சிவகார்த்திகேயன்
அவார்டு வாங்கும்
போது விஜய் டிவி போட
மறந்த பாடல்
சிவகார்த்திகேயனுக்கு நடிக்க தெரியுமா? |
||
எல்லோரும்
நினைப்பது
சிவகார்த்திகேயன் காமெடி
நடிகன்தான் என்றுதான் .
ஆனால் அவர் நான்
காமெடிமட்டுமல்ல நல்ல
குணச்சித்திர நடிகன்
எனக்கும் நல்ல
குணச்சித்திர வேடத்தில்
நடிக்க தெரியும் என்று
சொல்லிக் கொண்டிருந்தார் .
ஆனா அவர் சொல்லவதையெல்லாம்
சினிமாத் துறையில்
உள்ளவர்கள் எல்லாம் காமெடி
பேச்சாகவே எடுத்து
கொண்டனர்.
இதனை பொறுத்து
பொறுத்து பார்த்த
சிவகார்த்திகேயன்
இறுதியில் விஜய் டிவியை
அணுகினார். அதன் விளைவே
விஜட் டிவி அவார்டில்
அரங்கேறிய 'அப்பா உனக்கு
ஒன்றும் செய்யவில்லைப்பா'
என்ற குண சித்திர டிராமா.
இந்த வேஷத்தை அவர்
சிறப்பாகஏற்று விழா
மேடையில்
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க
தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
என்று நடித்து
காட்டி அங்கு வந்து
இருந்தவர்களின் மனதில்
சோகத்தையும் கண்களில்
கண்ணிரையும்
வரவழைத்துவிட்டார்
இதை பார்த்தாவது
நம்புங்கைய்யா
சிவகார்த்திகேயனுக்கு
குணச்சித்திர வேடத்தில்
நடிக்கமுடியும் என்று..
சிவகார்த்திகேயன்
உண்மையிலேயே நீங்கள்
அவார்ட் வாங்கும் போது
உங்கள் அப்பாவை நினைத்து
இருந்தீர்கள் என்றால்
உங்களுக்கு ராயல் சல்யூட்.
ஆனால் பணத்திற்காக இது
நீங்கள் போட்ட டிராமா
என்றால் இப்படி சிறப்பாக
நடித்த உங்களுக்கு இந்த
முழுப்பாடலை நான் டெடிகேட்
பண்ணுறேன். ஏதோ நம்மால
முடிந்தது..
விஜய் சினி
அவார்ட்ஸ்
best entertainer 2013 award - sivakarthikeyan
அன்புடன்
மதுரைத்தமிழன் |
பங்கஜ வள்ளி
அம்புஜனே ஸ்ரீ
பங்கஜ வள்ளி
அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே
பணிந்தேன் நானே
பங்கஜ வள்ளி
அம்புஜனே ஸ்ரீ
டேய்... யாருடா அவன்
பங்கஜத்த பத்தி பாடுறவன்
நாந்தானுங்க சாமி
பங்கஜம் என்னடா
பங்கஜம் என் மங்களத்த பத்தி
பாடுறா
மங்களம் கடைசில
தானுங்க பாடனும்
டேய் நான் சொல்றேன்
முதல்லியே பாடுறா
இன்னும் அட்வான்ஸ்
வாங்களைங்களே
அட்வான்சாவது
கிட்வான்சாவது
தள்ளி நில்லுடா
நாங்களே பாடுறோம்
மாமா
மாப்ள
நீ ஆரம்பி
மன்னாதி மன்னனை
எல்லாம் பாத்தவன் நான்
அந்த மதுரை வீரனையே
எதிர்த்தவன் நான்
அப்பேற்பட்ட என்ன
பஞ்சாயத்துல
நிறுத்திட்டானுகளே
படுபாவி பசங்க
ஆமாம்...
என் அருமை என்ன
பெருமை என்ன அந்தஸ்தென்ன
ஆமாம்...
என் குஸ்தி என்ன
பஸ்கி என்ன தண்டால் என்ன
ஆமாம்...
இத நான் எங்க
சொல்வேன் என்ன செய்வேன்
மாப்ள இதுக்கு மேல
நீயே பாடுரா
அட உன் கதை எனக்கு
எதுக்கு மாமா
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க
தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண
நம்பி எம்மனச தொறந்து
வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
ஆத்தங்கரை
தோப்புக்குள்ள ஓடி
விளையான்டதும்
யாருமில்லா
சமயத்துல ஜாடையில
சிரிச்சதும்
தோட்டத்துல
வரப்புக்குள்ள தொட்டு
தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு
மீனை சுட்டு ரெண்டு பேரும்
கடிச்சதும்
அத்தனையும்
மறந்துபுட்டு இவன் நெஞ்ச
வதைக்கிறா
அப்பனோட பேச்ச
மட்டும் பெருசாக
நினைக்குறா
ஆசைப்பட்ட
மாப்பிள்ளையோ அம்போன்னு
முழிக்குறான்
ஆசைப்பட்ட
மாப்பிள்ளையோ அம்போன்னு
முழிக்குறான்
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க
தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆசை வச்ச ஆம்பிளை
நான் ஆண்டியா அலையுறேன்
அல்லும்பகல் உன்ன
எண்ணி தெருவுல திரியுறேன்
நேத்துவரை
நடந்ததெல்லாம் தெய்வம்
செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு
வச்சா தீந்திவிடும் வேதனை
நான் மட்டும்
இல்லையினா சன்யாசம்
வாங்கிருப்பான்
காசி முதல்
ராமேஸ்வரம் காவி கட்டி
போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே
உம்மனச மாத்திக்கடா
மங்களத்த பெத்தவனே
உம்மனச மாத்திக்கடா
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க
தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண
நம்பி எம்மனச தொறந்து
வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு
தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க
தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே
|
Related Posts
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம்
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம் இன்று டிவிட்டரி...Read more
பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்
பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும் பிக் பாஸ் ஷோவிற்கு கமல்ஹாசனின் விளம்பரம் வந்து கொண்டி...Read more
டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?
டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ...Read more
அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்
அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் ...Read more
விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்
விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க...Read more
ஜெஸிக்காவை வைத்து 'எமோஷனல்' நாடகமாடும் விஜய்டிவி
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
19 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சிவ கார்த்திகேயன் முதல்ல சொன்னது ஏறின உடனே...வீட்டுல சொல்லித்தான் அனுப்பினாங்க...அழுதுறாத...அப்புறம் விஜய் டிவி அத போடு போட்டுக் காமிச்சுகிட்டே இருப்பாங்கனு......அப்ப அதுக்குதான் அழுதுருப்பாரோ?....ஆனா அவர் எந்த ஷோ வந்தாலும் அப்ப பத்தி சொல்லிடறாரு...சூர்யா நடத்தின....நீங்களும் வெல்லலாம் ஒருகோடில கூட அவரு அப்பா பத்தி பேசினாரு...அழுதாரு....அத விஜய் டிவி காமிச்ச்ச்............சுக்கிட்டே இருந்தாங்க......பப்ளிசிட்டி?!!! விஜய் டிவிக்கு கொஞ்ச நாள் ஓட்டக் கிடைச்சுருச்சு.....
ReplyDeleteவிஜய் டிவி பண்ணுகிற சில அலம்பல்களை பார்க்க முடியாது.
ReplyDeleteநீங்களும், துளசிதரன் ஐயாவும் சொல்வது மாதிரி எல்லாம் பப்ளிசிட்டி தான்.
இதில் கொடுமை என்னவென்றால் மக்களும் இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பது தான்.
அவர் நடித்தாரோ, இல்லையோ தெரியவில்லை... ம்...
ReplyDeleteவிஜய் டி.வி.க்கு மட்டும் சரியான பாடல் போடத் தெரியவில்லை - இருக்கட்டும்...
நீங்கள்...?
ஆனால் கீழ் உள்ள பாடல் பொருத்தமாக இருந்திருக்கும்...
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...
தந்தை அன்பின் முன்னே...
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே...
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா...
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா...
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்...
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...
தந்தை அன்பின் முன்னே...
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்..
தந்தை அன்பின் பின்னே...
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்...
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்...
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்...
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்...
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்...
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்...
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...
தந்தை அன்பின் முன்னே...
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்...
தந்தை அன்பின் பின்னே...
பாஸ் விஜய் டிவி மக்களை வைச்சு காமெடி பண்ணுறாங்க,,,, நான் விஜய் டிவியை வைச்சு காமெடி பண்ணிகிட்டு இருக்கேன். இதற்குகிடையில் நீங்க சீரியஸா வந்துட்டீங்க...
Deleteதனபாலன் நீங்கள் பதிந்த பாடல் மிக அருமை மிக அற்புதமான பாடல் அது எனக்கும் பிடிக்கும். ஆனால் இந்த பாடலில் உள்ள வரிகள் என் வாழ்க்கைக்கு பொருந்தாது.அதாவது இந்த வரிகள் எனது தந்தைக்கு உரியது அல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி
Deleteவிளம்பர உலகம் என்பது 100% சரி...
Deleteஆனால் நா. முத்துக்குமார் தன் மகனிடம் விருது வாங்கும் போது, தனது தந்தையை குறிப்பிட்டு இந்தப் பாடலை சொன்னார்...!
வருத்தப்படாத வாலிபர் அழுததை பார்க்க வேண்டும்... மீண்டும் ஒளிபரப்பு (விளம்பரம்) செய்யாமலா இருக்கப் போகிறார்கள்...?
அவர் அழுததைப் பார்த்தால் உண்மையில் அழுதமாதிரி தான் இருந்தது....ஏன் சார் அப்பா மேல அவ்வளவு பாசத்தோடு இருக்கக்கூடாதா என்ன?
