உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 30, 2011

இந்த கால "குட்டிகள்" ரொம்ப ஸ்மார்ட்

இந்த கால "குட்டிகள்" ரொம்ப ஸ்மார்ட்


பேபி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் அருகருகில் உட்கார்ந்து இருந்தன. அப்போது பேபி ஒட்டகம் அம்மாவிடம் கேட்டது அம்மா எனக்கு நீண்ட நாள்களாக சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன அதற்கு எனக்கு விளக்கம் சொல்கிறாயா என்று கேட்டது.

அதற்கு அம்மா ஒட்டகம் உன் சந்தேகத்தை சொல்லு நான் பதில் சொல்லுகிறேன் என்றது.பேபி ஒட்டகம்: நாம் முதுகில் ஏனாம்மா பெரிய திண்டு போல இருக்கிறது?

அம்மா ஒட்டகம் : நாமெல்லாம் பாலைவன விலங்குகள் அதில்தான் நமக்கு தேவையான தண்ணிரை சேமித்து வைத்துகொள்வோம். அப்படி சேமித்து வைத்து நீரை பாலைவனத்தில் நமக்கு தேவையான நேரத்தில் உபயோகித்து கொள்ள அது மிகவும் உதவுகிறது.பேபி ஒட்டகம் : ..அப்படியா? சரி இன்னொரு கேள்வி நமக்கு மட்டும் ஏன் மிகவும் நீளமாகவும் கால் பகுதி வட்டவடிவமாகவும் இருக்கிறது?

அம்மா ஒட்டகம் : அதுவா பாலைவனத்தில் மிக வேகமாக செல்ல அந்த நீண்ட கால்கள்தான் நமக்கு மிகவும் உதவுகிறது என்று மிக பெருமையாக சொன்னது.பேபி ஒட்டகம் : ..அப்படியா அதுவும் சரிதான். எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது நமக்கு ஏன் கண் இமைகள் மிகவும் நீளமாக உள்ளது.அம்மா ஒட்டகம் அதுவா பாலைவனத்தில் அடிக்கடி புழுதி புயல்வீசும் அதிலிருந்து நம் கண்களை இந்த நீண்ட இமைகள்தான் காக்கின்றன இது நமக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம் என்றது மிக பெருமையாக.அதை கேட்ட பேபி ஒட்டகம் நம் முதுகில் உள்ள திண்டு நாம் பாலைவனத்தில் போகும் போது நீரை சேமித்து உபயோகபடுத்தி கொள்ள உதவுகிறது, பாலைவனத்தில் நாம் நடக்கும் போது நமக்கு நமது நீண்ட கால்கள் உதவுகின்றன. அதுபோல பாலைவனத்தில் செல்லும் போது புழுதி புயலில் இருந்து நமது நீண்ட இமைகள் நம் கண்களை காக்கின்றன. இதெல்லாம் சரி ஆத்தா அப்ப நாம எதுக்கு இந்த மிருககாட்சி(ZOO) சாலையில் இருக்கின்றோம் என்றது பேபி ஒட்டகம்.அதை கேட்ட அம்மா ஒட்டகம் எதுவும் சொல்ல முடியாமல் வாயைடைத்து சிலையாக நின்றது.இந்த கதை மூலம் சொல்ல வரும் நீதி என்னவென்றால் நமக்கு திறமை , அறிவு , அனுபவம், முயற்சி இருந்தால் மட்டும் போதுதாது. நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அது உபயோகப்படும்.


Tuesday, November 29, 2011

ஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா?


ஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா?கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசின்,  தமிழக பொதுப் பணித் துறை  ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எடுத்து அதில் ரஜினியை வர செய்து அவரை விட்டு குரல் கொடுக்க சொல்லி படம் எடுத்து கேரளக்கார்கள் ஆடும் ஆட்டத்திற்கு எதிராக வெளியிட்டு அதை உலகெங்கம் ஒலி பரப்பி உண்மையை வெளிவரச் செய்ய வேண்டும்.இதை நான் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக எனது தளத்தின் மூலம் வேண்டு கோள்விடுவிக்கிறேன். இதற்கு காரணம் அவர் மிக புகழ் பெற்றவர் மற்றும் கட்சி சார்பு இல்லாதவர் என்பதால் இது எல்லோருக்கும் சென்று அடையும் என்ற எனது நப்பாசைதான்.இதை படிக்கும் ரஜினி ரசிகர்கள் எப்படியாவது இந்த செய்தியை ரஜினியிடம் கொண்டு சேர்க்குமாறும் மற்றுமுள்ள தமிழர்கள் இதை உங்கள் லோக்கல் தலைவர்களிடம் சொல்லி இதை ரஜினியிடம் எடுத்து சொல்லி சம்மதிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கிறேன்.எனது வலைத்தளத்தின் மூலம்  தமிழக பொதுப் பணித் துறைக்கு எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன். இதை படிக்கும் மக்களே நீங்களும் அவர்களை பாராட்டுங்களேன்.படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் முழுவதும் புரிந்துகொள்ளாத நிலையில், படிக்காத பாமரருக்கும் மிக எளிதாக  புரியும் வகையில்  தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள  அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் உண்மையை புட்டு புட்டு இங்கே வைக்கிறது

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக பொதுப் பணித் துறை எடுத்துள்ள ஆவணப் படம் காண இங்கே செல்லவும்.

