Thursday, November 17, 2011

காலம் மாறிப்போச்சு ( ஆண்களே ஜாக்கிரதை ) பயந்த சுபாவம் உள்ள ஆண்கள் இந்த பதிவை தவிர்க்கவும்


ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

என்ன மதுரை தமிழண்ணா பாட்டு சத்தம் பலமாய் கேட்குது. அட இல்லைதம்பி இன்று காலையில் சில வீடியோ க்ளிப்பை யூடியுப்பில் பார்த்தேன் அதன் பிறகு என் மனதில் இந்த பாட்டு ஞாபகம் வந்துடச்சுடா தம்பி.

அப்படியா அண்ணா!!!! அப்படி என்ன க்ளிப் பார்த்தேங்கண்ணா எனக்கு அந்த லிங்கை கொடுத்தா நானும் அதை பார்த்து ரசிப்பேனே.
தம்பி நீ  நினைக்குற மாதிரி ரசிக்கிற க்ளிப் இல்லை ஆனா உன்னைப்போல திருமணத்தை எதிர்பார்த்து கனவுகளோடு காத்து இருக்கிற இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.

தம்பி இப்போ காலம் மாறி போச்சு இப்போது பெண்களிலும் மோசமான ஆட்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் மாட்டும் அப்பாவி ஆண்களும் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்  அதை போல நல்ல பெண்களிலும் மனதிடமும் உடல் வலிமை கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் அவர்களிடம் மாட்டும் கயவர்களும் அதோ கதிதான். அப்படிபட்ட சம்பவங்களை கொண்ட வீடியோ க்ளிப்பைதான் நான் இப்போ தரப் போகிறேன்.

உனக்கு நான் சொல்லும் அட்வைஸ்  எப்போது நேர்மையாய் இரு எந்த பெண்களையும் காயப்படுத்த முயற்சிக்காதே. கல்யாணம் பண்ணும் முன் பொண்ணைப் பற்றி விசாரித்து கொள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் என்பதற்கிணங்க இங்கே சாம்பிளுக்காக கடந்த பல ஆண்டுகளாக வந்த சில க்ளிப்புகளின் தொகுப்புதான் இது.

பொண்ணு பார்க்கும் போது உன்னைவிட ஸ்ட்ராங்கன்ன பொண்ணா பார்த்து கட்டினா என்ன நிகழும் என்பதை கிழே பார்

தம்பி இப்படி ஒரு காதலியா வேணம்டா கண்ணா சொன்ன கேளூ

தம்பி கள்ள காதலுக்கு ஆசைபடாதேடா

பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கதி என்ன?

மோசமான பெண்களும் உண்டு என்பதற்கு சாட்சிதான் இது
நீ தண்ணி அடிக்கும் ஆளா இருந்த  உன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள் இல்லை என்றால் அவள் கூட போகும் போது தண்ணி அடிக்காதே

மனைவியின் தொந்தரவு தாளாமல் தற்கொலைக்கு செல்லும் ஆண்களும் உண்டு

என்ன தம்பி பயந்து போயிட்டியா உன பயம் தெளிந்து சிரிக்க இந்த க்ளிப்

தம்பி இதுதாண்ட வாழ்க்கை.
அண்ணே உங்க வாழ்க்கை எப்படின்னா இருக்கு.
டேய் கடைசியேல என் காலையே வாருகிறாயடா. சரி நீ என் தம்பி ஆச்சுன்னு ரகசியமா சொல்லுறேன் யாரிடமும் சொல்லிடாதே.
என் மனைவி கடவுளிடம் பிரார்த்தனை பண்ணும் போது நான் ஒளிந்து இருந்து கேட்டது இதுதானடா

My Wife's Prayer:

I pray for:
Wisdom, To understand a man.
Love, To forgive him and;
Patience, For his moods.
Because if I pray for Strength
I'll just beat him to death.
என்ன உனக்கு இங்கிலிஷ் புரியாதா அப்ப எனக்கு மட்டும் என்ன புரிஞ்சுச்சுன்னா நினைக்குறே... நானும் மதுரைக்காரன் தானடா
17 Nov 2011

4 comments:

  1. நாம் எதை பார்க்க விரும்புகிறோமோ அது தான் நம் பார்வையில் சிக்கும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது... அனுபவம் தான் என்பது என் கணிப்பு.....

    ReplyDelete
  2. இப்படி பயமுறுத்தினால் எப்படி ?
    பாவம் பையன்கள் எல்லாம்
    பயந்துபோய் சன்னியாசி ஆகிவிடமாட்டார்களா?
    பயமாகத்தான் இருக்கு

    ReplyDelete
  3. அடேங்கப்பா என்னா ஒரு வில்லத்தனம் முடியல...!!!

    ReplyDelete
  4. ஐய்யயோ இப்படி எல்லாமா அடி படுகின்றனர். பார்க்கவே பயமாக உள்ளது. சிங்கப்பூர் பெண் செய்யும் கொடுமை சொல்லில் அடங்காதது. தலைக்கு போல் கவசம் தேவை தான் போல்! கொடுமை கொடுமையிலும் கொடுமை. இன்று ஆண்கள் தினம் நவம்-19 போராடுவோம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.