ReplyDeleteஒரு நடிகன் அழுவதை அதுவும் விஜய்டிவியில் அழுவதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களே என்று நினைக்கும் போது ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில் விஜய் டிவி வெற்றி பெற்றுவிட்டது என்றே நினைக்கிறேன். உங்களைப் போல உள்ள ஆட்கள் உள்ளவரை விஜய் டிவி மாறப்போவதில்லைங்க
Deleteபாசம் வைப்பது தவறு என்று சொல்லவில்லை ஆனால் இப்படி பப்ளிக்காக வேஷம் போடுவதுதான் தவறுங்க அதிலும் இறந்தவரை வைத்து பொழப்பு நடத்துவது வெட்கமாக இல்லையா என்ன?
Deleteஅழுவதைக் காண்பித்தால் TRP ரேட்டிங் கூடுவதால் ,விஜய் டிவி யில் அழுகாச்சி டிராமா போடுகிறார்கள் !
ReplyDeleteத ம 3
இதெல்லாம் டிராமா.
ReplyDeleteஇந்த டிராமா டீவியை பார்ப்பதை விட்டாச்சு! நீங்க போட்ட பாட்டு கலக்கல்! எனக்கு பிடிச்ச பாட்டும் கூட!
ReplyDeleteதமிழரே..... ஒரு நடிகனுக்கு உண்மையான மனசே இல்லை என்கிறீர்களா?
ReplyDeleteசாதாரணமாக மனசுக்குள் வைத்தப் பாசம் முக்கியமான தருணத்தில் வெளிவருவது
இயற்கை தானே.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
என்பது திருவள்ளுவம் சொல்கிறதே.
அவர் உண்மையிலேயே அழுது இருந்தால்..அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது, தல!
ReplyDeleteஆனால் ஒண்ணு தல, என்னைக்கூட "ஃபேக் ஐடி" ல வந்து பின்னூட்டமிடுறான்னு அடிச்சுச் சொன்னானுக. அதை உண்மைனு சொல்லி "நிரூபிக்கவும்" செய்தானுக! அதையும் எனக்குப் பலநாள் தெரிந்த பலர் நம்பியதை நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆக, உங்கள் திறமையைப் பாராட்டவோ, இல்லைனா உங்க அறியாமையைப் பார்த்து சிரிக்கவோ தகுதியுள்ள ஒரே ஆள் சிவகார்த்திகேயன் மட்டும்தான். நீங்களாச்சு அவராச்சு!
_____________
BTW,
I hate that bitch called "Radhika" and her filthy attitude whenever she comes to the stage in any such occasions. She embarrasses someone (this time it was siva karthikeyan) every time she was onstage in the name of "joke" with her filthy attitude! I can tell that she is really SICK! They should not let that bitch in any stage!
நீங்கள் சொல்வதிலும் நியாம் இருக்கிறது உண்மை என்ன என்பது சிவகார்திகேயன் மற்றும் விஜய்டிவிக்கு மட்டும் தெரியும் நண்பரே நம்ம தமிழில் சொல்லுவார்கள் பன மரத்து அடியில் இருந்து பால குடிச்ச்சேன் என்றால் பலரும் நம்புவார்களா என்ன அது போலதான் சிவகார்திகேயேன் விஜய்டிவில் உண்மையாக அழுதேன் என்பது
Deleteஒரு சிலரைத்தவிர பல சினிமாக்காரர்கள் சினிமாவில் நடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் பொது வாழ்வில் நன்றாகவே நடிக்கிறார்கள்.
பேக் ஐடி பற்றி அதை யாரு உண்மை என்று சொல்ல பாடுபடுகிறார்களோ அது அவர்கள் க்ரியேட் பண்ணியதாகத்தான் இருக்கும் அது நன் கு விபரம் தெரிந்தவர்களுக்கு புரியும் அதனால் அதைப் பற்றி கவலைப்பாதீங்க பாஸ்
ராதிகா லண்டனில் படித்த பொண்னு எம் ஆர் ராதாவின் குடும்ப வாரிசு அதனால அப்படிதான் இருக்கும்
அவர் அழுதது உண்மை தான் என்று நினைக்கிறேன் ! ஆனால் அடிக்கடி அப்பாவை சொல்லி அழுவதால் தான் நாம் எல்லோரும் இப்படி நினைக்க காரணம் என நினைக்கிறேன் ! ஆனால் விஜய் விருதுகள் பங்க்ஸனுக்கு வருகிறவர்களுக்கு மட்டும் தான்
ReplyDeleteஅவர் அழுதது உண்மைதான் அதை டிவியில்தான் காண்பித்தார்களே இப்போதைய கேள்வி அந்த அழுகை உண்மையான அழுகைதானா இல்லை டிவிக்காரன் சொல்லிக் கொடுத்து அழுததுதானா என்பது தான்
Deleteவணக்கம்
ReplyDeleteசிலவிடயங்களை துணிவோடு வெளிச்சம் போட்டு காட்டும்சக்தி தங்களுக்கு மட்டுமே.. நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செம பாட்டு!
ReplyDeleteஇந்த அழுகாச்சி பார்க்க பிடிக்காது. நீங்கள் இணைத்திருக்கும் சிவ கார்த்திகேயன் வீடியோ பார்க்கவில்லை! பாட்டு மட்டும் தான் பார்த்தேன்.....