The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.
The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய் உரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தமிழ் திரை உலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்விநமது மாநிலத்தில் வசிக்கும் கேரளா மக்களையும் நம்முடன்  சேர்த்து  நாம் போராட வேண்டும் அதே நேரத்தில் கேரளா மக்களுக்கு எந்த வித கெடுதல் ஏற்படுத்தாமல் அவர்களை உண்மையை  உணரச் செய்து நாம் வெற்றி  பெற வேண்டும்.இதை நம் தமிழர்களால் செய்து முடிக்க முடியுமா?

The Mullai Periyar DAM Problem ( http://player.vimeo.com/video/18283950?autoplay=1* )

ஆக்கம் & இயக்கம் : பொறியாளர் S. ஜெயராமன்
Sunday, November 27, 2011

இப்படி மோசமாகவா இருப்பான்? (மதுரைத் தமிழனின் Dirty Mind)


இப்படி மோசமாகவா இருப்பான்? (மதுரைத் தமிழனின் Dirty Mind)நான் நேற்று ஷாப்பிங்க் சென்றுவிட்டு வீட்டுக்கு தேவையானதை வாங்கிவிட்டு, வாங்கியதற்கு பில் போடுவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.அப்போது ஒரு அழகிய அமெரிக்க பெண் மிக புன்னைகையுடன் ஹலோ என்று சொல்லியாவாறே  என் தோளை தொட்டு கூப்பிட்டாள்.திரும்பி பார்த்த நான் அழகிய பெண்ணை ஆச்சிரியத்துடனும் ஒரு வித குழப்பத்துடனும் உங்களுக்கு யார் வேண்டும் என்ற ஒருவித பார்வையுடன் அவளை பார்த்தேன்.

நான் பார்த்த பார்வையிலே அவளுக்கு புரிந்துவிட்டது தான் தவறு செய்துவிட்டோமோ என்று கருதியாவாறே ஸாரி சொல்லியபடி என்னிடம் சொன்னாள் உங்களை பார்த்தவுடன் என் குழந்தைகளில் ஓன்றிற்கு நீங்கள் தகப்பானார் என்று கருதிவிட்டேன் மீண்டும் ஸாரி சொல்லியவாறு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.நானும் ஒரு வித குழப்பத்துடன் என்னடா இந்த அமெரிக்கா பெண்களே இப்படிதானோ தான் பெற்ற குழந்தைகளுக்கு யார் தந்தை என்று கூட ஞாபகத்தில் வைத்து கொள்ள மாட்டாரகளோ என்று நினைத்தவாறே காரில் வந்து அமர்ந்தேன்.

காரில் அமர்ந்த எனக்கு மீண்டும் அதே நினைப்பு அப்போது எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி ஓன்று ஞாபகத்திற்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன் மனைவி இந்தியா சென்ற போது ஒரு பாருக்கு நண்பர் கூட சென்று நன்றாக குடித்துவிட்டு அங்கு வந்த பெண்களை காலாய்த்தது ஞாபகம் வந்தது அப்போது நாம் எதோ தவறு செய்து அதனால் நாம் இந்த பெண்ணின் குழந்தைக்கு நாம் அப்பாவாகிவிட்டோமோ என்று நினைத்து குழம்பியவாறு வீட்டிற்கு சென்றேன்.....டிஸ்கி : இந்த அப்பாவி மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவங்க அப்படி எல்லாம் தவறு செய்பவன் அல்ல ஆனால் அவனுக்கு கொஞ்சம் ஞாபக மறதி இருப்பதால் அவனுக்கு அந்த பெண் அவனுடைய குழந்தையின் இரண்டாம் வகுப்பு டீச்சர் என்பது இன்னும் ஞாபகத்திற்கு வரவில்லை. பாவம் அவன் இந்த குழப்பம் காரணமாக கடந்த இரண்டு நாளாக கோப்பையும் கையுமாக இருக்கிறான்.

