உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 23, 2010

வாங்க சிரிக்கலாம்..

கோர்ட்ல செந்தமிழ்க்கு பதிலாக சென்னை தமிழை பின் பற்றினால் எப்படியிருக்குமென்று ஒரு கற்பனை.1. ஆர்டர் ஆர்டர் = கம்முனு குந்து கம்முனு குந்து

2. எஸ் மை லார்ட் = ஆமா நய்னா

3. அப்ஜகஷன் மை லார்ட் = அமுக்கி வாசி நய்னா

4. கோர்ட் அட்ஜாய்ண்ட் = இன்னொரு தபா வச்சிக்காலாம்

5. அப்ஜகஷன் ஒவர் ருல்டு = மூடிக்னு குந்து

------

ரவுடி : அய்யா நீங்க சொன்னமாதிரியே (ஏ.சி)அஸிஸ்டண்ட் கமிஷனரை கொன்னுட்டோம்.

எம்.எல்.ஏ : நான் எங்கடா கொல்ல சொன்னேன்.

ரவுடி : அதுதான் டென்ஷனாக இருக்குது ஏ.சியை போடுன்னு சொன்னீங்க.------வகுப்பு தோழன் தன் தோழி ப்ரியாவிடம் சொன்னான். யாராவது உன்னை லூசுன்னு சொன்னா கூலா இரு. அல்லது

குரங்குனு சொன்னா கூட ரிலாக்ஸா இரு.

ஆனா நீ அழகா மட்டும் இருக்கேன்னு சொன்னா அவனை தூக்கி போட்டு நல்லா மிதி.......

----மாப்பிள்ளை : என்னங்க பொண்ணு பார்க்க கிழவி மாதிரியிருக்கு

பெண் வீட்டார் : மாப்பிள்ளை சும்மா ஜோக்கடிக்காதிங்க இது பொண்ணோட கடைசி தங்கச்சிங்க.___

ஹரி : நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் . முடி வளர்ந்தா வெட்டிக்கலாம்

வள்ளி நாயகம் : மூளை வளர்ந்தா ?

ஹரி :கவலைப் பாடதடா உன் நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது.-----

ஹரி :ஆயிரம் புக் படிச்சு அறிவாளி ஆவதைவிட பத்து நிமிடம் ஒரு அறிவாளியிடம் பேசினாலே போதும்.

மணி :அப்படியா?

ஹரி :ஆமாம் . அதுனால நீ எப்ப வேண்டுமானாலும் எனக்கு போண் பண்ணாலம்

------

பையன் : நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க .

பொண்ணு : ரொம்ப நன்றி.

பையன் : உங்க தங்கச்சி உங்களைவிட ரொம்ப சூப்பர்.

பொண்ணு: போடா நாயே

பையன்: அது உங்க ரெண்டு பேரவிட ரொம்ப சூப்பர்

-----

!

Wednesday, July 21, 2010

ஆனந்தம்.நாம குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவானாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவிகிடைத்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்லமனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்த குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?நம் வாழ்வில் எப்போழுதும் சாவால்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோசஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்படும். அந்த தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகமாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவதை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாக கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.படித்து முடிக்கும்வரை , உடல் எடையை குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, கல்யாணம்மாகுவரை, பிள்ளை பெற்கும்வரை, கார் வாங்கும்வரை, வீடுவாங்கும்வரை, இல்லை விஜயகாந்த் தமிழகத்தின் முதலைமச்சராகும் வரை, அம்மா ஜெ பிரதமராகும்வரை,கலைஞ்யர் வெள்ளை மாளிகையை விலைக்கு வாங்கும் வரை, ரஜனிகாந்த் அரசியலுக்கு வரும்வரை, ராமதாஸ் தனித்து தேர்தலில் நிற்கும்வரை ,விஜய் படம் பத்து நாள் சூப்பர் கிட்டாக ஒடும்வரைக்கும் காத்திருப்பதை இப்போதே நிறுத்தி ! இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.சந்தோஷம் என்பது ஒரு பயணம். அதற்கு ஒரு முடிவு என்பது கிடையாது. எனவே யாரும் பார்க்காத போது எப்படி ஆடி பாடுவிர்களோ அப்படி ஆடிப்பாடி சந்தோஷமாக இருங்கள்.டிஸ்கி: : நான் தமிழில் எழுதி 12 வருடங்களுக்கு மேலாகிறது. எனவே எனது எழுத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். வலைப்பக்கத்தை ஆரம்பத்துவிட்டதால் எதையாவது எழுத வேண்டுமென்று எழுதுகின்றேன். இது எனது புதிய பொழுது போக்கு.......பிடித்து இருந்தால் பதில் எழுதுங்கள்.

Monday, July 19, 2010

அருமையான காதல் படம்

நான் பார்த்த இங்கிலிஷ் படத்தில் ரொம்ப அருமையான காதல் படம் " நோட் புக் " ஆகும். அருமையான கதை..படம் பார்த்தவர்களில் படம் முடிந்ததும் கண்ணிர் விடாமல் இருப்பவர்கள் இருந்தால் அவர்கள் இருதயமே இல்லாதவர்கள் என்று கூறலாம்.பார்க்காதவர்கள் இருந்தால் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே கூறலாம்.

Thursday, July 15, 2010

பயனுள்ள இணையதளங்கள்

தமிழ் பிளாக்குகளில் எனக்கு மிகவும் பிடித்த பயனுள்ள வலைப்பதிவு பி.கே.பி யின் வலைப்பதிவு .


http://pkp.blogspot.com/
 
 
இன்னும் வரும்......

Joke

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லைன்னு சொன்னது தப்பாபோச்சு......

ஏன் தலைவரே ?


நிரந்தர பதவியும் இல்லைன்னு சீட் தரலை

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog