சூடு சுரணை உள்ளவர்களா இந்த தமிழர்கள்
பக்கத்து மாநிலத்தில் உள்ள கேரளா மக்கள் தங்கள் மாநிலம் செழுமை அடைய புதிய அணை கட்டுவதற்க்காக முழு முனைப்போடு ஆக்கபூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்க்காக என்ன வேண்டுமென்றாலும் ஒற்றுமையோடு செய்வார்கள். அதை சாதித்தும் காட்டுவார்கள் என்பதில் எனக்கு ஒரு துளி சந்தேகம் கூட இல்லை. அங்குள்ள அரசியல் வாதிகளும் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அதிகாரிகளும் சுயநலம் கருதாமல் தன் மாநிலத்திற்க்காக பாடுபடக்கூடியவர்கள்.
இங்குள்ள நம் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் என்ன செய்யப்போகிறார்கள். தன் சுயநலத்திற்காக மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அல்லது பாரளுமன்றத்தில் தன் கட்சி சார்பாக சிறு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு எல்லாம் மன்மோகன் சிங் பார்த்து கொள்வார் என்று வந்துவிடுவார்களா?
அடேய் தமிழா குடித்தது போதும் கூத்து கும்மாளம் அடித்தது போதும் விழித்திருடா எழுந்திருடா. வெட்டி பேச்சு வேடிக்கை பேச்சு பேசி இலங்கை சகோதரனை பலி கொடுத்ததை பார்த்தது போதும்டா......நீ உன் எதிர்கால சந்ததியினரை தமிழகத்திலும் அனாதையாக்கி விட்டு வேடிக்கை பார்க்க வைக்காதடா இப்போதாவது சற்று விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு ப்ரியார் அணையை காப்பாற்றுடா
இந்த பெரியார் அணை விஷயத்திலாவது தமிழர்கள் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒரே குரல் எழுப்பி மத்திய அரசை தட்டி எழுப்புவார்களா?மத்திய அரசை நியாமான பக்கம் செயல்பட வைப்பார்களா?
நமது அண்டை மாநிலங்களுக்கு நாம் கெடுதல் நினைக்க வேண்டாம் ஆனால் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதை பார்த்தும் சும்மா இருக்க வேண்டாம். அதற்க்காக நமது மாநிலத்தில் இருக்கும் கேரளா மக்களுக்கு எந்தவித தொந்தரவு இல்லாமல் அவர்களையும் நம்மோடு சேர்த்து அணைத்து போராட வேண்டும்
தமிழகத்தில் இருக்கும் மக்கள் சூடு சுரணையோடு இந்த செயலை செய்து காட்டுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
திணமணியில் இதை படித்ததினால் என் மனதில் ஏற்பட்ட எண்ணத்தின் விளைவே இந்த பதிவு
ஒற்றுமையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்....
ReplyDeleteபோராட்டங்களை நசுக்கியே பழக்கப்பட்ட ஒரு அரசிடம் இருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும் ??
ReplyDeleteஇதில் ஒன்று சேருவார்கள் என நினைக்கிறேன்
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்
சரியான நேரத்தில் சரியான பதிவு
வாழ்த்துக்கள்
தமிழன் குறித்த ஆதங்கம் இந்த பதிவுகளிலும்...
ReplyDeletehttp://www.tamilaathi.com/2011/11/blog-post.html
http://www.thamilnattu.com/2011/11/blog-post_26.html