முடிந்தால் அவனுக்கு யாரவது எடுத்து சொல்லுங்களேன்.டிஸ்கி 2 : நான் படித்த சிறு ஆங்கில ஜோக்கை அப்படியே மாற்றி என் வழியில் தந்துள்ளேன். பிடித்தால் படியுங்க மக்கா இல்லை என்றால் இதுவரை படித்தற்கு நன்றி மக்காஸ்.. ஹீ....ஹீ.......

Wednesday, November 23, 2011

சூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்


சூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்பக்கத்து மாநிலத்தில்  உள்ள கேரளா மக்கள் தங்கள் மாநிலம் செழுமை அடைய புதிய அணை கட்டுவதற்க்காக முழு முனைப்போடு ஆக்கபூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்க்காக என்ன வேண்டுமென்றாலும் ஒற்றுமையோடு செய்வார்கள். அதை சாதித்தும் காட்டுவார்கள் என்பதில் எனக்கு ஒரு துளி சந்தேகம் கூட இல்லை. அங்குள்ள அரசியல் வாதிகளும் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அதிகாரிகளும் சுயநலம் கருதாமல் தன் மாநிலத்திற்க்காக பாடுபடக்கூடியவர்கள்.இங்குள்ள நம் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் என்ன செய்யப்போகிறார்கள். தன் சுயநலத்திற்காக மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அல்லது பாரளுமன்றத்தில் தன் கட்சி சார்பாக சிறு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு எல்லாம் மன்மோகன் சிங் பார்த்து கொள்வார் என்று வந்துவிடுவார்களா?அடேய் தமிழா குடித்தது போதும் கூத்து கும்மாளம் அடித்தது போதும் விழித்திருடா எழுந்திருடா. வெட்டி பேச்சு வேடிக்கை பேச்சு பேசி இலங்கை சகோதரனை பலி கொடுத்ததை பார்த்தது போதும்டா......நீ உன் எதிர்கால சந்ததியினரை தமிழகத்திலும் அனாதையாக்கி விட்டு வேடிக்கை பார்க்க வைக்காதடா இப்போதாவது சற்று விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு ப்ரியார் அணையை காப்பாற்றுடாஇந்த பெரியார் அணை விஷயத்திலாவது தமிழர்கள் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒரே குரல் எழுப்பி மத்திய அரசை தட்டி எழுப்புவார்களா?மத்திய அரசை நியாமான பக்கம் செயல்பட வைப்பார்களா?நமது அண்டை மாநிலங்களுக்கு நாம் கெடுதல் நினைக்க வேண்டாம் ஆனால் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதை பார்த்தும் சும்மா இருக்க வேண்டாம். அதற்க்காக நமது மாநிலத்தில் இருக்கும் கேரளா மக்களுக்கு எந்தவித தொந்தரவு இல்லாமல் அவர்களையும் நம்மோடு சேர்த்து அணைத்து போராட வேண்டும்தமிழகத்தில் இருக்கும் மக்கள் சூடு சுரணையோடு இந்த  செயலை செய்து காட்டுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.திணமணியில் இதை படித்ததினால் என் மனதில் ஏற்பட்ட எண்ணத்தின் விளைவே இந்த பதிவு

Tuesday, November 22, 2011

அமெரிக்காவில் இருந்து தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு! ஒரு எச்சரிக்கை!!!


