal-unmaigal.blogspot.com/2026/08/secularism-jabamala-politicalhypocrisy.html
எழுத்தாளர் சாரு நிவேதிதா தமிழக முதல்வர் விஜய்க்கு அனுப்பிய கடிதம்
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/charunivedita-thalapathyvijay-tvk.html
இன்றைய தலைவர்கள் மறந்து போன ஒன்று அரசியல் வெற்றியைவிட மனிதக் கண்ணியம் பெரிது
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/udhayanidhistalin-trisha.html
முப்பதுகளைத் கடந்த என் பிரியமானவளே/பிரியமானவர்களே
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/thirtyplus-liferealities.html
திமுக/அதிமுகவை மிஞ்சிய ஆன்மீக அரசியல் முதல்வரின் கண்ணிரும் ஆண்வனின் இரக்கமும்
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/politicalsatiretamil-tvk-vijaypolitics.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#SelectiveSecularism #IITConvocation #TNPolitics #MaduraiThamizhan #SecularismDebate #AvargalUnmaigal

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.