அமெரிக்காவில் இருந்து  தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு! ஒரு எச்சரிக்கை!!!தமிழகத்தில் பயணம் செல்ல விரும்பும் அனைத்து அமெரிக்கா வாழ் இந்திய மக்களே! தமிழகம் அம்மாவின் ஆட்சியில் ரொம்பவே மாறிவிட்டது. அதனால் நீங்கள் தமிழகம் செல்லும் போது கவனிக்க & யோசிக்க, செய்ய வேண்டியது இதுதான்.தமிழகத்திற்கு நீங்கள் அமெரிக்காவில் இருந்து போகும் விமான டிக்கெட்டை நீங்கள்  குறைந்த செலவில் வாங்கிவிடலாம். ஆனால் தாம்பரத்திலிருந்து பாரிஸுக்கு செல்ல பஸ் டிக்கெட் எடுக்க உங்களின் ஒரு வருட அமெரிக்கா சம்பாத்தியம் போதாது.பஸ் டிக்கெட் எல்லாம் டீல்ல கிடைக்காதுமக்களே.ஊரில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் ஐபேடு அல்லது லேப் டாப் வாங்கி செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக நீங்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு பாக்ஸ் பால் பவுடர் வாங்கி சென்றால் அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாகும்தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் வீட்டிற்கு சென்றால் பழக்க தோஷத்தில் ஒரு கப் காபி தரீங்களா என்று தப்பி தவிர கேட்டு வீடாதிர்கள். அதற்கு பதிலாக என்ன பீர்  ஒரு க்ளாஸ் தரிங்களா என்று கேளுங்கள்.பால் கடைக்கு முன் அதிக நேரம் நிற்காதீர்கள். & போட்டோ எடுக்காதீர்கள் அப்படி செய்தால்  நீங்கள் குண்டர் தடை சட்டத்தின் படி கைது செய்யபடுவீர்கள்.பவர் கட்டைப் பற்றி குறை கூறாதீர்கள் முந்தைய ஆட்சியில் உள்ள பவர்கட் அவர்களின் திறமையில்லாத காரணத்தால் ஏற்பட்டது. ஆனால் இப்போது ஏற்படும் பவர்கட் "படித்த முதல்வரால்" சுற்றுபுற சூழ்நிலையை பாதுகாக்கவும் மக்களை டிவியின் மயக்கத்திலிருந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தால் நடக்கிறது. எனவே முந்தைய அரசோட கம்பேர் பண்ணி வீணான விவாதத்தில் ஈடுபடாதிர்கள்.சிறந்த காமெடி ஷோ(show)  பார்க்க எங்கே செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா? பா..க கட்சி தலைவர் மீட்டிங்க் எங்கே நடக்கிறது என்று கேட்டு அங்கே செல்லுங்கள். அவர்தான் தமிழகத்தில் தற்போது மிக சிறந்த காமெடி பேச்சாளார்.அமெரிக்காவில் நாயா உழைத்து கஷ்டப்பட்டது போதும் நிம்மதியா மகாராஜனாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று ஆசையா தமிழகத்தில் உள்ள கோயில் குளம் என்று சுற்றி கடவுள்களிடம் ஆசிர்வாதம் வாங்க அலைய  வேண்டாம். மிகச் சிறந்த பாட்டிலை (ஃபாரின் சரக்கு) வாங்கி தமிழகத்தின் கருப்பு எம்ஜியார் என்று அழைக்கப்படுவரிடம் சென்றால் அவர் அதை அருந்தி விட்டு அவர்கையால் உங்கள் தலையில் ஆசிர்வாதம்  பண்ணுவார் அதன் பிறகு நீங்கள் மகாஆஆஆஆஅ ராஜன் தான் போங்கதப்பி தவறி நீங்கள் பெங்களுர் பக்கம் போனால் வீதி நிறைய போலீஸார் நின்று போக்குவரத்து ஒரு நபரின் வரவால் தடைபட்டு இருக்கிறது என்றால் யார் அவர் என்று ஆச்சிரியப் படாதீரகள். அவர் நாட்டின் சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்தவர் அல்ல அல்லது அமெரிக்காவில் இருந்த வந்த பிரெசிடண்ட் ஒபாமாவும் அல்ல அவர் தமிழகத்தில் இருந்து குற்ற விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்லும் தமிழக முதல்வர்தான்.என்ன ஆச்சிரியாமா இருக்கா எப்படி குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை ஆள்கின்றார் என்றா. என்னங்க அரசியல் தலைவர் மட்டும்தானா காமெடி பண்ணணும் தமிழக மக்கள் ஓன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லவா அதுதானங்க

யாரைய்யா அது நீங்க  லேப்டாப் மனோவை தேடுகீறிர்களா? அவரை காணோமா? அவரெல்லாம காணமா போக கூடிய ஆள் அல்ல அவர் பெயர் இப்போது பால்கார மனோவாக மாறிவிட்டது அவ்வளவுதான் அவர் கடைசியாக இந்தியா போகும் போது பால் பவுடர் அவர் நண்பருக்காக வாங்கி சென்றதால் இந்த பெயர் மாற்றம்)

என்னங்க நம்ம தமிழகத்தை பற்றி தெரிஞ்சுகிட்டீங்களா? இப்ப நீங்க அங்க போறீங்களா அல்லது உங்களது உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே நம்ம செலவில் கூப்பிட போறிங்களா?( என்ன நீங்க என் நண்பரா. நண்பர்கள் எல்லாம் எனக்கு கிடையாதுங்க.  வேவ்வே வ்வ்வ்வ்வ்வ்)

எனக்கு என்ன தோணுகிறது என்றால் தமிழகத்தில் போய் பஸ்ஸுக்காக பணத்தை செலவிடுவதைவிட அந்த செலவில் எல்லோரையும் இங்கே கூப்பிடலாம் சரிதானே.

 இதை படித்து விட்டு சிரிப்பதா அல்லது அழுவதா தெரியவில்லை என்று என்னை குற்றம் சுமத்தாதீர்கள் அது உங்கள் பாடு. .படிக்காதவன் என் மண்டையில் பட்டதை நான் சொல்லிட்டேன். அம்புட்டுதாங்க......

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog